நாய்ப் பாலும், பேய்ச் சுரைக்காயும்  யாருக்கும் பயனில்லை ! (Post.11,544)

 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,544

Date uploaded in London – 14 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

பயனற்றவை யாவை ?அறப்பளிசுர சதகம் தரும் பட்டியல்

22. இருநிலையினும் பயனற்றவை

குணம்அற்ற பேய்முருங் கைத்தழை தழைத்தென்ன?

     குட்டநோய் கொண்டு மென்ன?

  குரைக்கின்ற நாய்மடி சுரந்தென்ன சுரவாது

     கொஞ்சமாய்ப் போகில் என்ன?

மணம்அற்ற செம்முருக் கதுபூத் தலர்ந்தென்ன?

     மலராது போகில் என்ன?

  மதுரம்இல் லாஉவர்க் கடல்நீர் கறுத்தென்ன?

     மாவெண்மை யாகில் என்ன?

உணவற்ற பேய்ச்சுரை படர்ந்தென்னபடரா

     துலர்ந்துதான் போகி லென்ன?

  உதவாத பேர்க்குவெகு வாழ்வுவந் தாலென்ன?

     ஓங்கும்மிடி வரில்என் னகாண்?

அணியுற்ற பைங்கொன்றை மாலிகா பரணனே!

     ஆதியே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!
     (
இ-ள்.) அணியுற்ற பைங்கொன்றை மாலிகா ஆபரணனே –

அழகான புதிய கொன்றைமாலையை அணிகலனாகக் கொண்டவனே!,

ஆதியே – முதல்வனே!அருமை……..தேவனே!,

குணம் அற்ற பேய்

முருங்கைத் தழை தழைத்து என்ன – நல்ல குணம் இல்லாத பேய்

முருங்கை தழைத்தால் என்ன பயன்?, குட்டநோய் கொண்டும் என்ன –

குட்டநோய் அடைந்தாலும் என்ன பயன்?, குரைக்கின்ற நாய் மடி

சுரந்து என்ன – குரைக்கும் நாயின் மடியிற் (பால்) சுரந்தால் என்ன

பயன்?, சுரவாது கொஞ்சமாய்ப் போகில் என்ன – பெருகாமற் கொஞ்சமாக

இருந்தால்தான் என்ன பயன்?, மணம் அற்ற செம் முருக்கது பூத்து

அலர்ந்து என்ன – மணமில்லாத செம்முருக்கின் மலர் நன்கு மலர்ந்து

என்ன பயன்?மலராது போகில்

என்ன – மலராமற் குவிந்திருந்தால்தான் என்ன பயன்?, மதுரம் இல்லா

உவர்க்கடல் நீர் கறுத்து என்ன – சுவையில்லா உப்புக்கடலின் நீர்

கருநிறமாக இருந்தால் என்ன பயன்?, மாவெண்மை ஆகில் என்ன – தூய

வெண்மையாக ஆனால்தான் என்னபயன்?உணவு அற்ற பேய்ச்சுரை

வெண்மையாக ஆனால்தான் என்னபயன்?, உணவு அற்ற பேய்ச்சுரை

படர்ந்து என்ன – உண்ணத்தகாத பேய்ச்சுரைக்கொடி படர்ந்து என்ன

பயன்?, டராது உலர்ந்துதான் போகில் என்ன – படராமல்

காய்ந்துபோனால்தான் என்ன பயன்?, உதவாத பேர்க்கு வெகு வாழ்வு

வந்தால் என்ன – (பிறர்க்குப்) பயன்படாதவர்கட்குச் சிறந்த வாழ்வு வந்தால்

என்ன பயன்?, ஓங்கும் மிடி வரில் என்னகாண் – பெரிய வறுமை

வந்தால்தான் என்ன பயன்?

Xxxx

நாய்ப் பாலும் பேய்ச் சுரைக்காயும் யாருக்குப் பயன் தரும் என்று வினவுகிறார் அம்பல வாண கவிராயர்.

இதை விவேக சிந்தாமணி பாடல்களுடன் ஒப்பிடலாம்

02: பயன்படாதவை

ஆபத்துக் குதவாப்பிள்ளை அரும்பசிக் குதவா அன்னம்;

தாபத்தைத் தீராத் தண்ணீர்; தரித் திரமறியாப் பெண்டிர்;

கோபத்தையடக்கா வேந்தன்; குருமொழி கொள்ளாச்சீடன்;

பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை யேழுந் தானே.

இவை ஏழும் இருந்தும் பயனற்றவை:

அருகில் இல்லாத பிள்ளை, பசியை தீர்க்காத உணவு, தாகத்தை தீர்க்காத தண்ணீர், கணவனின் வருமானத்தை அறிந்து செலவு செய்யத் தெரியாத மனைவி, கோபத்தை அடக்கி சிந்தித்து செயல்பட இயலாத அரசன்,

குருவின் உபதேசத்தைக் கேளாத சீடன், புனிதம் (தூய்மை) இல்லாத நீர்நிலை.

xxxx

69. பயனில்லாதன

திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி,

இரப்பர்க்கு ஈயாக்கைகள் இனிய சொல் கேளாக்காது,

புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாத்தேகம்,

இருப்பினும் பயனென் காட்டில் எரிப்பினும் பயனில்தானே.

இறைவன் வாழும் திருத்தலங்களை – திருக்கோயில்களை – மிதிக்காத கால்கள், சிவனின் திருவடிவணங்காத தலை, இல்லையென்று கேட்பவர்க்குக் கொடாத கைகள், பெரியோர்களின் அன்பான இனிய சொற்களைக் கேளாத காதுகள், தன்னைக் காப்பவர்களுக்கு ஓர் ஆபத்து வந்து கண் கலங்கும் போது உயிரைக் கொடுத்தாவது காக்காத உடல், இருந்தாலும் சுடுகாட்டில் எரித்தாலும் பயனொன்றுமில்லை.

Xxxx

வீண்போகும் 4 விஷயங்கள்:—

சமுத்ரேஷு வ்ருஷ்டி: – கடலில் பெய்யும் மழை

த்ருப்தஸ்ய போஜனம்- சாப்பிட்டவனுக்குப் போடும் சாப்பாடு

சமர்தஸ்ய தானம் – திறமையுள்ளவனுக்கு கொடுக்கப்படும் தானம்

திவா தீபா – பகலில் ஏற்றப்படும் விளக்கு

வ்ருதா வுருஷ்டி: சமுத்ரேஷு வ்ருதா த்ருப்தஸ்ய போஜனம்

வ்ருதா தானம் சமர்தஸ்ய வ்ருதா தீபோ திவாபி ச

-சுபாஷித ரத்ன பாண்டாகரம் 153-26

Xxx

கெட்டதைத் தட்டிக் கேட்காத முதியோர்

வ்ருத்தரஹித சபா- முதியோரில்லா சபை

தர்மாப்ரதிபாதகா வ்ருத்தா – நல்ல குணங்களை எடுத்துரைக்கா முதியோர்

சத்யரஹித தர்ம- உண்மையில்லாத வழிமுறைகள்

சலாப்யுபேதம் சத்யம் – உண்மையை தவறான விஷயங்களுக்குப் பயன்படுத்துவோர்

ந சா சபா யத்ர ந சந்தி வ்ருத்தா ந தே வ்ருத்தா யே ந வதந்தி தர்மம்

நாசௌ தர்மோ யத்ர ந சத்யமஸ்தி ந தத்சத்யம் யச்சலேனாப்யுபேதம்

–விதுரநீதி 3-58

Xxx

பயனற்ற நான்கு விஷயங்கள்:–

பராதீன ஜன்ம – மற்றவர்களை அண்டி வாழும் வாழ்க்கை

ப்ரஸ்த்ரீ சுக- மற்ற பெண்களிடத்தில் துய்க்கும் இன்பம்

பரகேஹே லக்ஷ்மீ –பிறர் வீட்டிலுள்ள செல்வம்

புஸ்தக வித்யா – நூல்களிலுள்ள அறிவு: ஏட்டுச் சுரைக்காய்

பராதீனாம் வ்ருதா ஜன்ம பரஸ்தீஷு வ்ருதா சுகம்

பரகேஹே வ்ருதா லக்ஷ்மீ: வித்யா யா புஸ்தகே வ்ருதா

Xxx

அஜயுத்தம்ருஷிராத்தம் ப்ரபாதே மேகடம்பரம்

தம்பத்யோ கலஹஸ்சைவ பரிணாமே ந கிஞ்சன

அஜயுத்தம் –ஆட்டுச் சண்டை

ரிஷி ஸ்ராத்தம் – ரிஷி முனிவர்களுக்குச் செய்யப்படும் ஸ்ராத்தம்

ப்ரபாதே மேகடம்பரம் – காலையில் இடியுடன் கூடிய மேகம்

தம்பதி கலஹம் – கணவன் –மனைவி சண்டை

 xxxx

நாலு விஷங்கள்:–

அனப்யாச வித்யா- பயன்படுத்தப்பாடாத படிப்பு

அஜீர்ண போஜனம் – செமிக்காத உணவு

தரித்ர சபா- ஏழைகள் சபை

விருத்த தருணீ – வயதான மாப்பிள்ளைக்கு இளம் மணமகள்

அனப்யாஸோ விஷம் வித்யா அஜீர்ணே போஜனம் விஷம்

விஷம் சபா த்ரித்ரஸ்ய வ்ருத்தஸ்ய தருணீ விஷம்

–ஹிதோபதேசம் ALL WASTE

Xxx

TAGS-  பயனற்றவை, யாவை அறப்பளிசுர சதகம் பட்டியல்சம்ஸ்க்ருத சுபாஷிதங்கள்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: