
Learn Tamil Verbs Part 33 பிடிக்கும்,பிடிக்காது.
Pidikkum,Pidikkaathu Impersonal Verbs (11,546)
Post No. 11,546
Date uploaded in London – 14 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
I am giving more sentences using Impersonal verbs (This is from my 2011 Lessons)
Impersonal verbs use subject in the dative e.g.
எனக்கு,உனக்கு,
அவனுக்கு,ராமனுக்கு unlike English.
If one masters eight Tamil impersonal verbs it will be very useful during
travel. One can express most of one’s needs,likes,dislikes etc. easily
214 எனக்கு தமிழ் பிடிக்கும்
enakku thamiz pidikkum
to me Tamil like (I like Tamil)
215. உனக்கு என்ன பிடிக்கும்?
unakku enna pidikkum?
to you what liked? (What do you like?)
216. அவனுக்கு என்ன பிடிக்கும்?
avanukku enna pidikkum?
to him what liked
What does he like?
217. ராமனுக்கு என்ன பிடிக்கும்?
raanukku enna pidikkum?
to Rama what liked
What does Raman like?
218. உனக்கும் தமிழ் பிடிக்குமா?
unakku thamiz pidikkumaa?
to you Tamil liked
Do you like Tamil?
219. எனக்கு தோசையும் வடையும் பிடிக்கும்.
Enakku dosaiyum vadaiyum pidikkum
To me dosai and vadai liked
I like dosai and vadai
220. யாருக்கு தமிழ் பிடிக்கும்?
yaarukku thamiz pidikkum?
to whom thamiz liked?
Who does like Tamil?
221. எனக்கு இறைச்சி பிடிக்காது.
enakku iRaichi pidikkaathu
to me meat not liked
I dont like meat
222. மீனும் பிடிக்காது.meenum pidikkaathu
dont like fish too
223. ஆனால் பழங்கள் பிடிக்கும்.
aanaal pazangkaL pidikkum
But I like fruits.
224. உனக்கு என்ன பிடிக்காது?
unakku enna pidikkaathu?
what is it you dont like?
225. யாருக்கு இறைச்சி பிடிக்காது?
yaarukku iRaichi pidikkaathu?
Who doen’t like meat?
226. அவனுக்கு தோசை பிடிக்காதா?
avanukku dosai pidikkaathaa?
doen’t he like dosa?
227. உங்களுக்கு தமிழ் பிடிக்குமா? பிடிக்காதா?
ungkaLukku thamiz pidikkumaa? pidikkaathaa?
do you like Tamil or not?
228. ராமனுக்கு முட்டை பிடிக்காது.
ramanukku muttai pidikkaathu
Rama doesn’t like egg.
229. என் அண்ணனுக்கு இனிப்பு அதிகம் பிடிக்கும்
en aNNanukku inippu adhikam pidikkum
my older brother likes sweets a lot
230. ஆனால் உரைப்பு பிடிக்காது.
aanaal uraippu pidikkaathu
but (he) doesn’t like spicy (dishes)
231. உங்களுக்கு தமிழ் தெரியுமா?
ungkaLukku thamiz theriyumaa?
Do you know Tamil?
232. ஆமாம் எனக்கு தமிழ் தெரியும்.
aamaam, enakku thamiz theriyum
Yes, I know Tamil.
233. இங்கிலீஷும் தெரியுமா?
engilish theriyumaa?
Do you know English?
234. ஆம், இங்கிலீஷும் தெரியும்
aam, engilish theriyum
Yes, I know English
235. எது அதிகம் தெரியும்?
edhu adhikam theriyum?
Which one you know more?
236. இங்கிலீஷ் அதிகம் தெரியும்,தமிழ் கொஞ்சம் தெரியும்.
engilish adhikam theriyum, thamiz konjam theriyum
I know English well, and Tamil a little
237. அவர்களுக்கு இந்தி தெரியாதா?
avarhaLukku inthi theriyaathaa?
Dont they know Hindi?
238. அவர்களுக்கு இந்தி தெரியாது.
avarhaLukku inthi theriyaathu
they dont know Hindi
239. When you use theriyum தெரியும் with human beings
you must use the accusative ‘ai’ e.g.ஒபாமாவை
240. உனக்கு ஒபாமாவைத் தெரியுமா?
unakku obaamaavaith theriyumaa?
Do you know Obama?
241. எனக்கு ஒபாமாவைத் தெரியும்
enakku obaamaavaith theriyum
I know Obama
242. உனக்கு பாடத் தெரியுமா?
unakku paatath theriyumaa?
do you know how to sing?
243. ஆமாம் எனக்கு பாடத் தெரியும்.
aamaam enakku patath theriyum
yes, i know how to sing
244. ஆடவும் தெரியுமா?
aatavum theriyumaa?
Do you know dance too?
245. enakku aataa theriyaathu
எனக்கு ஆடத் தெரியாது.
I dont know to dance
246. கண்ணனையும் ராமனையும் தெரியுமா?
kaNNanaiyum raamanaiyum theriyumaa?
Do you know Kannan and Raman?
247. அவர்களை நன்றாகத் தெரியும்.
avarhaLai nanRaakath theriyum
I know them very well
248. யாருக்கு தமிழ் தெரியும்?
yaarukku thamiz theriyum?
who does know Tamil?
249. நான்கு மாணவர்களுக்கு தமிழ் தெரியும்.
naangu maaNavarhaLukku thamiz theriyum
four students know Tamil
250. யாருக்கு டென்னிஸ் விளையாடத் தெரியும்?
yaarukku tennis viLaiyatath theriyum?
who does know to play tennis?
251. எனக்குக் கொஞ்சம் தெரியும்.
enakku konjam theriyum
I know a little
252. பெடரருக்கு டென்னிஸ் விளையாடத் தெரியுமா?
Ferererukku tennis viLaiyaatath theriyumaa?
Does Ferderer know how to play Tennis?
253. அவருக்கு டென்னிஸ் நன்றாகத் தெரியும்.
avarukku tennis nanRaakath theriyum
He does know Tennis very well.
254. உன் அக்காவுக்கு சமைக்கத் தெரியுமா?
un akkaavukku samaikkath theriyumaa?
Does your older sister know how to cook?
255. ஆம், அவளுக்கு சமைக்கத் தெரியும்.
aam, avaLukku samaikkath theriyum
yes, she knows to cook
256. உன் அண்ணனுக்கு சமைக்கத் தெரியுமா?
un aNNanukku samaikkath theriyumaa?
Does your older brother how to cook?
257. என் அண்ணனுக்கு சமைக்கத் தெரியாது.
en aNNanukku samaikkath theriaathu.
My older brother doesn’t to cook.
258. Mudiyum முடியும் is an impersonal verb
which takes subject in the instrumental e.g.உங்களால்,
என்னால், ராமனால் . But it can take dative,
nominative and instrumental.
259. உங்களால் தமிழ் பேச முடியுமா?
ungaLaal thamiz peesa midiyumaa?
can you speak Tamil?
260. என்னால் கொஞ்சம் தமிழ் பேச முடியும்.
ennaal konjam thamiz peesa mudiyum
I can speak Tamil a little.
261. நன்றாகப் பேச முடியாதா?
nanRaakap peesa mudiyaathaa?
cant you speak Tamil vey well?
262. கொஞ்சம்தான் தமிழ் பேச முடியும்.
konjamthaan thamiz peesa mudiyum
I can speak only a little.
263. என்னால் 10 கிலோமீட்டர் ஓட முடியுமா?
ennaal pathu kilometre ooda mudiyaathu.
Can I run 10 kilometres?
264. ராமனால் பத்து கிலோமீட்டர் ஓட முடியாது.
raamanaal pathu kilometre ooda mudiyaathu.
raman cant run ten kilometres.
265. கண்ணனாலும் பத்து கிலோமீட்டர் ஓட முடியாதா?
kaNNanaalum 10 kilometre ooda mudiyaathaa?
cant even Kannan run 10 km?
266. ஆம், கட்டாயம் ஒட முடியாது.
aam, kattaayam ooda mudiyaathu.
Yes, definitely cant run.
267. யாருக்குத் தமிழ் எழுத முடியும்?
yaarukku thamiz ezutha mudiyum?
who can write Tamil?
268. என் ஆசிரியரால் தமிழ் எழுத முடியும்.
en aasiriyaraal thamiz ezutha mudiyum
My teacher can write Tamil.
269. உங்களுக்கு தமிழ் புரியுமா (விளங்குமா)?
ungaLukku thamiz puriyumaa?
Do you understand Tamil?
270. மெதுவாகப் பேசுங்கள். எனக்குப் புரியும்
methuvaakap peesungaL .enakkup puriyum.
Speak slowly, I (will) understand
271. ஹிந்தி புரியுமா?
indhi puriyumaa?
( Do you ) understand Hindi?
272. எனக்கு ஹிந்தி புரியாது.
enakku inthi puriyaathu
I dont understand Hindi
273. இந்தக் கடையில் தமிழ் புத்தகம் கிடைக்குமா?
inthak kadaiyil thamiz puththakam kidaikkumaa?
Can I get a Tamil book in this shop?
274. ஆம், கிடைக்கும். என்ன புத்தகம் வேண்டும்?
aam, kidaikkum. enna puththakam veNdum?
Yes, it is available. What book do you want?
275. இங்கே சிகரெட் கிடைக்குமா?
ingee cigarete Available?
Can I get cigarettes here ?
276. இந்தக் கடையில் சிகரெட் கிடைக்காது.
inthak kadaiyil sigaret kidaikkaathu.
in this shop cigarets not available
cigaretts are not available in this shop
277. கடைசி கடையில் கிடைக்கும்.
kadaisi kadaiyil kidaikkum
last in the shop available
it is available in the last shop
278. உங்களுக்கு ஒரு தோசை போதுமா?
ungaLukku oru dosai poothumaa?
to you one dosai enoug?
is one dosai enough for you
279. இல்லை, எனக்கு ஒரு தோசை போதாது
illai, enakku oru dosai poothaathu
no to me one dosai not enough
one dosai is not enough for me
280 ராமனுக்கு கொஞ்சம் காப்பி போதுமா?
raamanukku konjam kappi poothumaa?
to raman little coffee enough?
is little coffee enough for Rama?
281. ராமனுக்கு கொஞ்சம் காப்பி போதாது.
raamanukku konjam kappi poothaathu
to raman little coffee not enough
little coffee is not enough for raman
282. எனக்கு இந்த வீடு போதும்.
enakku intha oru viidu Pothum
to me this one house enough
this house is enough for me.
To be continued…………………..