
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,547
Date uploaded in London – 15 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் – 4
ச.நாகராஜன்
திரைப்படங்களில் ராமர் பாடல்கள் என்ற எனது புத்தகத்தில் கண்ணதாசனின் ராமர் பாடல்களைப் பற்றி விரிவாகச் சொல்லி இருக்கிறேன். சில பாடல்களின் சில வரிகளை மட்டும் இங்குபார்ப்போம்.
1968ஆம் ஆண்டு மலர்ந்த படம் லட்சுமி கல்யாணம்.
ராம பக்தியில் தோய்ந்த கண்ணதாசன். பாடலின் கடைசி வரிகளில் லட்சோப லட்சம் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வைத்தார். முதல் வரிகளிலோ அற்புத பட்டியல் ஒன்றை சித்தரித்து விட்டார். பாடல் இதோ:
ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி – அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி – தேவன்
கல்யாண கோலம் கொண்ட – கல்யாணராமன்
காதலிக்கு தெய்வம் அந்த – சீதாராமன்
அரசாள வந்த மன்னன் – ராஜாராமன்
அலங்கார ரூபம் அந்த – சுந்தரராமன்
தாயே என் தெய்வம் என்ற – கோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்ட – தசரதராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும் – கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் – ஸ்ரீஜெயராமன்
வம்சத்திற்கொருவன் – ரகுராமன்
மதங்களை இணைப்பவன் – சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் – ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் – அனந்தராமன்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!!!
இந்தப் பாட்டில் 18 முறை ராமர் வருகிறார்! வேறு எந்த மொழிக் கவிஞரும் இப்படி ஒரு ராமர் மாலையைப் பாடியதில்லை!
வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ
ராமரைப் பாடலில் கொண்டுள்ள திரைப்படங்களில் மூன்று தெய்வங்களும் ஒன்று.
ராமாயணத்தை கம்பன் அரங்கேற்றும் போது பொறாமை கொண்ட சிலர் அவனிடம். ராமருக்கும் சீதைக்கும் எல்லாமும் இருப்பதாகப் புகழ்கிறீர்களே, அவர்களுக்கு இல்லாதது ஒன்றுமே இல்லையா என்று இடக்காகக் கேட்ட போது, உடனே, பளிச்சென்று இருக்கிறதே, “ஐயனுக்கு வசையில்லை; அன்னைக்கு இடையே இல்லை” என்று அவன் பதில் அளித்தானாம்!
மருங்கு இலா நங்கையும், வசை இல் ஐயனும்,
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்,
நங்கைக்கு இல்லாதது இடை; நம்பிக்கு இல்லாதது வசை!
கவி சக்கரவர்த்தி கம்பனைத் திட்ட வேண்டும் என்று அவனது காவியத்தில் குதித்து அதிலிருந்தும் அதன் சுவையிலிருந்தும் மீள வழி தெரியாமல் திகைத்து பெரும் ஆத்திகனாக மாறி பல ஆயிரம் பாடல்களைப் பாடினார் கண்ணதாசன் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்!
ஆகவே தான் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் தான் அனுபவித்து மகிழ்ந்த கம்பனைத் தமிழ் மக்களுக்குத் தன் பாடல்கள் மூலம் இனம் காட்டி மகிழ்ந்தார்
அவர்.
மருங்கு இலா நங்கையை அவர் இனம் காட்டுவது கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா பாடலில் இப்படி:
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா
வண்ண கண்ணல்லவா
இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா?
மின்னல் இடையல்லவா?
1976ஆம் ஆண்டு வெளியான ரோஜாவின் ராஜா படத்தில் இடம் பெற்றது.
ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான்
ராஜாராமன் நினைத்திருந்தான்
அவள் சுயம்வரம் கொள்ள மன்னவர் சிலரும்
மிதிலைக்கு வந்திருந்தார் –
மிதிலைக்கு வந்திருந்தார் .
மணிமுத்து மாணிக்க மாடத்தில் இருந்து ஜானகி பார்த்திருந்தாள்
இரு மைவிழி சிவக்க மலரடி கொதிக்க ராமனைத் தேடி நின்றாள்
நாணம் ஒருபுறம் ஆசை ஒருபுறம் கவலை மறுபுறம்
அவள் நிலைமை திரிபுறம்
1962ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான சுமைதாங்கி திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் டி.கே.ராமமூர்த்தி இசையில் எஸ்.ஜானகி பாடும் பாடலுக்கான கவிஞர் கண்ணதாசனின் வரிகள் இவை:-
ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ
1962ஆம் ஆண்டு வெளியான அன்னை படத்தில் இடம் பெற்ற பாடல்:
அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
“ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்
உள்ளத்தை நன்றாய் புரிந்து கொண்டால்
இருவர் என்பது மாறிவிடும்
இரண்டும் ஒன்றாய் கலந்து விடும்
என்ற வரிகளோ
“ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்’ என்ற கம்பனின் காவிய வரியை சுருக்கமாக நவீன வடிவில் தருவதைச் சுட்டிக் காட்டுகிறதல்லவா?!
படம்:- நெற்றிக் கண். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும், மேனகாவும் நடித்த இந்தப் படம் வெளியான ஆண்டு 1981.
ராமனின் மோகனம்
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம்
https://www.youtube.com/watch?v=1eEeW7pYxjA சொல்வதெல்லாம் கண்ணதாசன் -பதாகை32 –
கமெண்ட் ஸையும் பதிவு செய்யலாம்.
நாகராஜன்
தொடரும்