
Post No. 11,551
Date uploaded in London – 16 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
ராமாயணத்தில் எல்லோரும் பார்ப்பது பக்திக் சுவையே; ராமன், சீதை, அனுமன் ஆகியோர் மீதுள்ள பக்தி காரணமாக வேறு பல முக்கிய விஷயங்களை கவனியாமல் விட்டுவிடுகிறோம் ஜனநாயகம், சரணாகதி தத்துவம் ஆகியன பற்றி அருமையான விஷயங்கள் இருக்கின்றன. சில இடங்களில் கம்பன் நீண்ட உரையாற்றுகிறான்; ஆனால் வால்மீகியில் வேறு விஷயங்கள் உள்ளன.ஒப்பிட்டு ரசிப்போம்
ஜனநாயகம்-1
ராமனை முடிசூட்ட விரும்புகிறேன் என்று அறிவித்த தசரதர் சொல்கிறார்
यदिदं मेऽनुरूपार्थं मया साधु सुमन्त्रितम्।
भवन्तो मेऽनुमन्यन्तां कथं वा करवाण्यहम्।।2.2.15।।
யதிதம் மே அனுரூபார்த்தம் மயா சாதி சுமந்த்ரிதம்
பவந்தோ மே அனுமன்யந்தாம் கதம் வா கரவாண்யாஹம்
இது எனது விருப்பம்; நன்கு பிறரை ஆலோசித்து எடுத்த முடிவு உங்களு
டைய அனுமதியையும் கோருகிறேன்; வேறு என்ன செய்யவேண்டும் என்றும் விளம்புங்கள் .
அங்கே ஒரு பொன்மொழியையும் உதிர்க்கிறார் ‘பாரபட்சமில்லாதோரின் கருத்துக்கள் பயனுடையவை’ என்கிறரர்.
यद्यप्येषा मम प्रीतिर्हितमन्यद्विचिन्त्यताम्।
अन्या मध्यस्थचिन्ता हि विमर्दाभ्यधिकोदया।।2.2.16।।
யத்ய ப் யேஷா மாமா ப்ரீதிர் ஹிதம் அந்யத் அபி சிந்த்யதாம்
அன்யா மத்யஸ்த்ய சிந்தா ஹி விமர்த்தாப்ய அதிகோதயா
இது என்னுடைய விருப்பம் என்றாலும் மாற்றுவழிகள் இருப்பின் அவைகளையும் சிந்திக்கவேண்டும். நடுநிலையில் நின்று சிந்திப்போரின் வாதங்கள் பலன் தரக்கூடியவை
Xxxx
ஜனநாயகம்-2
இது தவிர வால்மீகியும் கம்பனும் சொல்லாத ஒரு ராமாயண ரகசியத்தை மதுரைத் தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார் அகநாநூற்றுக் கவிதையில் (அகநானூ.70) சொல்கிறார் . திருவணைக் கரைக்கு அருகில் ஒரு ஆலமரத்தின் கீழ் , இலங்கையின் மீது படையெடுப்பது பற்றி வானர சேனை COMMANDERS கமாண்டர்களுடன், ராமன் ரகசிய ஆலோசனை நடத்தியதாகவும் , அப்போது மரத்தின் மீதிருந்த ஏராளமான பறவைகள் கூச்சல் /இரைச்சல் போட்டதாகவும் SHUT UP YOUR MOUTH ராமன் ஷட் அப் யுவர் மவுத் என்று கட்டளையிட்டவுடன் பறவைகள் ‘கப் சிப்’ என்று அடங்கி மவுனமாயின என்றும் பாடியுள்ளார். இங்கேயும் அவர் ஜனநாயக நடைமுறையைப் பின்பற்றி பிறரைக் கலந்தாலோசித்தத்தைக் காண்கிறோம்
கடல் மீது பாலம் கட்டுவது பற்றி நீலன் என்ற தமிழ் சிவில் என்ஜினீயருடன் TAMIL CIVIL ENGINEER NEELAN ராமன் கலந்தாலோசித்தது வேறு இடங்களில் காணப்படுகிறது ; ஆக கலந்தாலோசித்து முடிவெடுக்கும் ஜனநாயக நடை முறையினை ராமாயணம் மஹாபாரதம் முழுதும் காண்கிறோம். ரிக் வேதத்தில் உள்ள சமிதி (கமிட்டி), ஸபா (சபை-அவை) என்பன எல்லாம் உலகிற்கே நாம் ஜனநாயத்தைக் கொடுத்ததைக் காட்டுகின்றன. பின்னர் எண்பேராயம், ஐம்பெ ருங்குழு என்பனவற்றை தமிழர்கள் அமைத்து, ஜனநாயக முறையில் முடிவெடுத்தனர். அரசனும் அவர்கள் சொல்லுவதைக் கொண்டே ஆட்சி நட்த்தினான்.
Xxxx

ஜனநாயகம்-3
ராமரின் சரணாகதி தத்துவம்
ராமரின் சரணாகதி தத்துவம் வால்மீகி இராமாயண யுத்த காண்டத்தில் தெளிவாகச் சொல்லப்படுகிறது. இதை அறிவிக்கும் முன்னர், அவர் எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டு அறிவதில் நாம் ஜனநாயக நடை முறைகளைக் காண்கிறோம். அது மட்டுமல்ல இது KANDU MAHARISHI ‘கண்டு மகரிஷி’ யின் கொள்கை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் . அதாவது தன்னிச்சையான (NOT AUTOCRATIC) முடிவு இல்லை.
मित्र भावेन सम्प्राप्तम् न त्यजेयम् कथंचन |
दोषो यदि अपि तस्य स्यात् सताम् एतद् अगर्हितम् ||६-१८-३
நண்பன் என்ற முகத்துடன் வருபவனுக்கு சிறிய குறைகள் இருந்தாலும் அவனை நான் மறுக்கமாட்டேன் . அவனை ஏற்பதை நல்லோர் எல்லோரும் ஏற்பர் -6-28-3
மித்ரா பாவேன ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன
தோஷோ யதி அபி தஸ்ய ஸ்யாத் ஸதாம் ஏதத் அகர்ஹிதம்
XXXX
புறாவின் கதை
श्रूयते हि कपोतेन शत्रुः शरणम् आगतः ||६-१८-२४
अर्चितः च यथा न्यायम् स्वैः च मांसैर् निमन्त्रितः |
ஒரு புறா கூட தன்னுயிரையும் ஈந்து , அதைக் கொல்லவந்த வேடனுக்கு தன்னுயிரையே தந்த கதையையும் ராமன் மேற்கோள் காட்டுகிறான்.
(இந்த இடத்தில் கம்பன் ஒரு நீண்ட பட்டியலே தருகிறான். அதையும் பின்னர் காண்போம் )
ஒரு புறா , அதனுடைய எதிரியான வேடன், அடைக்கலம் நாடி வந்த பொழுது விருந்தோம்பல் விதிகளைப் பின்பற்றி அவனை வரவேற்றத்தை நாம் கேட்டிருக்கிறோம் . அவனுக்குத் தன்னுடைய உடலையே விருந்தாகப் படைத்தது .
ஸ்ரூயதே ஹி கபோதேன சத்ரு சரணம் ஆகதஹ
அர்ச்சிதஹ ச யதா ந்யாயம் ஸ்வைஹி ச மாம்ஸைர் நிமந்த்ரிதஹ
Xxxx
स हि तम् प्रतिजग्राह भार्या हर्तारम् आगतम् ||६-१८-२५
कपोतो वानर श्रेष्ठ किम् पुनर् मद् विधो जनः |
ஓ குரங்கினப் பெருந்தலைவர்களே ! அதே வேடன் புறாவின் மனைவியைக் கொன்றபோதும் அந்த வேடனை விருந்தாளியாக ஏற்றது ஆண் புறா . அப்படி இருக்கையில் என்னைப்போன்ற ஒரு மனிதன் எவ்வளவு செய்யவேண்டும் ?
ஸ ஹி தம் ப்ரதிஜக்ராஹ பார்யா ஹர்த்தாரம் ஆகதஹ
கபோதோ வானர ஸ்ரேஷ்ட கிம் புனர் மத் விதோ ஜனஹ
ஈசாப் கதைகள் அனைத்தும் இந்தியாவிலிருந்து சென்றன என்பதற்கு வேதம் ,ராமாயண , மஹாபாரதம், ஜாதகக் கதைகள், பஞ்ச தந்திரம், ஹிதோபதேசத்தில் ஏராளமான சான்றுகள் உள்ளன .
(புறாக்கதை , ஈசாப் காப்பி அடித்த கதைகள் பற்றி இந்த பிளாக்கில் ஏற்கனவே கட்டுரைகள் உள )
Xxxx
ऋषेः कण्वस्य पुत्रेण कण्डुना परम ऋषिणा ||६-१८-२६
शृणु गाथाम् पुरा गीताम् धर्मिष्ठाम् सत्य वादिना |
முன்னொரு காலத்தில் வாழ்ந்த ,உண்மையின் உறைவிடமாக விளங்கிய ,கண்வ மஹரிஷியின் மகனான கண்டு மகரிஷியின் கவிதைகளை கேளுங்கள் ; அவர் இது பற்றி சொல்லியுள்ளார்
ருஷேஹே கண்வஸ்ய புத்ரேன கண்டுனா பரம ரு ஷிணா
ஸ்ருணு காதாம் புரா கீதாம் தர்மிஷ்டாம் ஸத்ய வாதினா
Xxxx
बद्ध अन्जलि पुटम् दीनम् याचन्तम् शरण आगतम् ||६-१८-२७
न हन्याद् आनृशंस्य अर्थम् अपि शत्रुम् परम् पत |
எதிரிகளை அழித்தொழிக்க வல்ல அரசனே ! ஒருவன் கூப்பிய கரங்களுடன் வருகையில் எதிரியானாலும் கூட , அவனைக் கொல்லுவது கொடூரமான செயல் ஆகும். அதே போல பிச்சை கேட்டு வருவோனையும்,அடைக்கலம் கேட்டு வருவோனையும் கொல்லக்கூடாது
பத்த அஞ்சலி புடம் தீனம் யாசந்தம் சரண ஆகதம்
ந ஹன்யாத் ஆன்ருசம்ஸ்ய அர்த்தம் அபி சத்ரும் பரம் பத
xxxx

अर्तो वा यदि वा दृप्तः परेषाम् शरणम् गतः ||६-१८-२८
अरिः प्राणान् परित्यज्य रक्षितव्यः कृत आत्मना |
அர்த்தோ வா யதி வா த் ருப்தஹ பரேஷாம் சரணம் கதஹ
அரிஹி ப்ராணாம் பரித்யஜ்ய ரக்ஷிதவ்யஹ க்ருத ஆத்மனா
முன்னர் அகந்தையுடனும் அடக்கியாண்டவானுமாக இருந்த எதிரியானாலும் ஏனையோரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு வந்தால் நல்ல மனதுடையவன் தன உயிரினைக் கொடுத்தாவது சரணடைந்தவனைக் காப்பாற்ற வேண்டும்
(விருந்தோம்பல் HOSPITALITY , கற்பு CHASTITY , நிலையாமை IMPERMANENCE, தூதர் இலக்கணம் AMBASSADOR RULES, சரணடைதல் SURRENDER, அகதிகள் REFUGEES பற்றி 2500 ஆண்டுகளுக்கு முன்னரே மிக தெளிவான நாகரீமிக்க கொள்கைகளை வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் நான் கண்டதில்லை.)
Xxxx
स चेद् भयाद् वा मोहाद् वा कामाद् वा अपि न रक्षति ||६-१८-२९
स्वया शक्त्या यथा तत्त्वम् तत् पापम् लोक गर्हितम् |
பயத்தினாலோ , அறியாமையினாலோ, ஆசையினாலோ அவனைத் தன பலம் கொண்டமட்டும் பாதுகாக்காவிடில் அது பாபம் . உலகமே அவனை இகழும்
ஸ சேத் பயாத் வா மோஹாத் வா காமாத் வா அபி ந ரக்ஷதி
ஸ்வயா சக்த்யா யதா தத்வம் தத் பாபம் லோக கர்ஹிதம்
Xxxx
विनष्टः पश्यतस् तस्य रक्षिणः शरण आगतः ||६-१८-३०
आदाय सुकृतम् तस्य सर्वम् गच्चेद् अरक्षितः |
ஒரு அகதியைக் காக்கும் சக்தி இருந்தும் , அவன் நம் கண் முன்னாலேயே இறக்கநேரிட்டால் இதுவரை கிடைத்த நற்பெயர் , நன்மைகள் அனைத்தும் பறந்தோடிப் போய்விடும்
வினஷ்டக பச்யதம் தஸ்ய ரக்ஷிணஹ சரண ஆகதஹ
ஆதாய சுக்ருதம் தஸ்ய ஸர்வம் கச்சேத் அரக்ஷிதஹ
xxx
एवम् दोषो महान् अत्र प्रपन्नानाम् अरक्षणे ||६-१८-३१
अस्वर्ग्यम् च अयशस्यम् च बल वीर्य विनाशनम्
ஏவம் தோஷோ மஹான் அத்ர ப்ரபந்நாம் அரக்ஷணே
அஸ்வர்க்யம் ச அயசஸ்யம் ச பல வீர்ய விநாசனம்
அடைக்கலம் கேட்டு வந்த அகதிகளை காப்பாற்றாமல் இருப்பது பெரிய இழுக்கு ; அவர்களுக்கு சொர்க்க போகமும் கிட்டாது ; புகழையும் வீரத்தையும் பலத்தையும் அழித்தும் விடும் .
Xxx
करिष्यामि यथा अर्थम् तु कण्डोर् वचनम् उत्तमम् ||६-१८-३२
धर्मिष्ठम् च यशस्यम् च स्वर्ग्यम् स्यात् तु फल उदये |
கரிஷ்யாமி யதா அர்த்தம் து கண்டோர் வசனம் உத்தமம்
தர்மிஷ்டம் ச யசஸ் மயம் ச ஸ்வர்க்யம் ஸ்யாத் து பல உதயே
நான் கண்டு மகரிஷி சொன்ன அற்புதமான வார்த்தைகளையே பின்பற்றுவேன் .அதுவே அறநெறி ; புகழ் ஈட்டும் ; சொர்க்கத்துக்கு வழி திறக்கும் ; கை மேல் பலன் தரும்
Xxx

யுத்த காண்டத்தில் முத்தாய்ப்பு வைக்கும் ஸ்லோகம் இதோ
सकृद् एव प्रपन्नाय तव अस्मि इति च याचते ||६-१८-३३
अभयम् सर्व भूतेभ्यो ददामि एतद् व्रतम् मम |
33. yaachate = he who seeks; prapannaaya = refuge; sakR^ideva = just once; iti = saying that; asmi = I am; tava = yours; dadaami = I shall give; abhayam = assurance of safety; sarva bhuutebhyaH = against all types of beings; etat = this; mama = is my; vratam = pledge.
“He who seeks refuge in me just once, telling me that ‘I am yours’, I shall give him assurance of safety against all types of beings. This is my solemn pledge”
ஒரே ஒரு முறை என்னைச் சரணடைந்தால் போதும்;நான் உன்னவன் என்று சொன்னால் , எல்லா உயிரினங்களிடமிடமிருந்தும் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன் இது என்னுடைய உறுதிமொழி . என்னுடைய உறுதியான கொள்கை
சம்ஸ்க்ருதத்தில் இது என் விரதம் VOW/ PLEDGR என்று செல்லப்பட்டுள்ளது
ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய தவ அஸ்மி இதி ச யாசதே
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம
Xxxx
கம்பன் சொல்லும் வேறு விஷயங்கள்
கம்ப ராமாயணத்தில் இந்த உறுதி மொழி, கிஷ்கிந்தா காண்ட சுக்ரீவ சரணாகதி விஷயத்திலேயே வந்துவிடுகிறது.. இந்த விபீஷண சரணாகதி படலத்தில் புறாக்கதையுடன் வேறு பல விஷயங்களை அடுக்குகிறான் .இதோ அந்தப் பட்டியல் :
கம்ப இராமாயண யுத்த காண்டத்தில் இராமன் தரும் அகதிகள் பட்டியல் வேறு
1. சிபிச் சக்ரவர்த்தி/புறா ; 2.தேவர்/அசுரர் -நஞ்சசுண்ட கண்டன்/சிவன்; 3.வால்மீகி சொன்ன புறா ; 4.கஜேந்திரன் என்னும் யானை ;5.மிருகண்டு முனிவர்/சிவன் ; 6.சீதை-ஜடாயு ; 7.ராமனைச் சரணடைந்த முனிவர்கள்.
பாடல்களுடன் விரிவாகக் காண்போம்
—தொடரும்
TAGS0- சரணாகதி தத்துவம், கம்பன், அகதிகள், புறா கதை , ஜனநாயகம், வால்மீகி , ராமாயணம்