முறை தவறாத அரசரைப் பார்த்து மகிழ்வது இந் நிலவுலகம்: அறப்பளீசுர சதகம் (Post.11,555)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,555

Date uploaded in London – 17 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ARAPPALISURA SATAKA VERSE 25 WITH MY COMMENTARY 

     25. இதனை இதுகண்டு மகிழும்,

அறப்பளீசுர சதகம் 25

தந்தைதாய் மலர்முகம் கண்டுநின் றாலிப்ப

     தவர்தந்த சந்ததி யதாம்!

  சந்த்ரோ தயம்கண்டு பூரிப்ப துயர்வாவி

     தங்குபைங் குமுத மலராம்!

புந்திமகிழ் வாய்இரவி வருதல்கண் டகமகிழ்வ

     பொங்குதா மரைமலர் களாம்!

  போதவும் புயல்கண்டு கண்களித் தேநடம்

     புரிவது மயூர இனமாம்!

சிந்தைமகிழ் வாய்உதவு தாதாவி னைக்கண்டு

     சீர்பெறுவ திரவலர் குழாம்

  திகழ்நீதி மன்னரைக் கண்டுகளி கூர்வதிச்

     செகம்எலாம் என்பர் கண்டாய்!

அந்தியம் வான் அனைய செஞ்சடா டவியனே!

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அம் அந்தி வான் அனைய செம் சடாடவியனே – அழகிய

அந்தி வானம்போலச் சிவந்த சடைக்கற்றையுடையவனே!, அமலனே –

குற்றமற்றவனே!, அருமை ……… தேவனே!,

தந்தை தாய் மலர்முகம் கண்டு

நின்று ஆலிப்பது அவர் தந்த சந்ததியது ஆம் – பெற்றோரின் மலர்ந்த

முகத்தைக் கண்டு பூரிப்பது அவர்கள் பெற்ற சந்ததி ஆகும், சந்திரோதயம் கண்டு பூரிப்பது உயர்வாவி தங்கு பைங்குமுத மலர் ஆம் – திங்களின் வருகைநோக்கி மலர்வது உயர்ந்த பொய்கையிலே அமைந்த புதிய அல்லிமலர் ஆகும், புந்தி மகிழ்வாய் இரவி வருதல் கண்டு அகம் மகிழ்வ

பொங்கு தாமரை மலர்கள் ஆம் – மனம் மகிழ்வாக ஞாயிறு எழுதல்

நோக்கி மனம் களிப்பன மிகுதியான தாமரைப்பூக்கள் ஆகும், போதவும் புயல்கண்டு கண்களித்தே நடம் புரிவது மயூர இனம் ஆம் – முகிலை நன்றாகப் பார்த்துக் கண்களித்து நடனம்புரிவது மயிலின் கூட்டம் ஆகும்,

சிந்தை மகிழ்வாய் உதவு தாதா வினைக் கண்டு சீர் பெறுவது இரவலர்

குழாம் – மனக் களிப்புடன் கொடுக்கும் கொடையாளியைக் கண்டு

சிறப்புறுவது இரவலர் கூட்டம், திகழ் நீதி மன்னரைக் கண்டுகளிகூர்வது இச் செகம் எலாம் என்பர் – விளங்கும் முறை தவறாத அரசரைப் பார்த்து மகிழ்வது இந் நிலவுலகம் யாவும் என்று அறிஞர் கூறுவர்.

Xxxx

பெற்றோரைக் கண்டால் குழந்தைகள் மகிழும்

சந்திரனைக் கண்டால் அல்லி மலர்கள் மலரும்

சூரியனைக் கண்டால் தாமரைகள் விரியும்

மேகத்தைக் கண்டால் மயில்கள் ஆடி மகிழும்

கொடையாளிகளைக் கண்டால் பாவலர்கள் மகிழ்வர்

நல்ல அரசனைக் கண்டால் உலகமே வணங்கும் –அம்பலவாணர்

பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி இதற்கு  நல்ல எடுத்துக்காட்டு. உலகில் யார் எந்தப் பக்கம் சர்வே எடுத்தாலும் எப்போதும் முன்னனியில் நிற்கிறார் மோடி .

Xxx

DAFFOLDILS டாஃபோடில்ஸ் மலர்கள் தரும் இன்பம் பற்றி ஆங்கிலக் கவிஞர் வோர்ட்ஸ்வொர்த் செப்புகிறார்

For oft, when on my couch I lie

In vacant or in pensive mood,

They flash upon that inward eye

Which is the bliss of solitude;

And then my heart with pleasure fills,

And dances with the daffodils.

சிந்தனைச் சூழலில் சிக்கி

அடிக்கடி படுக்கையில் புரள்வேன்

மனக்கண் முன்னே பளிச்சிடும்

அந்த தனிமை தருவதோ பிரம்மானந்தம்

இதயம் நிரம்ப மகிழ்ச்சி பொங்க

ஆடுவேன் டாபோடில்ஸ் மலர்களுடன் கூட

–WILLIAM WORDSWORTH

XXX

ஒப்பிடுக

சினிமா பாட்டு

மருதகாசி: ஐயா, என் பெயர் மருத காசி. நான் எழுதிய பாடலில் இன்பம் என்றால் என்ன என்று சினிமா பாட்டு வடிவிலேயே சொல்லிவிட்டேன்; நல்ல மனைவியும் மக்களும் தான் ஒருவனுக்கு இன்பம் தருவர்:

இன்பம் எங்கே இன்பம் எங்கே – (திரைப்படம்: மனமுள்ள மறுதாரம் பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்)

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு – அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு (முறை)
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை – இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை (2 முறை)
இருக்கும் வரை இன்பங்களை
அனுபவிக்கும் தன்மை
இல்லையென்றால் வாழ்வினிலே
உனக்கு ஏது இனிமை

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

கனிரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம் (2 முறை)
இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம் – அவள்
இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம் (2 முறை)

மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம் – உன்
மார் மீது உதைப்பதிலே கிடைப்பது தான் இன்பம்

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

Xxxx

ஐயாஎன் பெயர் வள்ளுவர்.

நான் எழுதிய குறளில் 29 இடங்களில் இன்பம், இன்புறுவது என்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளேன்.

‘’அறத்தான் வருவதே இன்பம்’’ (குறள் 39) (தருமத்தைப் பின்பற்றினால் இன்பம் கிடைக்கும்)

‘’மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’’ (குறள் 65) (குழந்தைகள் இன்பம் தருவர்)

‘’இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்’’ (98) (இன்சொல் இன்பம் தரும்)

‘’இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பம் கெடின்’’ (ஆசையை ஒழித்தால் இன்பம்)

‘’ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப்பெறின்’’ (1330) (கணவன் –மனைவி ஊடல் பின்னர் சமாதானத்தில் முடியும்போது கூடுதல் இன்பம் தரும்)

xxx

எது அல்லது யார் இன்பம் தருவர்?

ஸ்வதாரா- தன்னுடைய மனைவி

போஜன- நல்ல சாப்பாடு

தனம் – பணம் 

சந்தோஷஸ்த்ரிஷு கர்தவ்யஹ ஸ்வதாரே போஜனே தனே (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)160-337

Xxx

பாரதிதாசன்

அட நான் கூடத்தான் இன்பத் தமிழ் பற்றிப் பாடிய பாடலில்

தமிழுக்கும் அமுதென்று பேர்—அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

என்று ஒரே பாடலில் ‘’இன்பத் தமிழ்’’ என்ற சொல்லை எட்டு முறை பயன்படுத்தி தமிழ்தான் இன்பம் என்று நிரூபித்திவிட்டேன்.

Xxx

பாரதி

என் சீடன் பாரதிதாசன் கூறியது முற்றிலும் உண்மையே. அத்தோடு சுதந்திரமும் ஆனந்தம் தரும். உலகே ஒரு இன்பக் கேணி என்று வேதம் சொல்லுவதையும் கணக்கிற் கொள்ள வேண்டும். இதோ கேளுங்கள்;

செந்தமிழ் நாடெனும் போதினிலே—இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே’’

XXX

‘’ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று’’

XXX

‘’ஒன்று பரம் பொருள்- நாம் அதன் மக்கள்

உலகு இன்பக் கேணி என்றே- மிக

நன்று பல் வேதம் வரைந்த கை பாரத

நாயகி தன் திருக் கை’’

XXX

‘’தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா

உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதையா நந்தலாலா’’

XXX

‘’தனமும் இன்பமும் வேண்டும்

தரணியிலே பெருமை வேண்டும்’’

–SUBRAHMANYA BHARATI

Xxxx subham xxxxx

TAGS–இன்பம் , எது, யார், தருவார் , அம்பலவாணர் , சதகம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: