
Post No. 11,563
Date uploaded in London – 19 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
27. நற்பண்புக்கு இடமிலார்
ARAPPALISURA SATAKAM VERSE 27 WITH MY COMMENTARY
வெறிகொண்ட மற்கடம் பேய்கொண்டு, கள்ளுண்டு
வெங்காஞ் சொறிப்பு தலிலே
வீழ்ந்து, தேள்கொட்டி டச்சன்மார்க்கம் எள்ளளவும்
மேவுமோ? மேவா துபோல்,
குறைகின்ற புத்தியாய், அதில் அற்ப சாதியாய்க்,
கூடவே இளமை உண்டாய்க்,
கொஞ்சமாம் அதிகார மும்கிடைத் தால்மிக்க
குவலயந் தனில்அ வர்க்கு,
நிறைகின்ற பத்தியும் சீலமும் மேன்மையும்
நிதானமும் பெரியோர் கள்மேல்
நேசமும் ஈகையும் இவையெலாம் கனவிலும்
நினைவிலும் வராது கண்டாய்;
அறைகின்ற சுருதியின் பொருளான வள்ளலே!
அண்ணலே ! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

(இ-ள்.) அறைகின்ற சுருதியின் பொருளான வள்ளலே –
புகழப்படுகின்ற மறையின் பொருளான கொடையாளியே!, அண்ணலே –
தலைவனே! அருமை………..தேவனே!,
வெறி கொண்ட மற்கடம் – வெறி பிடித்த ஒரு குரங்கு, பேய் கொண்டு – பேயாற் பிடிக்கப்பட்டு, கள் உண்டு – (அதன்மேற்) கள்ளையுங் குடித்து, வெம் கரஞ்சொறிப் புதரில் வீழ்ந்து – (மேலும்) கொடிய பூனைக்காஞ்சொறிப் புதரில் விழுந்து, தேள்
கொட்டிட – (அவற்றுடன்) தேளாலும் கொட்டப்பெற்றால், எள்ளளவும்
சன்மார்க்கம் மேவுமோ – (அக் குரங்குக்கு) சிறிதளவேனும் நன்னெறியிலே செல்லும் நிலை உண்டாகுமோ? மேவாதுபோல் – (அவ்வாறு அக் குரங்குக்கு நன்னெறி) தோன்றாததுபோல்), குறைகின்ற புத்தியாய் – சிற்றறிவுடன், அதில் அற்ப சாதியாய் – மேலும் இழிசெயலுடைய குலத்தினராய், கூடவே இளமை உண்டாய்
– அவற்றுடன் இளமைப் பருவமும் உடையவராய் (இருந்து) அவர்க்கு –
அவர்கட்கு, கொஞ்சமாம் அதிகாரமும் கிடைத்தால் – சிறிது
தலைமைப்பதவி கிடைத்தாலும், குவலயந்தனில் – உலகத்தில், நிறைகின்றபத்தியும் – நிறைந்த கடவுள் அன்பும், சீலமும் – ஒழுக்கமும், மேன்மையும்– பெருந்தன்மையும், நிதானமும் – அமைதியும், பெரியோர்கள்மேல் நேசமும் – அறிஞரிடம் நட்பும், ஈகையும் – கொடைப்பண்பும்,இவையெலாம் நினைவிலும் கனவிலும் வராது – (ஆகிய) இவைகள் யாவும் நினைவிலேயன்றிக் கனவிலும் உண்டாகா.
Xxxx
குரங்கு கள்ளும் குடித்து, பேயும் பிடித்து, தேளும் கொட்டினால் என்ன கதி ஆகும்? என்று தமிழ்ப் பழமொழி உள்ளது . அதை அடிப்படையாக வைத்து இந்தப் பாடலை அம்பலவாணர் இயற்றியுள்ளார். அதை இளமையும் அதிகாரமும் கீழ்ப்பிறப்பும் உள்ள ஒரு மனிதனுடன் ஒப்பிடுகிறார் . நல்ல ஒப்பீடு. அத்துடன் அரிப்பை உண்டாக்கும் ஒரு வகைச் செடியையும் சேர்த்துள்ளார் . சாதாரண மாகவே குரங்குகள் நிமிடத்துக்கு நிமிடம் மரத்துக்கு மரம் தாவும் . அத்தோடு
மேற்சொன்ன அனைத்தும் சேர்ந்தால் அனர்த்தம்தான் . இதை ஒப்பிட இதோ ஒரு பாடல்,

திரைப்படம்: மனம் ஒரு குரங்கு
இயற்றியவர்: வீ. சீதாராமன்
இசை: டி.பி. ராமச்சந்திரன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு
அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது
அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது
நயத்தாலும் பயத்தாலும் அடங்கி விடாது
நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு
வெள்ளிப் பணம் நாடி வாலாட்டம் போடும்
கள்ளத்தனம் செய்து வெறியாட்டம் ஆடும்
கள்ளைப் பாலாக்கிக் களியாட்டம் போடும்
கடவுள் இருப்பதைக் கருதாமல் ஓடும்
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு
கலையின் பெயராலே காமவலை வீசும்
காசு வருமென்றால் மானம் விலைபேசும்
நிலையில் நிற்காமல் கிளைதோறும் தாவும்
நிம்மதியில்லாமல் அலைபோல மோதும்
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்
மனம் ஒரு குரங்கு
Xxxx
பொல்லாத மூர்க்கர்கள் பற்றி படிக்காசுத்தம்பிரான் அழகாகப் பாடிவிட்டார் :
பொல்லாத மூர்க்கருக்கு எத்தனை தான் புத்தி போதிக்கினும்
நல்லார்க்கு உண்டான குணம் வருமோ நடுச் சாமத்திலே
சல்லாப் புடவை குளிர் தாங்குமோ? பெரும் சந்தையினில்
செல்லாப் பணம் செல்லுமோ? தில்லைவாழும் சிதம்பரனே
பொருள்:
தில்லை வாழும் அம்பலவாண !
நள்ளிரவில் மெல்லிய உடையானது வாடைக்காற்றைத் தடுக்குமா ?
பெரிய சந்தையில் செல்லாக்காசை செல்லும்படி செய்ய முடியுமா?
அறிவில்லாமல் தீய செயல்களைச் செய்யும் மூடருக்கு
எவ்வளவு புத்திமதி சொன்னாலும் நல்ல குணம் வருமா ?
வராது .அவர்கள் கள் குடித்து , தே ளும் கொட்டி, பேயும் பிடித்து ,
அரிப்பை உண்டாக்கும் செடியில் விழுந்த கு ரங்கினைப் போலவே நடப்பர்.
XXX
‘அற்பருக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியிற் குடை
பிடிப்பர்.’ என்ற பழமொழியையும் இத்துடன் ஒப்பிடலாம்.
XXXX
தாயுமானவர் அறைகூவல்:– சேரவாரும் ஜெகத்தீரே!
காடும் கரையும் மனக்குரங்கு கால் விட்டோட அதன்பிறகு
ஓடும் தொழிலால் பயனுளதோ ஒன்றாய் பலவாய் உயிர்க்குயிராய்
ஆடும் கருணைப் பரஞ்ஜோதி அருளைப் பெறுதற்கு அன்புநிறை
தேடும் பருவம் இதுகண்டீர் சேரவாரும் ஜெகத்தீரே!
மனம் ஒரு குரங்கு. ஓயாமல் தாவிக்கொண்டே இருக்கும். அதன் பின்னால் அலைந்து ‘மனம் போன போக்கில் போய்’ நேரத்தை வீண் அடிப்பதில் என்ன பயன்? எல்லை இலாத கருணயுடைய அன்பு நிறைந்த கடவுளின் அருளைப் பெற அருமையான மனிதப் பிறவி கிடைத்திருக்கிறது. வாருங்கள் ! என்னுடன் சேருங்கள் ! நாம் எல்லோரும் சேர்ந்து பயணம் செய்வோம் என்று தாயுமானவர் கூப்பிடுகிறார்
Xxxx
READ ALSO MY OLD ARTICLES
மனம் ஒரு குரங்கு – Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ம…
17 Feb 2014 — நம் எல்லோருக்கும் மனம் என்பது ஒரு புரியாப் புதிர். அதைக் கட்டுபடுத்துவது …
You visited this page on 18/12/22.
சங்கடம் – Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ச…
21 May 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … குரங்குகள்‘ (மனம் ஒரு குரங்கு) என்ற …
You visited this page on 18/12/22.
மனிதர்காள்! | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ம…
20 Apr 2014 — மனம் ஒரு குரங்கு. ஓயாமல் தாவிக்கொண்டே இருக்கும். அதன் பின்னால் அலைந்து ‘மனம் …
You visited this page on 18/12/22.
—-SUBHAM—-
TAGS—கள், குடித்து, தேள், கொட்டி , பேய் ,குரங்கு, அறப்பளீசுர சதகம், மனம் ஒரு குரங்கு