
UNION MINISTER SMRITI IRANI WITH HER FAMILY
Post No. 11,566
Date uploaded in London – 20 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
28. இவர் இன்ன முறையர்: அறப்பளீசுர சதகம்
தன்னால் முடிக்கவொண் ணாதகா ரியம்வந்து
தான்முடிப் போன்த மையன்ஆம்;
தன்தலைக் கிடர்வந்த போதுமீட்டு தவுவோன்
தாய்தந்தை யென்னல் ஆகும்;
ஒன்னார் செயும்கொடுமை யால்மெலிவு வந்தபோ
துதவுவோன் இட்ட தெய்வம்;
உத்திபுத் திகள்சொல்லி மேல்வரும் காரியம்
உரைப்பவன் குருஎன் னல்ஆம்;
எந்நாளும் வரும்நன்மை தீமைதன தென்னவே
எண்ணிவரு வோன்பந் துஆம்;
இருதயம் அறிந்துதன் சொற்படி நடக்குமவன்
எவன் எனினும் அவனே சுதன்
அந்நார மும்பணியும் எந்நாளு மேபுனையும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அம் நாரமும் பணியும் எந்நாளுமே புனையும் அண்ணலே
– அழகிய நீரையும் (கங்கையையும்) பாம்பையும் எப்போதும் அணிந்துள்ள
பெரியோனே!, அருமை …… தேவனே!,
தன்னால் முடிக்க ஒண்ணாத
காரியம் வந்து முடிப்போன் தான் தமையன் ஆம் – தன்னாலே முற்றுவிக்க இயலாத அலுவலை வந்து முற்றுவிக்கும் ஒருவன் தனக்கு முன்பிறந்தோன் ஆவான்,
தன் தலைக்கு இடர் வந்தபோது மீட்டு உதவுவோன் தாய்
தந்தை என்னல் ஆகும் – தனக்குத் தலைபோகத்தக்க துன்பம்
உண்டானபோது அதிலிருந்து மீட்போன் அன்னையும் பிதாவும் ஆவான்,
ஒன்னார் செயும் கொடுமையால் மெலிவு வந்த போது உதவுவோன் இட்ட
தெய்வம் – பகைவர் செய்கின்ற தீமையால் நலிந்த காலத்தில்
துணையாவோன் வழிபடும் தெய்வம் ஆவான், உத்தி புத்திகள் சொல்லி மேல்வரும் காரியம் உரைப்பவன் குரு என்னலாம் – (தொழில் செய்யும்) முறைமையையும் அறிவுரையையும் ஊட்டி எதிர் காலத்தில் வரும் பயனையும் மொழிபவனை ஆசிரியன் எனலாம், வரும் நன்மை தீமை
எந்நாளும் தனது என்ன எண்ணி வருவோன் பந்து ஆம் – வரக்கூடிய
நன்மை தீமைகளை எப்போதும் தனக்கு வந்தவைகளாக நினைத்துத் (தன்னுடன் நட்புப்பூண்டு) வருவோன் உறவினன் ஆவான், இருதயம் அறிந்து தன் சொற்படி நடக்கும் அவன் எவன் எனினும் அவனே சுதன் – மனமறிந்து தன்மொழி தவறாது நடக்கின்றவன் எவனாயினும் அவனே மகன் ஆவான்.
Xxx

KRISHNA AND BALARAMA
ஒப்பிடுக —
சம்ஸ்க்ருதத்தில் 5 தந்தையர், 5 தாயார் , அதே போல தமிழிலும் பாடல்கள் உள்ளன .
தன்னையளித்தாள் தமையன் மனை குருவின்
பன்னியரசன் பயிறேவி- தன் மனையைப்
பெற்றாளிவரைவர் பேசி லெவருக்கும்
நற்றாய ரென்றே நவில்
பேசுமிடத்து தன்னைப் பெற்றவள், தமையனின் மனைவி, ஆசிரியரின் மனைவி, அரசனின் மனைவி, தன்னுடைய மனைவியைப் பெற்றவள் ஆகிய இந்த ஐந்து வகையினரையும் அவரவர்க்கு பெற்ற தாய்மார்கள் என்றே சொல்லு.. இவர்கள் ஐந்து பேரையும் தாய் போலக் கருத வேண்டும்..
Xxx
ஐந்து தாய்
ராஜாவின் மனைவி (மஹாராணி), குருவின் மனைவி, அண்ணனின் மனைவி, தன்னுடைய சொந்தத் தாய் மற்றும் மாமியார் ஆகிய அனைவரும் தாய்க்குச் சமமானவர்கள்:–
ராஜ பத்னீ குரோஹோ பத்னீ ப்ராத்ரு பத்னீ ததைவ ச
பத்னீ மாதா ஸ்வமாதா ச பஞ்சைதா மாதர ஸ்ம்ருதாஹா
–சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 160/ 326, — சாணக்ய நீதி
Xxx
தந்தைக்குச் சமமாகக் கருதப்பட வேண்டியவர்கள்:
§ பிறப்பினால் நமக்குத் தந்தையாக இருப்பவர், (2) நமக்கு மந்திர உபதேசம் செய்தவர் அல்லது குருவை அறிமுகப்படுத்தியவர், (3) நமக்கு கல்வி கற்பித்த ஆசிரியர், (4 )நமக்கு உணவு கொடுத்து உதவியவர் (5) ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றியவர்.
ஜனிதா ச உபநீதா ச யஸ்து வித்யாம் ப்ரயச்சதி
அன்னதாதா, பயத்ராதா பஞ்சைதே பிதர ஸ்ம்ருதாஹா
–சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 165/ 542, பஞ்சதந்திரக் கதைகள், சாணக்ய நீதி
Xxxx
ஐந்து குரு
குரு யார் என்பதில் இரண்டு விதக் கருத்துகள் இரண்டு ஸ்லோகங்களில் உள்ளன:
மஹாபாரத வனபர்வம் கூறுகிறது:
அம்மா, அப்பா, அக்னி, ஆத்மா (தனக்குத் தானே குரு), ஆசிரியர் ஆகிய ஐவரும் குரு – ஆவர்.
பஞ்சைவ குரவோ ப்ரம்மன் புருஷஸ்ய புபூஷதஹ
பிதா மாதா அக்னிர் ஆத்மா ச குருஸ்ச த்விஜசத்தமஹ
—மஹா பாரத – வன பர்வ – 204-27
யோக வாசிஷ்டம் சொல்லுகிறது:
அம்மா, அப்பா, ஆசிரியர், தாய்மாமன், மாமனார் ஆகியோர் குரு ஸ்தானத்தில் இருப்பவர் ஆவர்.
குரவஹ பஞ்ச சர்வேஷாம் சதுர்னாம் ஸ்ருதிசோதிதாஹா
மாதா பிதா ததாசார்யோ மாதுல ச்வசுரஸ்ததா
–யோக வாசிஷ்டம் 1-60
Xxxx
தந்தையர் ஐவர்
பிறப்பித்தோன் வித்தைதனைப் பேணிக் கொடுத்தோன்
சிறப்பின் உபதேசம் செய்தோன் – அறப்பெரிய
பஞ்சத்தில் அன்னம் பகர்ந்தோன் பயந்தீர்த்தோன்
எஞ்சாப் பிதாக்களென எண்.
பெற்ற தந்தை, வித்தைகளைக் கற்றுக் கொடுத்தவர், உபதேசம் செய்த ஆசான், பஞ்சத்தில் உணவளித்தவர், அச்சம் போக்கியவன் ஆகிய ஐவரும் ஒருவனுக்குத் தந்தையாவர்..
Xxxx

VALLUVAR AND HIS WIFE
வள்ளுவனோ இந்த உலகத்தில் நல்ல முறையில் வாழும் அனைவரும் வானத்தில் உறையும் கடவுளுக்குச் சமம் என்று பொதுப்படையாகச் சொல்லி விடுகிறான்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்-குறள் 50
அவன் ‘அஹம் பிரம்மாஸ்மி , ‘தத்வம் அசி’ என்ற உபநிஷத உண்மைகளை ஆதரிப்பவன் அல்லவா?
–subham–
Tags- தந்தை, தாய், தெய்வம், குரு , புது விளக்கம், அம்பலவாணர்