
Post No. 11,565
Date uploaded in London – 20 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
31 அப்ஸரஸ்கள்
ச.நாகராஜன்
31 அப்ஸரஸ்கள்
அதர்வண வேதத்தில் (4.37.4) ஒரு முக்கிய செய்தியைப் பார்க்கிறோம்.
ஆலமரத்திலும் அரச மரத்திலும் அப்ஸரஸ்கள் வாசம் செய்கிறார்களாம்!
தைத்திரீய சம்ஹிதை (3.4.8.4) அத்தி மரத்திலும் ஜாவா அத்தி மரத்திலும் அவர்கள் இருப்பதை உணர முடியும் என்கிறது.
ஆகவே இந்த மரங்களை வழிபடுவதன் மூலம் அப்ஸரஸ்களின் அருளால் சகல சௌபாக்யங்களையும் பெறலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
31 அப்ஸரஸ்களின் பெயர்களை நமது சாஸ்திரங்களில் காண முடிகிறது.
1) அந்தரா
2) க்ஷரவத்யா
3) ப்ரியமுக்யா
4) சுரோத்தமா
5) மிஸ்ரகேஷி
6) சாஷீ
7) பர்ணினி
8) அலம்புஷா
9) மாரீசீ
10) புத்ரிகா
11) வித்யுத்வர்ணா
12) திலோத்தமா
13) அத்ரிகா
14) லக்ஷணா
15) தேவி
16) ரம்பா
17) மனோரமா
18) சுவரா
19) சுவாஹு
20) புர்ணிதா
21) சுப்ரதிஷ்டதா
22) புண்டரீகா
23) சுகந்தா
24) சுதந்தா
25) சுரஸா
26) ஹேமா
27) சாரத்வதி
28) சுவ்ருத்தா
29) கமலா
30) சுபுஜா
31) ஹம்ஸபாதா

xxx
*
ஐந்து விஷயங்களைச் சொல்லாதே!
1) அர்த்த நாசம் – நமது பொருள் இழப்பைச் சொல்லக் கூடாது.
2) மனஸ்தாபம் – மன உளைச்சலை யாருக்கும் சொல்லக் கூடாது.
3) க்ருஹே துஸ்சரிதானி – வீட்டில் நடந்த கெட்ட நடத்தையை யாருக்கும் சொல்லக் கூடாது.
4) வஞ்சனம் – துரோகம்
5) அபமானம் – நமக்கு நேர்ந்த அவமானம்
அர்த்தநாசம் மனஸ்தாபம் க்ருஹே துஸ்சரிதானி ச |
வஞ்சனம் சாபமானம் ச மதிமான் ந ப்ரகாஷயேத் ||
சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம்
சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் 153/28
ஒரு புத்திமானானவன் பொருள் இழப்பு, மன உளைச்சல், வீட்டில் நடந்த கெட்ட நடத்தை, துரோகம், அவமானம் ஆகிய ஐந்தையும் யாருக்கும் சொல்ல மாட்டான்.
xxx
*
ஐந்து வகை ஆனந்தம்
ஆனந்தம் ஐந்து வகைப்படும்.
1) விஷயானந்தம் – உலகியல் சம்பந்தமான ஆனந்தம்
2) யோகானந்தம் – யோகத்தினால் பெறக்கூடிய ஆனந்தம்
3) அத்வைதானந்தம் – அத்வைதத்தினால் பெறக்கூடிய ஆனந்தம்
4) விதேஹானந்தம் – தேகத்திற்கும் அப்பாற்பட்டு பெறக்கூடிய ஆனந்தம்
5) ப்ரஹ்மானந்தம் – மிக உயரியதான ப்ரம்மானந்தம்
விஷயே யோகானந்தௌ த்வாவத்வைதானந்த ஏவ ச |
விதேஹானந்தோ விக்யாதா ப்ரஹ்மானந்தஸ்ச பஞ்சமா: ||
xxxx
அதர்மம் வசிக்கும் இடங்கள் நான்கு
1) த்யூதம் – சூதாடும் இடம்
2) பானம் – கள் குடிக்கும் இடம் (டாஸ்மார்க்)
3) ஸ்த்ரியா: – பெண்கள் ( இங்கு பெண்கள் என்பதை வழி தவறிய பெண்கள் – வேசிகள் என்று கொள்ள வேண்டும்)
4) சூனா – மிருகங்களை வெட்டும் இடம்.
இந்த நான்கு இடங்களும் அதர்மம் குடியிருக்கும் இடங்களாகும்.
அம்ப்யர்திதஸ்ததா தஸ்மை ஸ்தானானி கலயே ததௌ |
த்யூதம் பானம் ஸ்த்ரீயள் சூனா யத்ராதர்மஸ்சதுர்வித: ||
பாகவத புராணம் 1.17.38
xxx
*
மூன்று வித சக்திகள்
ஒரு மனிதனுக்கு சக்தி மூன்று வகையில் வரும்.
1) ஞான சக்தி : அறிவினால் வரும் சக்தி
2) க்ரியா சக்தி : செயலினால் வரும் சக்தி
3) அர்த்த சக்தி : செல்வத்தினால் வரும் சக்தி
த்ரயாணாம் சக்தயஸ்திதஸ்ர: தத்வவீமி தவானத |
ஞானசக்தி: க்ரியாசக்திரர்தசக்திஸ்ததா பரா ||
தேவி பாகவதம் III.7.25
***