
Post No. 11,569
Date uploaded in London – 21 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் மாத இதழ் ஹெல்த்கேர் டிசம்பர் 2022 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
How Food Powers Your Body
உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது? -1
ஆங்கில மூலம் : ஜேம்ஸ் சாமர்ஸ் (James Somers)
தமிழில் : ச.நாகராஜன்
விரைவான வளர்சிதை மாற்றம் (metabolism) எனக்கு இருப்பதாக எப்போதுமே சொல்லப்பட்டு வந்திருக்கிறேன். எதைச் சாப்பிட்டாலும் நான் மெலிந்தே இருக்கிறேன். முப்பதுகளின் நடுப்பகுதிக்கு வந்து விட்ட நிலையில், இப்போது தான் நான் கிடைமட்டமாக வளர்வதை அனுபவிக்கிறேன்.
ஒரு வாரத்தில் சில முறைகள் ‘ஸ்க்வாஷ்’ விளையாடுகிறேன். நண்பருடன் வியாழக்கிழமைகளில் ஓடுகிறேன். நாயுடன் நடை பழகுகிறேன். மற்றபடி எப்போதுமே நான் எனது கணினியுடன் தான் முழு நாளையும் கழிக்கிறேன். பிறகு படுக்கையில் உட்கார்ந்து கொள்கிறேன், தூங்கி விடுகிறேன். என்றாலும் கூட நான் மெலிந்தே தான் இருக்கிறேன். பசி வந்த நிலையில் சுலபமாக கோபம் வருகிறது. பகல் நேரங்களில், காலையில் செமத்தியான காலை உணவு, பிறகு இரண்டு ரவுண்டு மதிய உணவு ஆகியவற்றிற்குப் பின்னர் இன்னொரு முறை சாப்பிடத் தயாராகி விடுகிறேன். சில சமயம் இரவு நேரங்களில் பசி மேலிட விழித்துக் கொள்கிறேன். நான் சாப்பிட்டதெல்லாம் எங்கே தான் போகிறது?
நம்முடைய உடல்களுக்கு நிறைய கலோரி தேவைப்படுகிறது. இந்த உடல் என்னும் மெஷினை ஓட்டுவதற்கே அவற்றில் பெரும்பாலும் செலவழிக்கப்படுகிறது. உங்கள் கல்லீரல் இருப்பதைப் பற்றி குறிப்பாக நீங்கள் உணர தேவையில்லை, ஆனால் நிச்சயமாக அது இருக்கிறது, வேலை செய்கிறது. அதே போலத்தான் உங்கள் சிறு நீரகங்கள், தோல், மலக்குடல், நுரையீரல் மற்றும் எலும்புகளும் இருக்கிறது.
நம்முடைய மூளைகள் தான் பெரிய அளவு சக்தியை எடுத்துக் கொள்கின்றன; சராசரியாகப் பார்த்தால் உடல் எடையில் ஐம்பதில் ஒரு பங்கு தான் இருக்கிறது என்றாலும் கூட நாம் எடுத்துக் கொள்ளும் கலோரியில் ஐந்தில் ஒரு பங்கு மூளை எடுத்துக் கொள்கிறது.
ஒருவேளை என்னுடையது உங்களை விடத் திறன் குறைந்ததாக இருக்கலாம். எனக்கு கவலைப்படும் சுபாவமான மனம் – நான் அசை போட்டுப் பார்க்கிறேன் – இருந்த இடத்தை விட்டு அசையாமல் ஓடுவதைப் போல!
எழுதும் போது சில சமயம் சோம்பேறித்தனமாக இருப்பதை உணர்கிறேன். ஒரு பாராவை என் மனதில் சிந்தனை செய்த பின், இப்படிச் செய்ததற்கு எனக்கு காபி வேண்டும் போல இருப்பதாக நானே ஊகம் செய்து கொள்கிறேன். கடைசியாக ஒரு சேண்ட்விச் இன்னும் சரியானபடி இருக்கும் என்பதைக் கண்டுபிடித்து விட்டேன். சிந்திப்பதானது எனது கலோரிகளை குறைத்து விட்டதே, ‘தீயில் இன்னொரு கட்டையைப்’ போட வேண்டியது தான்!
தீ என்பது வளர்சிதை மாற்றத்திற்கான ஒரு உவமை மட்டுமல்ல! 18ஆம் நூற்றாண்டில் பிரான்ஸை சேர்ந்த இரசாயன இயல் நிபுணரான ஆண்டாயின் லாரண்ட் டீ லாவோசியர் (Antoine-Laurent de Lavoisier) ஒரு கூரறிவு உடைய தொடர் சோதனையை மேற்கொண்டு, நமது வாழ்க்கை ஆதாரமே தீ தான் என்பதை நிரூபிக்க அதை நடத்தினார்.
முதலில் காற்று எதனால் ஏற்பட்டிருக்கிறது என்பதை அவர் கண்டார். பிறகு துல்லியமான அளவுகளைக் கொண்டு காற்றிலிருந்து தீயே ஆக்ஸிஜனைப் பிரித்து துருவாகப் படிய வைக்கிறது என்பதைக் காட்டினார்.
பின்னர் ஒரு சிறிய கம்பார்ட்மென்டைச் சுற்றி – சிறிய பிரிவைச் சுற்றி – ஐஸ் கட்டிகளை வைத்து அந்தப் பிரிவுக்குள் ஒரு எரியும் ஜுவாலையையோ அல்லது ஒரு சிறு மிருகத்தையோ வைக்கும்படியான ஒரு சாதனத்தை உருவாக்கினார்.
ஐஸ் எவ்வளவு உருகுகிறது என்ற அளவை வைத்து ஜூவாலையால் எவ்வளவு சக்தி அந்த மிருகத்தால் எரிக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர் தொடர்பு படுத்திக் காட்டினார்.
அவர் ஒரு ரெஸ்பிரோமீட்டரைக் கூட உருவாக்கினார். ஒரு மனிதன் வெவ்வேறு காரியங்களைச் செய்யும் போது துல்லியமாக எவ்வளவு ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கிறான் என்பதைக் காண டியூப்கள் மற்றும் கேஜ்கள் (tubes and gauges) ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்டது இந்த சாதனம்.
ஒரு எரியும் விளக்கு அல்லது மெழுகுவர்த்தியின் செயல்பாடு போலவே, கார்பன் மற்றும் ஆக்ஸிஜனை மிக மெதுவாக எரிய வைப்பதே சுவாசிப்பது என்னும் செயல் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.
ஜூவாலைகளும் உயிர் வாழ் இனங்களும் ஆற்றல் மற்றும் வாயுக்களை ‘எரியவைக்கும் எதிர்வினை’ (combustion reaction) என்று இன்று நம்மால் அறியப்படுவது போல பரிமாற்றம் செய்து கொள்ளும் ஒன்றே தான் என்றார் அவர்.
தீயில் இந்த எதிர்வினை வேகமாக கட்டுப்பாடின்றி இருக்கிறது; பிளவுகளாக எரிபொருளிலிருந்து ஆற்றல் உதறி விடப்படுகிறது. அநேகமாக அனைத்துமே ஒளியாகவும் வெப்பமாகவும் உடனடியாக விடுவிக்கப்படுகிறது.

ஆனால் வாழ்க்கை என்பது இன்னும் அதிக முறையான ஒன்றாக அமைந்திருக்கிறது. உயிரணுக்கள் அவற்றின் எரிபொருளிலிருந்து ஆற்றலை கண்கவரும் வண்ணம் எடுத்துக் கொள்கிறது, ஒவ்வொரு கடைசித் துளியையும் கூட அவற்றினுடைய மிகச் சிறிய நோக்கங்களுக்காக அவை எடுத்துக் கொள்கின்றன. சொல்லப்போனால் எதுவுமே வீணாவதில்லை.
– சுவாரசியமான நீண்ட கட்டுரை
——தொடரும்