கலியுகத்தின் “மகிமை” பற்றி அம்பலவாணர் & அருணகிரிநாதர் (Post.11,575)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,575

Date uploaded in London – 22 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

அறப்பளீசுர சதகம் 30 

அறப்பளீசுர சதகம் 30. குணத்தைவிட்டுக் குற்றத்தை ஏற்றல்

துட்டவிக டக்கவியை யாருமே மெச்சுவர்;

     சொல்லும்நற் கவியை மெச்சார்

  துர்ச்சனர்க்க கம்மகிழ்ந்து பசரிப் பார்வரும்

     தூயரைத் தள்ளிவிடுவார்

இட்டமுள தெய்வந் தனைக்கருதி டார்; கறுப்

     பென்னிலோ போய்ப்பணிகுவார்;

  ஈன்றதாய் தந்தையைச் சற்றும்மதி யார்; வேசை

     என்னிலோ காலில் வீழ்வார்;

நட்டலா பங்களுக் குள்ளான பந்துவரின்

     நன்றாக வேபே சிடார்;

  நாளும்ஒப் பாரியாய் வந்தபுத் துறவுக்கு

     நன்மைபல வேசெய் குவார்;

அட்டதிசை சூழ்புவியில் ஓங்குகலி மகிமைகாண்!

     அத்தனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அத்தனே – தலைவனே!, அருமை ………… தேவனே!,

யாருமே துட்ட விகடக் கவியை மெச்சுவர் – எல்லோரும் தீய விகடக்

கவிஞனைப் புகழ்வார்கள், சொல்லும் நல் கவியை மெச்சார் – புகழ்ந்து

கூறத்தக்க நல்ல கவிஞனைப் புகழமாட்டார்கள், துர்ச்சனருக்கு அகம்

மகிழ்ந்து உபசரிப்பார் – தீயவரை மனமகிழ்ச்சியுடன் ஆதரிப்பார்,

தூயரைத் தள்ளி விடுவார் – நல்லோரை ஆதரிக்கமாட்டார்கள், இட்டம்

உள தெய்வந்தனைக் கருதிடார் – விருப்பமான தெய்வத்தை நினையார்,

கறுப்பு என்னிலோ போய்ப் பணிகுவார் – பேய் என்றாற் சென்று

வணங்குவர்ஈன்ற தாய் தந்தையைச் சற்றும் மதியார் – பெற்றோர்களைச்

சிறிதும் மதிக்கமாட்டார், வேசை என்னிலோ காலில் வீழ்வார் –

பரத்தையென்றாற் காலில் விழுந்துவணங்குவார், நட்ட லாபங்களுக்கு உள்ளான பந்து வரின் நன்றாகவே

பேசிடார் – இன்பதுன்பங்களுக்கு உட்பட்ட உறவினர் வந்தால் மனம்

விட்டுப் பேசமாட்டார்ஒப்பாரியாய் வந்த புது உறவுக்கு நாளும் பல

நன்மை செய்வார் – ஒப்புக்கு வந்த புதிய உறவினர்க்கு எப்போதும்

பலவகை நலங்களும் புரிவர், அட்ட திசை சூழ் புவியில் ஓங்கு கலி

மகிமை – (இவை) எட்டுத் திக்குகள் சூழ்ந்த உலகில் கலியுகத்தின்

பெருமை.

xxx

ஒப்புநோக்குக- Arunagirinathar

கலியுகத்தில் என்ன, என்ன நடக்கும் என்று சம்ஸ்க்ருத புராணங்களில் நிறைய எழுதி வைத்துள்ளனர்; அதன் சுருக்கத்தை மட்டுமே பாடல் வடிவில் நமக்கு அம்பலவாணர் சொல்கிறார்.

Thiruppugal from kaumaram.com with Sri Gopalasundaram’s commentary

கலியுகம் பற்றி அருணகிரிநாதரும் இதையே சொல்கிறார் :-

கோழையா ணவமி குத்த வீரமே புகல்வர் அற்பர்

     கோதுசே ரிழிகு லத்தர் …… குலமேன்மை

கூறியே நடுவி ருப்பர் சோறிடார் தரும புத்ர

     கோவுநா னெனஇ சைப்பர் …… மிடியூடே

ஆழுவார் நிதியு டைக்கு பேரனா மெனஇ சைப்பர்

     ஆசுசேர் கலியு கத்தி …… னெறியீதே

ஆயுநூ லறிவு கெட்ட நானும்வே றலஅ தற்கு

     ளாகையா லவைய டக்க …… வுரையீதே

ஏழைவா னவர ழைக்க ஆனைவா சவனு ருத்ர

     ஈசன்மேல் வெயிலெ றிக்க …… மதிவேணி

ஈசனார் தமதி டுக்க மாறியே கயிலை வெற்பில்

     ஏறியே யினிதி ருக்க …… வருவோனே

வேழமீ துறையும் வஜ்ர தேவர்கோ சிறைவி டுத்து

     வேதனா ரையும் விடுத்து …… முடிசூடி

வீரசூ ரவன் முடிக்கு ளேறியே கழுகு கொத்த

     வீறுசேர் சிலை யெடுத்த …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

கோழையாய் ஆணவம் மிகுத்த வீரமே புகல்வர் … பயந்தவராய்

இருப்பினும் அகங்காரம் மிக்க வீரப் பேச்சைப் பேசுவார்கள் சிலர்.

அற்பர் கோது சேர் இழி குலத்தர் குல மேன்மை கூறியே நடு

இருப்பர் … கீழ் மக்களாகவும் குற்றம் உள்ள இழி குலத்தவராகவும்

இருப்பினும்சிலர் தங்கள் குலத்தின் பெருமையே பேசி சபை நடுவே வீற்றிருப்பர்.

சோறு இடார் தரும புத்ர கோவு(ம்) நான் என இசைப்பர் …

(பசித்தவருக்குச்) சோறு இடாத பேர்வழிகள் தரும புத்ர அரசனே

நான்தான் என்று தம்மைப் புகழ்ந்து பேசுவர்.

மிடி ஊடே ஆழுவார் நிதி உடை குபேரனாம் என இசைப்பர் …

தரித்திர நிலையில் ஆழ்ந்து கிடப்பவர் செல்வம் மிக்க குபேரன் நான் என்று தம்மைத் தாமே புகழ்வர்.

ஆசு சேர் கலி யுகத்தின் நெறி ஈதே … குற்றம் நிறைந்த

கலி யுகத்தின் போக்கு இப்படித்தான் இருக்கிறது.

Thiruppugal from kaumaram.com with Sri Gopalasundaram’s commentary

……………………………………………….

Xxxx

விராலிமலை திருப்புகழிலும் பணமே கொடுக்காதவர்களையும் குபேரன் என்று புகழும் காலம் என்று சொல்லி அருணாகிரிநாதர் வருந்துகிறார் :-

கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்து

     குலாவியவ மேதி ரிந்து …… புவிமீதே

எடாதசுமை யேசு மந்து எணாத கலியால் மெ லிந்து

     எலாவறுமை தீர அன்று …… னருள்பேணேன்

Thiruppugal from kaumaram.com with Sri Gopalasundaram’s commentary

Xxx

கலியுகம் பற்றி மனு Manu on Kaliyuga

கிருத யுகத்தில் மனிதர்கள் 400ஆண்டுகள் வாழ்வார்கள் . திரேதா, துவாபர, கலியுகத்தில் இது ஒவ்வொரு கால் பங்காக குறைந்துகொண்டே வரும்.(மனு ஸ்ம்ருதி Manu 1-83)

இதற்கு விளக்கம் எழுதியோர், கிருத யுகத்தில் பசு மாட்டுக்கு நான்கு கால்கள் இருந்ததாகவும் அது ஒவ்வொரு யுகத்திலும் ஒரு காலை  இழந்து கலி யுகத்தில் ஒற்றைக் காலில் நிற்கிறது என்றும் எழுதி வைத்துள்ளனர் ; நல்ல உவமை.

ஆயுள் தவ வலிமை, கிடைக்கும் பலன்கள் ஆகியனவும் யுகத்துக்கு யுகம் மாறும் 1-84

சமய ஆசாரங்களும் யுகத்துக்கு யுகம் மாறும் Manu 1-85

கிருத யுகத்தில் தவமும், திரேதா யுகத்தில் ஞான வேட்கையும், த்வாபர யுகத்தில் யாக யக்ஞங்களும் , கலியுகத்தில் தானமும் பலன் தரும்  1-86

அரசர்களின் செயல்பாட்டையும் கலியுகத்துக்கு உவமையாகக் கூறுகிறார் Manu 9-302 மநு :–

கலியுகத்தில் மன்னன் தூங்கிக் கொண்டு இருக்கிறான்.

துவாபர யுகத்தில் மன்னன் விழித்துக்  கொண்டு விட்டான் .

திரேதா யுகத்தில் செயலில் இறங்க ஆயத்தமாகிவிட்டான் .

கிருத யுகத்தில்  செயலில் இறங்கி விடுகிறான்

இந்த உவமையும் கலியை மந்தமான யுகம் என்பதை  விளக்குகிறது.

Xxxx

கிரேக்க , ரோமானிய புலவர்கள் (Hesiod, Ovid)

கிரேக்க , ரோமானிய  கலாசாரங்களில் யுகங்களை ஐந்தாகவும், நாலாகவும் பிரித்து வகைப்படுத்தியுள்ளனர் ; தங்க யுகம், வெள்ளியுகம், வெண்கல யுகம் இரும்பு யுகம் (Golden, Silver, Bronze, Iron Ages) என்று வகைப்படுத்தி கடைசி யுகத்தில் வறுமையும் மரியாதையின்மையும் தாண்டவம் ஆடும் என்றும் எழுதிவைத்துள்ளனர் ; கிரேக்க மொழியில் ஹெசியாட் (Greek Poet Hesiod) என்ற புலவரும் லத்தீன் மொழியில் ஒவிட் (Roman Poet Ovid)  என்ற புலவரும் இது பற்றி எழுதி வைத்துள்ளனர். அவர்களும் நம்மைப் பார்த்து ‘காப்பி’யடித்தது தெளிவாகத் தெரிகிறது. நம்மவர்கள் கல்கி KALKI  என்னும் அவதாரம் வந்து, தீயனவற்றைத் துடைத்தழிக்கும் என்று முத்தாய்ப்பு வைத்துள்ளனர். இதை பிற நாட்டு இலக்கியங்களில் காண முடியாது.

Xxxxxxxx

பாகவத புராணம்

கலியுகத்தில் என்னென்ன நடக்கும். என்று பாகவத புராணமும் (12th  Chapter in Bhagavatha Puranam) கூறுகிறது:-


* கலியுகத்தில் தர்மம், ஸத்யம், பொறுமை, தயை, ஆயுள் தேஹ பலம், ஞாபகம் ஆகிய இவைகள் நாளுக்கு நாள் குறையும்.


* கலியில் பணமுள்ளவனே மேலான குலத்தில் பிறந்தவன் ஆவான்.
* பணமுள்ளவன் எவனோ அவனே ஆசாரம் உள்ளவனாக கருதப்படுவான்.


* பலமுள்ளவன் எவனோ அவன் மட்டுமே தர்மம், நியாயம்  போன்றவற்றை தீர்மானிப்பான்.
* மணம் செய்து கொள்பவர்கள் அவரவர் சொந்த விருப்பத்தின் படியே இயங்குவார்கள். குலம் மறைந்து போகும்.
* மனிதர்கள் அவர்களின் குணங்களைக் கொண்டு சிறந்தவர்களாக போற்றப்பட மாட்டார்கள்.
* பிராமணர்களுக்கு பூனூல் அடையாளமாக மட்டுமே இருக்கும்.
* அதிகமாகப் பேசுபவனே பண்டிதன் என்ற புகழை அடைவான்.
* ஏழையாக இருப்பவர்களே பழிபாவங்களுக்கு ஆளாவார்கள். பணமுள்ளவனே நல்லவன் என்று பெயரெடுப்பான்.
* மனிதர்கள் அதிகம் சாப்பிடுபவர்களாகவும், காமவெறி கொண்டவர்களாகவும், தரித்திரர்களாகவும் இருப்பார்கள்.
* ஆணும் பெண்ணும் சம்மதித்து புணர்ந்தாலே விவாஹம் செய்து கொண்டதாகக் கருதப்பட்டு விடும். விவாஹம் தேவையற்றதாகும்.
* ஸ்த்ரீகள் பதிவிரதைகளாக இருக்க மாட்டார்கள். ஸ்த்ரீகள் வெட்கம் இல்லாதவர்களாகவும், கடுஞ்சொல் பேசுபவர்களாகவும், திருட்டுத்தனம், மாயை, பிடிவாதம் அதிகம் கொண்டவர்களாக இருப்பர்.
* மனிதர்கள் பூமியை தங்களுடையது என்று சொல்லிக்கொள்வார்கள். பூமியை சொந்தம் கொண்டாட தந்தையுடன் சண்டையிடுவார்கள். சகோதரர்கள் அடித்துக் கொள்வார்கள்.
* அருகிலிருக்கும் கோவிலை விட தூரதேசத்தில் இருக்கும் க்ஷேத்திரமே புண்ணிய க்ஷேத்திரமாக கருதப்படும்.
* புகழுக்காக மட்டுமே தானங்கள் செய்யப்படும்.
* மயிர் வளர்ப்பு அழகுக்கான முக்கியப் பொருளாகிவிடும்.
* தைரியமாகப் பேசுபவனே சபைக்குரியவனாகக் கருதப்படுவான்.
* திருடர்கள், கருணையற்றவர்கள் மற்றும் அயோக்கியர்கள் போன்றவர்களே அரசனாக இருப்பார்கள்!
* அரசாள்பவர்கள் இறை நம்பிக்கை மற்றும் வழிபாடுகளை பாதுகாக்க மாட்டார்கள். வேதமார்கம் கெடுக்கப்படும்.
* ப்ரஜைகளுடைய பணங்களை அரசர்களே திருடிக்கொள்வார்கள்! அவர்களால் உபத்திரவிக்கப்பட்டு மக்கள் மலைகளிலும் காடுகளிலும் ஒளிந்து வாழ நேரிடும்.
* பருவகாலங்கள் மாறிப்போகும். மக்கள் குளிர், காற்று, வெயில், மழை, பசி, தாகம், வியாதி, கவலை இவர்களால் கஷ்டப்படுவார்கள்.
* கலியுகத்தில் 50 வயதே பரம ஆயுளாகும்.
* பசுக்கள் பாலிலும் உருவத்திலும் ஆடுகள் போல் ஆகிவிடும். கறக்காத பசுவை பாதுகாக்கவோ வளர்க்கவோ விரும்பமாட்டார்கள்.
* ஜாதிகளெல்லாம் பெரும்பாலும் சூத்திர ஜாதிகளாகிவிடும்.
* சந்நியாசிகள் எல்லாம் குடும்பஸ்தர்கள் போலவே நடந்துகொள்வார்கள். பணத்திலேயே மிக்க ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள்.
* ஆண்களுக்கு பெண்டாட்டி வீட்டு பந்தங்களே முக்கியமானவர்களாகிப் போவார்கள். மச்சினி, மைத்துனர்களிடம் பிரிமயாகப் பழகுவார்கள். சொந்த தந்தை, சகோதர * சகோதரிகளிடம் பிரியம் வைக்க மாட்டார்கள்.
* மரங்கள் எல்லாம் வன்னி மரங்களாகவே இருக்கும்.
* மேகங்களில் மின்னல்கள் அதிகமாக இருக்கும். வீடுகள் மகிழ்ச்சியற்று சூனியமாகவே காட்சியளிக்கும்.

(Taken from ஸ்ரீனிவாஸ் ஸர்மா post)

Xxxx

MY OLD ARTICLES ON KALI YUGA

கலியுகம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › க…

·

26 Aug 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. கலியுகம் முடிந்து துவாபர யுகம் நடக்கிறது.

கலியுகம் பற்றிய விஞ்ஞான விந்தை – Tamil and Vedas

https://tamilandvedas.com › கலி…

6 Dec 2014 — கலியுகம் பற்றிய விஞ்ஞான விந்தை: உலகம் அழியுமா? earth-temps. Research paper written by London Swaminathan

கலியுக முடிவு | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › க…

கலியுக முடிவு பற்றி சாணக்கியன் (Post No.4639). Written by London Swaminathan. Date: 20 JANUARY 2018.

கலியுகம் முடிந்து துவாபர யுகம் நடக்கிறது (Post …

https://tamilandvedas.com › கலி…

26 Aug 2020 — அதர்வ வேதத்தில் 4 யுகம் பற்றிய ஒரு குறிப்பில் ஒரு யுகம் என்பது 10,000 ஆண்டுகள் …

கலியுக- அறிகுறிகள் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › க…

·

4 Apr 2015 — குலிங்க பக்ஷி பற்றி கல்கி புராணம் கூறுவது முன்னர் நான் எழுதிய “மஹா …

கலியுகத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் …

https://tamilandvedas.com › கலி…

2 Jul 2016 — DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. (for old articles go to tamilandvedas.com OR …

xxxx

English Version of Bhagavata Purana on Kali Yuga

Sukadeva Gosvami said: Then, O King, religion, truthfulness, cleanliness, tolerance, mercy, duration of life, physical strength and memory will all diminish day by day because of the powerful influence of the age of Kali.

In Kali-yuga, wealth alone will be considered the sign of a man’s good birth, proper behaviour and fine qualities. And law and justice will be applied only on the basis of one’s power.

Men and women will live together merely because of superficial attraction, and success in business will depend on deceit. Womanliness and manliness will be judged according to one’s expertise in sex, and a man will be known as a brahmana just by his wearing a thread.

A person’s spiritual position will be ascertained merely according to external symbols, and on that same basis people will change from one spiritual order to the next. A person’s propriety will be seriously questioned if he does not earn a good living. And one who is very clever at juggling words will be considered a learned scholar.

A person will be judged unholy if he does not have money, and hypocrisy will be accepted as virtue. Marriage will be arranged simply by verbal agreement, and a person will think he is fit to appear in public if he has merely taken a bath.

A sacred place will be taken to consist of no more than a reservoir of water located at a distance, and beauty will be thought to depend on one’s hairstyle. Filling the belly will become the goal of life, and one who is audacious will be accepted as truthful. He who can maintain a family will be regarded as an expert man, and the principles of religion will be observed only for the sake of reputation.

As the earth thus becomes crowded with a corrupt population, whoever among any of the social classes shows himself to be the strongest will gain political power.

Losing their wives and properties to such avaricious and merciless rulers, who will behave no better than ordinary thieves, the citizens will flee to the mountains and forests.

Harassed by famine and excessive taxes, people will resort to eating leaves, roots, flesh, wild honey, fruits, flowers and seeds. Struck by drought, they will become completely ruined.

The citizens will suffer greatly from cold, wind, heat, rain and snow. They will be further tormented by quarrels, hunger, thirst, disease and severe anxiety.

The maximum duration of life for human beings in Kali-yuga will become fifty years.SB 12.2.12-16

By the time the age of Kali ends, the bodies of all creatures will be greatly reduced in size, and the religious principles of followers of varnasrama will be ruined. The path of the Vedas will be completely forgotten in human society, and so-called religion will be mostly atheistic. The kings will mostly be thieves, the occupations of men will be stealing, lying and needless violence, and all the social classes will be reduced to the lowest level of sudras. Cows will be like goats, spiritual hermitages will be no different from mundane houses, and family ties will extend no further than the immediate bonds of marriage. Most plants and herbs will be tiny, and all trees will appear like dwarf sami trees. Clouds will be full of lightning, homes will be devoid of piety, and all human beings will have become like asses. At that time, the Supreme Personality of Godhead will appear on the earth. Acting with the power of pure spiritual goodness, He will rescue eternal religion.

Lord Visnu—the Supreme Personality of Godhead, the spiritual master of all moving and nonmoving living beings, and the Supreme Soul of all—takes birth to protect the principles of religion and to relieve His saintly devotees from the reactions of material work.

Lord Kalki will appear in the home of the most eminent brahmana of Sambhala village, the great soul Visnuyasa.SB 12.2.19-20

Lord Kalki, the Lord of the universe, will mount His swift horse Devadatta and, sword in hand, travel over the earth exhibiting His eight mystic opulences and eight special qualities of Godhead. Displaying His unequaled effulgence and riding with great speed, He will kill by the millions those thieves who have dared dress as kings.

Taken from Harekrishna site.

Xxxx subham xxxxx

Tags- கலி , கலியுகம் ,குபேரன் , திருப்புகழ், அருணகிரிநாதர், மனு, ஸ்ம்ருதி, அறப்பளீசுர சதகம், பாகவதம், புராணம்

Xxxxxxxxx SUBHAM xxxxxxxxxxxxxx

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: