
Alexander Litivenko
Post No. 11,574
Date uploaded in London – 22 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
பொலோனியம் POLONIUM என்னும் மூலகம் ELEMENT பற்றி நான் நேற்று எழுதிய விஞ்ஞானக் கட்டுரையின் தொடர்ச்சி இது.
நூற்றுக்கும் அதிகமான துப்பறியும் நிபுணர்களும் 20 அணுசக்தி விஞ்ஞானிகளும் ஆராய்ந்த படுகொலை ALEXANDER LITIVENKO லிடிவென்கோ படுகொலையாகும்.

(RUSSIAN SPY ALEXANDER LITIVENKO ) அலக்சாண்டர் லிடிவென்கோ ரஷ்யாவின் கே ஜி பி K G B உளவு அமைப்பின் பெரிய அதிகாரியாகப் பணியாற்றி பின்னர் அதன் புதிய அமைப்பான எப் எஸ் பி F S B யிலும் பொறுப்பு வகித்தார் . ரஷ்ய அதிபர் புடின் (PUTIN )உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டவுடன் பிரிட்டனுக்கு வந்து அடைக்கலம் கேட்டார். பிரிட்டன், அவருக்கு அடைக்கலம் கொடுத்ததோடு அவரை MI -6 எம். ஐ. 6 (MILITARY INTELLIGENCE 6) அமைப்பின் உளவாளியாக அமர்த்தி பணமும் கொடுத்து வந்தது. இனி அவர் பொலோனியம் -210 (Polonium 210) என்னும் கதிரியக்க ஐசடொப்பால் எப்படிக் கொலை செய்யப்பட்டார் என்பதைக் காண்போம்.
நவம்பர் 1, 2006- லண்டன் நகர மத்திய பகுதியில் உள்ள கழ்பெற்ற Millennium ஹோட்டலில், இரண்டு முன்னாள் உளவாளிகளான( Mr Lugovoi and Dmitri Kovtun) லுகோவோய் மற்றும் டிமிட்ரி கோவ்டுன் ஆகிய இருவருடன் தேநீர் அருந்தினார் அலெக்ஸ்சாண்டர் லிடிவென்கோ. இது ஒரு ரகசிய சந்திப்பு.
அன்று இரவு முதல் லிடிவென்கோவுக்கு வாந்தி; உடல்நிலைச் சீரழிவு. லண்டனிலுள்ள பல ஆஸ்பத்திரிக்கு அவர் மாற்றம்
23 Nov 2006 – லிடிவென்கோ (Litvinenko died) மரணம் .
அவரை போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர்கள் கதிரியக்க பாதுகாப்பு உறைகளை அணிந்துகொண்டு பயந்துகொண்டே உடலை வெட்டி சோதனை செய்தனர் ; காரணம் இதற்கு முன்னரே அவர் அணுசக்தி கதிரியக்கத்தால் (Nuclear Radiation) தான் இறந்தார் என்று ஊகிக்கப்பட்டுவிட்டது ; அவரும் தன்னை சிலர் விஷம் வைத்துக்கொன்று விட்டதாக வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
24 Nov 2006 – லிடிவென்கோவின் மரணத்துக்கு ( Polonium-210 ) பொலோனியம் 210-ன் கதிர்வீச்சே காரணம் என்று டாக்டர்கள் முடிவு செய்தனர்.
22 May 2007 – ரஷ்யாவில் வசிக்கும் லுகோவோய் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டது ( murder of Mr Litvinenko)
31 May 2007 – நான் நிரபராதி ; ஆனால் செத்துப்போன லிடிவென்கோ பிரிட்டிஷ் உளவாளி என்று Mr Lugovoi வாக்குமூலம்
5 Jul 2007 – லுகோவோயை பிரிட்டனுக்கு விசாரணைக்கு அனுப்பமுடியாது ; ரஷ்யாவின் சட்ட விதிகள் இதை ஏற்காது என்று ரஷ்யா அறிவிப்பு.
May-June 2013 – மரண / பிரேத விசாரணை அதிகாரி பொது விசாரணைதான் வேண்டும் என்று வலியுறுத்தியதால் தாமதம்
July 2013 – பிரிட்டிஷ் அமைச்சர்கள் அதற்கு மறுப்பு
Jan 2014 – இறந்துபோன லிடிவென்கோவின் மனைவி மரீனா , நீதி மன்றத்தில் — பொது விசாரணையை வலியுறுத்தி வழக்கு
11 Feb 2014 – அவருக்கு ஹைகோர்ட் ஆதரவு
July 2014 – பொது — பகிரங்க விசாரணைக்கு அரசு ஒப்புதல்
January 2015 – பொது — பகிரங்க விசாரணை ஆரம்பம்
முதலில் லிடிவென்கோ உடலை கதிரியக்கக் கருவி கொண்டு பரிசோதித்ததில் கதிரியக்கம் எதுவும் இல்லை.
ஆனால் தேநீர் விருந்தில் கலந்து கொண்ட உளவாளிகள் தங்கிய ஹோட்டல்கள் , பயண ம் செய்த விமானம் , அவர்கள் சென்ற கேளிக்கை விடுதிகள், கால்பந்து போட்டி மைதான இருக்கைகள் ஆகியவற்றைச் சோதித்ததில் கதிரியக்கம் காணப்பட்டது
ரஷ்யாவில் இறந்த ஒரு பத்திரிக்கையாளர் பற்றியும்
லிடிவென்கோ , ஆராய்ந்து கொண்டிருந்தார் . அது சம்பந்தமான காகிதங்களை பரிமாறிக்கொண்ட ஹோட்டலிலும் கதிரியக்கம் காணப்பட்டது.
ஓராண்டு விசாரணைக்குப் பின்னர் ஒருவேளை இந்தக்கொலையின் பின்னணியில் ரஷிய அதிபர் புடின் இருந்திருக்கலாம் என்று விசாரணை முடிவு அறிவிக்கப்பட்டது . ஆனால் அதிபர் மாளிகை அதிகாரி இதைத் திட்டவட்டமாக மறுத்தார் .
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
பொலோனியம் -210 ஐசடோப் ‘திருவிளையாடல்’
மிகவும் கதிர்வீச்சுடைய பொருள்; அதி சக்திவாய்ந்த ஆல்பா பார்ட்டிகில்ஸ்களை (a-particles) வீசும்
மேரி கியூரியால் கண்டுபிடிக்கப்பட்டது
பூமியிலும் நம் உடலிலும் கூட மிகச் சிறிய அளவில் இது இருக்கிறது
உடலுக்குள் சென்றால்தான் ஆபத்து; தோல் வாழியாக செல்ல முடியாது; சுவாசித்தாலும் ஆபத்து
மேரி க்யூரியின் மரணத்துக்கு ரேடியம் காரணம். அவனுடைய மகள் ஐரீன் மரணத்துக்கு பொலோனியம் காரணம். இருவருக்கும், மேரியின் கணவர் பியருக்கும் (பீட்டர் ) நோபல் பரிசுகள் கிடைக்க உதவியதும் கதிரியாக்கம்தான் ; ஆவதும் அதனாலே; அழிவதும் அதனாலே !
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ரஷ்யாவிலுள்ள மாபியா கும்பல் பற்றியும் லிடிவென்கோ எழுதிவந்ததால் அவர்கள்தான் இந்தக் கொலைக்கு ஏற்பாடு செய்தனரோ என்ற சந்தேகமும் உண்டு . சம்மந்தப்பட்ட அனைவரும் உளவாளிகள் என்பதால் ‘யார் யாருக்கு வேட்டு வைத்தனர்’ என்று சொல்ல முடியாது . அமெரிக்க அதிபர் கென்னடி கொலை வழக்கு போல ஆண்டுதோறும் டெலிவிஷனில் புதுப்புது கதைகளை எட்டுக்கட்ட பத்திரிக்கையாளருக்க்கு நல்ல வாய்ப்பு கிடைத்துவிட்டது.
லண்டன் ஹீத்ரோ விமான (LHR) நிலையத்தில் 2 விமானங்கள் , மற்றும் 700 பேருக்கு கதிரியாககப் பாதிப்பு இருக்கிறதா என்றும் சோதிக்க வேண்டியிருந்தது . கணவரின் மரணத்துக்கு பொலோனியம் 210 காரணம் என்று தெரிந்த அடுத்த சில மணி நேரத்தில் அவருடைய மனைவி மரீனா (Marina Litivenko) கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேற நேரிட்டது .
அந்தக் காலத்தில் செயின்ட் ஹெலனா (St Helena Islands) தீவில் சிறை வைக்கப்பட்ட நெப்போலியன் போனபர்ட்டைக் கொல்ல, பிரிட்டிஷார் அவர் உணவில் ஆர்சனிக் விஷத்தை சிறுகச் சிறுகக் கலந்து உயிரை வாங்கினர் .. இப்போது பொலோனியம் போன்ற கதிரியக்க மூலகத்தால் ஆட்களை எளிதில் கொல்ல முடிகிறது . லிடிவென்கோ சாப்பிட்ட தேநீர் கோப்பையில் பொலோனியம் கலந்து இருந்திருந்தால் ஏன் அவரது உடலில் கதிரியக்கம் தெரியவில்லை ?
இதற்கு அந்தக் கருவிகள் பிழையானவை , துல்லியமானவை அல்ல என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஆக , டாக்டர்களையும் , கருவிகளையும் அவை தரும் முடிவுகளையும் கூட நம்ப முடியாதோ ?
–subham—-
tags- பொலோனியம் -210, ஐசடோப், மர்மக்கொலை, துப்பறியும் அறிஞர்கள், திகைப்பு ,லிடிவென்கோ, ரஷ்ய உளவாளி, கேஜிபி