
Post No. 11,576
Date uploaded in London – 23 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
செப்பு மொழி இருபத்தொன்பது!
ச. நாகராஜன்
1. நான் உன்னிடம் பந்தயம் கட்டுகிறேன், சூதாட்டப் பந்தயத்தை என்னால் விட்டு விட முடியும்.
I bet you I could stop gambling.
2. நானூறு கோடி நட்சத்திரங்கள் வானில் மின்னுகின்றன என்று நீங்கள் சொல்லும் போது நம்பும் ஒருவர், இந்த இடம் இப்போது தான் பெயிண்ட் அடித்து உலராமல் இருக்கிறது என்று சொல்லும் போது உங்களை நம்பாமல் அதை மட்டும் சரி பார்ப்பது ஏன்?
Why does someone believe you when you say there are four billion stars, but check when you say the paint is wet?
3. செயற்கை நுண்ணறிவு என்பது இயற்கையான முட்டாள்தனத்திற்கு ஈடாகுமா என்ன?
Artificial Intelligence is no match for natural stupidity.
4. உலகில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் சம்பவங்கள் ஒரு செய்தித்தாளின் பக்கங்களில் மிகச் சரியாக அடங்குவது தான் ஆச்சரியகரமாக இருக்கிறது!
It is amazing that the amount of news that happens in the world ev eery day always just exactly fits the newspaper.
5. கவலைப்படுதல் என்பது வேலை செய்கிறது! நான் கவலைப்படும் 90 சதவிகிதம் கவலைகள் ஒருபோதும் நடப்பதில்லை.
Worrying works! 90% of the things I worry about never happen.
6. என்னுடைய அபிப்ராயங்கள் மாறிக் கொண்டே இருந்திருக்கலாம், ஆனால் நான் சொல்வது சரி தான் என்ற உண்மை எப்போதுமே மாறாது.
My opinion may have changed, but not the fact that I am right.
7. கீழே விழுவதால் ஒருவர் மரணமடைவதில்லை. கீழே திடீரென்று ஓரிடத்தில் மோதி நிற்பதால் தான் மரணம் ஏற்படுகிறது.
It is not the fall that kills you; it’s the sudden stop at the end.
8. நமக்கு போதுமான அளவு ‘கன் கண்ட்ரோல்’ (துப்பாக்கி கட்டுப்பாடு) இருக்கிறது. நமக்குத் தேவையானது ‘இடியட் கண்ட்ரோல்’ தான்!
We have enough gun control. What we need is idiot control.
9. உள்ளே என்ன இருக்கிறதோ அது தான் முக்கியம் என்பதற்கான சரியான எடுத்துக்காட்டு குளிர்சாதனப்பெட்டி தான்!
The fridge is a perfect example of what matters is on the inside.
10. கஷ்டமான ஒரு வேலையைச் செய்ய நான் ஒரு சோம்பேறியைத் தான் தேர்ந்தெடுக்கிறேன். ஏனெனில் ஒரு சோம்பேறி தான் அதைச் சுலபமாகச் செய்யும் வழியைக் கண்டுபிடிப்பான் – பில் கேட்ஸ்
I choose a lazy person to do a hard joy, because a lazy person will find an easy way to do it. – – Bill Gates
11. எனக்கு ஜோதிடத்தில் சுத்தமாக நம்பிக்கை இல்லை; ஏனெனில் நான் தனுர் ராசிக்காரன். தனுர்ராசிக்காரர்கள் எப்போதுமே சந்தேகப் பேர்வழிகள்! – ஆர்தர் சி.க்ளார்க்
I don’t believe in astrology; I’m a Sagittarius and we are skecptical. – Arthur C Clarke
12. உலகம் இன்று முடிவுக்கு வந்து விடும் என்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நாளைய தினம் வந்து விட்டது. – சார்லஸ் ஷுல்
Don’t worry about the world coming to an end today. It is already tomorrow in Australia. – Charles Shulz

13. சிரிப்பு இல்லாமல் கழியும் நாள், வீணான நாளே. – சார்லி சாப்ளின்
A day without laughter is a day wasted. – Charlie Chaplin.
14. ‘மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு என்னால் முடியாது, நான் அல்பமானவன்’ என்று நீங்கள் நினைத்தீர்களானால் ஒரு கொசுவுடன் தூங்கிப் பாருங்கள்! – தலாய் லாமா
If you think you are too small to make a difference, try sleeping with a mosquito. – Dalai Lama.
15. ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், இன்று என்பது நேற்று நீங்கள் கவலைப்பட்ட நாளைய நாள் என்பதை! – டேல் கார்னீகி
Remember, today is the tomorrow you worried about yesterday – Dale Carnegie
16. திருமணம் தான் விவாகரத்து என்பதற்கான முதல் முக்கிய காரணம்! – க்ருஸோ மார்க்ஸ்
Marriage is the chief cause of divorce – Groucho Marx.
17. ஒரு மனிதன் தன் மனைவிக்காக கார் கதவைத் திறந்து விடுகிறார் என்றால் ஒன்று அந்தக் கார் புதிய காராக இருக்க வேண்டும் அல்லது அவள் புதிய மனைவியாக இருக்க வேண்டும். – பிரின்ஸ் பிலிப், ட்யூக் ஆஃப் எடின்பரோ
When a man opens a car door for his wife, it’s either a new car or a new wife. – Prince Phillip, Duke of Edinburah
18. குடும்பக் கட்டுப்பாடு பற்றிப் பேசுகின்ற அனைவருமே ஏற்கனவே பிறந்து விட்டவர்கள் என்பதைக் கவனித்திருக்கிறீர்களா? – பென்னி ஹில்
Have you noticed that all the people in favour of birth control are already born? – Benny Hill.
19. இசையைப் பற்றிப் பேசுவது என்பது கட்டிடக்கலையைப் பற்றி நடனமாடுவது போலத் தான்! – ஸ்டீவ் மார்டின்
Talking about music is like dancing about architecture. – Steve Martin
20. பிரான்ஸின் மணிமகுடம் கீழே கிடப்பதைப் பார்த்தேன், ஆகவே அதை எனது வாளால் பொறுக்கி எடுத்துக் கொண்டேன். – நெப்போலியன்
I saw the crown of France laying on the ground, so I picked it up with my sword – Napoleon Bonaparte
21. வெற்றி என்பது எப்போதும் போரில் ஜெயிப்பதில் இல்லை, கீழே விழும் ஒவ்வொரு தடவையும் மீண்டும் எழுந்திருப்பதில் தான் இருக்கிறது! – நெப்போலியன்
Victory is not always winning the battle, but rising every time you fall.
– Napoleon Bonaparte
22. ஒரு பையனின் ஒரு பார்வையானது ஒரு பெண்ணின் இதயத்தை எப்படித் துளைக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. – நெப்போலியன்
No one knows how it is that with one glance a boy can break through into a girl’s heart. – Napoleon Bonaparte
23. தனியாக நடக்கும் போது வேகமாக நாம் நடக்கிறோம். – நெப்போலியன்
We walk faster when we walk alone. – Napoleon Bonaparte
24. உண்மையான மனிதன் யாரையும் வெறுப்பதில்லை. – நெப்போலியன்
A true man hates no one. – Napoleon Bonaparte
25. முடியாது என்ற வார்த்தை முட்டாள்களில் அகராதியில் மட்டுமே காணப்படும். – நெப்போலியன்
Impossible is a word to be found only in the dictionary of fools. – Napoleon Bonaparte
26. மனிதர்களை இணைப்பது இரண்டே இரண்டு சக்திகள் தாம் – பயம் மற்றும் ஆர்வம். – நெப்போலியன்
There are only two forces that unite men – fear and interest. – Napoleon Bonaparte
27. பேச்சுக்கள் மறைந்து விடும், ஆனால் செயல்கள் நிற்கும். – நெப்போலியன்
Speeches pass away, but acts remain. – Napoleon Bonaparte
28. மக்களை தலைமை தாங்கிச் செல்வதற்கான ஒரே வழி அவர்களுக்கு எதிர்காலத்தைக் காண்பிப்பது தான் : ஒரு தலைவர் என்பவர் நம்பிக்கை வியாபாரி.
The only way to lead people is to show them a future: a leader is a dealer in hope. – Napoleon Bonaparte
29. நீங்கள் உங்கள் இறகுகளை விரிக்கும் வரையில் உங்களுக்கு எவ்வளவு தூரம் பறக்க முடியும் என்பது தெரியாது. – நெப்போலியன்
Until you spread your wings, you’ll have no idea how far you can fly. – Napoleon Bonaparte
*****************************