லண்டன் டாக்டர் அ .நாராயணனின் மார்கழிக் கவிதைகள் (Post.11,543-part 3)

WRITTEN BY Dr A. Narayanan, London

Post No. 11,543- Part 3

Date uploaded in London – 23 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Part 3  of Dr A Narayanan’s Reflections on Tiruppavai of Andal

மார்கழித்திங்கள் 5 

ஆதியும் அந்தமுமில்லா ஆறு குணமுடையோனை

ஆழி கையேந்திய பாழியந்தோளுடைய பற்பநாபனை

ஊழி முதல்வனு முலகமளந்தவனைப் பாடிப் பன்னோர்

செழித்துலகில் வாழ முறையிட்ட நப்பின்னை வாழியே

வாசமோ தூய பெரு நீர் யமுனையேயாகிய

வசுதேவனே, தேவகியின் குடல் விளக்காய்

வந்துதித்த ஆயர் குல மணி விளக்கான

தாமோதரனும் வட மதுரை மைந்தனுமாய் 

தேசுடையோனை துயராய் தூமலர் தூவித்   

தொழுது வாயினால் பாடி சிந்தனையில்

செதுக்க கூடின பாபங்களும் கூடும் பிழைகளும்

தீயிடப்பொசியும் பொருள் போலென்ற கோதை வாழி

 நாராயணன்

xxxx

மார்கழித்திங்கள் 6

சூடிய மாலை வாடியதாயினும் கோதை

பாடிய பாசுரங்களிற் தேசுடையாகி

நாடிய நாரணன் தாவிய மாலையில்

தேடிய கன்னியின் கன்னல் மொழியில் 

கூடிய கோவலனாய் வஞ்சிக் கொடியின்

துடி இடைத் தழுவிய ஆய்ச்சியர் குலக்

கொடி சொரிந்த மலர்களோ நாச்சியார்

பாடிய திருப் பாவையெனும் நந்தவனமே 

மார்கழிப் பாவை நோன்புக்கு மங்கையர்

குழாம்  துயிலெழ, வீடு வீடாய்ச் சென்று

புலர்ந்த பொழுதுணர்த்தும் புட்களொலியும் 

புள்ளரையன் கோயிற்சங்கு முழக்கம் கேட்டும்

பேய் முலை நஞ்சுண்டு மாயச்சகடனை

மாய்த்தக் காலோயாப் பாற்கடலில் பாம்பணைத்

துயிலோனை உளம் கொண்ட மாமுனிவரும்

யோகியரும் மெள்ள அரி அரி எனவெழுப்பு

மொலி  கேட்டு  மின்னுமா உறக்கமென?

பள்ளியெழுச்சிப் பாடிய நப்பின்னை வாழியே       

நாராயணன்

xxxx

மார்கழித்திங்கள் 7

கூவும் கரிக்குருவிகளின் கீசுகீசொலியும்

குழலவிழ மணம் கமழ்ந்த ஆய்ச்சியர்

குடை ந்து  தயிர் கடையு மத்தரவமும்

குலுங்கும் அவரணிகலங்களொலி கேட்டும்   

குறையொன்றுமில்லாக் கேசவன் பேர்

யாம்  பாடக்கேட்டும் தேசுடையாளே!  நீ

துயில் துறந்து வாசல் வராதாதேனேன 

தன்னுள்ளோர் பாவைக்கு பள்ளிஎழுச்சிப்  

பாடிய கோதை வாழியே

சிங்கார வளையல்கள் செந்தாமரைக் கைகளிலொலிக்க 

நங்காய் எழுந்தாளோ நாரணனின் பேர் பாட

திங்களுள் மார்கழியாய்த் திகழ்வோனின் 

மங்காப்புகழ் பாமாலையே இப்பூகமளின் திருப்பாவை

நாராயணன்

xxxx

மார்கழித் திங்கள் 8

அடிவானம் வெளுத்து ஆதவன் வருகை

அறிந்தும் எருமை சிறுவீட்டில் வைகறைப்

பனி படர்ந்த பசும்புல் மேயவும்

வஞ்சிய ரவரவர் வழி ஏகுவோரைக் 

கெஞ்சித் தடுத்து வாசலில் கூட்டி மாவடிவுக்

கேசியின் பரி வாய் பிளந்து மாமனேவிய

மல்லரையும் மாய்த்த தேவாதிதேவனின்

மலரடியில் பறை கொண்டுப்பாடிப் பணிய

மனமிறங்கி மின்னல் வேகத்தளருளிடும்        

மதுசூதனைப் போற்றிய மங்கை வாழியே 

குன்றைக் குடையாய் பிடித்து கோ

குலம் காத்த கோவர்த்தனாகி

வேய்ங்குழல் தழுவியதுதடிசை மழை

பெய வேணுகான லோலனாகி

கன்றோட்டி கானகமெய்திய கோபாலனாகி

தேரோட்டிப்  பகைவர் விடுத்த சரமழையில்

திருமுகம் ரணமுகமான பார்த்தசாரதியுமாகி 

திருப்பாவை பூசிய குளிர் சந்தனத்தில்

ஆறிய ரணமும் ஆழப்பொலிவுத் திருமுக  

ஆயனே கோதை விரும்பிய கோவலன் 

நாராயணன்

By Dr A Narayanan M.Sc. Ph.D, London

To be continued………………………………………………….

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: