மோரின் மகிமை, புளியின் பெருமை, மூலிகையின் அருமை! (Post No.11,582)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,582

Date uploaded in London – 24 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

 உணவுப் பொருட்களைப் புகழ்ந்தும் இகழ்ந்தும் கூட ஆன்றோர்கள் நமக்குப் பல நீதி மொழிகளைக் கற்பிக்கின்றனர்; இதனால் நமக்கும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைத்துவிடுகிறது.

இதோ சில  ஸம்ஸ்க்ருதப் பொன்மொழிகள் :

மோரின் மகிமை

ஒரு கவி மோரின் பெருமையைப்  புகழ்கையில் , அது இந்திரனுக்கும் கூட கிடைக்காது என்கிறார் .

அம்ருதம் துர்லபம் ந்ருணாம் தேவானாம் உதகம் ததா

பித்ரூணாம் துர்லபஹ புத்ரஹ தக்ரம் சக்ரஸ்ய துர்லபம்

பொருள்:-

மனிதர்களுக்கு அமிர்தம் கிடைப்பது  அரிது.

தேவர்களுக்கு தண்ணீர் கிடைப்பது  அரிது.

தந்தையருக்கு நல்ல மகன்கள் கிடைப்பது  அரிது.

இந்திரனுக்கு மோர் கிடைப்பது  அரிது.

உணவில் மோர் சேர்ப்பதன் அவசியத்தை கவிஞர் இப்படி வலியுறுத்துகிறார் போலும்.

Xxx

மூலிகையின் அருமை

கூடப்பிறந்தவன் எல்லாம் நன்மையா செய்கிறான் உடலுடன் பிறந்தாலும் நோய், ஆளைக் கொன்றுவிடுகிறது. காட்டில் எங்கோ முளைத்திருக்கும் மூலிகையல்லவா நம்மைக் காப்பாற்றுகிறது? அதுதான் உண்மையான உடன்பிறந்த உறவினன் என்கிறார் ஒரு புலவர் .

பரோ அபி ஹிதவான் பந்துஹு பந்துரபி அஹிதஹ பரஹ

அஹிதோ தேஹஜோ வ்யாதிஹி  ஹிதம் ஆரண்யாம்  ஒளஷதம்

பொருள்:-

வேற்று மனிதன் ஆனாலும் நமக்கு நன்மை செய்பவனே உறவினன் ஆவான் .

உறவினன் ஆனாலும் நமக்கு நன்மை செய்யாவிடில் அவன் வேற்றானே ;

எப்படி என்றால், நமது உடலில் பிறக்கும் வியாதி நமக்கு தீங்கிழைக்கிறது .எங்கோ  காட்டில் பிறந்த பச்சிலை மூலிகை , நமக்கு நன்மை செய்கிறது .

Xxx

புளியின் பெருமை 

மாத்ரு ஹீந  சிசு ஜீவனம் வ்ருதா  காந்த  ஹீந  நவ யெளவனம் ததா

சாந்தி  ஹீநமபி   தபோ  வ்ருதா தீந்த்ரிணீ ரஸ விஹீன போஜனம்

தாயில்லாத குழந்தையின் வாழ்க்கையும் , கணவனில்லாதவளின் பருவ அழகும் , பொறுமை இல்லாத தவமும், புளியம்பழத்தின் புளிப்புச் சுவை இல்லாத உணவும் வீண் ; பயனற்றதாகும் .

 XXX

உணவைப் போலவே பிள்ளையும்  பிறக்கும்!

தீபோ பக்ஷயதே த்வாந்தம் கஜ்ஜலம் ச ப்ரசூயதே

யதா அன்னம் பக்ஷயேத் நித்யம் ஜாயதே தாத்ருசீ ப்ரஜா

பொருள்:-

விளக்கு கருமையான இருட்டைச் சாப்பிடுகிறது.. அதனால் அது வெளியிடும் தன் கரும் புகையால் கருப்பான ‘மை’யையே உண்டாக்குகிறது ; அது போலவே நாம் தினசரி உண்ணும் உணவைப் பொருத்தே குழந்தைகளும் உண்டாகின்றன. சாத்வீக உணவை உண்ணவேண்டும் என்பதே இதன் கருத்து.

xxxx

 வெள்ளைப் பூண்டின் சிறுமை

கோவில்கள் மடங்கள் தரும் பிரசாதங்களில் வெங்காயமோ வெள்ளைப் பூண்டோ இராது. அவை காம சம்பந்தமான எண்ணங்களை உண்டாகும் என்பதால் இந்தக் கட்டுப்பாடு.(இலங்கைத் தமிழர் நடத்தும் கோவில்களில் இந்த ஆசாரம் கிடையாது ) ஆகையால் அவ்விரு பொருட்களையும் பெரியோர்கள் இகழ்ந்துரைப்பர்

அமிதகுணோ (அ )பி பதார்த்தோ தோஷேண கேன நிந்திதோ பவதி

ஸகல ரசாயன ராஜோ கந்தேன ஏகேன லசுன இவ

பொருள்:-

அளவற்ற நற்குணம் உடைய பொருட்களும் கூட ஒரு குறையினால் இகழப்பட்டதாக ஆகிறது. இது எவ்வாறெனில் எல்லாச் சுவையும் சேர்ந்த சிறந்த உணவில் பூண்டு என்னும் ஒரு பொருளின் மணத்தால் இகழ்ச்சிக்கு ஆளாவது போலாம்.

ராமகிருஷ்ண பரமஹம்சரும் பூண்டு உதாரணத்தை கையாளுகிறார் :- பூண்டு ரசம் வைத்திருந்த பாத்திரத்தை எவ்வளவுதான் கழுவினாலும் அதில் பூண்டின் மணம் இருக்கும். அது போலத்தான் பாப எண்ணங்களும்; அவை எளிதில் போகாது என்பார்.

—-Subham—-

MY OLD ARTICLES ABOUT FOOD ITEMS

காலையில் நீர், பகலில் மோர், இரவில் பால்!

https://tamilandvedas.com › கால…

3 Jul 2015 — சாப்பிட்ட பின்னர் மோர் குடிக்க வேண்டும், இரவில் பால் குடிக்க வேண்டும், …

மோர் குடி–மருத்துவத்தில் எண் 4- Part 1(Post No.6377)

https://tamilandvedas.com › கடுக…

12 May 2019 — 4 Jun 2016 – இரவில் பால் சாதம், பகலில் தயிர் சாதம் ஆயுளை அதிகரிக்கும்! (Post No 2869). Written …

மருத்துவத்தில் எண்-4 பகுதி 3 – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ம…

·

15 May 2019 — கடுக்காய் சாப்பிடுமோர் குடி–மருத்துவத்தில்எண் 4– Part 1(Post No.6377). Written by London swaminathan …

GARLIC AND ONION BANNED FOR BRAHMINS- MANU …

https://tamilandvedas.com › 2018/10/25 › garlic-and-o…

25 Oct 2018 — This is a non- commercial blog GARLIC AND ONION BANNED FOR BRAHMINS-MANU (Post No.5582) MY COMMENTS ON CHAPTER FIVE 1.

–subham —

Tags- நீர் மோர் , புளி  மூலிகை , மகிமை, பெருமை, அருமை

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: