‘பெண் புத்தி கேட்கின்ற மூடர்’ பற்றி அம்பலவாணர் (Post.11,592)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,592

Date uploaded in London – 27 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

அறப்பளீசுர சதகம்   35. மூடர்களில் உயர்வு தாழ்வு

பெண்புத்தி கேட்கின்ற மூடரும், தந்தைதாய்

     பிழைபுறம் சொலும்மூ டரும்,

  பெரியோர்கள் சபையிலே முகடேறி வந்தது

     பிதற்றிடும் பெருமூ டரும்,

பண்புற்ற சுற்றம் சிரிக்கவே யிழிவான

     பழிதொழில்செய் திடுமூ டரும்,

  பற்றற்ற பேர்க்குமுன் பிணைநின்று பின்புபோய்ப்

     பரிதவித் திடுமூ டரும்,

கண்கெட்ட மாடென்ன ஓடியிர வலர்மீது

     காய்ந்துவீழ்ந் திடுமூ டரும்,

  கற்றறி விலாதமுழு மூடருக் கிவரெலாம்

     கால்மூடர் அரைமூ டர்காண்

அண்கற்ற நாவலர்க் காகவே தூதுபோம்

     ஐயனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அண்கற்ற நாவலர்க்காகவே தூதுபோம் ஐயனே –

அடுத்திருக்க அறிந்த சுந்தரருக்காகப் (பரவையாரிடம்) தூதுசென்ற

தலைவனே!, அருமை ……… தேவனே!,

பெண்புத்தி கேட்கின்ற மூடரும் –

பெண்ணின் அறிவுரையைக் கேட்டு நடக்கும் பேதையரும், தந்தைதாய்பிழைபுறம் சொலும் மூடரும் பெற்றோர் குற்றத்தை வெளியிடும் பேதையரும்,  பெரியோர்கள் சபையிலே முகடுஏறி வந்தது பிதற்றிடும் பெருமூடரும் – சான்றோர் வீற்றிருக்கும் அவைக்களத்திலே மேடைமீது நின்று (வாய்க்கு) வந்ததை உளரும் பெரும் பேதையரும், பண்புஉற்ற சுற்றம் சிரிக்க இழிவான பழிதொழில் செய்திடும் மூடரும் -நற்பண்புடைய உறவினர் நகைக்குமாறு இழிந்த நிந்தைக்குரிய செயல்களைப் புரியம் பேதையரும் பற்று அற்ற பேர்க்கு முன்பிணை நின்று பின்புபோய்ப் பரிதவித்திடும் மூடரும் – எந்த ஆதரவும் இல்லாதவர்களுக்கு முதலில் (ஆராயாமல்) பிணையாகச் சென்றுபிறகு வருந்துகின்ற பேதையரும்கண்கெட்ட மாடு என்ன ஓடி இரவலர்மீது காய்ந்து வீழ்ந்திடும் மூடரும் – குருட்டு மாட்டைபோல ஓடி யாசகர் மேல் சீறி விழுகின்ற பேதையரும், இவர் எலாம் – இவர்கள் யாவரும் கற்று அறிவிலாத முழு மூடருக்குக் கால்மூடர் அரைமூடர் – (நூல்களை) உணர்ந்தும் (அவற்றின்படி நடக்கும்) அறிவு இல்லாத பெரும் பேதையர்களை நோக்கக் கால்பேதையரும் அரைப் பேதையரும் ஆவர்.

     (வி-ரை.) நாவலர் : திருநாவலூரிற் பிறந்தவர் (சுந்தரர்). பிணை –

ஈடு. சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாருக்காகப் பரவையாரிடம் தூது

சென்று பரவையாரூடலைத் தவிர்த்தார். அதனால் அடியார்க்கு எளியர்

என்னும் தன்மை இங்குப் புலப்படுகிறது.

     (க-து.) கற்றறிமூடரே யாவரினும் பெருமூடராவர்.

Xxx

  தமிழ் இலக்கியத்தில் பெண்களுக்கு எதிராக நிறைய கருத்துக்கள் உள்ளன. இது காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. அக்காலத்தில் ஆண்களுக்கும் கல்யாணமான பெண்களுக்கும் இடையே பெரிய வயது வித்தியாசம் இருந்தது. அவர்களுக்கு வயது முதிர்ந்த ஆண்களின் அளவுக்கு பக்குவம் அல்லது அனுபவம் இருந்திராது. ஆகையால் இப்படி ஒரு கருத்து நிலவியது போலும்.

தாயார் என்ற ஸ்தானத்தில் இருக்கும்போது பாராட்டுவதும், மனைவி என்ற ஸ்தானத்தில் இருக்கும்போது தாழ்த்துவதும் கண்கூடு. நான்  பெண்கள் பற்றி வெளியிட்ட 300 பழமொழிகளில் பெரும்பாலும் அவர்களை மட்டம் தட்டுவதாகவே உள்ளன. ஆனால் உபநிஷதம், மனு ஸ்ம்ருதி போன்றவற்றில் அவர்களை உச்சாணிக் கொம்பில் வைத்துள்ளனர்.

எந்த வீட்டில் பெண்கள் அழுகை கேட்கிறதோ  அந்தக் குடும்பம் வேருடன் அழியும் என்று மனு நீதி நூல் சொல்கிறது. எங்கு பெண்கள் பூஜிக்கப் படுகிறார்களோ அங்கேதான் தெய்வங்கள் வசிக்கும் என்று மனு கூறுகிறார். சகோதரிகளுக்கு நகை நட்டுகளையும் துணி மணிகளையும் வாங்கிக் கொடுத்து எப்போதும் சந்தோஷமாக வைத்திருங்கள் என்றும் அறிவுரை பகிர்கிறார் மநு .

இதோ எதிரும் புதிருமான கருத்துக்கள்|:

பெண்கள் பற்றி மனு எச்சரிக்கை

உலகின் முதல் விரிவான சட்டப் புத்தகத்தை எழுதிய மனு, பெண்களை மதிக்காதவர்கள் அடியோடு அழிந்து போவார்கள் என்று எச்சரிக்கிறார். பெண் பாவம் பொல்லாதது, பெண்களை அவமதிப்பது கடவுளுக்கும் பிடிக்காது என்று எச்சரிக்கிறார். 

पितृभिर्भ्रातृभिश्चैताः पतिभिर्देवरैस्तथा ।
पूज्या भूषयितव्याश्च बहुकल्याणमीप्सुभिः ॥ ५५ ॥

pitṛbhirbhrātṛbhiścaitāḥ patibhirdevaraistathā |
pūjyā bhūṣayitavyāśca bahukalyāṇamīpsubhiḥ || 3-55 ||

These shall be honoured and adorned by their fathers and brothers, husbands and brothers-in-law, who are desirous of their own welfare.—(55)

‘’யார் நலம் பெற விரும்புகின்றனரோஅவர்கள் எல்லாம் பெண்களை ஆராதிக்கவேண்டும். தந்தையர்சகோதரர்கணவன்மைத்துனர் ஆகியோர் பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும்’’. (மனு3-.55)

xxx

யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா:
யத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ராபலா: க்ரியா:”—Manu 3-56 

‘’எங்கே பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ அங்கே கடவுள் ஆனந்தம் அடைகிறார். எங்கே பெண்கள் மதிக்கப் படுவது இல்லையோஅங்கே செய்யப்படும் புனிதச் சடங்குகள் பலன் இல்லாமல் போகும்’’. (மனு.3-56)

यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवता:।
यत्रैतास्तु न पूज्यन्ते सर्वास्तत्राफला: क्रिया:।

Yatra naryastu pujyante ramante tatra Devata,
yatraitaastu na pujyante sarvaastatraafalaah kriyaah

—-Manu Smriti 3-56

Yatra naryastu pujyante ramante tatra Devata, yatraitaastu na pujyante sarvaastatrafalaah kriyaah —is a famous sloka taken from Manusmruthi which means where Women are honored, divinity blossoms there, and where women are dishonored, all action no matter how noble remain unfruitful.

xxx 

शोचन्ति जामयो यत्र विनश्यत्याशु तत् कुलम् ।
न शोचन्ति तु यत्रैता वर्धते तद् हि सर्वदा ॥ ५७ ॥

śocanti jāmayo yatra vinaśyatyāśu tat kulam |
na śocanti tu yatraitā vardhate tad hi sarvadā || 57 ||

Where the female relations live in grief, the family soon wholly perishes; but that family where they are not unhappy ever prospers.—(57)

‘’உறவுக்கார பெண்கள் எங்கே கண்ணீர் வடிக்கின்றனரோ அங்கே  அந்தக் குடும்பம் அடியோடு நாசமாகும். எங்கே பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் செழித்துத் தழைத்து ஓங்கி வளரும்’’(மனு.3-57)

 Xxxx

जामयो यानि गेहानि शपन्त्यप्रतिपूजिताः ।
तानि कृत्याहतानीव विनश्यन्ति समन्ततः ॥ ५८ ॥

jāmayo yāni gehāni śapantyapratipūjitāḥ |
tāni kṛtyāhatānīva vinaśyanti samantataḥ
 || 58 ||

The houses on which female relations, not being duly honoured, pronounce a curse, perish completely, as if destroyed by magic.—(58)

‘’எந்த வீடுகளில் பெண்கள் சரியாக நடத்தப் படவில்லையோ அந்த இடங்களில் பெண்களின் சாபம்மந்திர மாயா ஜாலத்தில் பொருள்கள் மறைவதைப் போல வீடுகளை முற்றிலும் அழித்துவிடும்’’(மனு.3-58)

Xxx

तस्मादेताः सदा पूज्या भूषणाच्छादनाशनैः ।
भूतिकामैर्नरैर्नित्यं सत्कारेषूत्सवेषु च ॥ ५९ ॥

tasmādetāḥ sadā pūjyā bhūṣaṇācchādanāśanaiḥ |
bhūtikāmairnarairnityaṃ satkāreṣūtsaveṣu ca
 || 59 ||

Hence men who seek (their own) welfare, should always honour women on holidays and festivals with (gifts of) ornaments, clothes, and (dainty) food.—(3-59 Manu Smriti)

‘’ஆகையால் யாரெல்லாம் நலம் பெறவும் வளம் அடையவும் விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் பெண்களை விழாக் காலங்களிலும்விடுமுறைக் காலங்களிலும் ஆராதிக்க வேண்டும். எப்படிதுணிமணிகள்நகைகள்,அறுசுவை உணவு படைத்துப் போற்றவேண்டும்’’(மனு.3-59)

 மனுவை விட வேறு யார் பெண்களுக்கு இவ்வளவு ஆதரவு தர முடியும்? இருக்கிறார், ஒரு ஆசாமி, அவர் பெயர் வள்ளுவர். அவர் நம்மை மாயாஜால (சிலர் மூட நம்பிக்கை) உலகுக்கே அழைத்துச் செல்லுகிறார். பத்தினிப் பெண்கள் மழையைப் பெய் என்றால் பெய்யுமாம் (குறள் 55).

 சதி அநசுயா, சத்தியவான் சாவித்திரி, சீதா தேவி கதைகளைப் படிப்பவர்கள் வள்ளுவனை நம்பியே ஆகவேண்டும். ‘’கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா’’? என்று முனிவர்களையே எள்ளி நகையாடும் புள்ளி மான்கள் உலவிய நாடல்லவா இது!

xxx

 உலகங்களை எரித்து சாம்பலாக்கும் சக்தி எனக்கு உண்டு — சீதா தேவி

சீதையின் மகத்தான சக்தி

(சீதாதேவி சொன்னாள்; கண்ணகி செய்து காட்டினாள்)

‘’ அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?

எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்

சொல்லினால் சுடுவேன்அது தூயவன்

வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் (கம்ப ராமாயணத்தில் சீதை)

 பொருள்:- ஈரேழு (14) உலகங்களையும் என் சொல்லினால் (சாபத்தால்) சுடும் சக்தி எனக்கு உண்டு. என் கணவன் வில் ஆற்றலுக்கு பெருமை சேர்ப்பதற்காக காத்திருக்கிறேன். அவன் ஆற்றலுக்கு இழுக்கு வரக்கூடாது-

 (தாயே என் தோளில் ஏறிக் கொள்ளுங்கள். ஒரு நிமிடத்தில் ராம பிரானிடம் சேர்த்துவிடுகிறேன் என்று சொன்ன அனுமனிடம் சீதை கூறியது இது)

Xxx

அதிகம் கேட்டிராத நீதி வெண்பாப் பாடலைப் பார்ப்போம்: 

அத்தி மலரும் அருங்காக்கை வெண்ணிறமுங்

கத்து புனல் மீன் பதமுங் கண்டாலும் — பித்தரே

கானார் தெரியற் கடவுளருங் காண்பரோ

மானார் விழியார் மனம்.

பொருள்:

பெண் மயக்கம் கொண்ட பைத்தியக்காரர்களே! அருமையான அத்திப் பூவும், காக்கையின் வெள்ளை நிறமும், கடலில் உள்ள பெரு மீன்களின் கால்களும் ஒருக்கால் பார்க்க இயன்றாலும் பெண்களின் மன நிலையை நம்மால் காண/ அறிய முடியாது. மான் பார்வை போலும் மருண்ட கண்களை உடைய அப்பெண்களின் நெஞ்சத்தை தேவர்களும் காண மாட்டார்.

Xxx

ஷேக்ஸ்பியர் என்ன சொல்கிறார்?

புலியின் இதயம், பெண்ணின் அழகிய தோலுக்குள் மறைந்திருக்கிறது

ஹென்ரி 6- பகுதி 3

Oh tiger’s heart wrapped in a woman’s hide – York

Henry VI Part 3

ஒரு விலைமாது போல சொற்களால் என் இதயத்தைத் திறந்து காட்டுவேன்– ஹாம்லெட்

Must, like a whore, unpack my heart with words – Hamlet

 Xxx

பெண்கள் பற்றி விவேக சிந்தாமணி

விவேக சிந்தாமணி என்ற நூலில் கொஞ்சம் கூடுதலாகவே பெண் எதிர்ப்பு உணர்வு காணப்படுகிறது. அதை எழுதிய ஆசிரியரை தமிழ் கூறு நல்லுலகம் அறிய முடியாததால் அவரது மனப்பாங்கிற்குக் காரணம் என்ன என்று தெரியவில்லை. இதோ சில பெண் எதிர்ப்புப் பாடல்கள்:

1.மங்கை கைகை (கைகேயி) சொற்கேட்டு மன்னர்
புகழ் தசரதனும் மரணம் ஆனான்
செங்கமலச் சீதை சொல்லை ஸ்ரீராமன்
கேட்டவுடன் சென்றான் மான் பின்;
தங்கை அவள் சொல்லைக் கேட்டு இராவணனும்
கிளையோடும் தானும் மாண்டான்
நங்கையற் சொற் கேட்பதெல்லாம் கேடுதரும்
பேர் உலகோர் நகைப்பர்தாமே.

Emperor Dasaratha died because he listened to Kaikeyi; Rama went after a deer to satisfy lotus like Sita; Ravana died with all his relatives after listening to his sister; listening to women will bring disasters and you will be a laughingstock.

xxxx

2.பெண்டுகள் சொல் கேட்கின்ற பேயரெனும்
குணம் மூடப் பேடி லோபர்
முண்டைகளுக்கு இணையில்லா முனை வீரர்
புருடரென மொழியொணாதே
உண்டுலகம் உதிர்ப்பாருள் கீர்த்தியறம்
இன்ன தென உணர்வே யில்லார்
அண்டினவர் தமைக் கொடுப்பார் அழிவழக்கே
செய்வதவர் அறிவுதானே

Hen pecked husbands are eunuchs and reckless; one can’t even compare them with misers and widows. They are not men at all. Those who don’t know what fame and dharma, are the ones who always support the wrong side. They support injustice and harm those who ask for help.

xxx

3.ஆலகால விடத்தையும் நம்பலாம்
ஆற்றையும் பெருங் காற்றையும் நம்பலாம்
கோல மாமத யானையை நம்பலாம்
கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்
காலனார் விடும் தூதரை நம்பலாம்
கள்ள வேடர் மறவரை நம்பலாம்
சேலை கட்டிய மாதரை நம்பினால்
தெருவில் நின்று தயங்கித் தவிப்பரே.

You may trust a deadly poison and a flowing river and gale force wind. You can trust a mad elephant or a man eating tiger. You can even trust messengers of death and robbers; but those who trust sari clad women will surely be left to suffer (This verse is used in a Tamil film)

xxx

4.படியினப் பொழுதே வதைத்திடும் பச்சை நாவியை நம்பலாம்
பழி நமக்கென வழி மறித்திடும் பழைய நீலியை நம்பலாம்
கொடு மதக் குவடென வளர்த்திடும் குஞ்சரத்தையும் நம்பலாம்
குலுங்கப் பேசி நகைத்திடும் சிறுகுமரர் தம்மையும் நம்பலாம்
கடை இலக்கமும் எழுதிவிட்ட கணக்கர் தம்மையும் நம்பலாம்
காக்கைபோல் விழி பார்த்திடும் குடி காணியாளரை நம்பலாம்
நடை குலுக்கி மினுக்கிய நகை நகைத்திடு மாதரை
நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய்காணுமே

You can trust instant killing poison; you can even trust the old waylaying Neeli; you can trust a mad elephant, you can trust the laughing cheats, fraudulent accountants, land lords who rule the lands with crow like vision but never ever trust cat walking, laughing women with shiny jewellery. Never trust. Never trust.
(For Neeli story, read my post The Ghost that killed 72 Tamils)

xxxx

5.அன்னம் பழித்த நடை ஆலம் பழித்த விழி
அமுதம் பழித்த மொழிகள்
பொன்னம் பெருத்த முலை கன்னங்கருத்த குழல்
சின்னஞ் சிறுத்த இடை பெண்
எண்னெஞ் சுருக்கவ டென்னெஞ்சுகற்ற
கலை என்னென்று உரைப்பதினி நான்
சின்னஞ் சிறுக்கி அவள் வில்லங்கம் இட்டபடி
தெய்வங்களுக்கு அபயமே

A Woman with more beautiful gait than a swan, more powerful eyes than poison, with words sweeter than nectar, with big breasts and dark curly hair and a thin waist made me go crazy. How can I describe the impact she made; that harlot has landed me in big trouble. Only God can save me now!

Xxxx

மேல் நாட்டாரும் பெண்களைத் தாக்கி எழுதியுள்ளனர் . இதோ சில மேற்கோள்கள்

“A man’s face is his autobiography. A woman’s face is her work of fiction.”
― Oscar Wilde

Here’s all you have to know about men and women: women are crazy, men are stupid. And the main reason women are crazy is that men are stupid.”
― George Carlin, When Will Jesus Bring The Pork Chops?

“As usual, there is a great woman behind every idiot.”
― John Lennon

“Dispute not with her: she is lunatic.”
― William Shakespeare, Richard III

“Good girls go to heaven, bad girls go everywhere.”
― Mae West, Wit & Wisdom of Mae West


“Like a compass needle that points north, a man’s accusing finger always finds a woman. Always.”
― Khaled Hosseini

“There is always one woman to save you from another and as that woman saves you she makes ready to destroy”
― Charles Bukowski, Love is a Dog from Hell

“It’s absolutely unfair for women to say that guys only want one thing: sex. We also want food.”
― Jarod Kintz, $3.33

“I have been crying,” she replied, simply, “and it has done me good. It helps a woman you know, just as swearing helps a man.”
― Horace Annesley Vachell, The Romance of Judge Ketchum

Xxxx

சபையில், பொதுக்கூட்டத்தில் உளறுவோர் பற்றி

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும். குறள் 191
கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.

Xxx


பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்- குறள் 196

[அறத்துப்பால்இல்லறவியல்பயனில சொல்லாமை]

பயனில்லாது பேசுவோரை மனிதன் என்று மக்கள் அழைக்கக் கூடாது  பதடி என்றே சொல் —திருவள்ளுவர்

Xxx

பர்த்ருஹரி நீதி சதகம்

முட்டாள்களுக்கு கடவுள் கொடுத்த வரப்பிரசாதம் மெளனம் ஆகும்; குறிப்பாக அறிஞர்கள் சபையில் பேசாமடந்தையாக இருப்பது முட்டாள்களுக்குக் கிடைத்த சிறந்த அணிகலன் — பர்த்ருஹரி நீதி சதகம்

स्वायत्तमेकान्तहितं विधात्रा विनिर्मितं छादनमज्ञतायाः ।

विशेषतस्सर्वविदां समाजे विभूषणं मौनमपण्डितानाम्

।।ஸ்வாயத்தமேகாந்தஹிதம்ʼ விதா⁴த்ரா விநிர்மிதம்ʼ சா²த³னமஜ்ஞதாயா​: |

விஸே²ஷதஸ்ஸர்வவிதா³ம்ʼ ஸமாஜே விபூ⁴ஷணம்ʼ மௌனமபண்டி³தானாம் ||– பர்த்ருஹரி நீதி சதகம் 

Silence is a unique cover for ignorance that is available to all, which the Creator has made. Especially in a gathering of learned people, it is an ornament to the ignorant.

—-subham—

TAGS–பெண் புத்தி , மூடர்’, அம்பலவாணர், பர்த்ருஹரி, நீதி சதகம், மனு,  எச்சரிக்கை

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: