
WRITTEN BY Dr A. Narayanan, London
Post No. 11,543- Part 4
Date uploaded in London – 27 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Part 4 of Dr A Narayanan’s Reflections on Tiruppavai of Andal
மார்கழித்திங்கள் 9
தூமணிமாடத்தில் துலங்கும் தீப ஒளியில்
தூப நறுமணமிணைந்த துயிலணையில்
தூங்கும் பாவை ஊமையோ?செவிடோ?
சோம்பலுற்றாளோ? காவலுக்குட்பட்டாளோ?
மந்திர வயப்பட்டாளோ? மாமீர்! அவள்
மாயன்,மாதவன் மேலும் பல பேரோயிர
முடையான் நாமம் கேட்டெழாத தேனென
முன்னிலையிலொருத் தோழியைத்
தன்னிலையாய் வைத்துப் பாடிய தாரகை வாழி 1
வீங்கு நீர் விரி புனல் காவிரி
விரைந்து கொள்ளிடமாய் பிரிய
விளைந்ததோர் தீவினிடைவெளியே
வளர்ந்தோங்கிய கோபுரங்கள் பலவும்
வளைந்து சூழ்ந்த மதில்களேழிடையே
விரிந்த வீதிகள் பிராகாரங்களாக
வியப்பரோவிது கோயிலோ கோட்டையோ
வென அறிவரோ எடுத்த படம் குடையாக
விரித்த உடலரவமீது படுத்த நிலையில்
உறங்குமரங்கனே அடியார்க்கெலாமிரங்கு
மரங்கனே இக்கோட்டையின் கொற்றவன்
கொண்ட திரு நாமம் ரங்கராசன்
கிடந்திடுமிடமோ திருவரங்கம் விண்ணோர்
வியக்க மண்ணோர் போற்றும் இப்புவி
விழைந்த திரு வைகுந்தமாய் நாளும்
கிழமையும் ஆண்டுமுழுதும் நன்னாளாய்
மார்கழித்திங்களோ ரங்கன் சங்கமமாக
நங்கை கோதை நோன்பு காத்த நன்னாளாம் 2 நாராயணன்
XXXXXXXXXXXXXXXXXXX

மார்கழித்திங்கள் 10
நோன்பின் பயனெய்திக் கிருட்டிணனுக்குக்
கிட்டியவளே! துழாய் மாலைக் கமழுமணம்
வீட்டினுள் விந்தை புரிந்த நந்தன் வந்ததைக்
காட்டிக்கொடுத்தும், நீ! அவ்வின்பமெமைக்
கூட்டிப் பகராமல், ராமனால் மரண மடிதவழிய
கும்பகரணனின் நித்தம் தழுவிய நித்திரை
யுன்னைப் பற்றியதோ? பக்குவ ரூபமாய்
வாசல் வந்தெம் தலைவியாய் சேர தோழிமார்
பரிகசித்துக் கூப்பிட்டப் பாவை வாழியே
கண்ணுக்கு மையழகு
விண்னுக்கு மதியழகு
விளக்குக்கு ஓளியழகு
கண்ணனுக்கு கோதையழகு
பக்திக்குக் கோதை
முக்திக்குக் கீதை
எத்திக்குமொலிக்கும்
தித்திக்கும் திருப்பாவை
நாராயணன்
XXXXXXXXXXXXXXXX

மார்கழித்திங்கள் 11
கணக்கிலடங்காக் கறவைகள் முலை
கடுப்புத்தீர கை ஓயாக் கறந்த
கரையற்றக் கோவலனின் திறநறியாக்
கடும் பகைவரை வலியச்சென்றழித்தோன்
காமுறும் பொற்கொடியாளும் புன மயில்
குந்தலாளும் அரவம் படமொத்த அல்குல்
உ டையாளு மான நீ! உன் முற்றம் முன்
முகில்வண்ணன் பேர்பாட கூடிய தோழியர்
குழாம் சேராதுறங்குவதேனோ? வென
தன்னையே நிந்தித்த நிலமகள் வாழியே
முத்துக்குமரி விட்டு சித்தன் மகள் மூன்று
பத்தாகத் தொகுத்த சரள தரள சரத்தில்
பத்து நூறும் மேலும் பல பேரு டைய புருட
உத்தமன் புகழ் மாலையே திருப்பாவை
நாராயணன்
XXXXXXXXXXXXXXXXXX

மார்கழித்திங்கள் 12
கனத்தமடி சுமந்த எருமை இளங்கன்று
கனைத்த தறிந்து முலை சொரிந்த பால்
நனைத்த இல்லமே சேறாகும் செல்வம்
படைத்தவனின் சோதரியே ! பனி பெய்து
படர்ந்த தலையோடு நின் வாசலெய்தி
சினத்தினால் சிரம் பத்து கொண்ட தென்
இலங்கை கோமானை சரம் தொடுத்து
சிரம் கொய்த சீதா ராமனின் பேர் பாட
வந்த எம்மொடு கூடாதுறக்கமேனோ? வென
தோழியர் பள்ளி எழுப்பிய பாவை வாழியே
மார்கழிப் பூக்கள் மலர்ந்து மணம் கமழ
மது அருந்தும் வண்டுகளின் ரீங்காரமே
மதுசூதனன் பேர் சுமந்த கீதமாகிய
மாதவிக் கோதையின் திருப்பாவையே
நாராயணன் tags- Dr Narayanan, Andal, Markazi, Poems, Part 4