சப்பாத்திக்கு குருமா, இட்லிக்கு மிளகாய்ப்பொடி, பூரிக்கு உருளைக்கிழங்கு வேண்டும்! (Post No.11,595)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,595

Date uploaded in London – 28 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

அறப்பளீசுர சதகம் 36. இதற்கு இது வேண்டும்

தனக்குவெகு புத்தியுண் டாகினும் வேறொருவர்

     தம்புத்தி கேட்க வேண்டும்;

  தான்அதிக சூரனே ஆகினும் கூடவே

     தளசேக ரங்கள் வேண்டும்;

கனக்கின்ற வித்துவான் ஆகினும் தன்னினும்

     கற்றோரை நத்த வேண்டும்;

  காசினியை ஒருகுடையில் ஆண்டாலும் வாசலிற்

     கருத்துள்ள மந்த்ரி வேண்டும்;

தொனிக்கின்ற சங்கீத சாமர்த்தியன் ஆகினும்

     சுதிகூட்ட ஒருவன் வேண்டும்;

  சுடர்விளக்கு ஆயினும் நன்றாய் விளங்கிடத்

 தூண்டுகோல் ஒன்று வேண்டும்;

அனற்கண்ண னே!படிக சங்கம்நிகர் வண்ணனே!

     ஐயனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அனல் கண்ணனே – (நெற்றியில்) நெருப்புக்

கண்ணுடையவனே!, படிகம் சங்கம் நிகர்வண்ணனே – படிகத்தைப்

போலவும் சங்கைப் போலவும் (வெண்மையான) நிறத்தவனே!, ஐயனே –

தலைவனே! அருமை …… தேவனே!,

தனக்கு வெகுபுத்தி உண்டாயினும்

வேறொருவர் தம் புத்தி கேட்கவேண்டும் – தனக்கு மிகுந்த அறிவு

இருந்தாலும் மற்றவரின் அறிவுரையையும் கேட்டுத் தெளிதல் வேண்டும்,

தான் அதிக சூரனே ஆகினும் கூடவே தளசேகரங்கள் வேண்டும் – தான்

பெரிய வீரனே ஆனாலும் தன்னுடன் படைகளைச் சேர்த்துக்கொள்வதும் வேண்டும், கனக்கின்ற வித்துவான் ஆகினுந் தன்னினும் கற்றோரை நத்தவேண்டும் – பெரிய புலவனானாலும் தன்னைவிடப் புலமையுடையோரை அடுத்தல் வேண்டும், காசினியை ஒருகுடையில் ஆண்டாலும் வாசலில்

கருத்துஉள்ள மந்திரி வேண்டும் – உலகைத் தான் ஒருவனே ஆண்டாலும் தன் வாயிலில் ஓர் ஆராய்ச்சியுடைய அமைச்சன் வேண்டும். தொனிக்கின்ற சங்கீத சாமர்த்தியன் ஆகினும் சுதிகூட்ட ஒருவன் வேண்டும், இசைப் பண்புடைய இசைப் புலவனே ஆனாலும் சுதி (சுருதி ) கூட்டித்தர ஒருவன் வேண்டும்,சுடர்விளக்கு ஆயினும் நன்றாய் விளங்கி்டத் தூண்டுகோல் ஒன்று வேண்டும் – ஒளிதரும் விளக்கேயானாலும் நன்றாக எரிவதற்குத் தூண்டுகோல் ஒன்றிருக்க வேண்டும்.

     (க-து.) யாவருக்கும் எத்துறையினும் துணைவேண்டும்.

Xxx

My commentary on Arappalisura Sataka verse  36

சுருதி போடுவோர் இல்லாமல் வித்வான்கள் பாடமாட்டார்கள்;

விளக்கு ஏற்றும் பெண்கள், ஏதேனும் தூண்டுகோலை வைத்திருப்பார்கள்.

பிரதமருக்கு உதவி செய்ய காபினெட் CABINET இருக்கும்;

அறிஞருக்குத் துணை அவரைவிடப் பேரறிஞர்  இருக்கவேண்டும்;

ஒரு ராணுவத்தின் பலம் SECOND IN COMMAND செகண்ட் இன் கமாண்டைப் பொருத்தது.

‘தம்பியுடையான் படைக்கு அஞ்சான்’ என்று சொல்லுவார்கள்; ஏனெனில் அவர்தான் எத்தகைய பிரச்சனையிலும் கைகொடுத்து உதவக்கூடிய நம்பிக்கையான துணை.

இதையெல்லாம் வள்ளுவனும் முன்னரே சொல்லிவிட்டான்,

XXXX

நாம் என்ன செய்கிறோம்;?

தட்டில் இட்டிலி விழுந்தால், எள்ளு மிளகாய்பொடிக்காக காத்திருக்கிறோம்;

பூரியை மட்டும் போட்டால் ஏன் உருளைக்கிழங்கு செய்யவில்லையா? என்று கேட்கிறோம்

சப்பாத்தி சாப்பிட குருமா வேண்டியுள்ளது. எல்லாவற்றுக்கும் ஒரு துணை , சப்போர்ட் SUPPORT வேண்டியிருக்கிறது.

தயிர் சாதத்துக்கு ஆவக்காய் ஊறுகாய், அல்லது மோர் மிளகாய் வேண்டும்;

சின்ன விஷயம்தான் ,ஆனால் , துணை இல்லாமல் எதைச் செய்தாலும் அது சோபிக்காது.

xxxx

ஒரு போரில் வெற்றி பெற முன்னேறிச் செல்லும் ராணுவத்துக்கு பின்பலம் SECOND IN COMMAND இருக்கவேண்டும்..

xxxx

மந்திரிசபை CABINET  அவசியம்

ஒரு பிரதம மந்திரிக்கு எல்லா விஷயங்களையும் கவனிக்க பெரிய மந்திரிசபைCABINET  இருக்கவேண்டும்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும்—குறள் 448

பொருள்

கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்—குறள் 443

பெரியாரைப் போற்றி, தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.

பெரியார் துணைக்கு ஏங்கு—

உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்-442

இருக்கும் துன்பத்தைப் போக்கிஇனி துன்பம் வராமல் காக்கும் அறிவிற் சிறந்த பெரியோரை பேணுக

XXXX

சுருதியின் மகிமை பற்றி பாரதியார்

தாளத்தின், ராகத்தின், சுருதியின் மகிமையை உணர்ந்தவர் மஹா கவி பாரதியார். அவர் பல பாடல்களுக்கு இசை அமைத்து அதை பாடி ராகத்துடன் பாடல்களை வெளியிட்டார்  . இதோ அத்தகைய  இசை மேதை சொல்கிறார்,

இன்பம், இன்பம், இன்பம்;
இன்பத் திற்கோ ரெல்லை காணில்,
துன்பம், துன்பம், துன்பம். … (காதல்)

3.
நாதம்நாதம்நாதம்;
நாதத் தேயோர் நலிவுண் டாயின்,
சேதம்சேதம்சேதம். … (காதல்)

4.
தாளம்தாளம்தாளம்;
தாளத் திற்கோர் தடையுண் டாயின்,
கூளம்கூளம்கூளம். … (காதல்)

5.
பண்ணேபண்ணேபண்ணே;
பண்ணிற் கேயோர் பழுதுண் டாயின்.
மண்ணேமண்ணேமண்ணே. … (காதல்)— பாரதியார் குயில்பாட்டு

Xxxx

சத்சங்கம் பற்றி  பர்த்ருஹரி பாடல் 23-ன் பொருள்

புனிதர்களின், அறிவாளிகளின் தோழமையானது ஒருவனின் அறியாமையையும் அறிவின்மையையும் நீக்கும்; மந்த புத்தியை  விலக்கும்; சுயமரியாதையை  அதிகரிக்கும்; பாபங்களைப் போக்கும்; மனத்தில் மகிழ்ச்சியை எழுப்பும்; உற்சாகத்தை உயர்த்தும்; சமுதாயத்தில் புகழை  ஈட்டித் தரும்; புனிதர்களின் கூட்டுறவால் கிடைக்காதது ஏதேனும் உண்டோ? செப்புக.

ஜாட்யம் தியோ ஹரதி ஸிஞ்சதி வாசி ஸத்யம்

மானோன்னதிம் திஸதி பாபம் அபாகரோதி

சேதஹ ப்ரஸாதயதி திஷு தனோதி கீர்த்திம்

ஸத்ஸங்கதிஹி கதய கிம் ந கரோதி பும்ஸாம் 1-23

जाड्यं धियो हरति सिञ्चति वाचि सत्यं
मानोन्नतिं दिशति पापम् अपाकरोति ।
चेतः प्रसादयति दिक्षु तनोति कीर्तिं
सत्सङ्गतिः कथय किं न करोति पुंसाम् ॥ 1.23 ॥

it removes the mind’s dullness.
it sprinkles truth in speech.
it increases dignity.
it drives away evil.
it purifies the intellect.
it spreads fame everywhere.
you tell me!
what does good company
not provide to men? |1-23| Nītiśataka

xxxx

அவ்வையாரிடம், முருகப் பெருமான் ‘அம்மையே! இனியது எது?’ என்று கேட்டார்; அவ்வை சொன்னார்:

“இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது! இனிது! ஏகாந்தம் இனிது !
அதனினும் இனிது ! ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது ! அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது! அறிவுள்ளோரை
கனவிலும் நனவிலும் காண்பதுதானே!”

பொருள்: தனிமையில் இருப்பது இனிது. அதைவிட இனிது அந்தத் தனிமையிலும் இறைவனைத் தொழுவது இனிது. அதைவிட இனிது சத்சங்கம், அதாவது ஞானம் படைத்த நல்லோரைச் சேர்ந்து வாழ்வது. எல்லாவற்றையும் விட இனிது– கனவிலும் நனவிலும் அந்த பெரியோரை நினைப்பதே! அதாவது அவர்களைப் பின்பற்றுவதே!

—subham—-

TAGS ; சுருதி, விளக்கு, தூண்டுகோல், அறிஞர் உறவு, அறப்பளீசுர சதகம், துணை , ராணுவ பலம், பர்த்ருஹரிபாரதியார் குயில்பாட்டு

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: