அனுமன் பற்றிய வருணனை: வால்மீகி- கம்பன் வேறுபாடு-Part 1 (Post No.11,600)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,600

Date uploaded in London – 29 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxx

யார் கொலோ சொல்லின் செல்வன்? என்று அநுமனைப் பார்த்து ராமபிரான் வியந்ததாக கம்பன் சொல்லுவான் .

இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூரக்

கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி

சொல்லாலே தோன்றிற்று அன்றேயார்கொல் இச் சொல்லின் செல்வன்

வில்லாஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ

இந்த உலகத்தில் எங்கும் புகழ் பரவும்படி (இசை=புகழ்),

இந்த அனுமன் கற்காத கலைகளும் கடல் போலப் பரந்த வேதங்களும், உலகில் எங்கும் இல்லை என்று கூறும் அளவுக்கு இவனுக்கு அறிவு இருக்கிறது. இது அவன் பேசிய சொற்களால் தெரிந்துவிட்டது அல்லவா?

வில்லையுடைய தோளுடைய வீரனே! இனிய சொற்களைச் செல்வமாக உடைய இவன் யாரோ? நான்முகனோ (விரிஞ்சன்)? அல்லது காளையை வாஹனமாக உடைய சிவனோ (விடைவலான்)?

 இதன் காரணமாக அனுமனுக்குச் சொல்லின் செல்வன் என்ற பட்டம் கிடைத்தது. அதுவும் ராமன் வாயினால் கிடைத்த பட்டம்!

Xxx

कपिरूपं परित्यज्य हनुमान्मारुतात्मजः।

भिक्षुरूपं ततो भेजे शठबुद्धितया कपिः4.3.2।।

கபி ரூபம் பரித்யஜ்ய ஹநுமான் மாருதாத்மஜஹ

பிக்ஷு ரூபம் ததோ பேஜே சட புத்தி தயா கபிஹி

Hanuman, son of the Wind god, with an ingenious mind assumed the guise of a mendicant.

வாயு பகவானின் மகனான அனுமன் , குரங்கு உருவத்தை விட்டுவிட்டு , புத்திசாலித்தனமாக , பிச்சை கேட்கும் ஒரு சந்நியாசி உருவத்தை எடுத்துக்கொண்டான்.

ஆனால் கம்பனோ பிரம்மச்சாரி (மாணவன் )உருவத்தை எடுத்துக்கொண்டதாகச் சொல்லுவான்

மாணவன் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை,  நாம் இன்று ஸ்டூடெண்ட் STUDENT என்ற பொருளில் பயன்படுத்துகிறோம்.

“அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சனக் கிரி அனைய

மஞ்சனைக் குறுகி ஒரு மாணவப் படிவமொடு” –

(அஞ்சனையின் மகனான அனுமன் ஒரு பிரம்மச்சாரி வடிவம் கொண்டு இராம, இலக்குவர் இருக்கும் இடம் செல்கிறான்).– கம்ப ராமாயணம் – கிட்கிந்தா காண்டம் — அனுமன் படலம்.

Xxxx

வால்மீகி சொல்லுவதைப் பார்ப்போம்

नानृग्वेदविनीतस्य नायजुर्वेद्धारिणः।

नासामवेदविदुषश्शक्यमेवं विभाषितुम्4.3.28।।

நான்ருக்வேத வினீதஸ்ய நாயஜு ர்வேததாரிண ஹ

நாஸாமவேத விதூஷஸ் சக்யமேவம் விபாஷிதும்

ஒருவன் ருக், யஜுர், சாம வேதங்களைக் கற்காவிட்டால்  இவ்வளவு நன்றாகப் பேச முடியாது.

Xxx

नूनं व्याकरणं कृत्स्नमनेन बहुधा श्रुतम्।

बहु व्याहरताऽनेन न किञ्चिदपशब्दितम्4.3.29।।

நூனம் வ்யாகரணம் க்ருத்ஸ ன மனேன பஹுதா ச்ருதம்

பஹு வ்யாஹரதா அநேந ந கிஞ்சித் அப சப்திதம்

‘Surely, he seems to have studied well the whole of grammar, for there is not a single mispronunciation in his entire speech.

நிச்சயமாக அவன் முழு இலக்கணத்தையும் படித்திருக்கவேண்டும் . அவன் பேசிய பேச்சில் ஒரு தவறான சொல்கூட வரவில்லை.

Xxx

न मुखे नेत्रयोर्वापि ललाटे च भ्रुवोस्तथा।

अन्येष्वपि च गात्रेषु दोषस्संविदितः क्वचित्4.3.30।।

நமுகே நேத்ரயோர்வாபி லலாடே ச ப்ருவோர்ஸ்ததா

அன்யேஷ்வபி  ச காத்ரேஷு தோஷ ஸ் ஸம்விதிதஹ க்வச்சித் 

No fault can be found in his face, eyes, forehead, between the eyebrows or any other part of his body (during his expression).அவனுடைய  முகத்திலோ கண்களிலோ நெற்றியிலோ, புருவங்களிலோ அல்லது உடலின் வேறு எந்த உறுப்பிலும் குற்றம், குறை எதையம் காணவில்லை

xxx

अविस्तरमसन्दिग्धमविलम्बितमद्रुतम्।

उरस्थं कण्ठगं वाक्यं वर्तते मध्यमे स्वरे4.3.31।।

அவிஸ்தரம் அஸந்திக்தம் அவிளம்பிதம் அத்ருதம்  

உரஸ்தம் கண்டகம் வாக்கியம் வர்ததே மத்யமே ஸ்வரே

அவிஸ்தரம் – வள வள என்றும்

அஸந்திக்தம் – விட்டு விட்டும்

அவிளம்பிதம் – இழுத்து இழுத்தும்

அத்ருதம் – விரைவாகவும் இல்லை.

 வாக்யம்- வாக்கியங்கள் / சொற்றொடர்கள் 

உரஸ்தம் – உள்ளத்திலிருந்தும்

கண்டகம் – கழுத்திலிருந்தும்  

மத்யமே – நிதானமான

ஸ்வரே – குரலில்

வர்ததே- இருக்கின்றன /பெருக்கெடுக்கின்றன

Xxx

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சொற்பொழிவுகள்

संस्कारक्रमसम्पन्नामद्रुतामविलम्बिताम्।

उच्चारयति कल्याणीं वाचं हृदयहारिणीम्4.3.32।।

ஸம்ஸ்கார க்ரம ஸம்பன்னாம் அத்ருதாம் அவிளம்பிதாம்

உச்சா ரயதி கல்யாணீம்  வாசம் ஹ்ருதய காரிணீம்

ஸம்ஸ்கார க்ரம ஸம்பன்னாம்- செம்மையான சொற் பிரயோகம்

 அத்ருதாம் -விரைவாகவு மில்லை

அவிளம்பிதாம் – ஜவ்வாக இழுக்கவும் இல்லை

கல்யாணீம் –  மங்களகரமான

ஹ்ருதய காரிணீம் – உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்

வாசம் – வாக்கியங்களை

உச்சாரயதி- பேசுகிறார் .

இந்த ஸ்லோகத்தைத்தான் வெள்ளித்தட்டில் பொறித்து வெள்ளி நாக்கு சீனிவாச சாஸ்திரிக்கு (Silver Tongued Right Honourable V S Srinivasa Sastry) சென்னை அறிஞர்கள் 1944-ம் ஆண்டில் பரிசளித்து , பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.. அவர் அந்த ஆண்டில் வால்மீகி ராமாயணம் குறித்து ஆங்கிலத்தில் 30 அற்புதமான சொற்பொழிவுகள் நடத்தியமைக்காக அளிக்கப்பட பரிசு அது.அந்த சொற்கள் அனுமனின் சொல் நயத்துக்கும் அவரது இலக்கிய நயத்துக்கும் பொருத்தமானவை.

ஆங்கில மொழியில் அபாரமான அறிவு பெற்றவர்கள் உலகில் ஐந்தே பேர்தான் . அவர்களில் ஒருவர் வலங்கைமான் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி . காந்திஜியால் என் அண்ணன் எனறு அழைக்கப்பட்டவர்

xxx

கம்பன் இவ்வளவு விரிவாக அனுமனை வருணிக்கவில்லை இரண்டே பாடல்களில் முடித்துவிடுகிறான்

To be continued…………………………………………….

TAGS- வால்மீகி , கம்பன் , அனுமன் வருணனை , சொல்லின் செல்வன் , சீனிவாச சாத்திரி , சில்வர் டங் , ராமாயண  சொற்பொழிவு

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: