
Post No. 11,603
Date uploaded in London – 30 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
இந்தக் கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியானது.
அனுமனை முதல் சந்திப்பிலேயே மிகவும் விரிவாக வால்மீகி வருணித்துவிடுகிறார். ஆனால் கம்பனோ சுருக்கி வரைகிறான் . பின்னர் பல இடங்களில் அனுமன் பற்றிப் புகழ்ந்து பேசுகிறான்.
வால்மீகி ராமாயண கிஷ்கிந்தா காந்த அனுமன் படலத்தைத் தொடர்ந்து காண்போம். ஒவ்வொரு ஸ்லோகத்தையும் நாம் சிறநத பேச்சாளருக்கு ஒப்பிடலாம். சொல்வன்மை அதிகாரத்தில், வள்ளுவன் குறிப்பிடும் அனைத்து பண்புகளையும் காணலாம்..
xxx
अनया चित्रया वाचा त्रिस्थान व्यंजनस्थयाः |
कस्य न आराध्यते चित्तम् उद्यत् असे अरेः अपि || ४-३-३३
அனயா சித்ரயா வாசா த்ரிஸ்தான வ்யஞ்ஜனஸ் தயாஹா
கஸ்ய ந ஆராத்யதே சித்தம் உத்யத் அஸே அரேஹே அபி 4-3-33
உடலில் மூன்று இடங்களிலிருந்து வரக்கூடிய அவனது பேச்சு, வசீகரிக்கச் செய்கிறது . எவனுடைய இதயத்தைத்தான் இது தொடாது? ஓங்கிய கத்தியுடன் வருபவனையும் கவரக்கூடியது .
அதாவது உருவிய கத்தியுடன் தாக்குவதற்கு வரும் எதிரியும் அனுமன் பேச்சைக் கேட்ட மாத்திரத்தில் கத்தியைக் கீழே போட்டுவிடுவானாம்
மூன்று இடங்களில் இருந்து சொற்கள் வரும் என்று சம்ஸ்க்ருத உச்சரிப்பு PHONETICS சாஸ்திரம் சொல்கிறது உரசி = மார்பு,சிரஸி =தலை , கண்ட = கழுத்து என்று வியாக்கியானக்காரர்கள் விளக்குவர்.
XXX
एवम् विधो यस्य दूतो न भवेत् पार्थिवस्य तु |
सिद्ध्यन्ति हि कथम् तस्य कार्याणाम् गतयोऽनघ || ४-३-३४
ஏவம் விதோ யஸ்ய தூதோ ந பவேத் பார்த்திவஸ்ய து
ஸித்தயந்தி ஹி கதம் தஸ்ய கார்யாணாம் கதயோ அனக
மாசு மருவற்ற தூயவனே (லெட்சுமணா )! இப்படிப்பட்ட (சொல்வன்மையுடைய ) ஒரு தூதன் ஒரு அரசனுக்கு இருந்தால் அவன் வெல்ல முடியாத, சாதிக்க இயலாத , காரியம் ஏதேனும் உண்டோ !
இந்த இடத்தில் வள்ளுவனின் தூது என்ற அதிகாரத்தையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
XXX
एवम् गुण गणैर् युक्ता यस्य स्युः कार्य साधकाः |
तस्य सिद्ध्यन्ति सर्वेऽर्था दूत वाक्य प्रचोदिताः || ४-३-३५
ஏவம் குண கணைர் யுக்தா யஸ்ய ஸ்யுஹு கார்ய ஸாதகாஹா
தஸ்ய ஸித்தயந்தி ஸர்வ அர்த்தா தூத வாக்ய ப்ரசோதிதாஹா 4-3-34
“Should a king have this kind of work accomplishers with a variety of virtues, all his objectives will be achieved impelled by such an envoy’s words…” Rama thus said to Lakshmana. [4-3-35]
பல்வேறு குணங்கள் ஒருங்கே கூடிய இப்படிப்பட்ட சாதனையாளர்கள் ஒரு அரசனுக்கு இருந்தால் அந்த தூதனின் சொல்வன்மையால் அரசனின் குறிக்கோள்கள் அனைத்தும் நிறைவேறிவிடும்.
இந்த இடத்தில் இரண்டு, மூன்று முக்கிய விஷயங்களை நாம் அறிதல் வேண்டும்.
உலகிலேயே தூதர் AMBASSADOR , MESSENGER என்ற பதவியை உருவாக்கி அதற்கு இலக்கணம் கற்பித்தது இந்துக்கள்தான். சாம, தான, பேத , தண்ட என்ற நான்கு வித உபாயங்களில் முதல் உபாயம், ஒரு போரைத் தவிர்ப்பதற்காக தூது விடுவதாகும் . மஹாபாரதத்திலும் ராமாயணத்திலும் இதை விரிவான இலக்கணத்துடன் காண்கிறோம்.பெண் கொலை கூடாது என்று சொல்லும் நீதி சாஸ்திரங்கள் அனைத்தும் தூதரைக் கொல்லக்கூடாது என்றும் சொல்லும் . அனுமனைபிடித்து வாலில் தீ வைக்கச் சொன்ன இடத்திலும் இந்த தூதர் இலக்கணம் வருகிறது. இந்துக்கள் சொன்னதை இன்று உலகமே பின்பற்றுகிறது.
உலகில் எந்த நாட்டில் எந்த நாட்டுத் தூதரகம் இருந்தாலும் அதற்குள் வேறு எவரும் நுழைய முடியாது. அங்கு ஒருவர் அடைக்கலம் புகுந்துவிட்டால், அது இருக்கும் நாட்டின் அரசு கூட அவரைத் தொட முடியாது. இது பற்றி ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள அளவுக்கு வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் காண முடியாது.
ரிக் வேதத்தில் உள்ள நாய் விடு தூது கவிதைதான் உலகின் முதல் தூது கவிதை (Sarama in Rig Veda= Hermes in Greek).
இந்த குறிப்பிட்ட சம்ஸ்க்ருத ஸ்லோகத்தில் வரும் தூத வாக்ய என்ற பெயரில் ஒரு பிரபல நாடகமே உள்ளது காளிதாசனுக்கும் முந்தைய , காளிதாசனால் புகழப்பட்ட, பாஷா என்ற கவி எழுதிய 13 நாடகங்களில் ஒன்று தூத வாக்ய. Duta Vakya by Bhasa அது கிருஷ்ணரின் தூது பற்றிய நாடகம். கிருஷ்ணன் உள்ளே வரும்போது எவரும் எழுந்து மரியாதை செய்யக்கூடாது என்று துரியோதணன் உத்தரவு போடுகிறான். ஆனால் அனைவரும் தம்மை அறியாமலே எழுந்து நின்று தூதருக்குரிய மரியாதை தருகின்றனர். அரண்மனை சுவரில் இருந்த ‘திரவுபதி ஆடை உருவும் படத்தை’ அகற்றுங்கள் என்று கிருஷ்ணன் சொன்னவுடன் துரியோதனன் பயந்து போய் அகற்றுகிறான். பாண்டவர்களுக்கு எந்த நிலமும், நாடும் கொடுக்க முடியாது என்கிறான். இறுதியில் தூதரை அவமானப்படுத்திய குற்றத்துக்காக திருதராஷ்டன் வந்து, கிருஷ்ணன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான். இது 2200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட அருமையான நாடகம். அதற்கு பாஷா பயன்படுத்திய சொல் இந்த ஸ்லோகத்தில் வருவது சாலப்பொருந்தும்.
XXX
இதன்பிறகு சுக்ரீவனை அழைத்து வருமாறு லெட்சுமணனை ராமன் அனுப்புகிறான். அனுமனும் அவனுடன் செல்கிறான்
XXX

இந்த ஸ்லோகங்களுக்கு உரை எழுதிய உரைகாரர்கள் சிக்ஷா (PHONETICS உச்சரிப்பு) சாஸ்திரத்தில் உள்ள பல விஷயங்களை மேற்கோள் காட்டுகின்றனர். எவற்றைத் தவிர்க்கவேண்டும் என்றும் எது சரியானது என்றும் பல கவிதைகள் உள்ளன. எது சாலச் சிறந்தது என்பதை மட்டும் அனுமனுடன் ஒப்பிடுவோம்.
maadhuryam akSharavyaktiH pada cchedaH tadaa tvaraa
dhairyam laya samanvitam ca ShaT ete paaThakaaH guNaaH
மாதுர்யம் அக்ஷர வ்யக்திஹி பத சேதஹ ததாத் வர
தைர்யம் லய ஸமன்விதம் ச ஷட் ஏதே பாதகாஹா குணாஹா
With sweet voice, enunciated syllables, properly parting the words, quick and confident, and rhythm included are the six best qualities of best reciters.
இனிமையான/கவர்ச்சியான குரல் , ஒவ்வொரு சொல்லையும் தெளிவாக உச்சரிக்கும் விதம் , சொற்களைப் பிரிக்க வேண்டிய இடங்களில் பிரிக்கும் முறை , விரைவாக, நம்பிக்கைக்கையுடன் சொல்லும் விதம் , தடையற்ற பிரயோகம் ஆகிய ஆறும் சிறந்த பேச்சாளரின் குணங்களாகும்
(ஆகாசவாணியில் மற்றும் பி பி சி தமிழோசையில் சிறப்பாக செய்தி வாசித்த பலருடைய நினைவுகள் நமக்கு பளிச்சிடும் )
XXX
மேற் கூறியவற்றை ஒப்பிட குறள் பாக்கள் :
[பொருட்பால், அமைச்சியல், தூது]
ஆறு குணங்களை வள்ளுவன் 3+3 =6 ஆக தருகிறான்
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு- 684
இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க
Xx
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு–688
தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.
xxx
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.
[பொருட்பால், அமைச்சியல், தூது]-குறள் 683
அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.
நூலாருள் நூல்வல்லன்= கவீம் கவீநாம் என்ற ரிக் வேத (Rig Veda) சொற்களின் மொழியாக்கம். இதைச் சொல்லித்தான் பிராமணர்கள் பூஜையைத் தொடங்குவர் (கணாணாம் த்வா …….. மந்திரம்)
Xxx
சொல்வன்மை
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின் -648
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்–643
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து –645
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது– 647
இவை அனைத்தும் வால்மீகி முனிவரின் அனுமன் வருணனையில் இருப்பதை ஒப்பிட்டு மகிழ்க.
–subham—
TAGS- வால்மீகி முனிவரின் அனுமன் வருணனையில்