
Post No. 11,602
Date uploaded in London – 30 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
அறப்பளீசுர சதகம் 38. இழிவு
இரப்பவன் புவிமீதில் ஈனன்;அவ னுக்கில்லை
என்னுமவன் அவனின் ஈனன்
ஈகின்ற பேர்தம்மை யீயாம லேகலைத்
திடும்மூடன் அவனில் ஈனன்!
உரைக்கின்ற பேச்சிலே பலன்உண் டெனக்காட்டி
உதவிடான் அவனில் ஈனன்!
உதவவே வாக்குரைத் தில்லையென் றேசொலும்
உலுத்தனோ அவனில் ஈனன்!
பரக்கின்ற யாசகர்க் காசைவார்த் தைகள்சொலிப்
பலகால் அலைந்து திரியப்
பண்ணியே இல்லையென் றிடுகொடிய பாவியே
பாரில்எல் லோர்க்கும் ஈனன்!
அரக்கிதழ்க் குமுதவாய் உமைநேச னே!எளியர்
அமுதனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அரக்கு இதழ் குமுதம் வாய் உமைநேசனே – சிவந்த
இதழும் செவ்வல்லிபோன்ற வாயும் உடைய உமையம்மையார் காதலனே!,
எளியர் அமுதனே – மெலிந்தவர்க்கு அமுதமானவனே!, அருமை ………
தேவனே!,
புவி மீதில் இரப்பவன் ஈனன் – உலகத்திற் பிச்சையெடுப்பவன்
இழிந்தவன், அவனுக்கு இல்லையென்னும் அவன் அவனில் ஈனன் –
அவ்வாறு இரப்பவனுக்கு (வைத்துக்கொண்டு) இல்லையென்பவன்
அவனைவிட இழிந்தவன் : ஈகின்ற பேர் தமை ஈயாமலே தடுத்திடும்
மூடன் அவனில் ஈனன் – கொடுப்போரைக் கொடாமலே தடுத்துவிடும் அறிவிலி ஈயாதவனிலும் இழிந்தவன்! உரைக்கின்ற பேச்சில் பலன் உண்டு
எனக்காட்டி உதவிடான் அவனில் ஈனன் – சொல்லும் சொல்லிலே
நன்மையுண்டு என்று நம்புவித்துப் பிறகு கொடாதவன் அவனினும் இழிந்தவன், உதவவே வாக்கு உரைத்து இல்லையென்றே சொலும்
உலுத்தனோ அவனில் ஈனன் – கொடுப்பதாகவே உறுதிமொழி கூறிப்பிறகு இல்லையென்றே கூறிவிடும் கஞ்சத்தனமுள்ளவனோ எனின் அவனினும் இழிந்தவன், பரக்கின்ற யாசகர்க்கு ஆசை வார்த்தைகள் சொலி – எங்கும்
பரவியிருக்கும் இரவலர்க்கு (நம்பிக்கை யுண்டாகும்படி) ஆசைமொழிகள் கூறி, பலகால் அலைந்துநிற்கப் பண்ணியே – பலதடவை உழன்று திரியும்படி செய்துவிட்ட பிறகே, இல்லையென்றிடு கொடிய பாவியே பாரில்
எல்லோர்க்கும் ஈனன் – இல்லையென்று ஏமாற்றிவிடும் கொடிய பாவியே உலகில் யாவரினும் இழிந்தவன்.
(வி-ரை.) ‘ஏற்பது இகழ்ச்சி‘,
‘இயல்வது கரவேல்’ ‘
ஈவது விலக்கேல்‘–என்பவை இங்கு உணரத்தக்கவை.
xxx
1.பிச்சையெடுப்பவன் இழிந்தவன்,- 45 / 100 Marks
2.இரப்பதைவிட இல்லையென்பது இழிவு—40/ 100 Marks
3.அதனினும் ஈவதை விலக்குதல் இழிவு- 30/ 100 Marks
4.அதனினும் பேச்சிலே பயனுண்டென நம்பும்படி சொல்லி
ஏமாற்றுவது இழிவு—25/100 Marks
5.நாளை வா என்று வந்தபின் இல்லையெனல் அதனினும்
இழிவு- 15 /100 Marks
6.அதனினும் பலமுறை அலைவித்து இல்லையெனல் இழிவு- 5/100 Marks
Xxx
VALLUVAR’S ATTACK குறளில் வள்ளுவர்
இந்த ஆறு வகையானோரை சில பாடல்கள் மூலம் ஒப்பிட்டு மகிழ்வோம்
இரவச்சம் அதிகாரம்
BEGGING IS WORSE; NOT TO BEG IS WORTH MILLION DOLLARS
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்-குறள் 1061
சீ சீ!! நண்பர்களிடம் கூட பிச்சை எடுக்காதே; அது கோடி ரூபாய்க்கு சமம்.
XXX
BODDY HELL ! LET GOD BRAMA ALSO BEG
குறள் 1062
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் -குறள் 1062
ஏய் பிரம்மா ! ஏன் பிச்சைக்காரர்களைப் படைத்தாய் ? ஒழிந்து போ ! நீயும் பிச்சை எடு ‘ அப்ப தெரியும் உனக்கு.
XXX

VALLUVAR’S SARCASM
குறள் 1070
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்—1070
கடைசி குறளில் வள்ளுவர் SACASTIC REMARK நக்கல் /பகடி/ நையாண்டி செய்கிறார் .
அது சரி; உனக்கு பிச்சை போட முடியாது என்று சொன்னவுடன் பிச்சைக்காரன் உயிர் பறந்து போயிடுது ! ஏண்டா மஹா பாவி! இல்லன்னு சொன்னியே! உன் உயிர் எங்கடா ஒளியுது HIDING?/ எனக்கே கண்டு பிடிக்க முடியலையே!!
XXX
AVVAIYAR CLASSIFICATION
உலகில் இரண்டே ஜாதி ONLY TWO CASTES AROUND THE WORLD
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி
— “நல்வழி” ஔவையார்
உலகில் இரண்டே ஜாதிகள்தான் உண்டு; தானம் கொடுப்பவன் உயர் ஜாதி; இல்லை என்று சொல்லுபவன் கீழ்ஜாதி — அவ்வையார் அருள்மொழி
XXX
Misers are the Best Donors; they never eat; leave everything for others after death!
க்ருபண இவ தாதா ந பூதோ ந பவிஷ்யதி
ந புஞ்சன்னேவ சர்வஸ்வம் பரஸ்மை ச: ப்ரதாஸ்யதி
“உலகிலேயே மிகப் பெரிய கொடையாளிகள் கருமிகள்தான்!! அவர்களைப் போல கடந்த காலத்தில் இருந்ததுமில்லை; எதிர்காலத்தில் இருக்கப் போவதுமில்லை. ஏனெனில் அவர்கள் சாப்பிடுவது கூட இல்லை. எல்லாவற்றையும் பிறருக்கே (இறந்தபின்) விட்டு விடுகிறார்கள்.”
இது சம்ஸ்கிருதக் கவிஞர் ஒருவரின் கிண்டல்!
xxx
Trees and Men; Three Types of Men
3 வகை மனிதர்கள் பாக்கு மரம், பனை மரம் தென்னை மரம்
தமிழ் கவிஞர் வேறு ஒரு விதமாக கருமிகளைக் கிண்டல் செய்கிறார். மனிதர்களை மூன்று வகையாகப் பிரித்து விடுகிறார். மனிதர்கள் மூன்று வகையான மரங்களைப் போன்றவர்கள் என்கிறார்.
உத்தமர்தாம் ஈயுமிடத்தோங்கு பனை போல்வரே
மத்திமர்தாந் தெங்குதனை மானுவரே – முத்தலரும்
ஆம் கமுகு போல்வராம் அதமர் அவர்களே
தேங்கதலியும் போல்வார் தேர்ந்து
–நீதிநெறிவெண்பா

பனைமர மனிதர்கள்
பனைமரத்துக்கு தண்ணீர்விடவே வேண்டாம்; அது தண்ணீர் விடாமலே பலன் தரும்; உத்தம மனிதர்களும் அவ்வகையே. பலனை எதிர்பாராமல் பலன் தருவர்.
தென்னைமர மனிதர்கள்
தென்னை மரத்துக்கு அவ்வப்பொழுது தண்ணீர் விட்டால்தான் பலன் தரும். அது போல நடுத்தர (மத்திம) மனிதர்கள், பிறர் உதவி செய்தால் அந்த அளவுக்கு திருப்பி உதவி செய்வர்.
பாக்கு மரமனிதர்கள்
பாக்கு மரமும் வாழை மரமும் எப்பொழுதும் தண்ணீர் விட்டால்தான் பலன் தரும்; அது போன்ற மனிதர்கள் கடைத்தர மனிதர்கள். எப்பொழுதும் பாராட்டினாலோ, பலன் கிடைக்கும் என்று தெரிந்தாலோதான் உதவி செய்வார்கள்.
xxxx
முள் சூழ்ந்த பழ மரம் போன்ற மனிதர்கள் Thorny trees
தமிழர்கள் இயற்கை அன்பர்கள். நிறைய பாடல்களில் மனிதர்களையும் மரங்களையும் ஒப்பிட்டு தங்களது கருத்துக்களைச் சொல்லுவார்கள். நல்ல பழம் கொடுக்கும் மரங்களைச் சுற்றி முள் புதர் வளர்ந்தால் பழங்கள் யாருக்கும் பயன்படாது. அது போல சில நல்ல கொடையாளிகளைச் சுற்றி கெட்ட மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் முட்செடிகளைப் போல தானும் கொடுக்கமாட்டார்கள், மற்றவர்களையும் கொடுக்கவிட மாட்டார்கள்.
தாமும் கொடார் கொடுப்போர் தம்மையும் ஈயாதவகை
சேமம் செய்வாரும் சிலருண்டே – ஏம நிழல்
இட்டுமலர் காய்கனிகளிந்து உதவு நன்மரத்தைக்
கட்டுமுடை முள்ளெனவே காண்- –நீதிநெறிவெண்பா
— SUBHAM —
tags-கருமிகள், வகை, அம்பலவாணர் ,மதிப்பெண்