
Post No. 11,601
Date uploaded in London – 30 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பாரத தேச பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்பட்ட 50 முதல் 72 கலைகள்! – 1
ச.நாகராஜன்
பாரத தேசத்தை அடியோடு அழித்து கிறிஸ்தவ மதத்தை இங்கு வேரூன்றச் செய்ய வேண்டி, இந்த நாட்டை கிறிஸ்தவ நாடாக ஆக்க முயற்சித்த பாதகன் மெக்காலே.
அவனது பாடத் திட்டத்தால் உடையால் இந்தியராகவும் உள்ளத்தாலும் உணர்வாலும் பழக்க வழக்கதினாலும் கிறிஸ்தவராக மாற்றச் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அந்தப் பாடத் திட்டம் என்ன?
நமக்குத் தெரிந்த வரை மூன்று பாடங்கள் உண்டு – விஞ்ஞானம், கலைகள் மற்றும் வணிகம். (Science, Arts and Commerce)
1978ஆம் ஆண்டு முடிய இந்தியாவில் நாம் எஞ்ஜினியரிங் பாடத் திட்டத்தில், சிவில், மெகானிகல், எலக்ட்ரிகல், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஐந்து கிளைகளைக் கொண்டிருந்தோம்.
1858ஆம் ஆண்டுக்கு முன்னர் பாரதப் பள்ளிக்கூடங்களில் 50 முதல் 72 விதமான கலைகள் கற்றுத் தரப்பட்டன என்று சொன்னால் அனைவருக்கும் இன்று மிகவும் ஆச்சரியமாகத் தான் இருக்கும்!
திட்டமிடப்பட்டு இந்தப் பள்ளிகள் ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டன.
1811ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இங்கிலாந்தில் ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.
அந்தக் காலத்தில் அதே ஆண்டில் பாரதத்தில் எத்தனை பள்ளிகள் இருந்தன தெரியுமா?
ஏழு லட்சத்து முப்பத்திரண்டாயிரம் பள்ளிகள்!
7,32,000 பள்ளிகள்!!
அந்தப் பள்ளிகள் கீழ்க்கண்ட பாடங்களைச் சொல்லிக் கொடுத்தன:
1) அக்னி வித்யா (ஆற்றல்)
2) வாயு வித்யா (காற்று)
3) ஜல வித்யா (நீர்)
4) அந்தரிக்ஷ வித்யா (விண்வெளி விஞ்ஞானம்)
5) ப்ருத்வி வித்யா ( சற்றுப்புறச் சூழல்)
6) சூர்ய வித்யா (சூரிய ஆற்றல்)
7) சந்த்ர மற்றும் லோக் வித்யா (சந்திரனைப் பற்றிய பாடம்)
8) மேக் வித்யா (காலநிலை முன்னறிவிப்பு)
9) தாது ஊர்ஜா வித்யா (எலக்ட்ரோ மாக்னெடிக் ஆற்றல்)
10) திவா சா ராத்ரி வித்யா (சர்காடியன் அறிவு)
11) சிருஷ்டி வித்யா (படைப்பும் அபிவிருத்தியும்)
12) ககோள விக்ஞான் (ஜோதிர் வித்யா – வானவியல்)
13) பூகோள வித்யா (பூகோளம்)
14) கால வித்யா (காலம் பற்றிய படிப்பு)
15) பூகர்ப்ப வித்யா (நிலவியல் மற்றும் சுரங்கத் தொழில்)
16) க்ரஹ ரத்ன மற்றும் தாது வித்யா (ரத்தினங்கள் மற்றும் உலோகங்கள்)
17) ஆகர்ஷன் வித்யா (புவி ஈர்ப்பு விசை)
18) ப்ரகாஷ் வித்யா (ஒளி ஆற்றல்)
19) சஞ்சார் வித்யா (தகவல் தொடர்பு)
20) வைமானிக் சாஸ்த்ர (விமானவியல்)
21) ஜல்யான் வித்யா (நீரில் செல்லும் வாகனங்கள்)
22) ஆக்னேய அஸ்த்ரா ( தீக் கருவிகள் மற்றும் வெடிமருந்து)
23) ஜீவ விக்ஞான் வித்யா (உயிரியல்)
24) யக்ஞ வித்யா ( உலோக அறிவியல்)
25) வ்யாபார் வித்யா (வணிகவியல்)
26) க்ரிஷ் வித்யா (விவசாய இயல்)
27) பசுபாலன் வித்யா (மிருகவியல்)
28) பக்ஷி பாலன் வித்யா (பறவைகள் வளர்ப்பு)
29) யந்த்ர கதி சாஸ்த்ரம் (இயந்திரவியல்)
30) யான் நிர்மாண் (வாகன வடிவமைப்பு)
31) ரத்னாகர் (அலங்காரம் மற்றும் நகைகள் வடிவமைப்பு)
32) கும்ப்கர் வித்யா (பானைகள் செய்தல்)
33) லோஹார் (கொல்லர்)
34) தக்காஸ் (உரிமை வரி)
35) சித்ர சில்பம் (சாயமேற்றல் மற்றும் வண்ண ஓவியக்கலை)
36) சூத்ரதார் (தச்சுத் தொழில்)
37) பரிவாஹன் சஞ்சார் வா வியாபார் (இடப்பெயர்வு மேலாண்மை)
38) வாஸ்துகார் வித்யா (கட்டிடக் கலை)
39) ரந்தான் வித்யா (சமையல் கலை)
40) வாஹன் வித்யா (வாகனம் ஓட்டுதல்)
41) ஜலபாத் பரிவாஹன் (நீர்நிலை மேலாண்மை)
42) சாங்கிகீ (புள்ளிவிவர இயல்)
43) பசு-சிக்ஷா (கால்நடை மருத்துவம்)
44) உத்யான்பாலன் (தாவரவியல்)
45) வன பாலன் (வனவியல்)
46) சஹ்யோகீ (மருத்துவத் துறை உதவிப் பிரிவு)
47) பௌத ரஸாயன கணித சாஸ்த்ரம் (அறிவியல்)
48) ஆயுர்வேத சிக்ஷா (மருத்துவம்)
49) சல்ய சாஸ்த்ரம் (அறுவை சிகிச்சை)
50) அஷ்டாங்க யோகா (யோகம்)
51) மானசிக் ரோக சிகித்ஸா (உளவியல் சிகிச்சை)
52) பாஷா வியாகரண், சாஹித்ய, சதார்ஷன் (மொழி, இலக்கணம், காவியம் உள்ளிட்டவை)
இவை அனைத்தும் பாரதப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வந்தன. ஆங்கிலேயரின் பாடத்திட்டத்துடன் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் இவை அனைத்தும் மறைந்து விட்டன.
இந்தப் பள்ளிகள் எப்படி மறைந்தன?
அடுத்துப் பார்ப்போம்.
*** (தொடரும்)