பாரத பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்பட்ட கலைகள்!- 2 (Post No.11,605)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,605

Date uploaded in London – 31 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

பாரத தேச பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்பட்ட 50 முதல் 72 கலைகள்! – 2

                                                                 ச.நாகராஜன்

ஆங்கிலேய அரசின் முக்கிய நோக்கம் பாரதத்தை நிரந்தர அடிமையாகத் தங்களுக்கு ஆக்குவதோடு அதற்கு மாபெரும் தடையாக இருக்கும் ஹிந்து – சனாதன- பண்பாட்டை அடியோடு ஒழித்துக் கட்டி இதை முழு கிறிஸ்தவ மயமாக்கி கிறிஸ்தவ நாடாக ஆக்குவது தான்.

இதற்கான வழி பண்பாட்டின் அடித்தளமாக அமையும் அற நூல்களை – சாஸ்திரங்களை ஒழித்துக் கட்டுவது தான். இந்த சாஸ்திரங்களை ஒழித்துக் கட்ட வழி இதைக் கற்பிக்கும் பள்ளிகளை ஒழிப்பது தான்.

இந்த நோக்கத்தின் அடிப்படையில் கான்வெண்ட் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன.

1835ஆம் ஆண்டு Indian Education Act – இந்திய கல்வி சட்டம் – உருவாக்கப்பட்டது. இது 1858ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.

இந்த “மாபெரும்” – அயோக்கியத்தனமான! – சட்டத்தை முன்வரைவு (டிராஃப்ட்) செய்தது லார்ட் மெக்காலே தான்!

ஆகவே தான் இதை இன்றளவும் மெக்காலே எஜுகேஷன் என்று சொல்கிறோம்.

மெக்காலே இங்கு அடிப்படையாக இருக்கும் கல்வி அமைப்பை ஆய்வு செய்தான்.  அதே சமயம் பல ஆங்கிலேயர்களும் இங்கு இருக்கும் கல்வி முறை பற்றிய தங்களது அறிக்கைகளைத் தந்தனர்.

அந்த ஆங்கிலேயர்களுள் ஒருவர் ஜி.டபிள்யூ. லூதர் (G.W.Luther). இன்னொருவர் தாமஸ் மன்ரோ. ( Thomas Munro)

இந்த இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு பகுதிகளை ஆராய்ந்தனர்.

லூதர் வட இந்தியாவில் ஆய்வு நடத்தினார். அங்கு 97 % பேர் கல்வியறிவுடன் இருப்பதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

தாமஸ் மன்ரோ தென்னிந்தியாவில் ஆய்வு நடத்தினார். அவர் தனது அறிக்கையில் 100 % பேர் கல்வியறிவுடன் இருப்பதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

மெக்காலே மிகத் தெளிவாக, காலமெல்லாம் இந்தியா தங்களுக்கு அடிமை நாடாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டதோடு, இந்தியாவுக்கே உரித்தான பண்பாட்டைக் கொண்டிருக்கும் கல்வி முறை மற்றும் அமைப்பு கொஞ்சம் கூட மீதி இல்லாமல் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அதற்குப் பதிலாக ஆங்கில கல்வி அமைப்புக் கொண்டு வர வேண்டும் என்றும் கூறினான்.

 அப்போது தான் இந்தியர்கள் உடலளவில் இந்தியர்களாகவும் மன ரீதியாக ஆங்கிலப் பண்பாட்டைக் கொண்டவர்களாகவும் ஆவார்கள் (அதாவது கிறிஸ்தவராக இருப்பர்) என்றும் தெளிவாக அவன் கூறினான்.

கான்வெண்ட் அல்லது ஆங்கிலப் பல்கலைக்கழகங்களை  விட்டு இந்தியர்கள் வெளியேறும் போது அவர்கள் அனைவரும் ஆங்கிலேயருக்காக வேலை செய்வர் என்று அவன் கூறினான்.

உண்மையில் இன்றளவும் அது பலித்திருக்கிறது. அந்த கான்வெண்டுகளிலும் பல்கலைக்கழகங்களிலும் படித்தவர்கள் இந்தியப் பண்பாட்டிற்கு எதிராக என்னெவெல்லாம் இன்றும் செய்கின்றனர் என்பதை இதைப் படிப்பதை நிறுத்தி விட்டு ஒரு சில நிமிடங்கள் சிந்தித்தாலே போதும்!

மெக்காலே ஒரு குறிப்பிட்ட வாக்கியத்தைப் பயன்படுத்தினான் : “Just as farm is thoroughly ploughed before a crop is planted, so must it be ploughed and brought

In the English Education system.”

ஒரு பயிரை நடுவதற்கு முன்னர் எப்படி நிலமானது நன்றாக உழப்படுகிறதோ அதே போல ஆங்கிலக் கல்வி முறையும் நன்கு உழுத பின்னர் கொண்டு வரப்பட வேண்டும்.

ஆகவே தான் அதற்கு முதல் படியாக பாரதப் பள்ளிகள் அனைத்தும் சட்டத்திற்கு எதிரானது என்று அறிவித்தான்.

பின்னர் சம்ஸ்கிருதப் பள்ளிகள் சட்டத்திற்கு எதிரானவை என்று அறிவித்தான்.

பின்னர் அனைத்துப் பள்ளிகளுக்கும் தீ வைத்துக் கொளுத்தி அழித்தான்.

பள்ளியில் இருந்த ஆசிரியர்களை அடித்தான், உதைத்தான். சிறையில் வைத்தான்.

1850 ஆண்டு முடிய பாரத தேசத்தில் 7,32,000 பள்ளிகள் 7,50,000 கிராமங்களில் இருந்தன. அதாவது ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி இருந்தது. அது இன்றைய உயர் கல்வி என்று சொல்லப்படும் அதே மாதிரியான கல்வியின் உச்ச கட்ட அறிவை வழங்கியது. அவற்றில் 18 பாடங்கள் கற்றுத் தரப்பட்டன.

இந்தப் பள்ளிகள் மக்களாலேயே நடத்தப்பட்டன. ஆங்காங்கு ஆளும் அரசர்களால் நடத்தப்படவில்லை.

அனைத்துக் கல்வியும் இலவசமே!

இந்தப் பள்ளிகள் அழிக்கப்பட்டன. ஆங்கிலக் கல்வி முறை வலிந்து புகுத்தப்பட்டது.

கல்கத்தாவில் முதல் கான்வெண்ட் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் அது “இலவச பள்ளி” என்று அறிவிக்கப்பட்டது.

அன்றைய சட்டத்தின் படி கல்கத்தா பல்கலைக்கழகம், பாம்பே பல்கலைக்கழகம், மதராஸ் பல்கலைக்கழகம் ஆகியவை உருவாக்கப்பட்டன. இந்த அடிமைக்கு வழிவகுக்கும் பல்கலைக்கழகங்களே இன்றும் இந்த தேசத்தில் கல்வி கற்பித்துக் கொண்டிருக்கின்றன.

                                        ***            தொடரும்

அன்பர்கள் அனைவரும் இந்தக் கருத்துக்களை முடிந்தமட்டில் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்! ஜெய் பாரத்! ஹெய் ஹிந்த்!!

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: