
Post No. 11,609
Date uploaded in London – 1 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பாரத தேச பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்பட்ட 50 முதல் 72 கலைகள்! – 3
ச.நாகராஜன்
மெக்காலே தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிடுகிறான்:-
“These convent schools will bring out children who look like Indians but are English by the brain and they won’t know anything about their country. They won’t know anything about their culture, they won’t have any idea about their traditions, they will not know their idioms, when such children are there in this country. Even if the British go away, English will not leave this country.”
“இந்த கான்வெண்ட் பள்ளிகள், குழந்தைகளை பார்க்க இந்தியர்கள் போலவும் ஆனால் மூளையால் ஆங்கிலேயர் போலவும் ஆக்கி விடும். அப்படிப்பட்ட குழந்தைகள் இந்த நாட்டில் இருக்கும் போது, அவர்களுக்குத் தங்கள் நாட்டைப் பற்றி ஒன்றுமே தெரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்குத் தங்கள் பண்பாட்டைப் பற்றி ஒன்றும் தெரிந்து கொள்ள முடியாது. தங்களது பாரம்பரியப் பழக்க வழக்கங்கள் பற்றி அவர்களால் அறிய முடியாது. அவர்களுக்குத் தங்கள் வழிவழியிலான மரபுச் சொற்கள் புரியாது. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு அகன்றாலும், ஆங்கில மொழி இந்த நாட்டை விட்டுப் போகாது.”
இந்தக் கடிதத்தில் உள்ள கூற்று பெரும்பாலும் உண்மை என்பதை இன்றும் நாம் நமது நாட்டில் காண முடிகிறது. ஆங்கிலேயரைச் சார்ந்த பழக்க வழக்கங்களும் போகவில்லை, ஆங்கிலமும் போகவில்லை.
இதனால் நாடு முழுவதிலும் ஏற்பட்ட குழப்பங்களை ஒரு சிறிது எண்ணிப் பார்க்க வேண்டும்.
நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம். எது மேலை நாட்டைச் சார்ந்ததாக இருந்தாலும் அதைப் புகழ்கிறோம்.
நமது பெருமைகளை நாமும் உணரவில்லை. நமது சந்ததிகளுக்கும் உணர்த்த முற்படுவதில்லை.
நமது பாடத் திட்டங்கள் வகுத்த பாடங்களோ நமது அடிமை வாழ்வைப் பற்றிப் பக்கம் பக்கமாகப் புகழ்ந்து கூறுகிறது.
நமது புகழோங்கிய வீரர்களையோ, அரசர்களையோ, ரிஷிகளையோ பற்றிப் பேசுவதே இல்லை. நமது கண்டுபிடிப்புகள் நமக்கும் தெரியாது; உலகத்தினருக்கும் தெரியாது.
தாய்மொழியை எவன் ஒருவன் புறக்கணிக்கிறானோ அவன் ஒரு போதும் முன்னேற முடியாது. இதை நன்கு அறிந்தவன் மெக்காலே.
ஆகவே தான் திட்டமிட்டு சம்ஸ்கிருதத்திலிருந்து ஆரம்பித்து எல்லா இந்தியமொழிகளையும் ஒழிக்க ஆரம்பித்தான் – பள்ளிகளை எல்லாம் மூடி!
இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் குடும்பத்தினருக்கும் சொல்ல வேண்டும்.
பாடத் திட்டத்தை மாற்றி நமது புகழோங்கிய பண்டைய நாளின் பெருமையையும் அதே வழியில் சென்று புதிய கண்டுபிடிப்புகளைக் காணும் வழியையும் சொல்லித் தர வேண்டும்.
நமது பாரம்பரிய கலாசாரத்தைப் பற்றிய நமது நூல்களை அனைவருக்கும் கற்பிக்க வேண்டும்.
இதைக் கற்று வியந்து போற்றும் அயல் நாட்டு அறிஞர்களின் கூற்றுகளைத் தொகுத்து அதைப் பரப்ப வேண்டும்.
புத்தம் புதிய கலைகளையும் அதன் நுட்பங்களையும் கற்று அதில் தேர்ந்து புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்து உலகை அனைவரும் சீரோடும் சிறப்போடும் அறிவோடும், ஆரோக்கியத்தோடும் சமாதானத்தோடும், இறை பக்தியோடும் வாழும் வழியை உலகிற்கு நல்க வேண்டும்.
பாரத தேசத்தில் பிறந்த ஒவ்வொருவனின் இன்றைய தலையாய கடமை இது தான்; இது ஒன்று தான்!
*** இந்தத் தொடர் நிறைவுறுகிறது