
Post No. 11,615
Date uploaded in London – – 2 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
யார் யார், எந்த எந்த, நரகத்துக்குப் போவார்கள் என்று மனு நீதி நூல், புறநானூறு, திருப்புகழ், பகவத் கீதை முதலிய நூல்கள் செப்பியதை முன்னர் கண்டோம் . தமிழ் நூல்கள் நரகம், நிரயம் , அளறு முதலிய சொற்களைப் பயன்படுத்தி நரகத்தை நம் மனக்கண் முன் வைக்கின்றன
இதோ கம்பன் தரும் பட்டியல் :-
உய்ய,’நிற்கு அபயம்’என்றான் உயிரைத் தன் உயிரின் ஓம்பாக்
கையனும், ஒருவன் செய்த உதவியில் கருத்து இலானும்,
மை உறு நெறியின் நோக்கி மாமறை வழக்கில் நின்ற
மெய்யினைப் பொய் என்றானும், மீள்கிலா நரகின் வீழ்வார். 6.4.115
பொருள்
நான் உய்யுமாறு உன்னைச் சரண்புகுந்தேன் என்று வந்த ஒருவனுடைய உயிரினைத் தன்னுயிராகக் கருதிப் பேணிக் காப்பாற்றாத கீழ்மகனும், நன்றி மறந்தவனும், சிறந்த வேத நெறிப்படி நின்றொழுகும் உண்மை நெறியைப் பொய் என்று கூறுபவனும்; மீண்டு வரமுடியாத கொடிய நரகத்திலே வீழ்ந்து துன்புறுவர்.
xxx
விவேக சிந்தாமணி எழுதிய ,பெயர் தெரியாத ஆசிரியர், வேறு ஒரு பட்டியலை நம் முன் சமப்பிக்கிறார்
தந்தையுரை தட்டினவன் தாயுரை இகழ்ந்தோன்,
அந்தமறு தேசிகர்தம் ஆணையை மறந்தோன்,
சந்தமுறு வேதநெறி மாறினவர் நால்வர்,
செந்தழலின் வாயினிடை சேர்வது மெய் கண்டீர்.
பொருள்
தந்தை சொல் மீறி நடந்தவன், தாயின் சொல்லை இகழ்ந்து பின்பற்றாது இருப்பவன், அழிவில்லாத மெய்ஞான குருவின் உபதேசத்தை மறந்தவன், வேதநெறிப்படியான வாழ்க்கையிலிருந்து விலகியவன் ஆகிய நால்வரும் நரகத்தின் வாயிலில் சென்று சேர்வது உண்மை (நிச்சயம்).
xxxx
திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை -6 (written on 23 January 2013)
நரகத்துக்கு போவோர் பட்டியல்
யார் யார் நரகத்துக்குப் போவார்கள் என்ற பட்டியலைத் தருகிறார் அருணகிரிநாதர்:
ஓதுவித்தவர் கூலிகொடாதவர்
மாதவர்க்கு அதிபாதகமானவர்
ஊசலில் கனலாய் எரி காளையர் மறையோர்கள்
ஊர்தனக்கு இடரே செயும் ஏழைகள்
ஆர்தனக்கும் உதாசினதாரிகள்
ஓடி உத்தமர் ஊதிய நாடினர் இரவோருக்கு
ஏதும் இத்தனை தானம் இடாதவர்
பூதலத்தினில் ஓரமதானவர்
ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர்தமை இகழ்வோர்கள்
ஏகசித்த தியானமிலாதவர்
மோகமுற்றிடு போகிதம் ஊறினர்
ஈனர் இத்தனை பேர்களும் ஏழ்நரக உழல்வாரே
பொருள்: குரு தட்சிணை கொடுக்காதவர்கள், தவ வலிமை மிக்க பெரியோர்களுக்கு ஊறுவிளைவிப்போர், காம வெப்பத்தில் நெருப்பாய் எரியும் இளையோர், வேதம் அறிந்த பார்ப்பனர் ஊர்களுக்கு கெடுதி செய்வோர், எல்லோரையும் உதாசினம் செய்து பேசுவோர், உத்தமர்களின் செல்வத்தை ஏமாற்றிப் பறிப்போர், பிச்சை கேட்போருக்கு தானம் இடாதவர், பூவுலகில் பாரபட்சமாகப் பேசுவோர், சிவனையும் விஷ்ணுவையும் கும்பிடுவோரை கேலி செய்வோர், ஒரு முகப் பட்ட மனத்துடன் தியானம் செய்யாதவர்கள், மோகத்தில் மூழ்கி காமத்தில் திளைப்பவர்கள், இன்னர்கள் இத்தனை பேரும் ஏழுவகை நரகங்களில் துன்புறுவார்கள்.
இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு வேண்டுவோர் கௌமாரம்.காம் –இல் திரு கோபாலசுந்தரம் அவர்களின் அற்புதமான மொழிபெயர்ப்பைப் படிக்கவும்.
Xxx
MY OLD ARTICLES ON HELL நரகம், நிரயம், அளறு
புறநானூற்றில் நரகம்! திருக்குறளில் நரகம்!! (Post …
https://tamilandvedas.com › புறந…
18 Nov 2017 — ஒருவனுக்கு நாசத்தை விளைவிக்கும் நரகத்திற்கு மூன்று வாசல்கள் இருக்கின்றன; …
21 வகை நரகங்கள் – மனு எச்சரிக்கை! மநு நீதி நூல்
https://tamilandvedas.com › 21-வக…
·
19 Sept 2018 — ஸ்லோகம் 82 முதல் தலை முடியைத் தொடுதல் பற்றிய விதிகளைச் சொல்லி எவை எவை …
நரகத்துக்கு போவோர் பட்டியல் | Tamil Brahmins …
https://www.tamilbrahmins.com › நர…
நரகத்துக்கு போவோர் பட்டியல் Picture of Skanda/Kartikeya/Murugan in Cambodia (from Wikipedia) திருப்புகழ் …
November | 2017 | Tamil and Vedas | Page 9
https://tamilandvedas.com › 2017/11
18 Nov 2017 — ஒருவனுக்கு நாசத்தை விளைவிக்கும் நரகத்திற்கு மூன்று வாசல்கள் இருக்கின்றன; …
நரக வாசல் – Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › நர…
10 Nov 2018 — ஆக நல்ல வழி, கெட்ட வழி என்பதை எவரும் நினைவிற்கொள்ள வசதியாக ஆன்றோர்கள் …
–subham— tags-நரகம், அளறு, நிரயம் , பட்டியல், விவேக சிந்தாமணி