
Post No. 11,621
Date uploaded in London – – 3 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
ஒரே கருத்தினை மூன்று பெரியார்கள் அழகாகச் சொல்லி இருக்கின்றனர் .
முதலில் காலத்தால் முந்திய கிருஷ்ண பரமாத்மா , பகவத் கீதையில் (6-16) சொன்னதைக் காண்போம் :
नात्यश्नतस्तु योगोऽस्ति न चैकान्तमनश्नतः।
न चातिस्वप्नशीलस्य जाग्रतो नैव चार्जुन॥१६॥
நாத்யஸ்²நதஸ்து யோகோ³ऽஸ்தி ந சைகாந்தமநஸ்²நத:|
ந சாதிஸ்வப்நஸீ²லஸ்ய ஜாக்³ரதோ நைவ சார்ஜுந ||6-16||
அர்ஜுந! = அர்ஜுனா!
அத்யஸ்²நத து யோக³: ந அஸ்தி = மிகைபட உண்போனுக்கு யோகமில்லை.
அநஸ்²நத: ச ஏகாந்தம் ந = உணவற்றோனுக்கும் ஏகாந்த நிலை எய்தாது.
ந ச அதிஸ்வப்நஸீ²லஸ்ய = மிகுதியாக உறங்குவோனுக்குமில்லை.
ஜாக்³ரத: ஏவ ந = மிகுதியாக விழிப்போனுக்கும் அஃதில்லை.
(Gita sloka taken from sangatham.com; thanks.)
அதிகமாகச் சாப்பிடுவோனுக்கும் மிகவும் குறைவாகச் சாப்பிடுவோனுக்கும் மனத்தை ஒருமைப்படுத்தி தியானம் (யோகம்) செய்வது இயலாது . இதே போலத்தான் உறக்கமும். அதிக நேரம் தூங்காதே; குறைந்த நேரம் தூங்காதே.
இது பற்றி ஆதி சங்கரர், ராம கிருஷ்ண பரமஹம்சர் ,டாக்டர் ராதா கிருஷ்ணன், சுவாமி சித்பவாநந்தர் ஆகியோர் சொல்வதைக் காண்பதற்கு முன்னர் வள்ளுவர், திருமூலர் ஆகியோர் செப்பியதை மனதிற்கொள்வோம்..
xxx

மேவிய அன்னத்தால் விளங்கியது இச்சடம்
பாவியே கொன்று பழியுறும் அன்னத்தான்
ஆவின் மிதந் தப்பிலை யுற்று நோயாகும்
காவில்லிவையெல்லாங் கண்டுகொளன்னமே
–திருமந்திரம் , திருமூலர் இயற்றியது
பொழிப்புரை
அன்னத்தினாலே இச்சரீரம் நிலை பெற்றிருக்கிறது பழியைச் செய்கின்ற அன்னமானது , அளவு மீறினால் பாவியைப் போல சரீரத்தில் நோய்களை உண்டாக்கிக் கொல்லும். அளவுக்கு மீறி அதிகமாகச் சாப்பிட்டால் கபநீர் முதலிய பல நோய்களை உண்டாக்கும் . அன்னத்தால் ரக்ஷிப்பும் பக்ஷிப்பும் உண்டாகும் என்று தெரிந்து கொள்வாயாக.
(திருப்புகழ் தா. ப. வேங்கட சுப்பிரமணியன் உரை, திரு மந்திரம் வைத்தியப் பகுதி, திருவாவடுதுறை ஆதீனம், 1957)
Xxxx
வள்ளுவர் மருந்து என்னும் அதிகாரத்தில் பத்து குறள்களில் பத்து கட்டளைகள் இடுகிறார் . மேற்கூறிய விஷயத்தைச் சுருக்கமாக விளம்புகிறார்.
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று –குறள் 941
மணக்குடவர் உரை
உணவும் உறக்கமும் இணைவிழைச்சும் தன்னுடம்பின் அளவிற்கு மிகினும் குறையினும், நூலோரால் எண்ணப்பட்ட வாதமும் பித்தமும் சீதமுமாகிய மூன்றும் நோயைச் செய்யும்.
இதற்கு இரண்டுவித விளக்கங்களை உரைகாரர்கள் தருகின்றனர்.
ஆயுர்வேத நூல்களில் சொல்லப்பட்ட வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றில் எது கூடினாலும் குறைந்தாலும் நோய்களை உண்டாக்கும்.
மற்றோர் விளக்கம் : உணவு அதிகமாகச் சாப்பிட்டாலும் குறைவாகச் சாப்பிட்டாலும் வாதம் , பித்தம், கபம் சம நிலை தவறி உடலில் நோய்களை உண்டாக்கும் .
இதை நாம் கண்கூடாகவும் காண்கிறோம். ஐஸ்க்ரீமையோ, குளிர்ந்த பானங்களையோ தவறான காலத்தில், தவறான அளவில் சாப்பிட்டால் தடுமன் பிடிக்கும்; இருமல் வரலாம் . எதை அதிகம் சாப்பிட்டாலும் அஜீரணம் வரும் ; அதுவே பல நோய்களுக்கு அஸ்திவாரம் போடும்.
Xxx
பகவத் கீதைக்கு (6-16) ஆதிசங்கரர் பாஷ்யம் :
“உணவைத் தன் அளவிற்கு ஏற்ற அளவைக் கடந்து உண்பவனுக்கு , “எது தன் அளவிற்கு ஏற்றதோ , அந்த அன்னம் காப்பாற்றுகிறது ; அது கெடுப்பதில்லை ; அதிகமானது கெடுக்கின்றது ; குறைந்தது காப்பாற்றுவதில்லை” (சதபத பிராஹ்மணம்) என்னும் சுருதியினால் உணவின் ஒழுங்கைக் கண்டுகொள்க. ஆதலால் யோகியானவன் தன் அளவிற்கேற்ற அன்னத்தைக் காட்டினும் அதிகமாக, குறைவாக உண்ணக்கூடாது ; அல்லது வேறு விதமாக உரையிடலாம் . யோகியானவன் யோக சாஸ்திரத்தத்திற் கூறிய அந்த அளவைக் காட்டிலும் அதிகமாக உண்பவனுக்கு யோகம் இல்லை.
“அன்னத்திற்கும் கறி முதலானவற்றுக்கும் பாதி (வயிறு);
ஜலத்திற்கு மூன்றாவது (கால்பாகம்);
காற்று ஸஞ்சரிப்ப தற்காக நான்காவதை மிச்சப்படுத்தி வைக்கவேண்டும் (யோக சாஸ்திரம் )என்று கூறப்பட்டுள்ளது.
(1905ம் ஆண்டில் பெரியகுளம் த .சுந்தரராஜ சர்மா எழுதிய சங்கர பாஷ்ய மொழிபெயர்ப்பை 1977ம் ஆண்டில், திருக்கோவிலூர் ஞானாநந்த தபோவன சந்நியாசிகள் இரண்டாம் பதிப்பாக வெளியிட்டுள்ளனர் )
மேற் கூறிய சங்கர பாஷ்யத்தில் நமக்கு இரண்டு அற்புதமான விஷயங்கள், ஆதிசங்கரர் வாய்மூலம் கிடைக்கிறது.
(1). கீதையும், குறளும் திருமந்திரமும் சொன்ன கருத்து அதற்கு முன்னரே சதபத பிராஹ்மண நூலில் உள்ளது என்பது ஆதிசங்கரர் சொன்னதால் நமக்குத் தெரிகிறது.
(2).”சாப்பிடும்போது வயிற்றில் பாதி அளவு சாப்பிட்டுவிட்டு கால் பகுதியை தண்ணீருக்கும் மீதி பகுதியை வெற்றிடமாகவும் விட வேண்டும்” என்ற யோக சாஸ்திர கருத்து, ஆதிசங்கரர் காலத்துக்கும் முன்னரே இருந்துள்ளதையும் சங்கரர் நமக்கு காட்டுகிறார்..
xxx

வீணையும் உடலும்
ராமகிருஷ்ண பரமஹம்சர் பகர்ந்த விஷயத்தை சித்பவானந்த சுவாமிகள் பகவத் கீதைப் பேருரையில் தருகிறார் :
அர்ஜுனா ! அளவு கடந்துண்பவனுக்கு யோகம் இல்லை. அறவே உண்ணாதவனுக்கும் அஃதில்லை . மிகைபட உறங்குபவனுக்கும் மிகைபட விழித்திருப்பவனுக்கும் யோகம் இல்லை.(6-16)
வீணையின் தந்தியை அளவுக்கு மீறி இறுக்கினால் அது உடைந்து போம். மிக இளக்கினால் அதில் ஓசை வராது . உடலோ வீணை போன்றது . உணவு, உறக்கம் இவைகளில் மிகைப்படுதலும் குறைபடுதலும் கூடாது அந்தந்த சரீரத்துக்கேற்ற உணவு எது , அளவு எது என்பதை அவரவரே தீர்மானிக்கவேண்டும்
பகற்பொழுதில் திருப்தியாக போஜனம் செய். ஆனால் இரவில் உட்கொள்ளும் உணவு குறைவாகவும் இலேசாயுமிருக்கட்டும்.
சரீரத்துக்கு உஷ்ணத்தையும் மனதுக்கு ஸஞ்சலத்தையும் எந்த உணவு கொடுக்காதோ அந்த உணவைத்தான் சாதகன் உட்கொள்ள வேண்டும் – ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் .
என்று ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் 6-16 ஸ்லோகத்துக்கான உரையை முடிக்கிறார்.
Xxx
டாக்டர் ராதாகிருஷ்ணன், இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தவர். அவர் இந்த 6-16 சுலோகத்துக்கு எழுதிய உரையில் புகல்வது யாதெனில்,
” மிருக உணர்வுகளிலிருந்து நாம் விலகி இருக்கவேண்டும்; எல்லா விஷயங்களிலும் மிக அதிகம் , மிகக் குறைவு என்பதைத் தவிர்க்க வேண்டும். பெளத்தர்களின் மத்திய வழிமுறையையும் அரிஸ்டாட்டில் சொன்ன தங்கம்போன்ற வழி முறையையும் இங்கே ஒப்பிட்டுப்பார்க்கலாம்”.
MIDDLE WAY OF BUDDHISTS:
The Middle Way as well as “teaching the Dharma by the middle” are common Buddhist terms used to refer to two major aspects of the Dharma, that is, the teaching of the Buddha. The first phrasing, refers to a spiritual practice that steers clear of both extreme asceticism and sensual indulgence
Xxx
GOLDEN MEAN OF ARISTOTLE
Moral behaviour is the mean between two extremes – at one end is excess, at the other deficiency. Find a moderate position between those two extremes, and you will be acting morally.
Xxx Subham xxxx
Tags- மித உணவு, அதிகஉணவு, யோகம், தியானம், கீதை 6-16, திருமந்திரம், குறள்