
Post No. 11,625
Date uploaded in London – – 4 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
ஆண்மி கினாணாம் பெண்மிகிற் பெண்ணும்
பூணு மிரண் டொன்றிப் பொருந்திலலியாகும்
தான் மிகவாகிற்றரணி முழுதாளும்
பான்மை மிகுந்திடிற் பாய்ந்ததுமில்லையே
பொழிப்புரை
சுக்கிலம் மிகுதியானால் ஆணாகவும் , சுரோணிதம் மிகுதியானால் பெண் ணாகவும்,
சுக்கில சுரோணிதம் சமமாகக் கலந்து பொருந்தினால் அலியாகவும் , சுக்கிலம் அளவுமீறி அதிகமானால்
பூமண்டலம் முழுதும் ஆளுகின்ற சக்ரவர்த்தியாகவும் ஆகும்; சுக்கிலம் மிகக்குறைந்து சுரோணிதம் அதிகமானால் கரு உற்பத்தியாகமாட்டாது.
Xxxx
I have found the following from another book-
(வேறு ஒரு பொழிப்புரையை கீழே காண்க:–
திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் வெளியிட்ட திருமந்திர உரையில் காணப்படும் பொழிப்புரை :
காதலரிருவரும் மருவிப் பொருந்துங்கால் ஆண் ஆகிய வலப்பால் மூச்சு மிகுந்து சென்றால் கருவுற்றுப் பிறக்குமுயிர் ஆணாகப் பிறக்கும். இடப்பால் மூச்சு மிகுந்து சென்றால் பிறக்குமுயிர் பெண் ணாகப் பிறக்கும்.இரண்டு மூக்கின் வழியாகவும் வரும் மூச்சு ஒத்திருந்தால் பிறக்குமுயிர் அலியாகப் பிறக்கும். ஆள்வினை முயற்சியில் கருத்து மிகுதியாகவிருந்தால் பிறக்குமுயிர் சிறப்பாகப் பிறக்கும். அச்சிறப்புடன் பிறந்த உயிர் ‘உழையார் புவனம் ஒரு மூன்று’மொருங்குடன் ஆளும் அகப்பயிற்சியால் விந்து கட்டுப்பட்டு திண்மை ஏற்படின் மருவி இன்புறினும் விந்து வெளிச் செல்லு வதில்லை ஆதலால் பாய்ந்ததும் இல்லை என்றனர். பண்ணவம் (திண்மை) என்பதன் திரிபு பாணவம்) இந்தப்பதிப்பில் கடைசி வரி – பாணவமிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே என்று உள்ளது.
Xxxx

ஸ்த்ரீகள் ஒவ்வொரு முறையும் ருதுவாகும்போது (மாதவிலக்கு), அவர்களுக்கு ஆர்தவம் வெளியானது முதல் பனிரெண்டு நாட்களும் ருது காலமாம்.. அவற்றுள் முதலி ல் மூன்று நாட்களும் , பிறகு பதினோராவது தினமும் அதற்குப் பிறகும் கூட்டுவதற்குத் தகாதவைகள்.ஏனைய நாட்களில் சேருவதால் பயனுண்டாகும்
5,7, 9, 11 இந்த ஒற்றைப்பட்ட நாட்களில் கூடுவதால் அவர்கட்கு இயற்கையிலேயே சுரோணிதம் , அந்த நாட்களில் அதிகரித்திருக்கிறது ஆதலால் பெண் குழந்தையும் 4,6,8,10, 12 இந்த நாட்களில் சுரோணிதம் குறைவதால் சுக்கிலாதிக்கியத்தால் ஆண் குழந்தையும் பிறக்கும்- —-அஷ்டாங்க ஹிருதயம்.
மேற்கூறிய தகவல் உள்ள புஸ்தகம்:
(திருப்புகழ் தா.ப. வேங்கட சுப்பிரமணியன் உரை, திருமந்திரம் வைத்தியப் பகுதி, திருவாவடுதுறை ஆதீனம், 1957)
XXXX
மனு நீதி நூல் என்னும் மானவ தர்ம சாஸ்திரம் சொன்னதையே திருமூலரும் செப்பியுள்ளார்.
(எனது பழைய கட்டுரைகளில் மனு ஸ்ம்ருதி ரகசியங்களைக் காண்க)

ஆண் குழந்தை பெற வழி | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ஆ…
14 Jun 2018 — ஆண் குழந்தை பெற வழி! SEX செக்ஸ் பற்றி மநு (Post No.5109). மூன்றாம் அத்யாயத் தொடர்ச்சி.
ஆண்களுக்கும் குழந்தை – Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ஆ…
23 May 2017 — ஆண்கள் குழந்தை பெற முடியுமா? ஆமாம், பெற முடியும் என்று மஹாபாரதமும் …
ஆண்களுக்கு குழந்தை | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ஆ…
26 Mar 2014 — ஆண்கள் குழந்தை பெற்றதாக மஹாபாரதத்தில் இரண்டு மூன்று கதைகளில் வருகிறது.
குழந்தை பிறக்காதது ஏன்? (Post No7472)
https://tamilandvedas.com › குழந…
·
19 Jan 2020 — அத்தகைய ஒரு கட்டுரை குழந்தை பிறக்காமல் இருக்க என்ன காரணங்கள் என்பதை புல்லட் …
குழந்தை பிறக்க செலீனீயம் வேண்டும்! (Post No.5374)
https://tamilandvedas.com › குழந…
29 Aug 2018 — ஆண்கள் விந்துக்களின் வீரியம் குறைவது ஏன்? உடலும் வாயும் உள்ளிப்பூண்டு (GARLIC) …
ஆண் குழந்தை மதிப்பு | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ஆ…
26 Oct 2019 — மநு நீதிச் சோழன். Written by LONDON SWAMINATHAN. swami_48@yahoo.com. Date: 26 OCTOBER 2019. British Summer Time uploaded in …
Missing: பெற | Must include: பெற
Medicine | Tamil and Vedas | Page 2
https://tamilandvedas.com › category
22 Jan 2020 — ஆனால் ஆண் விந்து உற்பத்தி 40 வயதுக்குப் … சிலர் குழந்தை பெற முயற்சிக்கும் …
–subham—
Tags- ஆண் குழந்தை, பெற ,திருமூலர், ,வழி,