
Post No. 11,624
Date uploaded in London – – 4 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
அறப்பளீசுர சதகம் 48. நன்னகர்
வாவிபல கூபமுடன் ஆறருகு சேர்வதாய்,
மலைகாத வழியில் உளதாய்
வாழைகமு கொடுதெங்கு பயிராவ தாய்ச், செந்நெல்
வயல்கள் வாய்க் கால்க ளுளதாய்,
காவிகம லம்குவளை சேரேரி யுள்ள தாய்க்,
கனவர் த்த கர்கள்ம றைவலோர்
காணரிய பலகுடிகள் நிறைவுள்ள தாய், நல்ல
காவலன் இருக்கை யுளதாய்த்,
தேவரா லயம் ஆடல் பாடல் அணி மாளிகை
சிறக்கவுள தாய்ச்சற் சனர்
சேருமிடம் ஆகுமோர் ஊர்கிடைத் ததில் அதிக
சீவனமு மேகி டைத்தால்
ஆவலொ டிருந்திடுவ தேசொர்க்க வாசமென்
றறையலாம்! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அருமை ….. தேவனே!, பல வாவி கூபமுடன் அருகுஆறு
சேர்வதாய் – பல பொய்கைகளும் கிணறுகளும் அருகில் ஆறும்
இருப்பதாய், காதவழியில் மலைஉளதாய் – காதவழித் தொலைவில் மலையை உடையதாய், வாழை கமுகொடு தெங்கு பயிராவதாய் – வாழையும் கமுகும் தென்னையும் பயிராகும் வளமுடையதாய், செந்நெல் வயல்கள்
வாய்க்கால்களும் உளதாய் – நல்ல நெல்விளையும் வயல்களும்
வாய்க்கால்களும் உடையதாய்; காவி கமலம் குவளைசேர் ஏரி உள்ளதாய் – நீலமும் தாமரையும் குவளையும் மலர்ந்த ஏரியை உடையதாய், கனவர்த்தகர்கள் மறைவலோர் காண்அரிய பலகுடிகள் நிறைவு உள்ளதாய் –
பெரிய வணிகரும் மறையவரும் மற்றும் காண்பதற்கு இனிய பலவகைக் குடிகளும் நிறைந்ததாய், நல்ல காவலன் இருக்கை உளதாய் – நல்ல அரசன் அரண்மனை உடையதாய்
(தலைநகரமாய்), தேவர் ஆலயம் ஆடல்பாடல் அணிமாளிகை சிறக்க
உளதாய் – வானவர் கோயிலும் ஆடலாலும் பாடலாலும் அழகுறும்
மாளிகைகள் சிறந்துள்ளதாய், சற்சனர் சேரும் இடம் ஆகும் ஓர் ஊர்
கிடைத்து – நல்லோர் உறையும் இடமுடைய ஒரு நகரம் வாய்த்து, அதில்
அதிக சீவனமும் கிடைத்தால் – அங்கு நன்றாக வாழ்க்கைக்கு வழியும் பொருந்திவிட்டால் ஆவலோடு இருந்திடுவதே சொர்க்கவாசம் என்று அறியலாம் – விருப்பத்துடன் இருப்பதே சுவர்க்க வாழ்வு என்று இயம்பலாம்.
xxxx
ஒப்பிடுக
நாடு என்ற தலைப்பில் திருக்குறளிலும் நல்ல தேசம் எப்படி இருக்கும் என்று வள்ளுவன் காட்டுகிறான்
4. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு
It is country which is free from
Fierce famine, plague and foemen’s harm. 734
பசி, நோய், பகை இல்லாமல் ஆளப்படும் இடமே நல்ல நாடு
8. பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.
Rich yield, delight, defence and wealth
Are jewels of lands with blooming health. 738
நோயின்மை, நல்ல செல்வம், விளைச்சல், மக்களின் மகிழ்ச்சி, நல்ல பாதுகாப்பு ஆகிய ஐந்தும் இருந்தால் அது நல்ல நாடு.
Xxx

மகாகவி பாரதியார்,
காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும், – அங்கு
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்கு
கேணியருகினிலே – தென்னைமரம்
கீற்று மிளநீரும்.
பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே – நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேணும், – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.— : மகாகவி பாரதியார்.
Xxxx
வந்தே மாதரம்!
வங்காள மொழியில் ,பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தேமாதரம் கீதத்தை பாரதியார் இரு முறை தமிழில் மொழிபெயர்த்தார். அதில் பாரதத்தின் இயற்கை வளம் அருமையாக வருணிக்கப்பட்டுள்ளது
ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ ஸீதளாம்
ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம்!
வந்தே மாதரம்!
1.இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனி நறு மலயத் தண் காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
1.நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்
குளிர்பூந்தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்து நன்கிலகுவை வாழிய அன்னை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
***
ஸுப்ர ஜ்யோத்ஸ்னாம் புலகித யாமினீம்
புல்லகுஸுமித த்ருமதள சோபினீம்
ஸுஹாசினீம் ஸுமதுர பாஷினீம்
ஸுகதாம் வரதாம் மாதரம்!
வந்தே மாதரம்!
2.வெண்ணிலாக் கதிர் மகிழ் விரித்திடும் இரவினை!
மலர்மணிப் பூத் திகழ் மரன் பல செறிந்தனை!
குறுநகை இன்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம், வரம் பல நல்குவை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
2.தெண்ணிலவதனில் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளிரும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை, இன்பமும் வரங்களும் நல்குவை.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

xxx
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
கோவில் இல்லாவூரில் குடியிருக்க வேண்டாம்
xxxxxxxxxxxxxxxxxxxxxx
அறப்பளீசுர சதகம் 49. தீநகர்
ஈனசா திகள்குடி யிருப்பதாய், முள்வேலி
இல்லில் லினுக்கு முளதாய்,
இணைமுலை திறந்துதம் தலைவிரித் திடுமாதர்
எங்கும்நட மாட்டம் உளதாய்க்,
கானமொடு பக்கமாய் மலையோர மாய் முறைக்
காய்ச்சல்தப் பாத இடமாய்,
கள்ளர்பயமாய், நெடிய கயிறிட் டிறைக்கின்ற
கற்கேணி நீருண் பதாய்.
மானமில் லாக்கொடிய துர்ச்சனர் தமக்கேற்ற
மணியம்ஒன் றுண்டா னதாய்,
மாநிலத் தோர்தலம் இருந்ததனில் வெகுவாழ்வு
வாழ்வதிலும், அருக ரகிலே
ஆனநெடு நாள்கிடந்தமிழ்தலே சுகமாகும்
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அமலனே – குற்றம் அற்றவனே!, அருமை ………. தேவனே!,
ஈன சாதிகள் குடியிருப்பதாய் – இழிந்த சாதியினர் வாழ்வதாய்,
இல்இல்லினுக்கு முள்வேலி உள்ளதாய் – வீடுதோறும் முள்ளால் வேலியிருப்பதாய், இணைமுலை திறந்தும் தலைவிரித்திடும் மாதர் எங்கும்
நடமாட்டம் உளதாய் – மார்பிலே துணி விலகியவாறு தலைவிரித்துத் திரியும் பெண்கள் எங்கும் உலாவும் நிலையினதாய், ஒருபக்கம் கானமாய் –
ஒருபக்கம் காடுடையதாய், மலைஓரமாய் – மலையோரமானதாய்,
முறைக்காய்ச்சல் தப்பாத இடமாய் – முறைக்காய்ச்சல் எப்போதும்
வருமிடமாய், கள்ளர் பயமாய் – திருடரால் அச்சமாய், நெடிய கயிறு இட்டுஇறைக்கின்ற கல்கேணி நீர் உண்பதாய் – நீண்ட கயிற்றைக் கட்டி
இறைக்கப்படும் கல்லால் அமைந்த கிணற்றுநீர் உண்ணு மிடமாய், மானம்இலாக் கொடிய துர்ச்சனர் தமக்கு ஏற்றம் மணியம் ஒன்று உண்டானதாய் –
மானம் அற்ற மிகக் கொடியவருக்குத் தக்க தலைவனையுடையதாய், ஓர்தலம் மாநிலத்து இருந்து அதனில் வெகுவாழ்வு வாழ்வதினும் – ஓர் ஊர்
இப் பெரிய உலகில் இருந்து, அவ்வூரிலே பெருக வாழ்வதினும்,
அருநரகிலே ஆன நெடுநாள் கிடந்து அமிழ்தலே சுகம் ஆகும் – கொடிய
நரகத்தில் உண்டான நீண்டகாலம் கிடந்து அதனில் முழுகிப்போதலே இன்பம் ஆகும்.
(வி-ரை.) ஒருபக்கம் கானும் தீய விலங்குகளும் திருடர்களும்
வாழ்வதால் ஊரில் வாழ்வோர்க்குக் கலக்கமுண்டாகும். மலைஓரம்,
வெப்பமும் முறைக்காய்ச்சலும் தரும். ‘கொடுங்கோல்’ மன்னர் வாழும்
நாட்டின் – கடும்புலி வாழும் காடு நன்றே’ என்பதால், ‘துர்ச்சனர் தமக்கு
ஏற்ற மணியம்’ உடைய நகர் நரகத்தினுங் கொடியது ஆயிற்று.
நெடிய……..கற்கேணி – நீர்வளம் அற்றதைக் குறிக்கும். முள்வேலியும்
தலைவிரித்திடும் மாதர் நடமாட்டமும் நகரின் அழகைக் கெடுப்பன.
(க-து.) இத்தகைய நகரில் வாழ்வு கூடாது.
இதற்கு மும்பை நகரிலுள்ள தாராவி சேரிப்பகுதி , இத்தாலிய மபியா நகரங்கள் முதலியவற்றை ஒப்பிடலாம்.

ஆயினும் மொத்தத்தில் இந்தியாவை சொர்க்கபூமியாக — குறிப்பாக குப்தர் கால இந்தியாவை சொர்க்க பூமியாகவே பாஹியான் போன்ற யாத்ரீகர்கள் வருணித்துள்ளனர். தேவர்களும் பாரத போமியில் பிறக்க ஆசைப்படுவதாக புராணங்கள் புகலும் ; புகழும் . அதை பாரதியார் அழகாக மொழி பெயர்த்துள்ளார் :
பாரத நாடு பார்க்கெலாம் திலகம்;
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!
வானக முட்டும் இமயமால் வரையும்
ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும்
காத்திடு நாடு! கங்கையும் சிந்துவும் 30
தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும்
இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும்
உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு!
பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க
மைந்நிற முகில்கள் வழங்கும் பொன்னாடு! 35
தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர்
ஆவலோ டடையும் அரும்புகழ் நாடு!
ஊனமொன்றறியா ஞானமெய் பூமி,
வானவர் விழையும் மாட்சியார் தேயம்!
பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ? 40
மொகலாயர்கள் வெள்ளைக்காரர்கள் கீழிருந்த கெட்ட நாட்டையும் வருணிக்கிறார்
நீரதன் புதல்வர் நினைவகற் றாதீர்!
தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்
பேய்த்தகை கொண்டோர் பெருமையும் வன்மையும்
ஞானமும் அறியா நவைபுரி பகைவர்
வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல் 45
இந்நாள் படை கொணர்ந்து இன்னல்செய் கின்றார்!
ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்
பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்
மாதர்கற் பழித்தலும் மறைவர் வேள்விக்கு
ஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்! 50
சாத்திரத் தொகுதியைத் தாழ்த்துவைக் கங்ன்றார்
கோத்திர மங்கையர் குலங்கெடுக் கின்றார்
எண்ணில துணைவர்காள்! எமக்கிவர் செயுந்துயர்
கண்ணியம் மறுத்தனர், ஆண்மையுங் கடிந்தனர்,
பொருளினைச் சிதைத்தனர், மருளினை விதைத்தனர்; 55
திண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர்,
பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர்,
சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்,
வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர்—- பாரதியார்
—subham—
Tags–நல்ல நகரம், கெட்ட நகரம், பாரதியார், அம்பலவாணர் , வருணனை