
Post No. 11,626
Date uploaded in London – – 4 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
சாந்தோக்ய உபநிஷத் முக்கியமான ஒரு உபநிஷத். மொத்தம் 108 முதல் 120 வரை உபநிஷத்துக்களின் பட்டியல் நீண்டாலும் காலத்தால் பழமையான பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷத்துக்கு அடுத்த நிலையில் நிற்பது சாந்தோக்யம்தான் ; சந்தஸ் என்றால் செய்யுள்; அந்த நடையில் இருப்பதாலும் சாமவேதத்தில் சந்தோகா என்ற பாடல் பாடப்படுவதாலும் பெயர் கிடைத்த நூல் இது. ஆதி சங்கரரால் உரை எழுதப்பட்ட முக்கிய உபநிஷத்துகளில் இதுவும் ஒன்று.
பசி வந்தால் பத்தும் போம் என்ற பாடலை நாம் அனைவரும் அறிவோம் . பல அவ்வையார்களில் , தற்கால அவ்வையார் பாடிய பாட்டு அது . சில நூறு ஆண்டுகளே பழமை உடைத்து. ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இந்த உபநிஷத்தில் பட்டினியால் உடலில் ஏற்படும் மாறுதலை வருணித்திருப்பது நமக்கு வியப்பை ஏற்படுத்தும்
உபநிஷத் முழுவதும் விஞ்ஞான வகுப்பில் நடக்கும் பரிசோதனைகள் (Practical Experiments in Science Lab.s) போல பல விஷயங்கள் வரும். ஆலம் விதையைக் கொண்டுவரச் சொல்லி. இந்த கடுகுக்கும் மேல் சிறிதான விதையிலிருந்து எப்படி பிரம்மாண்டமான மரம் வந்தது என்று ஒரு ரிஷி வினவுவார். அதன் மூலம் பிரம்மத்தின் பெருமையை விளக்குவார். மற்றும் ஒரு ரிஷி மகனே ஒரு கோப்பையில் தண்ணீர் கொண்டுவா; இன்னொரு கையில் ஒரு பிடி உப்பையும் கொண்டு வா என்பார். அதை நீரில் போடச்சொல்லி நீர் என் வழியவில்லை, அந்த உப்பு எங்கே சென்றது என்று வினவி இறைவன் பற்றிய உணமையைச் சொல்லுவார். பிற்கலத்தில் சாக்ரடீஸ் இதே முறையைப் பின்பற்றினார். இந்து மதம் பற்றி அறியாத வெள்ளைக்காரர்கள், அதற்கு சாக்ரடீஸ் முறை SOCRATIC METHOD என்று நாமகரணம் செய்தனர்.
அது போல சுவேத கேது என்ற ரிஷி ஒரு எக்ஸ்பெரிமெண்ட் / Experiment பரிசோதனை செய்கிறார். மகனுக்கு உணவே கொடுக்காமல் தண்ணீர் மட்டும் 15 நாட்களுக்குக் கொடுத்துவந்தார் . உணவு இல்லாவிடில் எல்லா அறிவும் ஒடுங்கிவிடும் என்பதை நிரூபித்துக் காட்டுவதற்கே அப்படிச் செய்தார் என்று சாந்தோக்ய உபநிஷத் கூறுகிறது .
15 நாட்களுக்கு தண்ணீர் மட்டுமே சாப்பிட்டு வந்த மகன் உத்தாலகனை, வேதத்தை ஓதும்படி சுவேதகேது கூறுகிறார் . அவனால் முடியவில்லை.. பின்னர் சாப்பிட்டுவரும்படி சொல்கிறார். அப்போது அவனால் வேதத்தை ஒப்புவிக்க முடிந்தது. பசி வந்தால் பத்தும் பறந்தும் போம் என்பதை பிராக்டிகல் எக்ஸ்பெரிமென்ட Practical Experiment மூலம் 3000 ஆண்டுகளுக்கு முன்னமே காட்டியது சாந்தோக்ய உபநிஷத்.
Xxxx

வள்ளலார் ராமலிங்க சுவாமிகள்
அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள், பசியின் கொடுமையை அழகாக விரித்துரைக்கிறார்:-
சீவர்களுக்குப் பசி அதிகரித்த காலத்தில்,
சீவஅறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது –
அது மயங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகின்றது –
அது மறையவே புருடதத்துவம் சோர்ந்து விடுகின்றது –
அது சோரவே பிரகிருதிதத்துவம் மழுங்குகின்றது –
அது மழுங்கவே, குணங்களெல்லாம் பேதப்படுகின்றன –
மனம் தடுமாறிச் சிதறுகின்றது –
புத்தி கெடுகின்றது –
சித்தம் கலங்குகின்றது –
அகங்காரம் அழிகின்றது –
பிராணன் சுழல்கின்றது –
பூதங்களெல்லாம் புழுங்குகின்றன –
வாத பித்த சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றன –
கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது –
காது கும்மென்று செவிடுபடுகின்றது –
நா உலர்ந்து வறளுகின்றது –
நாசி குழைந்து அழல்கின்றது –
தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது –
கை கால் சோர்ந்து துவளுகின்றன –
வாக்குத் தொனிமாறிக் குளறுகின்றது –
பற்கள் தளருகின்றன –
மலசலவழி வெதும்புகின்றது –
மேனி கருகுகின்றது –
ரோமம் வெறிக்கின்றது –
நரம்புகள் குழைந்து நைகின்றன –
நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன –
எலும்புகள் கருகிப் பூட்டுகள் நெக்குவிடுகின்றன –
இருதயம் வேகின்றது – மூளை சுருங்குகின்றது –
சுக்கிலம் வெதும்பி வற்றுகின்றது –
ஈரல் கரைகின்றது –
இரத்தமும் சலமும் சுவறுகின்றன –
மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றது –
வயிறு பகீரென்றெரிகின்றது –
தாப சோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன –
உயிரிழந்து விடுவதற்கு மிகவுஞ் சமீபித்த அடையாளங்களும் அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன.
பசியினால் இவ்வளவு அவத்தைகளும் தோன்றுவது சீவர்களுக்கெல்லாம் பொதுவாகவேயிருக்கின்றது.
இவ்வளவு அவத்தைகளும் ஆகாரங் கிடைத்தபோது உண்டு பசி நீங்க நீங்குகின்றன. அப்போது தத்துவங்களெல்லாம் தழைத்து உள்ளங் குளிர்ந்து அறிவு விளங்கி அகத்திலும் முகத்திலும் சீவர்களையும் கடவுள்களையுந் துளும்பி ஒப்பில்லாத திருப்தியின்பம் உண்டாகின்றது. இப்படிப்பட்ட இன்பத்தை உண்டுபண்ணுகின்ற புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்லலாம்? இந்தப் புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியர்களை எந்தத் தெய்வத்துக்குச் சரியென்று சொல்லலாம்? எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுளம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும். இதனால் நரக வேதனை சனனவேதனை மரண வேதனை என்கின்ற மூன்று வேதனைகளுங் கூடி முடிந்த வேதனையே பசிவேதனை என்றும், அகம் புறம் நடு கீழ் மேல் பக்கம் என்கிற எவ்விடத்தும் நிறைந்து எக்காலத்தும் வேறுபடாத மோக்ஷ இன்பமே ஆகாரத்தினாலுண்டாகும் திருப்தியின்பம் என்றும் அறியப்படும்.
உணவு பற்றி ஏ கே செட்டியார் தொகுத்து, டிவிஎஸ் நிறுவனத்தார் 1967ம் ஆண்டில் வெளியிட்,ட புஸ்தகத்திருந்து எடுக்கப்பட்ட விஷயம் இது
Xxx
பசி வந்திடப் பத்தும் பறந்து போம்:
இதை பசி வந்திட பத்தும் பறந்து போம் என்ற அவ்வையாரின் நல்வழிப் பாடலுடம் ஒப்பிடுவோம்:
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பத்தும்பறந்து போம் — நல் வழி
மானம், குலம், கல்வி, வலிமை, அறிவு, தானம், தவம், உயர்வு, தாளாண்மை/முயற்சி, காமம்– பறந்து போகும்
Starvation destroys these ten: honour, dignity,learning, honesty, knowledge liberality, nobility, penance, application to business, and the love of women, whose tongue utters words as sweet as honey.
NAL VAZI- PART 2 – Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › nal…
29 Nov 2018 — மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை – தேனின்
Xxx subham xxxx
TAGS-பசி , உபநிஷத், அவ்வையார், வள்ளலார் பசி வந்திடப் பத்தும்பறந்து போம் , நல்வழி