அரிசிச் சோறு ஜிந்தாபாத் (வாழ்க)- ராஜாஜி (Post No.11,629)

Gandhiji and Rajaji

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,629

Date uploaded in London – –  5 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

அவரவர்க்கு சிறு வயது முதலே அம்மா கையால் சாப்பிட்ட உணவே அமிர்தமாகும். நம்முடைய மனமும் உடலும் அதற்குத்தக அமைந்து விடுகிறது. தமிழனுக்கு இட்லி சாம்பார், ரசம் வடை, பொங்கல் , தோசை, உப்புமா வேண்டும். ஆந்திராக்காரர்களுக்கு கோங்கூரா சட்னி, ஊறுகாய் வேண்டும். மலையாளிகளுக்கு தேங்காய் இல்லாத சமையல் பிடிக்காது . இதுபோல இலங்கையர், வங்காளிகளுக்கு  மீ ன்  இல்லாத உணவு, உணவே இல்லை.. வெளிநாட்டோருக்கோ, முஸ்லீம்களுக்கோ  மாமிசம் இல்லாத உணவைக் கற்பனையும் செய்து பார்க்க முடியாது.ஒவ்வொரு நாளும் கொல்லப்படும் பிராணிகளின் எண்ணிக்கை கோடி கோடியாகும் .நிற்க. இரண்டு சுவையான சம்பவங்களில் அரிசிச் சோற்றுக்கு ஏற்பட்ட கெளரவத்தையும் அவமானத்தையும் காண்போம்..

ராஜாஜி , மனித வர்க்கத்தின் தூதராக அமெரிக்காவுக்குச்  சென்றபொழுது , அமெரிக்க அரசாங்க  உயரதிகாரி ஒருவர் ராஜாஜிகுத் தம் வீட்டில் இட்லியும் சட்னியும் வழங்கினார்.. நன்றாக இருக்கிறது என்று கூறி அதனைச் சுவைத்த ராஜாஜி, உலகம் சுருங்கிவிட்டது (The world has become  smaller ) என்று கூறினார்.

xxx

சுவீடனுக்குச் சென்ற உணவு மந்திரி சி.சுப்ரமணியம் , நான் சென்ற சில நாடுகள் என்ற புஸ்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: “அன்றிரவு சாப்பிட்டபொழுது எனக்கு நம் ஊரில் இருப்பதாகவே தோன்றியது. எல்லாம் நம் ஊர் சமையல்;  ரசம், சாம்பார் வகையறாக்கள்.அதைவிட மகிழ்ச்சிகரமான விஷயம் , மறுநாள் காலை சிற்றுண்டிக்கு இட்லி கிடைத்ததுதான் அடேயப்பா ! ஒரு மாதம் இட்லியே காணாமல் இருந்துவிட்டு, அன்று அதை ருசித்தது எப்படி இருந்தது தெரியுமா ? தேவாமிருதம் போங்கள் !

Xxx

சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பது தமிழ்ப் பழமொழி (சோற்றுக்குப் பின்னர்தான் சொக்கனும் மீனாட்சியும் என்பது மதுரைப் பழமொழி )

 xxx

Patel and Gandhi

 அரிசிச் சோறு மர்தாபாத் (ஒழிக)- மஹாத்மா காந்தி

அரிசி உணவு சம்பந்தமாக காந்தியடிகளுக்கும் வல்லபாய் பட்டேலுக்குமிடையே நடந்த சம்பாஷணையை மகாதேவ தேசாய் எழுதியுள்ளார். .ஏரவாடாச் சிறைச்சாலையில் அரிசியின் மேன்மை குறித்து குஜராத்தி பத்திரிகை ஒன்றில் வந்த கட்டுரையை படேல்  படித்தார் . அதற்கு காந்தி  அடிகள் ‘அரிசி  உணவை அதிகம் உண்ணக்கூடாது . அதில் ஊட்டச் சத்து குறைவு’ என்று  கூறினார் .

அரிசி உண்ணும் ஜப்பானியர் , மாமிசம் உண்ணும் அமெரிக்கர், ஆங்கிலேயரைவிட வலிமை உள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்ற வாதத்தை வல்லபாய் படேல் படித்தார்.

உடனே காந்தி  அடிகள், ஜப்பானியர்கள் அரிசியை மட்டும் உண்பவர்கள் அல்லர். அவர்களுடைய முக்கிய உணவு மீன், மாமிசம் முதலியவை. அரிசி , இரண்டாவதுதான். அதைப்போலவே தான் வங்காளத்திலும் மலபாரிலும் உள்ளவர்கள்  மீனை முக்கிய உணவாகவும் அரிசியை இரண்டாவது உணவாகவும் கொள்கிறார்கள் . அரிசி ஒன்றையே சாப்பிடுபவர்கள் பீஹாரிகள்தான். அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று நீங்களே பாருங்கள்’ என்று கூறினார் .

பாஞ்சாலத்தைத் தவிர இந்தியா முழுவதும் சாதாரண மக்கள் முக்கியமாக எந்தப் பொருட்களைக் கொண்டு உயிர் வாழ்கிறார்களோ , அவை ஊட்டச் சத்து போதாதவை என்பது காந்தியடிகள் கருத்து .

Xxx

காஞ்சி பரமாச்சாரிய சுவாமிகள் (1894-1994) கருத்து

பண்டைக் காலத்தில் நீர்ப்பாசனம் இல்லாத இடங்களில் நிம்மதியோடு கர்மாநுஷ்டானம் செய்து வந்தவர்கள் கூட ‘வைச்வதேவம் ‘ என்னும் அனுஷ்டானத்திற்கு மாத்திரம் , சிறிதளவு பச்சரிசியை வைத்துக்கொண்டு, ஆகாரத்திற்கு புஞ்சை தானியங்களால் ஆகிய களி , கூழ் , கஞ்சி முதலியவற்றை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார்கள் . மீண்டும்

எல்லோரும்  புழுங்கல் அரிசியையும் அத்துடன் நவதானியங்களையும்  அதிகம்  சேர்த்து சாப்பிட ஆரம்பிப்பது நலம் . இது புஷ்டியான ஆகாரம். அரிசி விளையும் இடங்களில் உள்ளவர்களும், நவதானியங்களைச் சேர்த்து சாப்பிடவேண்டும்  என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஆசார்ய சுவாமிகள் கூறியுள்ளார்..

xxxx

வடக்கே  கோதுமை சாப்பிடு பவர்களைக் காட்டிலும் தென்னிந்தியாவில் அரிசி உண்பவர்களிடையே ஊட்டச் சத்து அபாயமான அளவுக்குக் குறைந்திருக்கிறது என்று ஜோஷுவா டி  காஸ்ட்ரோ என்ற பிரபல நிபுணர்  ஜியாக்ரபி ஆப் ஹங்கர் GEOGRAPHY OF HUNGER  என்னும் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார் .

Xxxx

தொழிலதிபரின் இரட்டை வேடம் !

கேரளாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் , சமீபத்தில் ஜப்பானுக்குச் சென்று திரும்பினார். அவர் சென்னைக்கு வந்த பொழுது , அவருடைய நபர்கள் சிலர் , சென்னையில் உள்ள சிறந்த சைவ உணவுச் சாலை ஒன்றில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

தொழிலதிபர், ஜப்பானில் தாம் கண்ட அதிசயங்களை எல்லாம் தன் நண்பர்களுக்குக் கூறினார்.. ஜப்பானியர் இப்பொழுது திமிங்கிலத்தின் எண்ணெயை உபயோகிக்கின்றனர் . அது பன்றியின் இறைச்சியைப் போலவே சுவையாக இருக்கிறது .ஜப்பானியர் தம் உணவுப்  பழக்கத்தை உடனடியாக மாற்றிக்கொண்டது அதிசயமானது. நம் நாட்டிலும் நாம் உணவுப்  பழக்கங்களை  உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறினார் . அப்பொழுது பரிமாறுபவர் சப்பாத்திகள் கொண்டு வந்தார்.

“சப்பாத்தி வேண்டாம்; சாதம் கொண்டுவாருங்கள்” என்று பரிமாறுபவரிடம் கூறிவிட்டு , உடனடியாக உணவுப்  பழக்கங்களை மாற்றவேண்டும்  என்ற தம் கருத்தை தொடர்ந்து வலியுறுத்தினார்

(ஊருக்குத் தாண்டி உபதேசம் , உனக்கில்லை என்ற பழமொழிக்கதை நினைவுக்கு வருகிறது )

உணவு பற்றி ஏ கே செட்டியார் தொகுத்துடிவிஎஸ் நிறுவனத்தார் 1967ம் ஆண்டில் வெளியிட்,ட, புஸ்தகத்திருந்து எடுக்கப்பட்ட விஷயம் இது WITH MY  INPUTS )

–SUBHAM—

Tags-அரிசி உணவு, மஹாதேவ தேசாய், வல்லபபாய் படேல், காந்தி, விவாதம், ராஜாஜி, சோறு, ஜிந்தாபாத்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: