மருத்துவ விஷயங்கள் பற்றி அம்பலவாணர் அறிவுரை (Post.11,628)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,628

Date uploaded in London – –  5 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

எந்த எந்த நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம் என்றும் குளிக்கக்கூடாத நாட்களில் , முழுக நேரிட்டால் அதில் என்ன சேர்த்து குளிக்க வேண்டும் என்றும் ஒரு பாடலில் அம்பலவாணர் சொல்கிறார். அடுத்த பாடலில் நல்ல கைதேர்ந்த மருத்துவனுக்கு என்ன என்ன தெரிந்திருக்க வேண்டும் என்று அம்பலவாணர் பட்டியலிடுகிறார்.

சனி நீராடு என்பது அவ்வையாரின் ஆத்திச் சூடி.

சனிக்கிழமைகளில் தலை முழுகலாம் என்பதே ஒப்புக்கொள்ளப்பட்ட அர்த்தம். ஏனையன, வலியச்  சென்று பொருள் உரைப்பதாம்.

15.BATHE ON SATURDAY (WITH OIL)’

BATHE THE BODY IN SPRING WATER,

FIRST BATHE THE DEFILED MIND IN TRUTH.

 xxxxx

அறப்பளீசுர சதகம் 50. முழுக்குநாள்

வரும் ஆதி வாரம் தலைக் கெண்ணெய் ஆகாது

     வடிவமிகும் அழகு போகும்;

  வளர்திங் ளுக்கதிக பொருள்சேரும்; அங்கார

     வாரம் தனக்கி டர்வரும்

திருமேவு புதனுக்கு மிகுபுத்தி வந்திடும்;

     செம்பொனுக் குயர் அறிவுபோம்;

  தேடிய பொருட்சேதம் ஆம்வெள்ளி; சனியெண்ணெய்

     செல்வம்உண் டாயு ளுண்டாம்;

பரிகாரம் உளதாதி வாரம் தனக்கலரி;

     பௌமனுக் கான செழுமண்

  பச்சறுகு பொன்னவற் காம்; எருத் தூளொளிப்

     பார்க்கவற் காகும் எனவே;

அரிதா அறிந்தபேர் எண்ணெய்சேர்த் தேமுழுக்

     காடுவார்; அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அருமை …… தேவனே! வரும் ஆதிவாரம் தலைக்கு

எண்ணெய் ஆகாது – வருகின்ற ஞாயிற்றுக்கிழமையன்று தலைக்கு

எண்ணெய் கூடாது, (அவ்வாறு முழுகினால்) வடிவம் மிகும் அழகுபோகும் –

உருவத்தில் மிகுந்து அழகு நீங்கும், வளர் திங்களுக்கு அதிகபொருள்

சேரும் – வளர்ந்துவரும் திங்கட்கிழமைகளில் (முழுகினால்) மிகுந்த

பொருள் கிடைக்கும்அங்காரவாரம் தனக்கு இடர்வரும் –

செவ்வாய்க்கிழமைகளில் (முழுகினால்) துன்பம் உண்டாகும், திருமேவு

புதனுக்கு மிகுபுத்தி வந்திடும் – அழகு மிகுந்த புதன்கிழமைகளில்

(முழுகினால்) சிறந்த அறிவு வரும், செம்பொனுக்கு உயர் அறிவு போம் –

நல்ல வியாழக்கிழமைகளில் (முழுகினால்) சிறந்த அறிவு கெடும், வெள்ளி

தேடிய பொருள் சேதம்ஆம் – வெள்ளிக்கிழமைகளில்(முழுகினால்) சேர்த்துவைத்த பொருள் அழியும், சனி எண்ணெய்

செல்வம் உண்டு ஆயுள் உண்டாம் – சனிக்கிழமைகளில் எண்ணெய்

(தேய்த்து முழுகினால்) செல்வமும் ஆயுள் வளர்ச்சியும் உண்டாகும்,

பரிகாரம் உளது – (தகாத கிழமைகளில் முழுக நேர்ந்தால்) மாற்று உண்டு,

(அந்த மாற்று,) ஆதிவாரம் தனக்கு அலரி – முதல் வாரமான

ஞாயிற்றுக்கிழமையில் அலரிமலராம், பௌமனுக்கு ஆன செழுமண் –

செவ்வாய்க்கு நல்ல மண் ஆகும், பொன்னவற்குப் பசு அறுகு ஆம் –

வியாழனுக்குப் பசிய அறுகம்புல் ஆகும், ஒளி பார்க்கவற்கு எருத்தூள்

ஆகும் – ஒளியுடைய வெள்ளிக்கு எருப்பொடி ஆகும். அரிது ஆஅறிந்த

பேர் எண்ணெய் சேர்த்து முழுக்கு ஆடுவார் – அருமையாக

உணர்ந்தவர்கள் எண்ணெயுடன் (இவற்றைச்) சேர்த்து முழுகுவர்.

XXXX

      அறப்பளீசுர சதகம்    51. மருத்துவன்

தாதுப் பரீட்சைவரு காலதே சத்தோடு

     சரீரலட் சணம்அ றிந்து,

  தன்வந்த்ரி கும்பமுனி தேரர்கொங் கணர்சித்தர்

     தமதுவா கடம்அ றிந்து

பேதப் பெருங்குளிகை சுத்திவகை மாத்திரைப்

     பிரயோக மோடு பஸ்மம்

  பிழையாது மண்டூர செந்தூர லட்சணம்

     பேர்பெறுங் குணவா கடம்

சோதித்து, மூலிகா விதநிகண் டுங்கண்டு

     தூயதை லம்லே கியம்

  சொல்பக்கு வம்கண்டு வருரோக நிண்ணயம்

     தோற்றியே அமிர்த கரனாய்,

ஆதிப் பெருங்கேள்வி யுடையன் ஆ யுர்வேதன்

     ஆகும்; எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) எமது – எம்முடைய, அருமை ……. தேவனே!, தாதுப்

பரீட்சை வரு கால தேசத்தோடு சரீர லட்சணம் அறிந்து – நாடித்

தேர்வையும் காலத்தையும் இடத்தையும் உடலின் இயல்பையும் உணர்ந்து,

தன்வந்திரி கும்பமுனி கொங்கணர் சித்தர் தமது வாகடம் அறிந்து –

தன்வந்திரியும் அகத்தியரும் கொங்கணரும் சித்தர்களும் எழுதிய மருத்துவ

நூலைக் கற்றுணர்ந்து, பேதம்பெருங் குளிகை சுத்திவகை மாத்திரை பஸ்மம்

பிரயோகமோடு பிழையாது – பலவகைப்பட்ட பெருமைமிக்க

குளிகைகளையும் (மருந்துச் சரக்குகளைத்) தூய்மை செய்யும் முறைகளையும்

மாத்திரைகளையும் பஸ்மத்தையும் கொடுக்கும் தன்மையையும் தவறாது கற்று,

மண்டூர செந்தூர லட்சணம் பேர் பெறும் குணவாகடம் சோதித்து –

மண்டூரம் செந்தூரம் இவற்றின் இயல்புகளைப் புகழ்பெற்ற பண்புடைய

மருத்துவ நூலின் வாயிலாகத் தேர்ந்து, மூலிகாவித நிகண்டும் கண்டு – பல

வேர்வகைகளின் நிகண்டையும் அறிந்து, தூய தைலம் லேகியம்

சொல்பக்குவம் கண்டு – தூய எண்ணெயும் இலேகியமும் செய்யும்

முறையைச் சொல்லியவாறு அறிந்து, வருரோக நிண்ணயம் தோற்றி – வரும்

நோய்களின் முடிவை வெளிப்பட உணர்ந்து, அமிர்தகரனாய் – கைநலம்

உடையவனாய், ஆதிப் பெருங்கேள்வி உடையன் – முற்காலத்திலிருந்து

வழிவழியாக வரும் கேள்வியறிவையும் உடையவனே, ஆயுர்வேதன் ஆகும்- மருத்துவன் ஆவான்.

xxxx

நம்நாட்டு மருத்துவங்கள் ஆயுர்வேதம், சித்தம் என இருவகைப்படும். ‘

வாகடம், மருத்துவநூல். மண்டூரம் என்பது செங்கல்லிற் சிட்டம் பிடித்த கல்லைக்கொண்டு பிற மருந்துச்சரக்குகளையும் சேர்த்துச் செய்யும் ஒருவகைப் பொடி;  செந்தூரம் என்பது இரும்பு கலந்த மருந்துப் பொடி. இவற்றைச் செய்யும் முறையை மருத்துவர் வாயிலாக உணர்க.

ஏட்டுப் படிப்பைவிடக் கேள்வியே சிறந்தது என்பதை விளக்க,

‘ஆதிப் பெருங்கேள்வி யுடையன்’ ஆக வேண்டும் என்றார். எந்நலம்

இருப்பினும் கைந்நலம் ஒன்றே மருத்துவர்க்குப் புகழ்தரும் என்பதைத் தெரிவிக்க ‘அமிர்தகரனாய்’ என்றார்.

Xxx

கீழேயுள்ள சம்ஸ்க்ருத சுபாஷிதங்களை ஒப்பிடலாம்

இந்து மதத்தில் கடவுளை டாக்டர் (பிஷக்) என்றே அழைப்பர்ஏனெனில் அவர் பிறவிப் பிணிக்கு மருந்து தருபவர்! யஜுர் வேதத்தில் பிஷக் என்றே சிவபெருமானை அழைப்பர். 

உலகப் புகழ் பெற்ற நூல்கள் எழுதிய சரகரும் சுஸ்ருதரும் சம்ஸ்கிருதத்தில் டாக்டர் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதையும் காண்போம்:- 

ஒரு சர்ஜனின் (சஸ்த்ர சிகிச்சை செய்யும் டாக்டர்) குண நலன்கள் சுஸ்ருத (சூத்ர) 5-10:-

சௌர்யம் = பயப்படாமல் ஆபரேஷன் செய்க;

ஆசுக்ரியா= லாவகமாக, டென்ஷன் ஆகாமல் ஆபரேஷன் செய்க;

அஸ்வதேவேபது= கை நடுங்கக் கூடாது; வியர்த்து ஒழுகக் கூடாது;

அசம்மோஹக = மனதில் குழப்பம் இருக்கக் கூடாது (என்ன செய்யப் போகிறோம் என்பதை தெளிவாக நினைவில் வைத்துக்கொள்க)

சௌர்யமாசுக்ரியா சஸ்த்ரதைக்ஷயமஸ்வேதபது

அசம்மோஹஸ்ச வைத்யஸ்ய சஸ்த்ர கர்மணி சஸ்யதே

–சுஸ்ருத (சூத்ர) 5-10

xxxx  

சிறந்த வைத்யனின் குணாதிசயங்கள் (பிஷக்தமஸ்ய ஞானம்):-

ஹேது= நோய்க்கான காரணத்தை அறிபவன்;

லிங்க = நோயின் தன்மையை அறிவான்;

ப்ரசமன = என்ன சிகிச்சை தரவேண்டும் என்பதைத் துணிவான்

ரோகாணாம் அபுனர்பவ = அந்த நோய் மீண்டும் வராதபடி தடுப்பான்.

இந்த நான்கையும் அறிந்தவனே சிறந்த டாக்டர்!

ஹேதௌ லிங்கே ரோகாணாமபுனர்பவே

ஞானம் சதுர்விதம் யஸ்ய ச ராஜார்ஹோ பிஷ்க்தமஹ

–சரக (சூத்ரம்) 9-19

 xxxx

நல்ல டாக்டரின் நாலு தகுதிகள்:–

 ச்ருதே பர்யவதாதத்வம் = மருத்துவ நூல்களில் பேரறிவு;

பஹுசோ த்ருஷ்டகர்மதா = நல்ல அனுபவ அறிவு;

தாக்ஷ்யம் = திறமை;

சௌசம் = கை சுத்தம், உடல் சுத்தம் , மன சுத்தம், கிளினிக் CLINIC/SURGERY சுத்தம்

ஸ்ருதே பர்யவதாதத்வம் பஹுசோ த்ருஷ்டகர்மதா

தாக்ஷ்யம் சௌசமிதி ஞேயம் வைத்யே குணசதுஷ்டயம்

–சரக சூத்ரம் 9-6

xxx 

நோயாளியை கவனிக்கும் முறை:-

மைத்ரீ = நோயாளியை நண்பனாகப் பார்;

காருண்யா = அவனிடம் இரக்கம் காட்டு ( எவ்வளவு கட்டணம் வைத்து ஆளிடம் கறக்கலாம் என்று திட்டம் போடாதே)

ப்ரீதி = அவனுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் செய்திகளைக் கொடு;

உபேக்ஷணம் = அவனிடம் அனுதாபம் காட்டு ( நோய் வந்ததற்காக அவனைக் குற்றவளிக் கூண்டில் நிறுத்தாதே)

மைத்ரீ காருண்யமார்தேஷு சக்யே ப்ரீதிருபேக்ஷணம்

ப்ரக்ருதிஸ்தேஷு பூதேஷு வைத்யவ்ருத்திஸ்சதுர்விதா

–சரக சூத்ர 9-26 

Xxx

திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் உள்ள பத்து குறட் பாக்களை பெரும்பாலோர் அறிவர்.

–subham–

Old articles in our blog

ஒரு நல்ல மருத்துவ நூல் அறிமுகம் (Post No.11315)

https://tamilandvedas.com › ஒரு-…

·

2 Oct 2022 — யாழ்ப்பாண பல்கலைக் கழக தகைசார் வாழ்நாட் பேராசிரியர் முதுமுனைவர் அ .

ஆயுர்வேத நூல் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ஆ…

சிகிச்சை முறையில் மந்திர பிரயோகத்தையும் அவர் கூறியிருப்பது ஒரு தனிச் சிறப்பாகும்.

டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

https://tamilandvedas.com › டாக…

15 Jan 2013 — பிறவிப் பிணிக்கு மட்டும் இன்றி வாழும் போது உடலில் ஏற்படும் உபாதைகளுக்கும் …

Tamil and Vedas | Page 560

https://tamilandvedas.com › author

14 Oct 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … அதன் கீழ் அர்த்தத்தையும் தரும் ஒரு நல்ல நூல்.

xxxx subham xxxx

tags- எண்ணை , குளியல், ஸ்னாநம் , தலை முழுகுதல், வாகடம், மருத்துவன், செந்தூரம் சதகம், அம்பலவாணர் 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: