
Post No. 11,635
Date uploaded in London – – 6 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxx
ஜோதிடம் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு; முதலாவது வானில் உலவும் கிரகங்கள், நட்சத்திரங்களின் பாதையைக் கணக்கில் கொண்டு அதற்கு ஏற்ப யாக யக்ஞங்களைச் செய்வது. இரண்டாவது அப்படி உலவும் கிரகங்கள் நட்சத்திரங்களைக் கொண்டு இனி என்ன நடக்கும் என்பதைச் சொல்லுவது (Future Predictions) ஆகும். இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது.
உலகிலேயே ஜோதிடத்தை சிலபஸில் — பாட திட்டத்தில் சேர்த்தது இந்துக்கள்தான். வேத பாடசாலைக்குச் செல்லுவோர் ஆறு துணைப்பாடங்களைப் (Six Ancillary Subjects) படிக்க வேண்டும். அப்போதுதான் குருநாதர் கான்வ கேஷன் Convocation தினத்தன்று (பட்டமளிப்பு விழா) சர்ட்டிபிகேட்டைக் கையில் கொடுப்பார் .
தமிழர்களைப் பொருத்த மட்டில் சங்க காலத்திலேயே இந்த நம்பிக்கை ஆழ வேரூன்றிவிட்டது.சங்க இலக்கியத்தில் நூற்றுக்கனக்கான சோதிடக் குறிப்புகளைக் காண்கிறோம். சகுன சாஸ்திரம், பறவை சாஸ்திரம், பல்லி ஜோதிடம், குறி கேட்டல், மணல் ஜோதிடம், கயிறு சோதிடம், சோழி ஜோதிடம் என ஏராளமான விஷயங்களை நம்முடைய இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. ஸம்ஸ்க்ருதத்தை விட அதிகமான பெயர்களை நட்சத்திரப்பட்டியலில் காண முடிகிறது. தும்மல் சாஸ்திரம், கண்துடிப்பு சாஸ்திரம், சகுனங்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இன்றுவரை சூரிய சந்திர கிரகங்கணளைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்லும் சோதிடர்கள் பொய் சொல்ல முடியுமா? என்ற வினாவை எழுப்புகிறார் அம்பலவாணர்.
இதே போல, ஒவ்வொரு சாஸ்திரத்துக்கும் எது நிதர்சனமான சான்று (unquestionable evidence) என்றும் அடுக்குகிறார் அம்பலவாணர். பேதிமருந்தின் பலனைப் பார்த்தாலேயே வைத்திய சாஸ்திரம் உண்மை என்பதை அறிவீர்கள்; ஒருவன் ஏன் அரசனாக இருக்கிறான், இன்னும் ஒருவன் ஏன் அடிமையாக இருக்கிறான் என்பதே பாவ புண்ணியத்தைக் காட்டிவிடும். “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற புறநானூற்றுப் பொன்மொழியும் “அறத்தாறு இதுவென வேண்டா” என்ற வள்ளுவன் குறளும் (37) பாவ புண்ணிய பலன்களைச் சு ட்டிக்காட்டுகின்றன.
அரிச்சுவடியில் ஹரி என்றோ ஓம் நமோ நாராயணா என்றோ எழுதுவதன் மூலம் திருமாலின் பெருமையும், யஜுர் வேதத்தில் நம சிவாய என்ற மந்திரத்தைத் தாங்கிவரும் ருத்ரம் -சமகம் என்ற மந்திரத்தின் மூலம் சிவ பெருமானின் பெருமையும் புலப்படும் என்கிறார்
Xxxxx
அடுத்த பாடலில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை முன் வைக்கிறார். ஒருவர் பிறவியின் காரணமாக குண நலன்கள் வருகிறதா, அல்லது அவரை வளர்க்கும் சூழ்நிலையால் குண நலன்கள் வருகின்றனவா என்ற கேள்விக்கு பிறவிதான் காரணம் என்கிறார் புலவர். தற்காலத்தில் இரண்டையும் (Nature or Nurture) ஆதரித்து கட்டுரைகள் வந்தவண்ணம் இருக்கின்றன (Environment or Genetics)
Old Articles on the same theme
ஜோதிடத்தைக் கண்டுபிடித்தது தமிழனா?
https://tamilandvedas.com › ஜோ…
16 Mar 2015 — இதுமட்டுமின்றி நாடி ஜோதிடம், கேரளத்தில் உள்ள சோழி சோதிடம் (பிரஸ்னம்) இவைகளும் …
You’ve visited this page 4 times. Last visit: 05/12/22
மணல் ஜோதிடம் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ம…
7 Oct 2017 — தமிழர்களின் மணல் ஜோதிடம்; அப்பர் தரும் அதிசயத் தகவல் (Post No.4279).
2700 ஆண்டுகளுக்கு முன்னர் ஜோதிடம்
https://tamilandvedas.com › 2700-…
16 Mar 2021 — 2700 ஆண்டுகளுக்கு முன்னர் ஜோதிடம் ; மெகஸ்தனிஸ் அற்புத தகவல் (Post 9387).
ஜோதிடம் | Tamil and Vedas | Page 2
https://tamilandvedas.com › tag › page
ஏராளமான கல்லீரல் (liver) வடிவ உருவங்களைத் தொல்பொருட்துறை றையினர் கண்டு எடுத்துள்ளனர்.
கயிறு சார்த்திப் பார்த்தல் – Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › க…
8 Jun 2020 — ஜோதிடம்| Tamil and Vedas. tamilandvedas.com/tag/ஜோதிடம். Posts about ஜோதிடம் written … ஒரு கயிறு அல்லது …
சோசியம் – Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ச…
·
15 Apr 2016 — இந்த நூல் பார்க்கும் முறை பற்றியும் கிளி ஜோதிடம் பற்றியும் ஏற்கனவே கட்டுரை …
ஆரூடம் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ஆ…
தமிழ் நாட்டில் கிளி ஜோதிடம் உண்டு. ஊருக்கு ஊர் இத்தகைய கிளி சோதிடர்களைக் காணலாம்.
அறப்பளீசுர சதகம் அம்பலவாணர்
அறப்பளீசுர சதகம் 52. உண்மையுணர் குறி
சோதிடம் பொய்யாது மெய்யென்ப தறிவரிய
சூழ்கிரக ணம்சாட்சி ஆம்!
சொற்பெரிய வாகடம் நிசமென்கை பேதிதரு
தூயமாத் திரைசாட்சி ஆம்!
ஆதியிற் செய்ததவம் உண்டில்லை என்பதற்
காளடிமை யேசாட்சி ஆம்!
அரிதேவ தேவனென் பதையறிய முதல்நூல்
அரிச்சுவடி யேசாட்சி ஆம்!
நாதனே மாதேவன் என்பதற் கோருத்ர
நமகசம கம்சாட்சி ஆம்!
நாயேனை ரட்சிப்ப துன்பாரம்! அரியயன்
நாளும் அர்ச் சனைசெய் சரணத்
தாதிநா யகமிக்க வேதநா யகனான
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அரி அயன் நாளும் அர்ச்சனைசெய் சரணத்து ஆதிநாயக –
திருமாலும் பிரமனும் எப்போதும் மலரிட்டு வழிபடும் திருவடிகளையுடைய
முதன்மையான தலைவனே!, மிக்கவேத நாயகன் ஆன அண்ணலே –
சிறந்த மறைமுதல்வனான பெரியோனே!, அருமை …….. தேவனே!, சோதிடம்
பொய்யாது மெய்என்பது அறிவு அரிய சூழ்கிரகணம் சாட்சி ஆம் – கணித
நூல் பொய்படாது. உண்மையே என்பதற்கு அறிஞரேயல்லாமல்
பொதுமக்களால் அறியமுடியாத சூழும் கிரகணமே சான்று ஆகும், சொல்
பெரிய வாகடம் நிசம் என்கை பேதிதரு தூயமாத்திரை சாட்சிஆம் –
புகழ்பெற்ற பெருமைமிக்க மருத்துவநூல் உண்மையென்பதற்குப் பேதிக்குத் தரும் நல்ல மாத்திரைகளே சான்று தரும், ஆதியில் செய்ததவம் உண்டு
இல்லை என்பதற்கு ஆள் அடிமையே சாட்சி ஆம் – முன்னே செய்த
நல்வினை உண்டா இல்லையா என்பதற்கு ஆளும் அடிமையுமே சான்று
ஆகும். அரி தேவதேவன் என்பதை அறிய முதல் நூல் அரிச்சுவடியே
சாட்சிஆம் – திருமால் வானவர் தலைவன் என அறிவதற்குச் சிறுவர்கள்கற்கும் முதல் நூல் அரிச்சுவடியாக இருப்பதே சான்று ஆகும், மா தேவனே
நாதன் என்பதற்கோ ருத்ர நமகசமகம் சாட்சி ஆம் – சிவபெருமானே
தலைவன் என்பதை அறிவதற்கோ என்னில் உருத்திர நமகசமகம் என்னும் மறைப்பனுவலே சான்று ஆகும், நாயேனை ரட்சிப்பது உன்பாரம் – நாய்
போன்று இழிவுற்ற என்னைக் காப்பது உன் பொறுப்பு.
XXXX
அறப்பளீசுர சதகம் 53. பிறவிக்குணம் மாறாது
கலங்காத, சித்தமும், செல்வமும், ஞாலமும்,
கல்வியும், கருணை விளைவும்,
கருதரிய வடிவமும் போகமும், தியாகமும்,
கனரூபம் உளமங் கையும்,
அலங்காத வீரமும், பொறுமையும், தந்திரமும்,
ஆண்மையும், அமுத மொழியும்,
ஆனஇச் செயலெலாம் சனனவா சனையினால்
ஆகிவரும் அன்றி, நிலமேல்
நலம்சேரும் ஒருவரைப் பார்த்தது பெறக்கருதின்
நண்ணுமோ? ரஸ்தா ளிதன்
நற்சுவை தனக்குவர வேம்புதவ மேநெடிது
நாள்செயினும் வாரா துகாண்!
அலங்காரம் ஆகமலர் கொன்றைமா லிகைசூடும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே.
(இ-ள்.) அலங்காரம்ஆக மலர்கொன்றை மாலிகை சூடும்
அண்ணலே – அழகாக மலர்ந்த கொன்றை மாலையை மிலைந்த
பெரியோனே!, அருமை …….. தேவனே!, கலங்காத சித்தமும் – குழம்பாத
மனமும், செல்வமும் – நல்ல பேறும், ஞானமும் – அறிவும், கல்வியும் –
கலையும், கருணை விளையும் – அருட்பெருக்கும், கருது அரிய வடிவமும் –
நினைவுக்கரிய உருவ அழகும் போகமும் – நுகர்ச்சியும் (அனுபவமும்),
தியாகமும் – கொடையும், கனரூபம் உள மங்கையும் – பேரழகுடைய
மனைவியும்,அலங்காத வீரமும் – அசைவில்லாத துணிவும், பொறுமையும் –
(பிறர் குற்றம்) பொறுத்தலும், தந்திரமும் – சூழ்ச்சியும், ஆண்மையும் –
ஆளுந்திறனும், அமுதமொழியும் – இனிய சொல்லும், ஆன இச்செயல்
எலாம் – ஆகிய இவை யாவும்சனன வாசனையினால் ஆகிவரும் அன்றி – பிறப்பின் தொடர்பினால்
இயற்கையிலே உண்டாகி வருமே அல்லாமல், நிலம்மேல் நலம்சேரும்
ஒருவரைப் பார்த்து – உலகில் நலம் பெற்று இருக்கும் ஒருவரைக்கண்டு,
அது பெறக் கருதின் நண்ணுமோ – அந்த இயல்பை அடைய நினைத்தால்
ஆகுமோ? இரஸ்தாளிதன் நற்சுவை தனக்குவர வேம்பு நெடிதுநாள்
தவம்செயினும் வாராது – இரஸ்தாளி வாழையின் நல்ல சுவை தனக்குக்
கிடைக்கவேண்டி வேம்பு நீண்ட நாள் தவம் புரிந்தாலும் கிடைக்காது.
(க-து.) நல்வினையால் இயல்பாகவே அமையவேண்டிய இவை
செயற்கையால் அமையா.
— subham—-
Tags–ஜோதிடம், பாவ புண்ணியம், பிறவிக்குணம் , அம்பலவாணர், அறப்பளீசுர சதகம்