
Post No. 11,641
Date uploaded in London – – 7 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
‘காக்கைக்கும் கூட தன் குஞ்சு பொன் குஞ்சு’. அது போல அவரவர்க்கு சின்ன வயதில் அம்மா, என்ன சமைத்துப் போட்டார்களா அதுதான் அமிர்தம் . இந்தியாவின் இரும்பு மனிதரான (Iron Man of India) வல்லப பாய் படேல் , இதற்கு விலக்கல்ல . இதோ ஒரு சுவையான சம்பவம்
1929 ஆம் ஆண்டில் வேதாரண்யம் மகாநாட்டிற்குத் தலைமை வகித்தார் வல்லப பாய் படேல் . மகாநாடு முடிந்ததும் , தமிழ்நாட்டில் சுமார் இருபது நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார்.திருப்பூர் வந்து சேர்ந்தார். ராஜாஜியும் படேலுடன் சுற்றுப்பிரயாணம் செய்தார். திருப்பூரில் குடியேறிய பண்பாடுமிக்க குஜராத்திக் குடும்பம் ஒன்றில் படேல் தங்க ஏற்பாடு செய்திருந்தனர்.
படேல் அந்த வீட்டுக்குச் சென்றதும் , அந்த வீட்டுத் தலைவரைப் பார்த்து, நீங்கள் ஒரு குஜராத்தியா? என்று கேட்டார்..
‘ஆம்’ என்றார் வீட்டுத் தலைவர்.
நீங்கள் கோதுமை சாப்பிடுவது உண்டா? என்று கேட்டார் படேல்.
வீட்டுக்காரர் ‘ஆம்’ என்றார் .
‘இருபது நாட்களாக அரிசிச் சோறு சாப்பிட்டு வந்தேன். தயை செய்து கோதுமை ரொட்டி தயாரித்துக் கொடுங்கள் என்றார் சர்தார் வல்லப பாய் படேல்’.

Xxxx
My story (Part of My Autobiography)
லண்டன் சாமிநாதன் பட்ட பாடு
சந்தடி சாக்கில் என்னுடைய சுய புராணத்தையும் நுழைக்கப் பார்க்கிறேன் .
இதுவரை லண்டனிலிருந்து இரண்டு முறை குடும்பத்தோடு ரோம் (Rome, Florence, Venis) நகருக்கும், பிளாரன்ஸ், வெனிஸ் நகரங்களுக்கும் சென்று வந்துள்ளோம். முதல் தடவை ரோம் நகருக்குச் சென்றபோது என் மகன் 7 நாள் பயணம் ‘புக்’ book செய்துவிட்டான். நாங்களோ சுத்த வெஜிட்டேரியன்கள் .தினமும் பாஸ்தாவும் பிட்சாவும் (Italian Pasta and Pizza) சாப்பிட்டு நாக்கு செத்துவிட்டது. அரிசிச் சோறு கிடைக்காதா என்று ‘கூகுள்’ (google) செய்து விட்டு, ஹோட்டலைத் தேடி, ‘போர்டு போர்ட்டாக’ படித்துக்கொண்டு அலைந்தோம். கிடைக்கவில்லை. ஒரு வேளை தவறான முகவரிக்குச் சென்றிருக்கலாம். இறுதியில் நிறைய இந்திய முகங்கள் (உண்மையில் பங்களாதேஷிகள்) தெரிந்த ஒரு ‘சாலை ஒர’ (Roadside Restaurant) உணவு விடுதிக்குள் நுழைந் தோம் ; ஆனந்தம் ஒரு புறம்; அருவறுப்பு மறுபுறம் . ஏனெனில் பெரிய பெரிய பாத்திரங்களில் ‘ஏதோ ஏதோ’ மிதந்து கொண்டிருந்தது.
இருந்தபோதிலும் ஒரு புறம் கண்களை மறைத்துக்கொண்டு அரிசிச் சோற் றை மட்டும் எடுத்துக்கொண்டு வெஜிட்டேரியன் என்று உரத்த குரலில் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி, அவர்கள் கொடுத்த ஏதோ ஒன்றைச் சாப்பிட்டுவிட்டு ஹோட்டல் அறைக்கு வந்தோம் . சில மணி நேரத்தில் இரண்டு பேருக்கு வயிறு கடமுடா சப்தம். சம்ஸ்க்ருதத்தில் களேபரம் (கலவரம் என்ற சொல்லின் மூலம்) என்று சொல்லுவார்கள். மாலை நேர பயணங்களை ரத்து செய்ய மனம் இல்லை. ஆகையால் உடல் நிலை பாதித்தவர்களை விட்டுவிட்டு, இருவர் மட்டும், ரோம் நகரில் பார்க்காத இடங்களை சுற்றிப்பார்த்தோம். மறுநாள் காலையில் அடுத்த இரண்டு பேருக்கு வயிற்றில் ‘கடமுடா’ சப்தம் . முதல் நாள் பாதிக்கப்பட்ட இருவருக்கு உடல் நிலை முன்னேறிவிட்டது. சரி, போங்கள் ; இன்று உங்கள் ஷிப்ட் shift . நீங்கள் போய் சுற்றிப் பார்த்து வாருங்கள் என்று சிரித்துக்கொண்டே அனுப்பி விட்டோம்
.சில ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ரோம் நகருக்குச் சென்ற பொழுது தீவிர ஆராய்ச்சிகள் செய்து, வெஜிட்டேரியன் VEGETARIAN உணவுவிடுதிகளைக் குறித்துக் கொண்டு, வெற்றிகரமாக கண்டும் பிடித்தோம். ஒரு அழகிய காஷ்மீரி பெண்மணி நடத்திய ரெஸ்டாரன்டில் வெஜிட்டேரியன் என்றால் என்ன? என்ற இலக்கண வரையறைகளைக் (Definition of South Indian Vegetarian) கற்பித்து ஆர்டர் கொடுத்தோம். நல்ல உணவு கிடைத்தது.
என்ன அம்மணி? உன் கடையை நன்கு விளம்பரம் செய்யக்கூடாதா ? போன தடவை ரோம் நகருக்கு நாங்கள் வந்தபோது தவியாய்த் தவித்துப் போய்விட்டோம் என்று சொன்னோம். அவர் சிரித்துக் கொண்டே, நானே போன மாதம்தான் இந்த ரெஸ்டாரண்டை ஆரம்பித்தேன் என்றார் . வாழ்க வாழ்க என்று சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.

london swaminathan in Great Barrier Reef, Australia.
New Rule
இபோதெல்லாம் என் மகன்களுக்கு ஒரு கட்டளை போட்டிருக்கேன். வியன்னா, மாட்ரிட் என்று ஏதேனும் ஹாலி டே Holiday புக் செய்தால் எந்த இடத்திலும் மூன்று இரவுக்கு மேல் ஹோட்டலில் தங்க வேண்டாம். அப்படித் தங்கினால் முதலில் வெஜிட்டேரியன் உணவுவிடுதி பட்டியல் தயாரித்து, அதன் பக்கத்திலுள்ள ஹோட்டலை book புக் செய்ய வேண்டும் என்று விதி செய்தோம்.
இனி ஒரு விதி செய்வோம்; அதை எந்த நாளும் காப்போம்; தனி ஒருவனுக்கு வெஜிட்டேரியன் உணவு இல்லாவிடில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி பாடலை மாற்றிப் பாடினோம்.
Xxx
Tags – வெஜிட்டேரியன் , ரோம், உணவுவிடுதி, பட்டபாடு , களேபரம்,படேல், வல்லப பாய் ,