மாமனார் வீட்டில் சாப்பிடுவோன் ,  மனைவிக்கு அஞ்சுவோன் மீது அம்பலவாணர் தாக்குதல் (11,644)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,644

Date uploaded in London – –  8 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

அறப்பளீசுர சதகத்தை எழுதிய அம்பலவாணர் , 56, 57 பாடல்களில் சாதாரணமாக உலகறிந்த விஷயங்களைப் பற்றித்தான்  கதைக்கிறார். ஆயினும் வீணர்கள்,– அதாவது வெட்டிப் பயல்கள் —-பற்றியும் கெட்ட விஷயங்கள் (Useless)  பற்றியும் சொல்லி அவைகளுக்கு – மார்க் Mark – மதிப்பெண் போடுகிறார் . அதாவது  எதைவிட எது மோசம் என்று வரிசைப் படுத்துகிறார்.

மாமனார் வீட்டில் உறைவோரும் – 35/100 fail mark

வெட்டி அரட்டையை  விரும்புவோரும் – 30 marks

விருந்தினரைக் கண்டவுடன் மனைவிக்கு அஞ்சி ஓடுவோரும் – 25 marks

படிப்பில்லாதவரும்- 20 marks

கல்லாத பேர்வழிகள் மீது கவிதை பாடுவோனும் – 15 marks ,

மக்களைச் சுமக்கும் பல்லக்கு தூக்கிகளும் – 10 marks

பொருளைத் தேடும் அறிவற்றவர்களும் – 5 marks

வரவவே  இல்லாமல் செலவுசெய்வோரும்- o marks வீணர் (Useless Fellows) 

xxxx

அறப்பளீசுர சதகம் 56. வீணர்

வேட்டகம் சேர்வோரும் வீணரே! வீணுரை

     விரும்புவோர் அவரின் வீணர்!

  விருந்துகண் டில்லாள் தனக்கஞ்சிஓடிமறை

     விரகிலோர் அவரின் வீணர்!

நாட்டம் தரும்கல்வி யில்லோரும் வீணரே!

     நாடி அவர் மேற்கவி சொல்வார்

  நானிலந் தனில்வீணர்! அவரினும் வீணரே

     நரரைச் சுமக்கும் எளியோர்!

தேட்டறிவி லாதபெரு வீணரே அவரினும்

     சேரொரு வரத்தும் இன்றிச்

  செலவுசெய் வோர் அதிக வீணராம்! வீணனாய்த்

     திரியும்எளி யேனை ஆட்கொண்

டாட்டஞ்செ யும்பதாம் புயம்முடியின் மேல்வைத்த

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) வீணனாய்த் திரியும் எளியேனை ஆட்கொண்டு –

வீணனாகத்திரியும் எளியனான என்னை அடிமையாக ஏற்று, ஆட்டம்

செய்யும் பதஅம்புயம் முடியின்மேல் வைத்த அமலனே – நடனம்இடும்

திருவடித்தாமரையை என் தலை மீது வைத்த தூயவனே! அருமை …….

தேவனே!, வேட்ட அகம் சேர்வோரும் வீணரே – மாமனார் வீட்டில்

உறைவோரும் வீணராவர்அவரின் வீண்உரை விரும்புவோர் வீணர் –

அவரினும் வீண்மொழியாடலை விரும்புவோர் வீணர், அவரின் விருந்து

கண்டு இல்லாள் தனக்கு அஞ்சி ஓடிமறை விரகு இலோர் வீணர் –

அவரினும் விருந்தினரைக் கண்டவுடன் மனைவிக்கு அஞ்சி ஓடி மறையும் அறிவு இல்லாதவர் வீணர், நாட்டம்தரும் கல்வி இல்லோரும் வீணரே –

(அவரினும்) (அகக்) கண்ணைத்தரும் படிப்பில்லாதவரும் வீணரே

நானிலந்தனில் அவர்மேல் நாடிக் கவி சொல்வார் வீணர்-(அவரினும்)

உலகில் கல்லாதவரைத் தேடி அவர்மேற் பாக்களைப் புனைவார் வீணர்,

அவரினும் நரரைச் சுமக்கும் எளியோர் வீணரே – அவரினும் மக்களைச்

சுமக்கும் எளியவர் வீணர், தேட்ட அறிவு இலாத பெரு வீணரே அவரினும்

– (பொருளைத்) தேடும் அறிவுஅற்ற பெருவீணரேயான அவரினும், சேர் ஒரு

வரத்தும் இன்றிச் செலவுசெய்வோர் அதிக வீணராம் – வரக்கூடிய எந்த

வரவும் இல்லாமல் செலவுசெய்பவர் பெரிய வீணராவர்.

     (வி-ரை.) வேட்டல் – மணம்புரிதல், விரகு – அறிவு. நாட்டம் – கண்;

இங்கு அறிவைக் குறிப்பதால் அகக்கண் ஆயிற்று;

நான்கு + நிலம் – நானிலம்: முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், உலகம்

இந்த நால்வகையில் அடங்குவதால் நானிலம் எனப்பட்டது, நரரைச்

சுமப்போர் – பல்லக்குத் தூக்குவோர்.

Xxx

மாப்பிள்ளைக்கு — மருமகனுக்கு — எங்குமே கெட்ட பெயர்தான்; அவர்களுக்கு செல்வத்தின் அருமை பெருமை தெரியாததால் அதிக நாள் தங்கிவிடுவர் . இதோ ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகம் :

அதிதிர் பாலகஸ் சைவ ஸ்த்ரீ ஜனோ நிருபதிஸ் ததா

ஏதே வித்தம் ந ஜாநந்தி ஜாமாதா சைவ பஞ்சமஹ

ஜாமாதா= மாப்பிள்ளை /  மருமகன்

ஐந்து பேருக்கு பணத்தின் அருமை தெரியாது:–விருந்தாளி, சிறுவன் பெண், ராஜா, மாப்பிள்ளை

xxxx

விவேக சிந்தாமணி பாடல் சொல்லும்:

34: யார் யார், யார்?

கருதிய நூல் கல்லாதான் மூட னாகும்

கணக்கறிந்து பேசாதான் கசட னாகும்,

ஒருதொழிலும் இல்லாதான் முகடி யாகும்

ஒன்றுக்கும் உதவாதான் சோம்பனாகும்,

பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும்

பேசாமல் இருப்பவனே பேய னாகும்,

பரிவு நழுவினவன் பசப்ப னாகும்

பசிப்பவருக் கிட்டுண்ணான் பாவியாமே.

சான்றோர்கள் உயர்வாகக் கருதிய நூல்களைக் கற்காதவன் மூடன். யாரிடம், எங்கே, எப்படி, எவ்வளவு பேசவேண்டும் என்பதை அறியாமல் பேசுபவன் குற்றவாளி, எந்த வேலையும் செய்யாது வீணே பொழுதைக் கழிப்பவன் மூதேவி. யாருக்கும் பயன்படாதவன் சோம்பேறி. பெரியவர்களை வணங்கி ஆசி பெறாதவன் பேய். வேலையைச் செய்யாமல் அதற்கு காரணம் சொல்லி தட்டிக் கழிப்பவன் பொய்யன். பசித்தவனுக்குக் கொடாமல் தானே உண்பவன் பாவி.

Xxxxx

விருந்தினரைக் கண்டவுடன் மனைவிக்கு அஞ்சி ஓடி மறையும் அறிவு இல்லாதவர் வீணர்

சதகத்தின்  26ஆவது பாடல் விளக்கத்திலேயே கீழ்கண்ட அவ்வையார் கதையைக் கொடுத்துவிட்டேன்

அவ்வையார் பசியுடன் நடந்து கொண்டிருந்தார் ; அதைக் கண்ட   ஒரு  ஆடவனுக்கு கருணை உள்ளம்;

ஏ கிழவி என் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போ என்றான்.; ஆனால் அவன் மனைவியோ அடங்கா பிடாரி; மஹா முரடு; இருந்த போதிலும் அவளைக் கெஞ்சிக் கூத்தாடி அவ்வைக் கிழவிக்கு சோறு போட்டு விடலாம் என்று அவன் தப்புக்கு கணக்குப் போட்டான்; வீட்டுத் திண்ணையில் அவ்வையாரை உட்காரவைத்து விட்டு மனைவியைத் தடவிக்கொடுத்து, தலையை வாரிவிட்டு  பேன்களை எல்லாம் எடுத்துவிட்டு அன்பே ஆருயிரே ஒரு விருந்தாளியை அழைத்து வந்துள்ளேன்; பாவம் அவள் ஒரு கிழவி என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் காளி போல தாண்டவம் ஆடினாள் ; வசை மாறி பொழிந்தாள்; அதுவும் போதாதென்று பழைய முறத்தை  எடுத்து கணவனை அடித்து ஓட ஓட விரட்டினாள் ; அவ்வைக் கிழவிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி; மறு  பக்கம் ஒரே சிரிப்பு ; சும்மாவா விடுவார் ஒரு பாடலையும் பாடினார்:—

இருந்து முகம் திருத்தி ஈரோடு பேன் வாங்கி

விருந்து வந்ததென விளம்ப –வருந்தி

ஆடினாள் … பாடினாள்ஆடிப்பழ முறத்தால்

சாடினாள்  ஓடோடத்தான்.–  தனிப்பாடல்கள்

XXXX

இரண்டாவது அதிர்ச்சி

அவ்வையார் கொஞ்ச தூரம் நடந்து போனார்; பசியோ வயிற்றைக் கிள்ளியது ; ஒரு ஆண் மகனைக் கண்டு ,

அப்பா, ரொம்ப பசிக்கிறது; சாப்பிட ஏதாவது கொடு என்றாள் ; அவனும் அன்போடு வீட்டுக்கு அழைத்துச் சென்றான்; அவன் மனைவியும் முரடு; இருந்தபோதிலும் வேண்டா வெறுப்போடு முகத்தைச் சுளித்துக்கொண்டு உணவு பரிமாறினாள்; கரண்டியை வைத்து அடிக்காத குறைதான்.

வெளியே வந்த அவ்வையார் இரண்டு ,மூன்று

பொன்மொழிகளை உதிர்த்துச் சென்றார்.

காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாணொக்க வாய்திறக்க மாட்டாதே – வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற தையையோ
அன்பில்லாள் இட்ட அமுது.

அன்பில்லாத மனைவி இட்ட அமுது அவர் நெஞ்சசத்தைப் பிளந்தது ; கொட்டித் தீர்த்துவிட்டார்

XXX

அத்தோடு நிறுத்தவில்லை; அந்த ஆடவனுக்கு அறிவுரையும் வழங்கினாள் யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறு ; நல்ல குருவைப் பார்த்து சன்யாசம் வாங்கிக்கொள்; உனக்கு நிம்மதியான வாழ்வும் கிட்டும்; அடியார்கள் அன்போடு கொண்டுவரும் உணவும் கிடைக்கும் என்கிறார்.

சண்டாளி சூர்ப்பனகை தாடகையைப் போல்வடிவு

கொண்டாளைப் பெண்டென்று கொண்டாயே

தொண்டா செருப்படிதான் செல்லாவுன் செல்வமென்ன

செல்வம் நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்

பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டாணால்
எத்தாலும் கூடி யிருக்கலாம் – சற்றேனும்
ஏறுமா றாகஇருப்பாளே ஆமாயின்
கூறாமல் சந்நியாசம் கொள்.

xxxxxxxxxxxxxxxxxxxxx    

முதியவர் இல்லாத கன்னியின் வாழ்க்கையும்,

(No Protection for Virgins; Manu Smrti said this)

காவல் இல்லாத பட்டினமும், (Danger from Robbers; Tiruvalluvar said this )

அதிகாரிகள் கூடும் இடமும் ( CBI Raids; Income Tax raids)

எதுகைமோனை சேராத செய்யுளும் (Film Songs)

காவல் இல்லாத பூங்காவும் ( Risk of Child Sex; Drug addicts)

கரையில்லாத நீர்நிறைந்த ஏரியும் (Rain Water wasted)

ஆசிரியன் இல்லாத கலைத்தெளிவும்,(Drona- Ekalaiva Anecdote)

புகழ்ந்து கூறாத விறலியர் கூத்தும் ( No appreciation)

ஆற்றோர மரமும் ( Washed away by floods)

சுள்ளாணி இல்லாத தேரும் (Broken Chariot)  are USELESS, WASTE

Xxxx

அழிவன/ கெடுவன பற்றி விவேக சிந்தாமணி

மூப்பிலாக் குமரி வாழ்க்கை,

முனிவிலா அரசன் வீரம்,

காப்பிலா விளைந்த பூமி,

கரையிலா திருந்த ஏரி,

கோப்பிலான் கொண்ட கோலம்,

குருவிலான் கொண்ட ஞானம்,

ஆப்பிலாச் சகடு போல அழியும் என்று உரைக்க லாமே.

மூத்தவர் துணை இல்லாத குமரிப் பெண்ணின் வாழ்க்கை, கோபம் இல்லாத அரசனின் வீரம், பாதுகாப்பு வேலியில்லாத விளைநிலம், உயர்ந்தகரை இல்லாத ஏரி, ஒழுக்கமில்லாதவன் கொண்ட  அழகு, குரு அருள் இல்லாமல் பெற்ற ஞானம் ஆகியவை அச்சாணி இல்லாத வண்டி போல அழிந்து போகும்..

xxxxxx

          அறப்பளீசுர சதகம்  57. கெடுவன

மூப்பொருவர் இல்லாத குமரிகுடி வாழ்க்கையும்,

     மூதரண் இலாத நகரும்,

  மொழியும்வெகு நாயகர் சேரிடமும், வரும்எதுகை

     மோனையில் லாத கவியும்

காப்பமை விலாததோர் நந்தவன மும்,நல்ல

     கரையிலா நிறையே ரியும்,

  கசடறக் கற்காத வித்தையும், உபதேச

     காரணன் இலாத தெளிவும்,

கோப்புள விநோதமுடை யோர்அருகு புகழாத

     கோதையர்செய் கூத்தாட் டமும்,

  குளிர்புனல் நிறைந்துவரும் ஆற்றோரம் அதினின்று

     கோடுயர்ந் தோங்கு தருவும்,

ஆப்பதில் லாததேர் இவையெலாம் ஒன்றாகும்

     ஐயனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஐயனே – தலைவனே!, அருமை …….. தேவனே!, மூப்பு

ஒருவர் இல்லாத குமரி குடிவாழ்க்கையும் – முதியவர் ஒருவர் இல்லாத கன்னியின் இல்வாழ்க்கையும், மூதரண் இலாத நகரும் – பழைமையான

காவல் இல்லாத பட்டினமும், மொழியும் வெகுநாயகர் சேர்இடமும் –

கூறப்பட்ட பல அதிகாரிகள் கூடும் இடமும், வரும் எதுகைமோனை

இல்லாத கவியும் – (இலக்கணத்தில்) எதுகையும் மோனையும் சேராத செய்யுளும், காப்பு அமைவு இலாதது ஓர்

நந்தவனமும் – காவல் பொருந்தியிராத ஒரு பூங்காவும், நல்ல கரைஇலா

நிறை ஏரியும் – நல்ல கரையில்லாத நீர்நிறைந்த ஏரியும், கசடுஅறக் கற்காத

வித்தையும் – குற்றமின்றிக் கல்லாத கல்வியும், உபதேச காரணன் இலாத

தெளிவும் – கற்பிக்கும் ஆசிரியன் இல்லாத கலைத்தெளிவும், கோப்புஉள

விநோதம் உடையோர் அருகு புகழாத கோதையர்செய் கூத்தாட்டமும் –

கோவையான பலவகை விளையாட்டினர் அருகில் இருந்து புகழ்ந்து கூறாத விறலியர் ஆடும் கூத்தும், குளிர் புனல் நிறைந்துவரும் ஆற்றோர

மதில்நின்று கோடு உயர்ந்து ஓங்கு தருவும் – குளிர்ந்த நீர் நிறைந்து

வரத்தக்க ஆற்றோரத்திலே இருந்து வளரும் நீண்ட உயர்ந்த

கொம்புகளையுடைய மரமும், ஆப்பது இல்லாத தேர் – சுள்ளாணி இல்லாத தேரும், இவையெலாம் ஒன்று ஆகும் – இவை யாவும் ஒரேதன்மையுடையன (கெடுவன) ஆகும்.

     (க-து.) எப்பொருளுக்கும் அழகும் ஆதரவும் வேண்டும்.

To be continued………………………….

Tags– வீணர், கெட்டவை , பயனற்றவை, மாப்பிள்ளை

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: