
Post No. 11,650
Date uploaded in London – – 9 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பிரியாடிக் டேபிள்(Periodic Table) என்னும் மூலக (தனிம)அட்டவணையில் உள்ள 118 மூலகங்களில் இதுவரை 45 மூலகங்கள் பற்றிய சுவையான விஷயங்களைக் கண்டோம் . இன்று 46 ஆவது தனிமம் ஆன ஹைட்ரஜன் பற்றிய சுவையான விஷயங்களை முதலில் காண்போம்.
இதோ ஹைட்ரஜன் (Hydrogen) பற்றிய சுவையான விஷயங்கள் :–
ஹைட்ரஜன் வாயுதான் எல்லாவற்றிலும் முதல் பரிசு பெறுகிறது .
வாயுக்களில் மிகவும் லேசானது ஹைட்ரஜன் ;
மூலக அட்டவணையில் முதலில் நிற்பது ஹைட்ரஜன் ;
பிரபஞ்சம் தோன்றியபோது முதலில் தோன்றியது ஹைட்ரஜன் ;
பிரபஞ்சத்தில் அதிக அளவில் உள்ள மூலகம் ஹைட்ரஜன் ;
விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களும் நமது சூரியனும் பயன்படுத்தும் எரிபொருள் ஹைட்ரஜன் ;
உலக உயிரினங்களுக்கு மூலாதாரமாக விளங்கும் தண்ணீர் H₂O இருப்பதற் குக் காரணம் ஹைட்ரஜன் .
இது நடந்து கொள்ளும் முறை எல்லோரையும் வியப்பில் ஆழ்ந்த்துகிறது .
இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஒரு ஆக்சிஜன் அணுவும் சேர்ந்தால் தண்ணீர் H₂O கிடைக்கும் என்பது ரசாயனம் படிக்கும் மாணவர்களுக்குத் தெரிந்த தகவல்தான் . ஆயினும் இந்த தண்ணீர் மட்டும் விஞ்ஞானிகளுக்கு பல வியப்பான விஷயங்களைத் தெரிவிக்கிறது .
தண்ணீர் என்பது மிகவும் லேசான molecule மூலக்கூறு; இயற்கை விதிகளின் படி இது வாயு ரூபத்தில் இருக்கவேண்டும். ஆனால் அப்படியில்லை தண்ணீரைப்போல இரண்டு மடங்கு கனம் உடைய ஹைட்ரஜன் ஸல்பைட் Hydrogen Sulfide , வாயு உருவத்தில் இருக்கிறது.
திட உருவத்தில் உள்ள எல்லாம், திரவத்தைவிட கனமானது; இயற்கை விதிப்படி, அந்த திடப்பொருள், திரவத்தில் மூழ்கிவிடும். தண்ணீர் மூ லக்கூற்றை 0 டிகிரியாகக் குளிர்விக்கையில் அது ஐஸ் கட்டியாக மாறுகிறது. இது ஏன் தண்ணீருக்குள் மூழ்காமல் மிதக்கிறது என்பதும் விஞ்ஞானிகளுக்கு விளங்ககாத புதிராக இருந்தது ; இப்போது ஒருவழியாக ஒரு விஞ்ஞான விளக்கம் கிடைத்தாலும் அதன் நடவடிக்கை ஒரு வினோதமே .
அறிவியல் தெரிந்தவர்கள் மட்டும் கீழேயுள்ள விளக்கத்தைப் படியுங்கள்,
The reason is that each water molecule in ice forms four hydrogen bonds to surrounding water molecules and in doing so arranges itself into a crystal with a very open lattice, making it less dense than liquid water, so it floats.
தமிழில் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அது நான்கு கைகளை உண்டாக்கிக்கொண்டு அருகிலுள்ள 4 கை பெண்களுடன் கை கோர்த்துக்கொண்டு ஜாலியாக நீச்சல் அடிக்கிறது
xxxx

தண்ணீரைப் புகழாத உலக இலக்கியங்கள் கிடையாது. உலகிலேயே பழமையான நூலான ரிக் வேதம் தண்ணீரைப் புகழ்கிறது. தண்ணீர் இல்லாமல் இந்துக்கள், பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள எந்தச் சடங்கினையும் செய்ய முடியாது. கோவிலில் விக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்வது போல, பிராமணர்கள் ஒரு நாளைக்கு மூன்று தடவை மந்திரம் சொல்லி தலையில் தண்ணீரைத் தெளித்துக் கொள்ளுவர். 12 இறைவன் திருநாமங்களைச் சொல்லி தண்ணீரை இறைவனுக்கே அளிப்பர். காயத்ரீ மந்திரத்தைச் சொல்லியும் இறைவன் கொடுத்த தண்ணீரையே (குளம் அல்லது ஆற்றில்) இறைவனுக்குக் கொடுத்து தேங்க்ஸ்thanks சொல்லுவார்கள் ; அதாவது தண்ணீர் இல்லாத இந்துமத சடங்கு இல்லை. ஏனெனில் இந்துக்கள் வெளிநாட்டிலிருந்து வரவில்லை. கங்கை சிந்து நதிக்கரையில் பிறந்தவர்கள். வேற்று மதக்காரர்கள் தண்ணீரை அதிகம் பயன்படுத்துவதில்லை.
Xxx
மீண்டும் அறிவியலை விவாதிப்போம்
தண்ணீர் இல்லாவிடில் இந்த பூமி ஐஸ் கட்டி போல ஆகிவிடும். திரவ ரூபத்திலும் நீராவி ரூபத்திலும் உலகத்தின் வெப்ப நிலையை உயர்த்துவது தண்ணீர்தான் . தண்ணீர் என்பது இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் உடையது என்பதை மறந்துவிடாதீர்கள் . அதனால்தான் இந்த தண்ணீர் பற்றி இங்கு கதைக்கிறோம்.
வாயு ரூபத்தில்/ வடிவில் உள்ள நீர், நமது காற்று மண்டலத்தில் 4 சதவிகிதம் இருக்கிறது. இது பூமியைச் சுற்றி கண்ணாடிப் பெட்டி வைத்துள்ளது போல இருப்பதால் காற்று மண்டலத்தை 30 டிகிரி C அதிகரிக்கிறது. அது இல்லாவிடில் பூமியின் சராசரி வெப்ப நிலை மைனஸ் 20 டிகிரியாக இருக்கும்; கூட்டிக் கழித்துப் பார்த்தால் பூமிக்கு சராசரி + 15 டிகிரி C வெப்பத்தைத் தருகிறது. இதே போல கடலில் உள்ள தண்ணீரும் பூமியின் வெப்பத்தை அதிகரிக்கிறது . வினோதமாக இல்லையா? தண்ணீர் இருந்தால் குளிரும் என்றல்லவா சொல்லுவோம்.
xxx
இன்னும் ஒரு அதிசயத்தைக் காண்போம் .

தண்ணீரை பானையில் வைத்து அடுப்பில் சூடேயேற்றினால் அது 100 டிகிரி C யில் ஆவி ஆகும். இது நாம் வசிக்கும் கடல் மட்டத்தில் உள்ள நகரங்களில் மட்டும்தான். உயரே போகப்போக அது மாறும்; ஏனெனில் மேலே செல்லச் செல்ல காற்றழுத்தம் குறைகிறது எவரெஸ்ட் சிகர உச்சியில் தண்ணீரைக் கொதிக்க வைத்தால் அது 75 டிகிரியிலேயே ஆவி ஆகிவிடும். அதற்கு நேர் மாறாக மிகவும் ஆழத்துக்குச் சென்றால், தண்ணீர் கொதிக்க 374 டிகிரி வெப்பம் தேவை. அதாவது தரை மட்ட காற்றழுத்தத்தைப்போல 220 மடங்கு அழுத்தம் இருக்கும். அதற்கும் மேலே போனால் வேறு ஒரு அதிசயம் நிகழும். தண்ணீர் ஆனது சூப்பர் கிரிட்டிக்கல் ப்ளூஉய்ட் Super Critical Fluid — திரவம் ஆகும். அப்படியானால் என்ன? அது எதையும் கரைத்து விடும். எண்ணெய் போன்ற பொருளும் கரைந்து விடும். அப்படிக் கரைகையில் அது பாதியாகச் சுருங்கி விடும்.
தாவரம் போன்ற பசுமைப்பொருட்களை அதில் வைத்தால் எரிந்துவிடும் சாக்கடைக் கழிவுகளை எரித்து அகற்ற இதை பயன்படுத்தலாமே என்ற யோசனைகளும் முன் வைக்கப்பட்டன. ஆனால அதற்கு ஒரு தடை உண்டு. இதன் சக்தி, தங்கம் போன்ற, அரிக்கவே முடியாத , உலோகக்கங்களையும் அரித்து விடும்.
xxx
தண்ணீர் பற்றிய கடைசி விஞ்ஞான அதிசயத்தை ப்பார்ப்போம் .
கன நீர் என்பதை D2O’ டி 2 ஓ’ என்பர் ; சாதாரண நீர் H₂O எச் 2 ஓ . இது ஹைட்ரஜனின் ஒரு ஐசடோப்பான டெடூரியம் (Deuterium) என்பதால் உண்டாகிறது. அணு உலைகளில் இந்த கன நீரைப் பயன்படுத்துகிறார்கள். இதை ஒருவர் குடித்தால் நீண்ட காலம் உயிர் வாழ முடியாது. ஏனெனில் நம்முடைய உடலில் உள்ள செல் களிலும் தண்ணீர் உள்ளது . கன நீர் இருந்தால் அவை சாதாரண முறையில் செயல்பட முடியாது.
xxx
தண்ணீர் புராணத்தை முடித்துக் கொண்டு ஹைட்ரஜன் புராணத்துக்கு வருவோம்.
சூரியனிலும் நட்சத்திரங்களிலும் ஒவ்வொரு வினாடியும் வெடித்துக்கொண்டு இருக்கும் பல்லாயிரம் கோடி ஹைட்ரஜன் குண்டுகள் பற்றிக் காண்போம்.
English words used in the article:Super Critical liquid, Heavy water, Deuterium , Atmospheric pressure
To be continued……………………………………………………..
tags- ஹைட்ரஜன் , தண்ணீர், கன நீர் Super Critical liquid, Heavy water, Deuterium , Atmospheric pressure