யாண்டு பலவாக நரையிலையே ! அது எப்படி? பிசிராந்தையார் பதில் (Post.11,651)

 WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,651

Date uploaded in London – –  9 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

ஸம்ஸ்க்ருதத்தில் இரண்டு ஸ்லோகங்கள் கவலை இல்லாத மனிதனைப் படம்பிடித்துக் காட்டுகின்றன .

இதோ இரண்டு சுபாஷிதங்கள் –  பொன் மொழிப்பாடல்கள்

க்ரீடாமி தாவாமி படாமி நித்யம் பச்யாமி ஜிக்ராமி  ச்ருணோமி சுத்தம்

ராத்ரெள லபே சாத சுகேன நித்ராம்  ஈசஸ்ய  காருண்ய  மிதம் சமக்ரம்

பொருள்

இறைவனின் கருணையால் விளையாடுகிறேன், ஓடுகிறேன், படிக்கிறேன் , தினமும்  (நல்லவற்றைக்) காண்கிறேன், கேட்கிறேன், முகர்கிறேன் . இரவில் சுகமாய் தூங்குகிறேன்.

Xxx

ஜரா மரண துக்கேஷு ராஜ்ய லாப சுகேஷு ச

ந பிபேமி  ந ஹ்ருஷ்யாமி  தேன ஜீவாமி அநாமயஹ

மூப்பு, மரணம், துயரம், அரசாங்க சலுகைகள், சுகங்கள் இவைகள் பற்றி பயப்படுவது இல்லை; (அதாவது வருமா வராதா என்று கவலைப்படுவதில்லை). விரும்பியது கிடைத்ததால் சந்தோஷப்படவும் மாட்டேன் .; ஆகையால்தான் நான் நோயற்றவனாக வாழ்கின்றேன்.

xxxx

பிசிராந்தையார் யார்?

சங்க காலப் புலவர். அவர் பாடிய நரை முடி இல்லாமைப் பாடல் மிகவும் பிரஸித்தம்:

“ஐயா, தொண்டுக் கிழமாகிவிட்டீரே; முடி மட்டும் கருக்கவில்லையே; ஏதேனும் கூந்தல் வளர் தைலம் தடவுகிறீரோ” என்று எல்லோரும் வியப்புடன் பார்க்கின்றனர். அவர் சொல்லுகிறார்:- “ஐயன்மீர் என் வீட்டிலும் ஓம் சாந்தி, நாட்டிலும் ஓம் சாந்தி, என் மனதிலும் ஓம் சாந்தி; இப்படி சாந்தி நிலவுகையில் முடி எப்படி நரைக்கும்?” என்று பாடுகிறார்:–

யாண்டு பலவாக நரையில வாகுதல்

யாங்கா கியரென வினவுதிராயின்

மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;

யான்கண் டனையர் என் இளையரும்: வேந்தனும்

அல்லவை செய்யான்காக்கும்அதன் தலை

ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர் யான் வாழும் ஊரே

——(புறநானூறு ,பாடல் எண். 191)

 பொருள்:-

நுமக்குச் சென்ற ஆண்டுகளோ  பலவாயின; இருந்தும் நரைமுடி காணவில்லை. இது எப்படி? என்று கேட்கிறீர்களா?

என் மனைவி நல்லவள்; என் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள்; என்னிடம் பணிபுரியும் ஏவலரோ நான் ‘எள் என்றால் எண்ணை யாக’ நிற்பர்; குறிப்பறிந்து ஒழுகும்  தன்மையர். என் அரசன், எந்த தவற்றையும் செய்யான்; இதற்கெல்லாம் மேலாக என் ஊரிலுள்ள அறிஞர்கள் புலன்களை வென்றுஉயர்ந்த குறிக்கோள் உடையவர்கள். (எனக்கு கவலையே இல்லை; கவலை இல்லாதோருக்கு நரை முடி வராதே!)

புறநானூற்றிலுள்ள பாடல் 191 

Xxx

இந்துக்கள் பெரிய சைக்காலஜிஸ்ட்கள் Psychologists ; மன  இயல் நிபுணர்கள் ; உள்ள இயல் அறிஞர்கள் ; கவலை இல்லாத மனிதனாக வாழ்க்கை நடத்தினால் தலை முடி கூட கருக்காது; 100 ஆண்டுகள் நோய் நொடி இல்லாமல் வாழலாம் . ஆனால் அப்படிக் கவலை இல்லாமல் வாழ மூன்று அம்சங்கள் தேவை :-

ஓம் சாந்தி – மனதில் அமைதி

ஓம் சாந்தி – குடும்பத்தில்  அமைதி

ஓம் சாந்தி – நாட்டில்  அமைதி

நான் அமைதியாக இருக்கிறேன். இதில் வியப்பில்லை ; என் மனைவி, மகன்கள், வீட்டு வேலைக்காரர்கள் அனைவரும் நான் எண்ணியத்தைச் செய்து முடிக்கின்றனர் . அது மட்டுமா ?  நான் வசிக்கும் ஊரில் சத் சங்கம் இருக்கிறது. அங்கு எல்லோரும் ஆய்ந்து, அவிந்து, அடங்கிய, கொள்கைச் சான்றோர்.

ஆதாவது அவர்கள் எல்லோரும் படித்தவர்கள் ; கற்கக் கசடறக் கற்று அதன் பின்னர், அதற்குத் தக நின்றவர்கள். அதாவது படித்த அகம்பாவம் இன்றி , வித்யா விநய சம்பந்னே  என்றவாறு அடக்கம் மிக்கவர்கள் ; அது மட்டுமல்ல; கட்சிமாறிகள் அல்ல. அவர்கள் கொள்கைச் சான்றோர்.; தான் ஏற்ற தருமத்தை விடாப்பிடியாகப்  பிடித்துக் கொண்டு நின்று ஒழுகும் கொள்கை உடையோர் . இது பழங்காலத்   தமிழகத்தை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது .

Xxxx

கவலை இல்லாத மனிதன்.

கவலை இல்லாத மனிதன் , 1960 ஆம் ஆண்டுத் திரைப்படம்

இந்தத் திரைப்படத்தில் உள்ள பாடல் ஓரளவுக்கு கவலை இல்லாத மனிதன் கொள்கையைக் காட்டுகிறது

“கவலை இல்லாத மனிதன்.

கவலை இல்லாத மனிதன்.

உலகத்தை அறிந்தவன்

துணிந்தவன் அவனே

கவலையில்லாத மனிதன்

போவதைக் கண்டு கலங்காமல்

வருவதைக் கண்டு மயங்காமல்

மெய் தளராமல் கை நடுங்காமல்

உண்மையை, பொய்யை, உணர்ந்தவனே

உலகத்தை அறிந்தவன்

துணிந்தவன் அவனே

கவலையில்லாத மனிதன்

வாழ்க்கை என்பது நாடகமே

வந்து போனவர் ஆயிரமே

கொண்டு சென்றவர் யாரும் இல்லை

கொடுத்துப் போனதும் நினைவும் இல்லை

அந்த நாடகம் இன்னும் முடியவில்லை

மறுநாளைக்கு வருவதும் தெரியவில்லை

உலகத்தை அறிந்தவன்

துணிந்தவன் அவனே

கவலையில்லாத மனிதன்.

வாழ்வை அறிந்தவன் சம்சாரி

வாழப் பயந்தவன் சன்னியாசி

கண்ணீர் வடிப்பவன் மூடனடா

காலத்தை வென்றவன் வீரனடா

நல் இன்பத்தைத் தேடி உறவாடு

நீ எழுந்திடு மனிதா விளையாடு

Xxxxx

இதை பகவத் கீதையிலும்– 12 ஆவது அத்தியாயத்தில் (12-13 to 12-20) — கிருஷ்ண பரமாத்மா விளக்குகிறார் . கவலை இல்லாத மனிதன் இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவன் ; தமிழில் இதை இருமை அல்லது இரட்டை என்பர். சம்ஸ்க்ருதத்தில் த்வந்த்வம் என்பர்; இன்ப துன்பம் , சீத உஷ்ணம், இரவு பகல், ஏற்ற தாழ்வு, பெரியோர் சிறியோர் — இவைகளைப் பொருட்படுத்தாமல்  சம பார்வை உடையவர்கள் ; கணியன் பூங்குன்றனின் யாதும்  ஊரே பாடலிலும் இக்கருத்து வருகிறது.

—subham—

Tags-கவலை இல்லாத மனிதன், யாண்டு பலவாக நரையிலவாகுதல், பிசிராந்தையார்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: