
Post No. 11,653
Date uploaded in London – – 10 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Part 2
ஹைட்ரஜன் வாயு பற்றிய சுவையான விஷயங்களைத் தொடர்ந்து காண்போம்.
ஹைட்ரஜன் Hydrogen என்ற சொல் கிரேக்க மொழியில் பிறந்தது; ஹைட்ரோ Hydro என்றால் தண்ணீர் ஜெனி Gene என்றால் தோற்றுவிப்பது (ஜனனி= தாயார் என்பது சம்ஸ்க்ருதம்)
பிரபஞ்சத்தின் 88 சதவிகிதம் ஹைட்ரஜன் வாயுவால் நிரம்பி இருக்கிறது.
மாபெரும் பிரபஞ்ச வெடிப்பு (Big Bang) நிகழ்ந்த காலத்தே, மூன்று மூலகங்கள்/ தனிமங்கள் பிறந்தன ; அவை ஹைட்ரஜன் வாயு , ஹீலியம் வாயு மற்றும் லிதியம் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு. சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தில் ஒவ்வொரு வினாடியும் பல கோடி ஹைட்ரஜன் குண்டுகள் வெடித்த வண்ணமுள்ளன. இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் என்னும் வாயுவை உண்டாக்கும்போது இந்த பிரம்மாண்டமான சக்தி கிடைக்கிறது . பூமியிலும் விஞ்ஞானிகள் இவ்வாறு சோதனை முறையில் ஹைட்ரஜன் குண்டுகளை வெடித்தனர்.
அணுகுண்டு (Atomic bomb) என்பது யுரேனியம், ப்ளூட்டோனியம் போன்ற உலோகங்களின் அணுவைப் பிளப்பதாகும் ; ஹைட்ரஜன் குண்டு (Hydrogen Bomb) இதற்கு நேர் மாறானது; இரண்டு அணுக்களை இணைப்பதாகும் .
ஹைட்ரஜன் குண்டு , முன்னர் அமெரிக்கா உபயோகித்த சின்ன அணுகுண்டை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்தவை. இரண்டாவது உலக மஹாயுத்தத்தின்போது அமெரிக்கா 2 ஜப்பானிய நகரங்கள் மீது சின்ன அணு குண்டுகளை போட்டு ஒரு நொடியில் இரண்டு லட்சம் பேரைக் கொன்றது. அது வெளியிட்ட சக்தி 10,000 TNTடிஎன்டி க்கு சமமானது. ஒரு ஹைட்ரஜன் குண்டு ஒரு லட்சம் TNT டி.என்.டி வெடிமருந்துக்குச் சமமானது.
பெரிய ஹைட்ரஜன் குண்டுகள் மில்லியன் டன் TNT டி என் டி வெடிமருந்து வெடிப்பதற்குச் சமமானவை
சூரியன் என்பது நட்சத்திர வகைகளில் சிறிய நட்சத்திரம்தான். அதில் ஒவ்வொரு வினாடியும் 60 கோடி டன் ஹைட்ரஜன் ஹீலியமாக மாற்றப்படுகின்றது

இனி ஹைட்ரஜன் வாயு பற்றிக் காண்போம்
பூமியின் ஈர்ப்பு விசையையும் தாண்டித் தப்பித்துச் செல்லவல்லது இந்த வாயு. குரு (Jupiter) என்னும் வியாழன் கிரகம் அளவுக்கு ஈர்ப்பு விசை இருந்தால்தான் இதை பிடித்துவைக்க முடியும். கள்ளனுக்கும் குள்ளன் ஹைட்ரஜன்!
மருத்துவத்தில் ஹைட்ரஜன்
நம்முடைய உடலில் பெரும்பாலும் தண்ணீர்தான் உள்ளது. ஒரு நாளைக்கு மனிதனுக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் தேவை. இதில் பாதி தண்ணீர் மூலமும், மீதிப்பாதி உணவு வகைகளிருந்தும் நமக்கு கிடைக்கிறது
உடலில் உள்ள தண்ணீரை 65 சதவிகிதம் என்றும் அதில் ஹைட்ரஜ னின் அளவு 11 சதவிகிதம் என்றும் ஆராய்சசியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.
உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் இது உள்ளது; குறிப்பாக DNA டி என் ஏ என்னும் மரபணுவில் இருக்கிறது நம்முடைய உடலில் உள்ள ரத்தம் பொதுவாக அமிலத் தன்மை (acidic) வாய்ந்தது. உடலில் தண்ணீர் வற்றிப்போன நிலையில் (Dehydrated Condition) , தண்ணீரை உடனே கொடுத்தால் மாரடைப்பு வந்துவிடும். ஆகையால் சொட்டுச் சொட்டாக ஏற்றுவர். ஏனெனில் இதயம் திடீரென்று அதிகத் தண்ணீரை ஏற்காது.
இதை மருத்துவ ரீதியில் விளக்குகிறார்கள். அதாவது இருதயத்தின் தசைகளில் உள்ள சோடியம் பொட்டாசியம் ‘அயான்’களின் சமச் சீர் நிலையை (It upsets the balance of sodium , potassium ions in heart muscle) பாதிக்கிறது. இருதய நோயுள்ளவர்களின் இருதய திசுக்களில் சோடியம் – ஹைட்ரஜன் பரிமாற்றம் ( exchange of sodium, hydrogen ions in heart tissues )முக்கிய பங்கு வகிக்கிறது.
தண்ணீர் இல்லாமல் மனிதன் வாழமுடியாது; இதையே ஹைட்ரஜன் இல்லாமல் வாழ முடியாது என்று சொன்னாலும் தவறில்லை
xxxx
வரலாறு
1671-ல் இதை ராபர்ட் பாயில் (Robert Boyle) என்பவர் சோதனைச் சாலையில் உருவாக்கினார். ஆயினும் ஹைட்ரஜனைக் கண்டுபிடித்த பெருமை லண்டனில் வசித்த பைத்தியக்கார (eccentric), பணக்கார ஆராய்ச்சியாளர் ஹென்றி காவென்டிஷுக்கு (Henry Cavendish 1731-1810) தான் கிடைத்தது . அவர் லண்டனில் தனி சோதனைச் சாலை வைத்து பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டார். இதனால் இவரை ஒரு மாதிரியான ஆள் (eccentric) என்று சொல்லத் துவங்கினர். பிரெஞ்சு ஆராய்ச்யாளர் அந்தோணி லவாய்ச்சியர் (Antoine Lavoisier) தான், இதற்கு ஹைட்ரஜன் என்று பெயர் சூட்டினார்.
xxx

ஹைட்ரஜன் பலூன் (Hot Air Balloons) பயணம்
இந்த வாயு மிகவும் லேசானதால் இதை பெரிய பலூனில் ஏற்றி , அத்துடன் இணைத்த கூடை வடிவ பயணப்பெட்டியில் மனிதர்களை வான வெளிக்கு அழைத்துச் சென்றனர். குறிப்பாக சுற்றுலாத் தலங்களை மேலேயிருந்து காண இது பயன்பட்டது . பின்னர் ஹைட்ரஜன் விமானங்களையும் பறக்கவிட்டனர் ; இவைகளை ஷெப்பலின் (ZEPPELINS ) என்று அழைப்பர். பல ஐரோப்பிய நகரங்களுக்கு இடையில் இவை பயணப் போக்குவரத்துக்கு பயன்பட்டன. 1914ல் முதல் உலகப்போர் வெடித்தபோது 35, 000 பயணிகள் வரை இதை பயன்படுத்தினர். ஆயினும் 1937ம் ஆண்டில் ஏற்பட்ட விபத்து இதற்க்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துத் தந்தது. ஹைட்ரஜன் வாயு கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டு 35 பேர் இறந்தனர் . முதல் உலக யுத்தத்தில் லண்டன் மீது குண்டு போடக்கூட, ஜெர்மனி ஹைட்ரஜன் (Zeppelins) பலூன்களைப் பயன்படுத்தியது
ஹைட்ரஜன் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய வாயு.
xxxx

பொருளாதார உபயோகம்
பெரும்பாலும் ரசாயன தொழிற்சாலைகளில் இந்த வாயு பயன்படுகிறது. அமெரிக்காவில் ஹைட்ரஜன் வாயுவை, நாடு முழுதும் கொண்டுசெல்ல தனி குழாய்ப்பாதையே இருக்கிறது. Ethanol எதனால், Methanol மெதனால் தயாரிக்கும் ஆலைகளில். அம்மோனியா உரம் தயாரிக்கும் ஆலைகளில், இது அதிகம் பயன்படுகிறது. திரவ நிலையில் இருக்கும் தாவர எண்ணெய்களை ‘மார்ஜரின்’ போல கட்டியாக மாற்றும் ஆலைகளிலும் இதற்கு வேலை உண்டு . உயர்ந்த வெப்பம் தேவைப்படும் வெல்டிங் Welding தொழிற்சாலைகளில் சிறிதளவு பயன்படுகிறது.
அமெரிக்கா , விண்வெளி ஆராய்ச்சிக்கும் இதைப்பயன்படுத்துகிறது திரவ நிலையிலுள்ள ஹைட்ரஜனைப் பயன்படுத்தி பிரம்மாண்டமான ரயில் மற்றும் சாலை வாகனங்களை இயக்குகிறது.
விண்வெளிக்குச் சென்று திரும்பிவரும் Space Shuttle ஸ்பேஸ் ஷட்டில் விண்கலத்துக்கு 5 லட்சம் லிட்டர் திரவ நிலை ஆக்சிஜனும் 15 லட்சம் லிட்டர் திரவ நிலை ஹைட்ரஜனும் தேவை . இவைகளைச் சேமித்துவைக்கவோ அதைவிட பெரிய டாங்குகள் (Tanks) தேவை.
xxx
ஹைட்ரஜன் பஸ்கள், கார்கள் (Hydrogen Buses and Cars)
இப்பொழுது ஐரோப்பிய நகரங்களில் ஹைட்ரஜன் பஸ்களையும் கார்களையும் அதிகம் பயன்படுத்துகின்றனர் பெட்ரோலைவிட விலையும் குறைவு;. காற்று மாசுபடுவதும் இல்லை..
‘அவன் தண்ணீரில் கூட கார் ஓட்டுவான்’ என்று கிண்டலாகச் சொன்ன மொழி இப்பொழுது உண்மையாகி விட்டது . தண்ணீரை ஹைட்ரஜன், ஆக்சிஜன் என்று பிரித்து அவற்றின் சக்தியில் வாகனங்கள் ஒட்டப்படுகின்றன.
ஹைட்ரஜன் பஸ்களும், கார்களும் லண்டனில் அதிகம் பயன்படுகின்றன. மின்சக்தி அல்லது ஹைட்ரஜன் சக்தி அல்லது இரண்டையும் கலந்த (Hybrid Vehicles) சக்தியை மட்டுமே பயன்படுத்த லண்டன் சபை திட்டமிட்டுள்ளது . எதிர்காலத்தில் புறச்சூழலை மாசுபடுத்தும் பஸ்கள் இருக்கக்கூடாது என்பது அவர்கள் அணுகுமுறை. இத்தகைய பஸ்கள் பூனை போல சப்தம் இன்றி இயங்குகின்றன. பின்னால் வாகனம் வ்ருவதை சப்தத்தால் அறிய முடியாது.!
xxx

ரசாயன குணங்கள் Chemical Properties
குறியீடு H (எச்)
அணு எண் -1
உருகு நிலை – மைனஸ் 259 டிகிரி C
கொதி நிலை – மைனஸ் 253 டிகிரி C
இந்த வாயு நிறமற்றது; மணமற்றது எளிதில் தீப்பிடித்து எரியக்கூடியது (Highly inflammable) .
ஆர்த்தோ Ortho ஹைட்ரஜன் , பாரா Para ஹைட்ரஜன் என்ற இரண்டு நிலையில் காற்றில் உள்ளது .
மூலக உலகிலேயே ஐசடோப்புகளுக்கு தனிப் பெயர் உடைய பெருமை இந்த வாயுவுக்கு மட்டுமே உண்டு.
ஒரு ஐசடோப்- டெட்டூரியம் (Deuterium ), மற்றொன்று- ட்ரைஷியம் (Tritium); மூன்றாவது ஐசடோப் -ஹைட்ரஜன் 1 (Hydrogen 1) என்று அழைக்கப்படும்
–subham—
Tags- அதிசய ,ஹைட்ரஜன், Zeppelin, ஷெப்பலின்