
Post No. 11,660
Date uploaded in London – – 12 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
தனிப்பாடல் திரட்டிலிருந்து ஒளவையாருக்குப் பிடித்த உணவு வகைகள் என்ன என்ற தகவல் நமக்குக் கிடைக்கிறது . அவருக்குக் கத்தரிக்காய் கறி மிகவும் பிடிக்கும். அவர் பாடிய தெய்வீகப் பாடல்களிலிருந்து அவர் சுத்த சைவம் – வெஜிட்டேரியன் Vegetarian — என்ற தகவலும் கிடைக்கிறது. அவ்வை என்ற சொல்லிலேயே வயதான மூதாட்டி , இறைவனை நாடும் மாது , திருமணமாகாத பெண் அல்லது கணவனை இழந்த பெண் என்ற பொருள் எல்லாம் வந்து விடுகிறது. தமிழ் நாட்டில் சங்க காலம் முதல் சமீப காலம் அவரை ஆறு ஒளவையார்கள் இருந்ததாக ஒரு புஸ்தகமும் வெளியாகி இருக்கிறது.
“ஒள” என்ற எழுத்தில் துவங்கும் சொல் திருக்குறளிலோ அதற்கு முந்திய சங்க இலக்கியத்தின் 18 நூல்களிலோ கிடையாது . தொல்காப்பியர் , “ஒள” என்ற எழுத்தை மட்டும் குறிப்பிடுகிறார் .
ஆகையால் ஒளவையார் என்றும் எழுதலாம் அவ்வையார் என்றும் எழுதலாம் .
XXX
இனி உணவு வகைகளுக்கு வருவோம்
“வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும்- திரமுடனே
புல்வேளூர்ப்பூதன் புகழ்ந்து பரிந்திட்ட சோறு
எல்லா உலகும் பெறும்”
புல் வேளூர்ப் பூதன் என்பவன் போட்ட சாப்பாட்டைப் புகழ்ந்து அவ்வையார் பாடிய பாடல் இது .
பூதன் என்பவன் பரிமாறிய வரகரிசிச் சாதம், கத்தரிக்காய் வதக்கல், நுரை பொங்கும் புளித்த மோர் ஆகியனவை மிகவும் சுவையாக இருந்தன . அதை அவன் அன்போடு உபசரித்து படைத்தான். இதற்கு உலகம் முழுவதையும் அவனுக்குக் கொடுத்தாலும் போதாது. அவ்வளவு சுவையானது என்கிறார்.
சாப்பாட்டுப் பட்டியலைப் பார்த்தால் அது ஒரு ஏழை வீட்டுச் சாப்பாடு என்று தெரிகிறது. ஆயினும் பரிவுடன் இட்டதால் அதன் சுவை ஆயிரம் மடங்கு பெருகிவிடுகிறது .
Xxx
அவர் பாடியதாகக் காணப்படும் இன்னொரு தனிப்பாடலும் ,சோற்றின் சுவையை விட அதைப் பரிமாறுவோரின் அன்புதான் முக்கியம் என்று காட்டுகிறது .
(இந்தப்பாடல் 1960ம் ஆண்டுகளில் வெளியான இரண்டு தனிப்பாடல் நூல்களில் இல்லை. ஆனால் 1897-ம் ஆண்டு நூலில் இருக்கிறது .என்னிடம் லண்டனில் மூன்று தனிப்பாடல் நூல்கள் உள்ளன. ஒன்று மிகப்பழைய நூல் ;சந்தி பிரிக்காமல் எழுதப்பட்ட, பழுப்பு நிறம் கண்ட, தூள் தூளாக உடையும் நூல் ; வெளியான ஆண்டு 1897. இராமநாதபுரம் ஸமஸ்தானம் மகாராஜ ஸ்ரீ பொன்னுசாமித்தேவர் அவர்கள் அனுமதியினால், முன்பதிப்பித்த பல பிரதிகளைக்கொண்டும், இன்னும் சில பாடல்களும் நூதனமாக சேர்த்து ,சரவணபுரம் முதலியாரவர்களால் பார்வையிடப் பட்டு, பு. ஏ. இராகவப்பிள்ளை அவர்களது விவேக விளக்க அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது; 1897 வரு.(க்ஷம்)..
xxxx
கீழ்கண்ட இரண்டு நூல்களில் இல்லை
அதற்குப் பின்னர் 1960ம் ஆண்டு நூல். அது கலைச்செல்வி தொகுத்தது ; அகிலன் எழுதிய முன்னுரையுடன் கூடியது. வெளியீடு — மீனாட்சி பதிப்பகம், கீழ இராச வீதி, புதுக்கோட்டை , ஆண்டு 1960
இரண்டாவது புஸ்தகம் :தமிழ் தந்த கவியமுதம் — கு.அழகிரிசாமி, தமிழ்ப் புத்தகாலயம் , சென்னை-14, ஆண்டு 1962.
xxxx
கடை எழு வள்ளல்களில் ஒருவர் முல்லைக்குத் தேரீந்த பாரி . அவருக்கு சங்கவை அங்கவை என்று இரண்டு மகள்கள் உண்டு. அவர்கள் படைத்த உணவு என்று சிலரும் ‘இல்லை, இல்லை’ அதே பெயரில் வாழ்ந்த இடையன் பாரியும் அவனது மகள்கள் இருவரும் போட்ட உணவு என்று பலரும் கற்பனைக்கு ஏற்றபடி எழுதுவார்கள். ஆயினும் பாடலின் பொருள்தான் நமக்கு முக்கியம்
வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்து – பொய்யா
அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார் கடகஞ்
செறியாதோ கைக்கு.
பழைய நூல்களில் உள்ள கருத்து:-
அவ்வையார் மழையில் நனைந்து போய், மிகவும் நடுங்கிக்கொண்டே வந்தார். அவரைக் கண்ட பாரி என்ற இடையன் அவரைக் குடிசைக்கு அழைத்துச் சென்றான் . அவர்கள் கருப்பு நிற சிற்றாடையை அவருக்குப் போர்த்திக்கொள்ள கொடுத்தனர்; குளிர் காய நெருப்பு மூட்டினர்.முருங்கைக் கீரையை நெய்விட்டுச் சமைத்து கேழ்வரகுக் களியுடன் இலையில் இட்டனர் ; அதுமட்டுமா ‘போதும் போதும்’ என்று மன்றாடும் அளவுக்கு பரி மாறிக்கொண்டே இருந்தனர். அதுதான் இந்திர லோக அமுதம் .
கடைசி வரிக்கு இரண்டு பொருள் உண்டு. சிறிது எழுத்துக்களை மாற்றினால் (கடகஞ் செறியாதோ கைக்கு) (கடகம்) வளையல் அணிந்த கைகளென்பதை அந்தக் கைகளுக்கு தங்க வளையல் போட வேண்டும் (கடகஞ் செறியாதோ கைக்கு) ; அவ்வளவு தகுதி உண்டு என்றும் கொள்ளலாம்.
அதையெல்லாம் விட்டுவிட்டு பாடலின் பொருளுக்குத் திரும்பினோமானால், எளிய கிராமீய சத்துணவு, அன்புடன் பரிமாறப்பட்டது ‘போதும் போதும்’ என்று சொல்லுமளவுக்கு படைக்கப்பட்டது என்பது தெளிவாகும்.
XXX

ஆறு அவ்வையார்கள்
ஆறு அவ்வையார்கள் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ஆ…
4 Aug 2020 — 10 Jul 2015 – அவ்வையார் புகழ்பெற்ற தமிழ் கவிஞர், அறிஞர், இறையன்பர். சங்க காலம் முதல் …
தமிழில் ஆறு அவ்வையார்கள் !!! (Post No.8326)
https://tamilandvedas.com › தமிழ…
11 Jul 2020 — 31 Jan 2020 – … (Protestant) பிரிவை. உருவாக்கினார் போப்பாண்டவர் ‘பாவ மன்னிப்புச் சீட்டு’.
அவ்வையாரும் சாணக்கியனும் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › அ…
14 Feb 2018 — ஆனால் எனது மொழியியல் ஆராய்ச்சியின் படி குறைந்தது மூன்று ஔவையார் …
ஔவை – Tamil and Vedas
https://tamilandvedas.com › tag
11 Oct 2019 — ஆனால் கபிலர், அவ்வையார் என்ற பெயர்களில் பல புலவர்கள் உண்டு. ஆறு அவ்வையார்கள் …
அவ்வையாரும் பேயும் – Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › அ…
19 Dec 2013 — குறைந்தது மூன்று முதல் ஆறு ஔவையார்கள் வரை வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளர் …
அவ்வையார், வள்ளுவர் பற்றிய அதிசய தகவல்கள்!
https://tamilandvedas.com › அவ்…
·
14 Nov 2015 — ஆனால் கபிலர், அவ்வையார் என்ற பெயர்களில் பல புலவர்கள் உண்டு. ஆறு அவ்வையார்கள் …
அவ்வையார் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › அ…
21 Nov 2018 — திருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post No. 2532) | Tamil and … tamilandvedas.com/2016/02/12… –subham—. October 27 …
சாக்ரடீசும் அவ்வையாரும்! – Tamil and Vedas
https://tamilandvedas.com › சாக்…
10 Jul 2015 — அவ்வையார் புகழ்பெற்ற தமிழ் கவிஞர்,… … வரை ஆறு அவ்வையார்கள் இருந்தனர்; …
Tags- ஆறு ,அவ்வையார்கள், வரகரிசிச் சோறும், கத்தரிக்காய் கறி, தனிப்பாடல், ஔவை