பெண்கள் பருவமடைதல் பற்றி அறப்பளீசுர சதகம் (Post.11,664)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,664

Date uploaded in London – –  13 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

இரண்டு பாடல்களில் கவிராயர் Adults Only ‘அடல்ட்ஸ் ஒன்லி’ விஷயம் பற்றிக் கதைக்கிறார். இது பற்றி சம்ஸ்க்ருத நூல்களில் படித்த நினைவு இல்லை; ஒருவேளை தமிழர்கள் மட்டுமே Specialise ‘ஸ்பெஷலைஸ்’ செய்த விஷயமாக இது இருக்கலாம்.

பெண்கள் ஞாயிறு, செவ்வாய், சனிக்கிழமைகளில் பூப்படைதல்

தீமை; மற்றக் கிழமைகள் நலம்.

பெண்கள் மேடம், இடபம், கடகம், சிங்கம், விருச்சிகம், தனுசு,

மகரம் ஆகிய இராசிகளிற் பூப்படைதல் தீது : மற்றவை நலம்.

இப்படி அவர் சொன்னாலும் யாரும் இது சரியா, தவறா என்று ஆராய்ந்து புள்ளிவிவரம் சமர்ப்பிக்கவில்லை. அப்படி விவரம் கிடைக்கும் வரை இதை அதிகமாகப் பொருட்படுத்த வேண்டியது இல்லை என்பது என் சொந்தக்கருத்து.

பிராமணரல்லாத ஜாதிகளில் பெண் (daughter)  பிறந்த நேரத்தைவிட பூ ப்படையும் நேரம் முக்கியமாகக் கருதப்படுகிறது. மேலும் இந்து மதத்தில் எல்லாவற்றிலிருந்தும் விடுபட ஒரு சுறுக்கு வழி  கண்டு பிடித்திருக்கிறார்கள்.அதாவது தவறான நேரத்தில் ஒன்று நடந்தால் அதன் தீய விளைவுகளைத் தவிர்க்க பரிகாரம் (atonement) என்று ஒன்று இருக்கிறது.

இப்படி ஐயருக்கு தட்சிணையோ அல்லது பொருள் தானமோ கொடுப்பதில் தெய்வீக பலன்கள் இருக்கிறதோ இல்லையோ, Psychological சைக்கலாஜிக்கல் — உள்ள இயல் ரீதியாக- பலன் உண்டு. கெட்ட கிழமைகள் என்று சொல்லப்பட்ட நாட்களில் பருவம் எய்திய பெண்களும் பயப்படமாட்டார்கள் அவர்கள் கவலை  கொஞ்சமாவது அகலும்.

எடுத்துக் காட்டாக நான் விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட் BOOK ‘புக்’ செய்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். விமானம் புறப்படும் நேரமோ, அல்லது நான் வீட்டிலிருந்து டாக்சியில் ஏறும் நேரமோ, அல்லது ஒரு மணி நேரம் பயணம் செய்து ஏர்போர்ட்டுக்குள் நுழையும் நேரமோ அல்லது முதல் முதலில் ஒரு மாதத்துக்கு முன்னர் டிக்கெட் ‘புக்’ செய்த நேரமோ ஏதாவது ஒன்று ராகு காலம், எம கண்டம் நேரமாக இருக்கலாம். அல்லது புறப்படும் நாள் நல்லதாக இல்லாமல் இருக்கலாம். இதையெல்லாம் பார்த்தால் , எல்லாவற்றையும் பற்றிக் கவலைப்பட்டால் , பழைய கால கிராமீய வாழ்வு வாழ வேண்டியிருக்கும். ஒரு கிராமத்தை விட்டு அடுத்த ஊருக்குப்போக அந்தக் காலத்தில் இப்படி பார்த்திருப்பார்கள் போலும்.

Xxx

அம்பலவாணக் கவிராயர் இயற்றிய அறப்பளீசுர சதகம்

69. பூப்பு வாரம்

அருக்கனுக் கதிரோகி யாவள்;நற் சோமனுக்

     கானகற் புடைய ளாவாள்;

  அங்கார கற்குவெகு துக்கியா வாள்;புந்தி

     அளவில்பைங் குழவி பெறுவாள்;

திருத்தகு வியாழத்தின் மிக்கசம் பத்தினொடு

     சிறுவரைப் பெற்றெ டுப்பாள்;

  சீருடைய பார்க்கவற் கதிபோக வதியுமாம்;

     திருவுமுண் டாயி ருப்பாள்;

கருத்தழிந்து எழில்குன்றி வறுமைகொண்டு அலைகுவாள்

     காரிவா ரத்தி லாகில்;

  களபமுலை மடமாதர் புட்பவதி யாம்வார

     காலபலன் என்று ரைசெய்வார்;

அருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட சோதியே!

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட சோதியே –

அன்புடன் எளிய என்னை அடிமையாக ஏற்ற பேரொளியே!; அருக்கனுக்கு

அதிரோகி ஆவாள் – ஞாயிற்றுக் கிழமையில் மிகுநோயுடையவள் ஆவள்,

நல்சோமனுக்கு ஆனகற்பு உடையவள் ஆவாள் – நல்ல திங்களில்

மிகுதியான கற்புடையவள் ஆவாள், அங்காரகற்கு வெகு துக்கி ஆவாள் –

செவ்வாயில் மிகுந்த வருத்தமுடையவள் ஆவாள்,புந்தியில் அளவுஇல் பைங்குழவி பெறுவாள் – புதனில் மிகுதியான

குழந்தைகளைப் பெறுவாள், திருத்தகு வியாழத்தில் மிக்க சம்பத்தினொடு

சிறுவரைப் பெற்றெடுப்பாள் – சிறப்புற்ற வியாழனில் அளவற்ற செல்வத்துடன் மக்கட்பேறும் உடையவளாயிருப்பாள், சீருடைய பார்க்கவற்கு அதிபோகவதியும்ஆம்; திருவும் உண்டாயிருப்பாள் – புகழ்மிக்க வெள்ளியில் மிகவும் இன்பமுடையவளும் செல்வமுடையவளும் ஆவாள், காரிவாரத்தில் ஆகில்கருத்து அழிந்து எழில்குன்றி வறுமைகொண்டு அலைகுவாள் – சனிக்கிழமையில் ஆனால் மனங்கெட்டுஅழகிழந்து, வறுமையுடன் திரிவாள்,

களபமுலை மாதர் புட்பவதிஆம் வார காலபலன் என்று உரைசெய்வார் –

கலவைச் சந்தனம் பூசிய கொங்கையையுடைய பெண்கள் பூப்படைகிற

வாரகால பலன் (இவை) எனக் (கற்றவர்) கூறுவர்.

Xxxxxx

பெண்கள் மேடம், இடபம், கடகம், சிங்கம், விருச்சிகம், தனுசு,

மகரம் ஆகிய இராசிகளிற் பூப்படைதல் தீது : மற்றவை நலம்என்பது அடுத்த பாடலின் கருத்து  அதாவது 12 லக்னப்படி பலன்.. மேலேயுள்ள பாடலுக்கு நான் சொன்ன கருத்து இதற்கும் பொருந்தும்

           70. பூப்பு இலக்கினம்

வறுமைதப் பாதுவரும் மேடத்தில்; இடபத்தில்

     மாறாது விபசா ரிஆம்;

  வாழ்வுண்டு போகமுண் டாகும்மிது னம்; கடகம்

     வலிதினிற் பிறரை அணைவாள்;

சிறுமைசெயும் மிடிசேர்வள் மிருகேந் திரற்கெனில்

     சீர்பெறுவள் கன்னி யென்னில்;

  செட்டுடையள் துலையெனில்; பிணியால் மெலிந்திடுவள்

     தேளினுக் குத்; தனுசுஎனில்

நெறிசிதைவள், பூருவத் தபரநெறி உடையளாம்;

     நீள்மகரம் மான மிலளாம்;

  நிறைபோக வதிகும்பம் எனில்; மீனம் என்னிலோ

     நெடியபே ரறிவு டையளாம்;

அறிவாளர் மடமாதர் தமையறி இராசிபலன்

     அதுவென்பர்; அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அருமை ……. தேவனே!, மேடத்தில் வறுமை தப்பாது வரும்

– மேடஇராசியில் (பூப்படைந்தால்) தவறாமல் வறுமை உண்டாகும், இடபத்தில் மாறாது விபசாரி ஆம் – இடபராசியில் தவறாமல் தீய ஒழுக்கமுடையளாவள்,

மிதுனம் வாழ்வு உண்டு, போகம் உண்டாகும் – மிதுனத்தில் வாழ்வும்

இன்பமும் அடைவாள்; கடகம் வலிதினில் பிறரை அணைவாள் – கடகத்தில்தானே (கணவன் அல்லாத) மற்றவரைத் தழுவுவாள், மிருகேந்திரற்கு எனில்

சிறுமை செயும் மிடிசேர்வாள் – சிங்கத்தில் இழிவுதரும் வறுமையுடையளாவள்,

கன்னி என்னில் சீர்பெறுவள் – கன்னியில் ஆயின் புகழ்பெறுவாள்,

துலையெனில் செட்டுடையள் – துலையாயின் சிக்கனம் உடையளாயிருப்பாள்,

தேளினுக்குப் பிணியால் மெலிந்திடுவள் – விருச்சிகத்தில் நோயால்

இளைத்திடுவாள், தனுசுஎனில் நெறி சிதைவள், பூருவத்து அபரநெறி

உடையள்ஆம் – தனுசில் ஆனால் ஒழுக்கம் கெடுவாள்முன்னும் பின்னுந் தீயஒழுக்கம் உடையவளாகவே யிருப்பாள், நீள்மகரம் மானம்இலள்ஆம் – பெரிய மகரத்தில் பெருமை இழந்தவள் ஆவாள், கும்பம் எனில்

நிறைபோகவதி – கும்பத்தில் நிறைந்த இன்பம் உடையவள் ஆவாள், மீனம்

என்னிலோ நெடிய பேரறிவு உடையள்ஆம் – மீனத்தில் ஆனால் மிகுந்த

பேரறிவு உடையவள் ஆவாள், மடமாதர் தமை அறிவாளர் அறி இராசிபலன்

அதுஎன்பர் – இளமங்கையரை அறிவாளர் அறிவதற்குரிய இலக்கின பலன் இது என்று கூறுவர்.

     (க-து) பெண்கள் மேடம், இடபம், கடகம், சிங்கம், விருச்சிகம், தனுசு,

மகரம் ஆகிய இராசிகளிற் பூப்படைதல் தீது : மற்றவை நலம்

xxxx

tags– பெண்கள் , பூப்படைதல், பருவமடைதல், அறப்பளீசுர சதகம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: