
Post No. 11,667
Date uploaded in London – 14 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஹெல்த்கேர் 2023 ஜனவரி இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
How Food Powers Your Body
உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது? – 2
ஆங்கில மூலம் : ஜேம்ஸ் சாமர்ஸ் (James Somers)
தமிழில் : ச.நாகராஜன்
அறிந்து கொள்ளுங்கள் : க்ரெப்ஸ் சுழற்சி பற்றி!
இது எப்படி நடைபெறுகிறது என்பதை நன்கு தெரிந்து கொள்ள இன்னும் பல நூற்றாண்டுகள் பிடித்தன. கடைசி கடைசியாக ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில் ஹங்கேரியைச் சேர்ந்த இரசாயன இயல் வல்லுநரான ஆல்பர்ட் ஜெண்ட் கையோர்கி (Albert Szent-Györgyi) புறாக்களின் மார்பு தசைகளை ஆராய்ந்த போது வெற்றி கிடைத்தது.
அந்த தசையானது பறவைகளைப் பறக்கும் போது மிக வலிமையாக இருக்கும்படி அமைந்திருந்தது; அது தூள்தூளாக்கப்பட்ட பின்னரும் கூட வளர்சிதைமாற்றதில் அதிக இயக்கத்தைக் கொண்டிருந்தது. ஜெண்ட் கையோர்கி சில திசுக்களை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டார். பின்னர் மிகுந்த கவனத்துடன் வெவ்வேறு இரசாயனங்களை அதில் போடும் போது வெளிப்படும் வெப்பம் மற்றும் வாயுவின் அளவுகளைக் குறித்தார். சில அமிலங்கள் தசை வளர்சிதை மாற்றத்தின் விகிதத்தை ஐந்து மடங்குக்கும் அதிகமாக அதிகரிப்பதை அவர் கண்டார். அதிசயிக்கத்தக்க வகையில், இந்த அமிலங்கள் எதிர் வினைகளில் தாமாக உட்கொள்ளப்படவில்லை. ஜெண்ட் கையோர்கி சிறிய பாத்திரத்தில் எவ்வளவு போட்டாரோ அந்த அளவை வெளியே எடுக்க முடிந்தது. அமிலங்கள் ஒரு விதமான ரசாயன விளைவில் வேகமாகவோ அல்லது ஊக்குவிகளாக இருந்தோ வளர்சிதை மாற்றத்தைச் செய்து நிலையாக உடைபடுவதும் பிறகு மறுபடி திரும்பி உருப்பெறுவதுமாக இருந்ததை அவர் உணர்ந்தார்.
சில வருடங்கள் கழிந்த பிறகு ஜெர்மனியைச் சேர்ந்த உயிரியல் இரசாயன நிபுணரான ஹான்ஸ் க்ரெப்ஸ் ழ் ( Hans Krebs) இந்த இரசாயன சுழற்சியை இன்னும் அதிகமாக விவரித்தார். அது தான் நம்மால் இன்று அறியப்படும் க்ரெப்ஸ் சுழற்சியாகும். (Krebs cycle)
உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது உயிரியல் வகுப்பில் க்ரெப்ஸ் சுழற்சி பற்றிப் படித்தது உங்களுக்கு சிறிது ஞாபகத்தில் இருக்கலாம் அல்லது ஒருவேளை பரிட்சை முடிந்த பிறகு அதை மறந்திருக்கலாம். நீண்ட நெடுங்காலம் பள்ளியில் எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம் க்ரெப்ஸ் சுழற்சி தான். அது எனக்கு ஒரு போராகவும் திகைப்பைத் தரும் ஒன்றாகவும் அப்போது இருந்தது.
வரிசையாக உள்ள டெஸ்குகளில் அமர்ந்து இவற்றின் ராக்ஷஸ பாகங்களை – சசினேட், பைருவேட், அசிடில் சிஓஏ, சைடோக்ரோம் சி (succinate, pyruvate, Acetyl-CoA, cytochrome c) என்று சொல்லக் கேட்டோம். கரும்பலகையில் எழுதப்படுவதைப் பார்த்தோம். நாங்கள் என் ஏ டி மற்றும் எஃப் ஏ ஹெச்2எச் (NAD+s and FADH2s) ஆகியவற்றை எண்ணினோம். பின்னர் ரிடாக்ஸ் எதிர்வினைகளை அவை ஆக்ஸிடைஸ் ஆகி குறைந்த மூலகங்களாக ஆவது பற்றிக் கேட்டோம்.( “redox” reactions as they “oxidized” or “reduced” elements.)

பாடபுத்தகத்தில் இருந்த படங்களை நான் மனப்பாடமாக நினைவில் வைத்துக் கொண்டேன். அம்புக் குறிகள், சிறிய எழுத்துக்கள், ப்ளஸ் மற்றும் மைனஸ் குறிகள் – ஆகிய இவை அனைத்தையும் எதற்காக இந்த சுழற்சி இருக்கிறது என்பதை அறியாமலேயே நினைவில் வைத்துக் கொண்டேன். இதை உணராமலேயே அனைவரும் இருந்தோம். 38 வருட காலம் ஓடிய பெரிய நவீன இடர்ப்பாடில் இது பற்றி ஆறே ஆறு முறை தான் இது பற்றிக் கேட்கப்பட்டது. மூன்று பேரை இது மேடையில் திணற அடித்தது!
கரிம வேதியலில் ஏராளமான அழகிய விஷயங்கள் இருக்கும் போது, இப்படிப்பட்ட திடுக்கிடும் தொடர்புகள் இருப்பது வெட்கக்கேடான ஒரு விஷயம். உயிரியல் வேதியல் நிபுணரான நிக் லேன் (Nick Lane) தனது புத்தகமான ‘ட்ரான்ஸ்ஃபார்மர் : தி டீப் கெமிஸ்ட்ரி ஆஃப் லைஃப் அண்ட் டெத்’ (Transformer: The Deep Chemistry of Life and Death) என்ற புத்தகத்தில் எழுதுகையில் க்ரெப்ஸ் சுழற்சி குறிப்பாக மாயாஜாலமான ஒன்று – அது வளர்சிதை மாற்றத்தின் அஸ்திவாரம் மட்டுமல்ல பூமியில் உள்ள சிக்கலான வாழ்க்கையின் அனைத்திற்குமே ஆதாரமானது என்று எழுதுகிறார். மேலும் அது ஒன்றும் புரிந்து கொள்வதற்கு அவ்வளவு சிரமமான ஒரு விஷயம் அல்ல!
இன்றைய நாட்களில், ஏ.பி. உயிரியலை (A.P. Bio) படிக்காமல் விட்டவர்கள் கூட மரபணுக்களைப் பற்றி நன்கு தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். பெருந்தொற்று நோய் வந்தாலும் வந்தது, அதற்கு நன்றி தான் சொல்ல வேண்டும், நாம் அனைவரும் பேசும் போது புரோடீன், எம் ஆர் என் ஏ (mRNA) என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது என்ன பேசுகிறோம் என்பதைத் தெரிந்து கொண்டே பேசுகிறோம். லேன் இது பற்றி விவாதிக்கும் போது டி என் ஏ அறிவானது ஒருவகையிலான மரபணு பாரபட்ச நோக்கு தான் என்கிறார்.
வாழ்க்கையின் ரகசியம் முழுவதுமாக முற்றிலும் நமது மரபணுக்களில் எழுதப்படவில்லை. அது நாம் உலகில் எப்படி ஆற்றலை இழுத்துக் கொள்கிறோம் – எப்படி வாழ்க்கை முழுவதும் நடக்கும் போது மெதுவாக எரித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் பொறுத்தே இருக்கிறது. க்ரெப்ஸ் சுழற்சியைப் புரிந்து கொள்வதானது பயன் தரக்கூடிய ஒன்று. ஏனெனில் அது உயிருடன் இருப்பதன் அர்த்தத்தை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள உதவுகிறது.
*** தொடரும்