
Post No. 11,668
Date uploaded in London – – 14 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
புராணங்களில் பூகோளம் / புவியியல் GEOGRAPHY IN PURANAS
இந்துக்களின் விஞ்ஞான அறிவை விளங்கிக்கொள்ள கொஞ்சமாவது சம்ஸ்க்ருத அறிவு தேவை. கிரஹம் என்று விண்ணிலுள்ள சந்திரன் ,சூரியன், செவ்வாய், புதன், வியாழன் , வெள்ளி , சனி முதலியவற்றுக்குப் பெயர் சூட்டினர் ; கிரஹ என்றால் ஈர்ப்பு விசை GRAVITATIONAL FORCE உடையது என்று பொருள் ; இதிலிருந்துதான் GRIP கிரிப், GRAB க்ராப் , GRAVITY கிராவிடி என்ற சொற்கள் உதித்தன; கல்யாணத்தை ‘கை ப்பிடித்தல்’= ‘பாணி கிரஹணம்’ என்பர் ; பிடிப்பது= ஈர்ப்பு உடையது . தமிழர்களும் அதை அப்படியே மொழிபெயர்த்து ‘கோள்’ என்றனர் ; இதன் வினைச் சொல் – கொள் (கொள்முதல் செய்தல், கொள்ளை , கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளுக என்ற சொற்களில் இருந்து கொள் /கோள் முதலியவற்றின் பொருள் = கிரஹ= பிடி என்பதை அறியலாம் ).
அடுத்த மகத்தான விஞ்ஞான கண்டுபிடிப்பு பிரபஞ்சத்திலுள்ள அத்தனை பொருட்களும் வட்ட வடிவமானவை CIRCULAR, GLOBULAR. சங்கத் தமிழ் நூல்களானாலும் சரி, சம்ஸ்க்ருத நூல்களானாலும் சரி எல்லாவாற்றையும் மண்டலம், வட்டம், கோளம்/GLOBE என்றே சொல்லுவார்கள். கோளம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லே க்ளோப் GLOBE என்று மருவியது .
இதே போல உலகில் உயரமான இடம் EVEREST என்று ஜார்ஜ் எவரெஸ்ட் கண்டுபிடிக்கவில்லை. மேரு என்னும் இமய சிகரம்தான் உலகில் உயர்ந்தது என்பது இந்துக்களுக்குத் தெரிந்து இருந்ததால் அதை மையமாக வைத்து உலக வரைபடத்தை வட்டத்துக்குள் வட்டமாக CONCENTRIC CIRCLES வரைந்தனர்.
புராணங்களில் சொல்லும் 7 த்வீபங்களை இப்படி நோக்கினால் 7 கண்டங்களும் 7 துவீபங்களாக வரையப்பட்டிருப்பதை மனக் கண் மூலம் காணலாம் இதைச் சொல்பவர் புவியியல் நிபுணரான பேராசிரியர் கே எஸ் வால்டியா GEOLOGIST PROFESSOR K S VALDIYA ஆவார்.
இன்னொரு விளக்கமும் உண்டு. வட துருவத்தையும் மேரு என்று புராணங்கள் வருணிக்கின்றன அங்கிருந்து ஒருவர் எந்தப்பக்கம் திரும்பி நடந்தாலும் அவர் தென் திசையை நோக்கி நடப்பதாகவே அர்த்தம். அப்படியே 9000 மைல்கள் நடந்தால் தென் துருவத்துக்கு வந்து விடுவார். இவை எல்லாம் நமது ரிஷிகளுக்கு நன்கு தெரியும்; ஏனெனில் அவர்கள் யூரி ககாரினுக்கும்(RUSSIAN ASTRONAUT YURI GAGARIN) முன்னரே விண்வெளியில் பறந்தார்கள் . இந்தக் கண்ணோட்டத்தில் புராணங்களில் உள்ள , வால்மீகி ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்ட வருணனைகளைப் படித்தால் அவர்கள் விஞ்ஞானிகள் என்பது விளங்கும்.
XXX
ஏ என் சிவராமன் அட்வைஸ் A N Sivaraman’s Advice
நாங்கள் பத்து உதவி ஆசிரியர்கள் (DINAMANI SUB EDITORS) , மதுரை தினமணி டெஸ்கில் உட் கார்ந்து எழுதிக்கொண்டே இருப்போம்; ஆசிரியர் ஏ என் சிவராமன் யாராவது ஒருவர் பின்னால் நின்று கொண்டு உபன்யாசம் செய்யத் துவங்கி விடுவார்.
“ஏய் , இந்த தூரக்கிழக்கு FAR EAST , மையக் கிழக்கு MIDDLE EAST , NEAR EAST அருகிலுள்ள கிழக்கு நாடுகள் என்றெல்லாம் எழுதுகிறீர்களே; அதற்கு அர்த்தம் தெயுமா ? இதெல்லாம் வெள்ளைக்காரன், அவன் வாழும் இடத்தை மனதில் வைத்துக்கொண்டு, கற்பித்த சொற்கள் என்று விளக்கம் தருவார். நம் சிந்தனையையும் தூண்டி விடுவார்.
முதலில் புத்தாண்டு உதிப்பது ஜப்பான், கொரியா ஆஸ்திரேலியா , இந்தியா, இங்கிலாந்து என்பதெல்லாம் நாமாக கிழக்கு திசை என்று வைத்த புள்ளிதான். வட்டத்தில் எந்தப் புள்ளியையும் முதல் புள்ளி என்று சொல்ல சின்னக் குழந்தைக்கும் கூட உரிமை உண்டு. நாம் கற்பித்த அட்ச ரேகை தீர்க்க ரேகைப்படி நேரத்தையும் இடத்தையும் பெயரிடுகிறோம்
இந்தக் கொள்கையை புரிந்து கொண்டால், ஏன் நம்முடைய புராணங்கள் நாடுகளை, த்வீபங்களை வெவ்வேறு விதமாக வருணிக்கின்றன என்று புரிந்து கொள்ளலாம். இந்தியர்களான நாம் கூட காலை 4 மணிக்கே சூரியன் உதிக்கும் அருணாசல பிரதேசத்துக்கு சூரிய மலை(அருணாசலம்) என்று பெயரிட்டுள்ளோம். ஏனெனில் பாரத வாசிகளுக்கு அதுதான் தூரக்கிழக்கு.
காளிதாசனும் சங்கப்புலவர்களும் உலகிலேயே உயர்ந்த மலை இமயம் என்று தெரிந்து கொண்டதால் மன்னர்களை இமயம் போல வாழ்க என்றுதான் வாழ்த்துகின்றனர்
2200 ஆண்டுகளுக்கு முன்னர்– சங்கப்புலவர்களுக்கு முன்னால் — வாழ்ந்த காளிதாசன், இமயத்தை பூமியின் அளவு கோல் என்று வருணிக்கிறான் . அவன் விண்வெளியிலிருந்து பார்த்தால்தான் இப்படிப் பாட முடியும்..
இதே போல கீழ்கண்ட பாடலில், அம்பலவாணர் பாற் கடல் , நெய்க்கடல், கரும்புச் சார் கடல் எ ன்று பாடுவ பதை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் அதன் தோற்றம் எப்படி இருந்தது என்று பார்க்க வேண்டும்.
2012-ல் புராண பூகோளம் பற்றி நூல் எழுதிய புவி இயல் நிபுணர் கே எஸ் வால்டியா ஒரு விஞ்ஞானி. புராண உபன்யாசகர் அல்ல. அவர் 18 புராணங்களிலிருந்தும், கிஷ்கிந்தா காண்டத்திலிருந்தும் நூற்றுக் கணக்கான ஸ்லோகங்களைக் கொடுத்து விளக்குகிறார். அதற்கு முன்னரும் புராண பூகோளம் பற்றிப் பலர் புஸ்தகங்கள் எழுதியுள்ளனர்
Geography Peoples and Geo Dynamics of India in Puranas and epics- A Geologit’s Interpretations, K S Valdiya, Aryan Books, International, New Delhi, 2012
xxxx
புராணங்களில் உள்ள தீவுகளின் வருணனையை அம்பலவாணர் அப்படியே தந்துள்ளார் .
நமக்குத் தெரிந்தவரை உலகில் எல்லா நாடுகளைச் சுற்றியுள்ள கடலும் உப்புக் கரிக்கும் கடல்தான் ; அதிலுள்ள உப்பின் சதவிகிதம் மட்டும் கடலுக்கு கடல் சிறிது மாறுபடும்.
கங்கை,சிந்து, அமேசான், நைல் போன்ற நதிகள் கலக்குமிடத்தில் மட்டும் நூற்றுக் கணக்கான மைல்களுக்கு உப்பு இருக்காது.
ஆயினும் புராணங்கள் இப்படிச் சொல்வதாற்கு கடல்களின் APPEARANCE தோற்றம் காரணமாக இருக்கலாம்.
எடுத்துக் காட்டாக துருவப் பகுதிகளுக்குச் சென்றால் வெள்ளை நிற ஐஸ் கட்டிப் பாறைகள் மிதக்கும் இடம் பாற்கடல் MILKY WHITE OCEAN போலத் தோன்றும். பனிக்கட்டி நீரும் உப்புக் கரிக்காது ; அம்பலவாணர் பட்டியல் இதோ:
நாவல், — கருங்கடல்,
இலவு, — கழைச்சாற்றுக் கடல்
குசம், — , கட்கடல் (மது – கள்),
கிரவுஞ்சம், —நெய்க்கடல்,
சாகம், — பாற்கடல்,
சான்மலி, – தயிர்க்கடல்
புட்கரம் : , நறுநீர்க் கடல் என ஏழு கடல்கள்

அடுத்த பாடலில் மாணிக்கம் போன்ற மனிதர்கள் யார் யாரென விளக்குகிறார்
நெற்றியில் சுழிகளுடன் உள்ள குதிரை;
அறிவுடைய தலைவன்;
படித்த, அடக்கமான பாவலன்;
கற்புஉடைய பாவை;
செல்வம் படைத்த கொடையாளி;
மெய்ஞ்ஞானம் பெற்றவன் ஆகியோர் மனிதருள் மாணிக்கங்கள்.
XXX
71. தீவும் கடலும்
நாவலந் தீவினைச் சூழ்தரும் கடலளவு
லட்சம்யோ சனை;இ தனையே
நாள்தொறும் சூழ்வதில வந்தீவு; அதைச்சூழ்தல்
நற்கழைச் சாற்றின் கடல்;
மேவுமிது சூழ்வது குசத்தீவ தைச்சூழ்தல்
மிகுமதுக் கடல்;அ தனையே
விழைவொடும் சூழ்தல்கிர வுஞ்சதீ வம்இதனின்
மேற்சூழ்தல் நெய்க்க டலதாம்;
பூவில்இது சூழ்தல்சா கத்தீவம்; இங்கிதைப்
போர்ப்பது திருப்பாற் கடல்;
போவதது சூழ்தல்சான் மலிதீவம் ஆம்; தயிர்ப்
புணரிஅப் பாலும் அப்பால்
ஆவலுறு புட்கரத் தீவாம் இதைச்சூழ்வ
தரும்புனற் றருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அருமை …… தேவனே!, நாவல்அம் தீவினைச் சூழ் கருங்கடல்
அளவு லட்சம் யோசனை – நாவலந் தீவாகிய இதனைச் சூழ்ந்த கருங்கடலின் பரப்பு இலட்சம் யோசனை, இதனையே நாள்தொறும் சூழ்வது இலவம்தீவு – இந்தக் கடலை எப்போதும் சூழ்ந்திருப்பது இலவந்தீவு, அதைச் சூழ்தல் நல்கழைச் சாற்றின் கடல் – அதனைச் சூழ்ந்திருப்பது இனிய கருப்பஞ்சாற்றுக்
கடல், மேவும் இது சூழ்வது குசத்தீவு – பொருந்திய இதனைச் சூழ இருப்பது
குசத்தீவு, அதைச் சூழ்தல் மிகும் மதுக்கடல் – குசத்தீவைச் சூழ்வது மிகுந்த மதுவின் கடல், அதனை விழைவுடன் சூழ்தல் கிரவுஞ்ச தீவம் – மதுக்கடலை
விருப்பத்துடன் சூழ்ந்திருப்பது கிரவுஞ்ச தீவு, இதனின்மேற் சூழ்தல்
நெய்க்கடலது ஆம் – கிரவுஞ்சத் தீவினைச் சூழ்ந்திருப்பது நெய்க்கடல் ஆகும், பூவில்இது சூழ்தல் சாகத்தீவம் – உலகில் இதனைச் சூழ்வது சாகத்தீவு, இங்கு இதைப் போர்ப்பது திருப்பாற் கடல் – இவ்வுலகில் சாகத்தீவை வளைவது திருப்பாற் கடல், போத அதுசூழ்தல் சான்மலி
தீவம்ஆம் – நன்றாக அதனைச் சூழ்வது சான்மலித் தீவு, அப்பாலும்
தயிர்ப்புணரி – அதற்கப்புறம் (சூழ்வது) தயிர்க்கடல், அப்பால் ஆவல்உறு
புட்கரத்தீவு ஆம் – அதற்கப்புறம் (சூழ்வது) விருப்பம் ஊட்டும் புட்கரத்தீவு, இதைச் சூழ்வது அரும்புனற்று – இதனைச் சூழ்வது அரிய நன்னீர்க்கடல்.
(வி-ரை.) நாவல்அம் தீவு – நாவல் மரங்கள் நிறைந்த தீவு. இலவுஅம்
தீவு – இலவ மரங்கள் நிறைவான தீவு. குசம் – தர்ப்பை; தர்ப்பைத் தீவு.
கிரவுஞ்சம் – அன்றில் (ஒருவகைப் பறவை) : கிரவுஞ்சப் பறவையையுடைய தீவு. சாகம் – தேக்கு : தேக்குமரத் தீவு. சான்மலி என்பதும் இலவமரமே. புட்கரம் – பருந்து. நாவல், இலவு, குசம், கிரவுஞ்சம், சாகம், சான்மலி, புட்கரம் : இவற்றை மிகுதியாகவோ சிறப்பாகவோ உடைய ஏழுதீவுகள்.அவ்வாறே கருங்கடல், கழைச்சாற்றுக் கடல், கட்கடல் (மது – கள்),நெய்க்கடல், பாற்கடல், தயிர்க்கடல், நறுநீர்க் கடல் என ஏழு கடல்கள்
இவ்வாறு புராணம் கூறும்.

Xxxx
72. மாணிக்கங்கள்
சுழிசுத்த மாயிருந்ததிலும் படைக்கான
துரகம்ஓர் மாணிக் கம்ஆம்;
சூழ்புவிக் கரசனாய் அதிலேவி வேகமுள
துரையுமோர் மாணிக் கம்ஆம்;
பழுதற்ற அதிரூப வதியுமாய்க் கற்புடைய
பாவையோர் மாணிக் கம்ஆம்;
பலகலைகள் கற்றறி அடக்கமுள பாவலன்
பார்க்கிலோர் மாணிக் கம்ஆம்;
ஒழிவற்ற செல்வனாய் அதிலே விவேகியாம்
உசிதனோர் மாணிக் கம்ஆம்;
உத்தம குலத்துதித் ததிலுமோ மெய்ஞ்ஞானம்
உடையனோர் மாணிக் கம்ஆம்; அழிவற்ற வேதாக மத்தின்வடி வாய்விளங்
கமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அழிவுஅற்ற வேதஆகமத்தின் வடிவாய் விளங்கு அமலனே
– கெடுதல் இல்லாத மறைவடிவாயும் ஆகம வடிவாயும் விளங்கும் தூயவனே!,
அருமை ……. தேவனே!, சுழி சுத்தமாய் இருந்து, அதிலும் படைக்கு ஆன
துரகம் ஓர் மாணிக்கம் ஆம் – தூய சுழிகளுடன் போருக்கும் பயன்படும் குதிரை ஒரு மாணிக்கம் போன்றது, சூழ்புவிக்கு அரசனாய் அதிலே விவேகம் உளதுரையும் ஓர் மாணிக்கம் ஆம் – சூழும் உலகிற்கு மன்னனாகி மேலும் அறிவும் உடைய தலைவன் ஒரு மாணிக்கம் போன்றவன், பழுதுஅற்ற அதிரூப வதியுமாய்க் கற்புஉடைய பாவை ஓர் மாணிக்கம் ஆம் – குற்றமற்ற சிறந்த அழகும் கற்பும் உடைய மங்கை ஒரு மாணிக்கம் போன்றவள், பல
கலைகள் கற்றுஅறி அடக்கம்உள பாவலன் பார்க்கில் ஓர் மாணிக்கம் ஆம்
– பலவகையான கலைகளைப் படித்தறிந்து, அடக்கமாயிருக்கும் பாவலன் ஆராயின் ஒரு மாணிக்கம் போன்றவன், ஒழிவுஅற்ற செல்வனாய் அதிலே தியாகியாம் உசிதன் ஓர் மாணிக்கம் ஆம் – அளவில்லாத செல்வத்துடன் மேலுங் கொடையாளியுமான உயர்ந்தோன் ஒரு மாணிக்கம் போன்றவன்,
உத்தம குலத்து உதித்து அதிலும் மெய்ஞ்ஞானம் உடையன் ஓர் மாணிக்கம்
ஆம் – நல்ல குடியிற் பிறந்து மேலும் மெய்யறிவும் உடையவன் ஒரு
மாணிக்கம் போன்றவன்.
–subham—
tags- 7 தீவுகள், ஏழு, கடல்கள் , ஜம்புத்வீபம், புராண, பூகோளம் , பாற்கடல் , சதகம் , மாணிக்கங்கள்