லண்டன் டாக்டர் நாராயணனின் மார்கழிக் கவிதைகள்- 8 (Post.11,543-part 8)

WRITTEN BY Dr A. Narayanan Ph.D., London

Post No. 11,543- Part 8

Date uploaded in London – 14 January 2023              

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

மார்கழித்திங்கள் 28 

பசுக்களை கானகத்தே மேய விட்டு நல்லுணவு

புசித்து உடலைப் பேணுவதின்றி தேவை வேறறியா

பாமரராய் அறிவிலா ஆய்குலத்தோரிடையே

பேதம் காணாப் பழகிய போதனான கோவிந்தா!

பிரியாத உன் உறவின் பெருமையும் கீர்த்தியும்

தெரியாதுன்னை அன்று சிறு பேரழைத்ததில்

சினம் கொள்ளா மன்னித்துப் பறை தருவாயோ

என்று ஆய்ச்சியர் குலத்தோரிலொருத்தி போல்

முறையிட்ட கோதை வாழியே

 நாராயணன்

கூடாரை வெல் பவனும் கூடியவருடன்

குளிர்ந்து நீராடுபவனும் நாடு புகழும்

கோவிந்தனைத் தேடி அலைந்து கிட்டாத

கோவலனைக் கட்டிவிட்ட பாமாலையில்

புரியாத சொற்களுக்கவன் பொருள் கேட்க

புதிரான நீயே அவைகளின் பொருளென்றாளே

XXXX

மார்கழித்திங்கள் 29 

பொழுது விடியும் முன் கோயில் படி வாயில் நின்றுன்

பொற்றாமரையடி போற்றி யாம் கோரும் பலனோ

உற்ற உறவினனாய் ஆய்ச்சியர் குலம் தோன்றிக்

கற்றுக்கறவைகள் பல கறந்துப் பாலும் தயிரும்

சற்றும் தயங்காமல் எம்முடன் பகிர்ந்த கோவிந்தா!

ஏற்றுக் கொள்வீரே ஏழேழ் பிறவி எங்கள் குலமுதிக்க

பற்றறுத்து யாமுன் திருவடி பற்றிப் பணி புரிவதற்று

வேறின்பம் எப் பறை பொருளும் தர இயலாவென

ஆய்ச்சியாக பாவித்துரைத்த பாவை வாழியே

நாராயணன்

வேதியருக்கெல்லாம் வேதியன்

வேதனை விளைப்போர்க்கு விருத்தன்

வேண்டுவோர்க்கு விருந்தினன்

விசயனுக்கு சாரத்யன்

ஏற்றோர் எளியோரெனறியான்

வெற்றிடம் வேறிடமறியான்

பற்றுமிடமோ அவனையே பற்றுவோரை

உற்றவரவரென உறவு கொண்டாடுவானே

நாராயணன்

XXXX

மார்கழித்திங்கள் 30

கலங்களுடைய திருப்பாற்கடலை மாதவனே கேசவனுமாய்

கடைந்தமுதமெடுக்கத் தனை ஆட்படுத்திக் கொண்டோனை

கண் கவருமாடையணிகலன் அணிந்த மதிமுக ஆய்ச்சியர்கள்

கனிமொழியில் போற்றிப் பாட வேதியர் கோன் விட்ணுசித்தன்

கன்னிமகள் பூங்கோதை வாய் பொழிந்த பாமலையே போதுமென

பாரோரனைவரும் பரகதியடைய பாசுரங்கள் முப்பதும் திராவிட

வேதமாயோதிட திரண்ட தோள்களும் செந்தாமரைக் கண்களும்

கொண்ட திருமாலின் நீ ங்கா நிறை செல்வம் நிலைத்திடுமென

வாக்குறு தியளித்த வனிதை கோதை வாழியே 

போற்றுவோம் போற்றுவோம் கோதையைப் போற்றுவோம்

கோதையைப் பற்றிய கோவிந்தனைப் போற்றுவோம்

போற்றுவோம் போற்றுவோம் கோவிந்தனைப் போற்றுவோம்

கோவிந்தனைப் பற்றியத் திருப்பாவையைப் போற்றுவோம்

நாராயணன்

 —SUBHAM—

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: