என்ன இலையில் சாப்பிடலாம் ? கவிஞன் யார் ? (Post.11,671)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,671

Date uploaded in London – –  15 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

அறப்பளீசுர சதகத்தில் மேலும் 3 பாடல்களை எடுத்துக் கொள்வோம். ஒன்று, என்ன இலையில் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறது. இரண்டு பாடல்கள் கவிஞர்கள் பற்றியவை..

வாழை இலையில் சாப்பிட்டால் நல்லது என்பது எல்லோரும் அறிந்ததே, நிறைய பேர்,  தாமரை இலையில் சாப்பிடுகின்றனர். கிராமப்  புறத்தில் மந்தாரை முதலிய இலையில் சாப்பிடுவார்கள்; பல இலைகளை ஒன்றாகச் சேர்த்து தையல் இலை என்று பயன்படுத்துவார்கள்.

நான் மந்த்ராலயத்தில் உள்ள ராகவேந்திரர் சமாதிக்குச் சென்றபோது தையல் இலையில்தான் சாப்பாடு போட்டார்கள்.

அந்தக் காலத்தில் பல ரயில்வே ஸ்டேஷன்களில்  வடை, இட்லி, போண்டா  முதலியவற்றை இலையில் மடித்துத்தாஹ்ன் விற்றார்கள். இப்பொழுது மேற்கு நாடுகளில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து சிறிது சிறிதாக அகற்றி வருகிறார்கள்.. இபொழுது சணல் பைகள் விற்பனையாகின்றன. இன்னும் கொஞ்ச்ம காலத்துக்குப்பின்னர் தையல் இலைகள், தொன்னை ஆகியன மேலை நாடுகளில் உபயோகத்துக்கு வரலாம்..

தையல் இலை (Patravali or Pattal or Vistaraku or Vistar or Khali ) என்பது உணவு உண்ண உலர்ந்த இலைகளைக் கொண்டு செய்யப்படும் உண்கலமாகும். இது பெரும்பாலும் குங்கிலிய இலை, மந்தார இலை ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது. ஆலிலையும் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது என்று விக்கிபீடியா கூறுகிறது கர் நாடகத்தில் உள்ள தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதர் சுவாமி கோயிலில்  அன்னதானத்திற்கு இப்போதும் இந்த தையல் இலைகளே பயன்படுத்தப்படுகின்றன.

(மதுரையில் தேர்முட்டி / கீழ மாசிவீதியில் உள்ள பல சரக்குக்கடைகளில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் நானே தையல் இல்லை, தொன்னை ஆகியவற்றை வாங்கியது நினைவுக்கு வருகிறது.)

xxxx

வாழையிலைபுன்னைபுரசு,குருக்கத்திமாபலாதெங்குபன்னீர் இலைகள் நல்லவை.

அடுத்த பாடலில் கஞ்சனை கர்ணன் என்றும்,அவலட்சணமானவனை மன்மதன் என்றும்,ஆண்மையற்றவனை அர்ஜுனன் என்றும் பொய்யனை அரிச்சந்திரன் என்றும் ,புகழாதீர்கள் என்கிறார்.

Xxx

அடுத்த பாடலில் கவிஞன் என்பவனுக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு கடல் மடை திறந் தாற்போல சொற்பொழிவு ஆற்றும் திறன் வேண்டும் என்கிறார். இதைப் படிக்கும்போது பாரதியின் வரிகள் நமக்கு நினைவுக்கு வரும்

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்

வாக்கினிலே ஒளி உண்டாகும்

வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்

கவிப்பெருக்கும் மேவுமாயின்

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்

விழிபெற்றுப் பதவி கொள்வார்

தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்

இங்கமரர்  சிறப்புக்  கண்டார்– பாரதி 

xxxxx

வெங்கடேச ரெட்டப்ப பூபதி க்கு பாரதி  எழுதியது :

ராஜமகா ராஜேந்த்ர  ராஜகுல ……..

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்

தமிழ்மொழியைப் புகழி லேற்றும்

கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்

வசையென்னாற் கழிந்த தன்றே!

சுவைபுதிதுபொருள்புதிதுவளம்புதிது,

சொற்புதிது சோதி மிக்க

நவகவிதைஎந்நாளும் அழியாத

மகாகவிதை” என்று நன்கு. —— பாரதி 

இந்த வரிகள் பாரதியாருக்குத்தான் அதிகம் பொருந்தும்

Xxxx

MY OLD ARTICLES ON THE SAME TOPIC

வாழை இலை – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › வ…

·

சாப்பிடக் கூடாத இலைகள் எவை? சதகம் என்றால் 100 பாடல்களின் தொகுப்பு என்று அர்த்தம்.

பரிமாறும் முறை, வாழை இலை, தையலலிலை

https://tamilandvedas.com › tag › பர…

15 Dec 2015 — வாழை இலை கிடைக்காத பட்சத்தில் ஆல், பலா அல்லது மந்தாரை இலைகளைக் கொண்டு …

73. உண்டியிலையும் முறையும்

வாழையிலை புன்னைபுர சுடன்நற் குருக்கத்தி

     மாப்பலாத் தெங்கு பன்னீர்

  மாசிலமு துண்ணலாம்; உண்ணாத வோ அரசு

     வனசம் செழும்பா டலம்

தாழையிலை அத்திஆல் ஏரண்டபத்திரம்

     சகதேவம் முள்மு ருக்குச்

  சாருமிவை அன்றி, வெண் பாலெருக் கிச்சில்இலை

     தனினும்உண் டிடவொ ணாதால்;

தாழ்விலாச் சிற்றுண்டி நீரடிக் கடிபருகல்

     சாதங்கள் பலஅ ருந்தல்

  சற்றுண்டல் மெத்தவூண் இத்தனையும் மெய்ப்பிணி

     தனக்கிடம் எனப்ப ருகிடார்;

ஆழிபுடை சூழுலகில் வேளாளர் குலதிலகன்

     ஆகும்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே.

     (இ-ள்.) ஆழிபுடை சூழ்உலகில் வேளாளர் குலதிலகன் ஆகும் –

நாற்புறமும் கடல்சூழ்ந்த உலகில் வேளாளர் மரபிற் சிறப்புற்றவன் ஆகிய,

எமது அருமை ….. தேவனே!, வாழையிலைபுன்னைபுரசுடன்,

நல்குருக்கத்திமாபலாதெங்குபன்னீர் (ஆகிய இலைகளில்) மாசுஇல் அமுது உண்ணலாம் – குற்றமற்ற உணவை உண்ணலாம், உண்ணாதவோ – உண்ணத்தகாதனவோ எனில், அரசுவனசம்செழும்பாடலம்தாழையிலை,அத்திஆல்ஏரண்ட பத்திரம்சகதேவம் முள்முருக்கு, சாரும் இவை அன்றி – பொருந்திய இவற்றிலே அன்றி, வெண்பால் எருக்கு இச்சில் இலைதனிலும் உண்டிட ஒணாதுஆம் – வெண்மையான பாலையுடைய

எருக்கிலைஇச்சில் இலைகளிலும் உண்பது தகாது ஆகும், தாழ்வுஇலாச்

சிற்றுண்டி நீர் அடிக்கடி பருகல், சாதங்கள் பல அருந்தல் – இடைவிடாத

சிற்றுண்டியும் அடிக்கடி நீர் பருகலும் பலவகைச் சோறுண்டலும்,

சற்றுஉண்டல் மெத்தவூண் இத்தனையும் மெய்ப்பிணிதனக்கு இடம்எனப்

பருகிடார் – சிறிதாக உண்பதும் மிகுதியாக உண்பதும் இவ்வளவும்

உடல்நோய்க்கு இடமாகும் என (இம்முறையில்) உண்ணார்.

XXXXX

வி-ரை.) வனசம் – தாமரையிலை. செழும்பாடலம் – வளமிக்க பாதிரி.

ஏரண்ட பத்திரம் – ஆமணக்கு இலை. இச்சில் இலை – இத்தியிலை.

சாதங்கள் பல : தயிர்ச்சோறுபுளிச்சோறுசரக்கரைப்பொங்கல்,

வெண்பொங்கல் முதலானவை. பருகுதல் : நீர் முதலிய குடிவகைகளுக்கே வரும்; கெடுதி யென்றார்.

இச் செய்யுளில் இந்நூலாசிரியரை ஆதரவுசெய்த

மதவேளின் குலம் ‘வேளாளர் குலும்’ என அறியப்படுகிறது.

XXXXXXXXXXXXXX

        74. கவிஞர் வறுமை

எழுதப் படிக்கவகை தெரியாத மூடனை

     இணையிலாச் சேடன் என்றும்,

  ஈவதில் லாதகன லோபியைச் சபையதனில்

     இணையிலாக் கர்ணன் என்றும்,

அழகற்ற வெகுகோர ரூபத்தை யுடையோனை

     அதிவடி மாரன் என்றும்,

  ஆயுதம் எடுக்கவுந் தெரியாத பேடிதனை

     ஆண்மைமிகு விசயன் என்றும்,

முழுவதும் பொய்சொல்லி அலைகின்ற வஞ்சகனை

     மொழிஅரிச் சந்த்ர னென்றும்,

  மூதுலகில் இவ்வணம் சொல்லியே கவிராசர்

     முறையின்றி ஏற்ப தென்னோ?

அழல்என உதித்துவரு விடம்உண்ட கண்டனே!

     அமலனே! அருமை மதவேள்!

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அழல்என உதித்துவரு விடம்உண்ட கண்டனே

-நெருப்பைப்போலத் தோன்றி வந்த நஞ்சுண்ட கழுத்தையுடையவனே!,

அமலனே – குற்றம் அற்றவனே!, அருமை …….. தேவனே!, எழுதப்படிக்க

வகைதெரியாதமூடனை இணைஇலாச் சேடன் என்றும் – எழுதவும் படிக்கவும் வழியறியாத

பேதையை ஒப்பற்ற ஆதிசேடன் என்றும், ஈவது இல்லாத கனலோபியைச்

சபையதனில் இணைஇலாக் கர்ணன் என்றும் – கொடுத்தறியாத பெரிய

அழுக்கனை அவையிலே ஒப்பற்ற கொடையிற் சிறந்த கர்ணன் என்றும், அழகு அற்ற வெகு கோரரூபத்தை உடையோனை அதிவடிவ மாரன் என்றும் – அழகு இல்லாத மிகுந்த அருவருப்பான உருவமுடையவனைப் பேரழகுடைய காமன் என்றும், ஆயுதம் எடுக்கவும் தெரியாத பேடிதனை

ஆண்மைமிகு விசயன் என்றும் – படையேந்தவும் பழகாத

ஆண்மையற்றவனை வீரத்திற் சிற்ந்த விசயன் என்றும், முழுவதும்

பொய்சொல்லி அலைகின்ற வஞ்சகனை மொழி அரிச்சந்திரன் என்றும் –

முற்றிலும் பொய்புகன்று திரியும் வஞ்சகனைச் சொல்லில் அரிச்சந்திரன்

என்றும், இவ்வணம் மூதுலகில் கவிராசர் சொல்லியே முறையின்றி ஏற்பது

என்னோ – இவ்வாறு பழைமையான இந்த உலகத்திற் பாவலர்கள் புகன்று

தகுதியின்றி இரப்பது என்ன காரணமோ?

XXXXXXXXXXXXXXXX

           75. கவிஞன்

தெள்ளமிர்த தாரையென மதுரம் கதித்தபைந்

     தேன்மடை திறந்த தெனவே

  செப்புமுத் தமிழினொடு நாற்கவிதை நாற்பொருள்

     தெரிந்துரைசெய் திறமை யுடனே

விள்ளரிய காவியத் துட்பொருள் அலங்காரம்

     விரிவிலக் கணவி கற்பம்

  வேறுமுள தொன்னூல் வழக்கும்உல கத்தியல்பும்

     மிக்கப்ர பந்த வண்மைஉள்ளவெல் லாமறிந் தலையடங் குங்கடலை

     யொத்ததிக சபைகண் டபோ

  தோங்கலை யொலிக்கின்ற கடல்போற்ப்ர சங்கம

     துரைப்பவன் கவிஞ னாகும்!

அள்ளிவிடம் உண்டகனி வாயனே! நேயனே!

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) விடம்அள்ளி உண்ட கனி வாயனே – நஞ்சை

அள்ளிப்பருகிய கனிபோலுஞ் சிவந்த வாயனே!, நேயனே – (உயிர்களிடம்)

அன்புடையவனே!, அமலனே – தூயவனே!, அருமை ……. தேவனே!,

தெள்அமிர்த தாரையென மதுரம் கதித்த பைந்தேன் மடைதிறந்தது என –

தெளிந்த அமுதவொழுக்குப் போலவும்; இனிமை மிகுந்த புதிய தேன்

மடைதிறந்தது போலவும்; செப்பும் முத்தமிழினொடு – சொல்லப்படும்

முத்தமிழுடன், நாற்கவிதை நாற்பொருள் தெரிந்து – நால்வகைக்

கவிகளையும் நால்வகைப் பொருளையும் அறிந்துஉரைசெய் திறமையுடனே

– கூறும் ஆற்றலோடும், விள்அரிய காவியத்து உட்பொருள், அலங்காரம்,

விரிவு இலக்கண விகற்பம் – கூறுதற்கரிய காவியத்தின் உட்பொருளையும் அணியையும் விரிவான ஐவகை யிலக்கணத்தையும், வேறும்உள தொன்னூல்

வழக்கும் உலகத்து இயல்பும் மிக்கப் பிரபந்த வன்மை உள்ள எல்லாம்

அறிந்து – மற்றும் இருக்கின்ற பழைமையான நூல்வழக்கையும்

உலகவழக்கையும் மிகுந்த பிரபந்தங்களின் சிறப்பையும் மேலும் உள்ள யாவற்றையும் அறிந்து, அலைஒடுங்கும் கடலைஒத்து – அலை அடங்கிய

கடலைப்போல விருந்து, அதிகசபை கண்டபோது – பேரவையைப் பார்த்த

காலத்தில், ஓங்குஅலை ஒலிக்கின்ற கடல்போல் பிரசங்க மது உரைப்பவன்

கவிஞன் ஆகும் – பேரலை முழங்கும் கடலைப்போலச் சொற்பொழிவு செய்பவன் கவிஞன் ஆவான்.

XXXX

(வி-ரை.) முத்தமிழ் : இயல், இசை, நாடகம்.

நாற்கவிதை : ஆசு,மதுரம், சித்திரம், வித்தாரம்.

நாற்பொருள் : அறம், பொருள், இன்பம், வீடு,

ஐவகை இலக்கண விகற்பம் : எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, பிரபந்தம் :

சிறு நூல்கள்:: பிள்ளைத்தமிழ். பரணி, கலம்பகம் முதலியன.

—subham—

Tags– கவிஞன்,வறுமை, இலை,  சாப்பிட வேண்டும், ஐவகை இலக்கணம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: