
Post No. 11,672
Date uploaded in London – 15 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஜனவரி 15,2024 மகர சங்கராந்தி நன்னாள். சூரியனை வழிபடுவோம்; உயர்வோமாக!
மயூர கவியின் சூர்ய சதகம்!
ச.நாகராஜன்
1
ஹர்ஷ சக்ரவர்த்தியின் அவையில் அவைப் புலவராக இருந்தவர் மாபெரும் கவிஞர் மயூர கவி.
அவருக்கு கொடிய நோயான குஷ்ட ரோகம் பிடித்தது.
இதனால் அவர் அரசவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனால் மனம் நொந்து போன மயூர கவி சூரியனை உபாசிக்கலானார்.
சூரியனின் வழிபாட்டால் அவன் அருள் அவருக்குக் கிடைக்க அவரது கொடிய குஷ்டம் நீங்கியது.
2
அற்புதமான நூலான சூரிய சதகத்தில் சதகம் என்ற சொல்லின் பொருளுக்கு ஏற்ப நூறு ஸ்லோகங்கள் உள்ளன.
சொற்சுவையும் பொருள் சுவையும் கொண்ட இந்த ஸ்லோகங்கள் மந்திர சக்தியைக் கொண்டிருப்பதால் சூரியனின் அருளையும் பெற்றுத் தர வழி வகுப்பவை.
இதில் இன்றைய அறிவியல் கூறி நிரூபிக்கும் ஏராளமான கருத்துக்கள் உள்ளன.
தன் யோக சக்தியாலும், தவ மகிமையாலும், சூரியனின் அருளாலும் இந்தப் பேருண்மைகள் அவருக்குக் கிடைக்க அதை அவர் அப்படியே ஸ்லோகங்களில் பதித்தார்.
இந்த ஸ்லோகங்கள் மந்திர சக்தி உடையவை என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.
ஒரே அக்ஷரத்தை சில ஸ்லோகங்களில் அவர் பயன்படுத்துகிறார்.
இதன் மூலம் அந்த அக்ஷரத்திற்கான சக்தியை வலுவூட்டி மந்திர சக்தியையும் வலுப்படுத்தி, இதைப் பாராயணம் செய்வோருக்கு சூரிய அருள் கிடைத்து அதனால் ஏராளமான நலன்களும் பலன்களாகக் கிடைக்க அவர் வழி வகை செய்திருக்கிறார்.
குறிப்பாக மூன்று ஸ்லோகங்களைச் சொல்லலாம்.
ஸ்லோகம் 36இல் ‘த்ய’ என்ற அக்ஷரம் பல முறை வருகிறது.
ஸ்லோகம் 70இல் ‘ந்த’ என்னும் அக்ஷரம் பல முறை வருகிறது.
ஸ்லோகம் 94இல் ‘ச’ என்னும் அக்ஷரம் பல முறை வருகிறது.
3
ஸ்லோகம் 36ஐ இங்கு காண்போம்:
கந்தர்வை: கத்ய பத்ய
வ்யதிகரித்வகோ ஹ்ருத்யமாதோ த்யவாத்யை:
ஆத்யைர்யோ நாரதாத்யை:
முநிபிரப்பிநுதோ வேதவேத்யைர் விபித்ய |
ஆஸாத்யாபத்யதே யம்
புநரபி ச ஜகத்யௌவநம் ஸத்ய உத்யந்
உத்யோதோ த்யோதிதத்யௌ: த்யது
திவஸக்ருதோ (அ) ஸாவவத்யாநி வோத்ய ||
த்ய என்ற அக்ஷரம் இந்த ஸ்லோகத்தில் குறைந்த பட்சம் 18க்கும் மேற்பட்ட தடவைகள் வருவதைக் காணலாம்.

சூரியனின் புதிய ஒளியைக் காண்கின்றனர் கந்தர்வர்கள். அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட சூரியனை வணங்கித் துதித்து வாத்தியங்களுடன் அவனது புகழிசை பாடுகின்றனர் என்கிறார் கவிஞர்.
எவனுடைய ஒளி பெற்று உலகம் அன்றாடம் உற்சாகம் மிக்க யௌவனப் பருவத்தை அடைகின்றதோ அவன், இனிமையான சொற்களைக் கொண்டு புனைந்த உரைநடையாலும், செய்யுள்களாலும், இன்னிசைக் கருவிகளுடன் கந்தர்வர்களால் துதிக்கப் படுகின்றான். வேதங்களில் வல்லவர்களான தும்புரு நாரதர் உள்ளிட்ட முனிவர்களால் துதிக்கப்படுகின்றவனும், ஆகாயத்தில் பிரகாசிக்கின்றவனுமாகிய சூரியனின் புத்தம் புதிய, அப்போதே தோன்றிய ஒளியானது உலகைப் புதிய யௌவனப் பூரிப்புடன் விளங்கச் செய்கிறது.
அது உங்களுடைய பாவங்களை அழிக்கட்டும்.
இந்த ஸ்லோகத்தில் ‘ஆதோத்ய வாத்யை’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
‘ஆதோத்ய வாத்யம்’ என்பவை விரல்களால் இயக்கப்படுபவை ஆகும்.
இவை நான்கு வகைப்படும்.
அவையாவன : 1) ததம் – தந்தி வாத்தியங்கள் – வீணை, தம்பூர் முதலியன.
2) வித்தம் – ஜாலர், சதங்கை முதலியன (உலோக வாத்தியங்கள்.
3) ஆனந்தம் – முரசு, மத்தளம் போன்ற தோல் கருவிகள்.
4) சுஷிரம் – புல்லாங்குழல், நாதஸ்வரம் போன்ற துளைக் கருவிகள்.
இப்படி இந்த நூலுக்கு உரை எழுதியுள்ள த்ரிபுவனபாலர் குறிப்பிட்டுள்ளார்.
4
அற்புதமான இந்த மகர சங்கராந்தி நாளில் சூரியனை வழிபடுவோம். மயூர பட்டர் இயற்றிய சூரிய சதகத்தைச் சொல்லி சூரியனைத் துதிப்போம்; அவன் அருளைப் பெறுவோம்.
நோயில்லா அருள் வாழ்வைப் பெற்று, செல்வச் செழிப்புடன் வாழ்ந்து அனைவருக்கும் உதவி, சேவை புரிந்து நீண்ட நாள் வாழ்வோமாக!
சூர்யாய நம:
***
https://tamilandvedas.com › tag › ச…
5 Jan 2018 — மயூர பட்டர் துக்கத்தினால் அழ, அவரது நிலையைக்