அம்பலவாணரும் அப்பரும் செப்பியது ஒன்றே (Post No.11,675)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,675

Date uploaded in London – –  16 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

அம்பலவாணரும் அப்பரும் செப்பியது ஒன்றே ! 

உடலிலுள்ள ஒவ்வொரு அங்கமும் இறைவனைத் தொழுவதற்குத்தான் உள்ளது என்ற விஷயம் அப்பர் பாடிய தேவாரத்தில்   திரு அங்கமாலை என்னும் பதிகத்தில் உள்ளது. அதர்வண வேதத்திலும் இதே  கருத்து இருக்கிறது அம்பலவாணரும் அதே கருத்தை இறைவனின் அடியார்களிடத்தில் எதிரொலிக்கிறார்.

ஹஸ்தெள  ச பாதெள நயனே ப்ரஸன்னே

கர்ணெள சுதீக்ஷ்ணெள  வதனம் ச காந்தம் 

நாஸா சு ரம்யா மனநாய சித்தம்

ஈ சேன  தத்தம் ததிதம் ஸமக்ரம்

— என்று ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு ஸுபாஷிதம் / பொன்மொழிப்பாடல் – உள்ளது.

இதன் பொருள்

இரண்டு கைகள், கால்கள், கண்கள் , காதுகள், அழகிய முகம் , மூக்கு, சிந்திப்பதற்காக ஒரு மனம் — இவையாவும் நல்வழியில் செயல்படவே இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளன .

ஆதி  சங்கரரும் பஜ கோவிந்தத்தில் சத் சங்க மஹிமையை ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம் — என்ற பாடலில் எடுத்துரைக்கிறார் .

ஆயினும் தமிழில் மிக எளிமையாகச் சொன்னது அவ்வையார்தான்

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க

நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோ(டு)

இணங்கி இருப்பதுவும் நன்று— அவ்வையார்

Xxxx

அப்பர் பாடிய திரு அங்க மாலை பதிகத்தில் இருந்து பாடல் முதல் வரிகளை மட்டும் காண்போம்

தலையே நீ வணங்காய் – தலை மாலை தலைக்கணிந்து

தலையாலே பலி தேரும் தலைவனைத்

தலையே நீ வணங்காய்

கண்காள் காண்மின்களோ – கடல்

நஞ்சுண்ட கண்டன்றன்னை…………

செவிகாள் கேண்மின்களோ – சிவன்

எம்மிறை செம்பவள……………………………

மூக்கே நீமுரலாய் – முது

காடுறை முக்கணனை………………………….

வாயே வாழ்த்துகண்டாய் – மத

யானை யுரிபோர்த்துப்……………………………….

நெஞ்சே நீநினையாய் – நிமிர்

புன்சடை நின்மலனை……………………………

கைகாள் கூப்பித்தொழீர் – கடி

மாமலர் தூவிநின்று……………………………………..

ஆக்கை யாற்பயனென் – அரன்

கோயில் வலம்வந்து

பூக்கையா லட்டிப் போற்றியென் னாதஇவ்

ஆக்கை யாற்பயனென்.

கால்க ளாற்பயனென் – கறைக்

கண்ட னுறைகோயில்……………………………

என்று ஒவ்வொரு பாட்டும் ஒரு அங்கத்தின் பயன், இறைவனைத் தொழுவதற்கானதே என்று சொல்கிறார்.

XXXX

இதோ இறைவனின் அடியார்கள் பற்றி சதகத்தின் பாடலும் பொருளும்:–

              76. நற்சார்பு

காணரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பதே

     கண்ணிணைகள் செய்புண் ணியம்;

  கருணையாய் அவர்சொல்மொழி கேட்டிட லபிப்பதுஇரு

     காதுசெய் திடுபுண் ணியம்;

பேணிஅவர் புகழையே துதிசெய லபித்திடுதல்

     பேசில்வாய் செய்புண் ணியம்;

  பிழையாமல் அவர்தமைத் தொழுதிட லபிப்பதுகை

     பெரிதுசெய் திடுபுண் ணியம்;

வீணெறிசெ லாமலவர் பணிவிடை லபிப்பதுதன்

     மேனிசெய் திடுபுண் ணியம்;

  விழைவொடவர் சொற்படி நடந்திட லபிப்பதே

     மிக்கபூ ருவபுண்ணியம்;

ஆணவம் எனுங்களை களைந்தறி வினைத்தந்த

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆணவம்எனும் களைகளைந்து அறிவினைத் தந்த அண்ணலே

– நான் என்னும் களையை யெடுத்து, அறிவையருளிய பெரியோனே!, அருமை

….. தேவனே!, காண்அரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பது

கண்இணைகள்செய் புண்ணியம் – பார்த்தற்கரிய பெரியோர்களின் தரிசனம் கிடைப்பது இருவிழிகளின் நல்வினையாகும்கருணையாய் அவர் சொல்மொழி

கேட்டிட லபிப்பது இரு காது செய்திடு புண்ணியம் – அவர்கள் அருளுடன் கூறும்மொழியைக் கேட்கக் கிடைப்பது இரு காதுகளும் செய்த நல்வினையாகும்,

அவர் புகழையே பேணித் துதிசெய லபித்திடுதல் பேசில்வாய் செய்புண்ணியம்

– அவர்களுடைய புகழையே விரும்பிப் போற்றிடக் கிடைப்பது கூறினால் வாய்செய்த நல்வினை ஆகும், அவர்தமைப் பிழையாமல் தொழுதிட லபிப்பது

கைபெரிது செய்திடு புண்ணியம் – அவர்களைத் தவறாமல் வணங்கக்

கிடைப்பது கைகள் பெரிதும் செய்து நல்வினையாகும், வீண்நெறி செலாமல்

அவர் பணிவிடை லபிப்பது தன்மேனி செய்திடு புண்ணியம் – பயனற்ற

வழிகளிற் செல்லாமல் அவர்களுக்குத் தொண்டு செயக் கிடைப்பது தன்மெய் செய்திட்ட நல்வினை ஆகும். விழைவொடு அவர் சொற்படி நடந்திட

லபிப்பது மிக்க பூருவ புண்ணியம் – விருப்பத்துடன் அவர் கூறியவாறு

நடந்திடும் பேறு கிடைப்பது முற்பிறப்பிற் செய்த பெரிய வினையாகும்.

 —SUBHAM—-

 tags-  நல்லோர், சத் சங்கம், அம்பலவாணர் , சான்றோர் , ஒளவையார் ,அப்பர், அங்க மாலை 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: