
Post No. 11,679
Date uploaded in London – – 17 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
ஒருவருடைய பிறந்த நட்சத்திரம் என்ன கிழமையில் இருக்கிறதோ அதன்படி பலன் சொல்கிறார் அறப்பளீசுர சதகம் ஆசிரியர் அம்பல வாணர் :
ஜென்ம நட்சத்திரம்
ஞாயிற்றுக் கிழமையானால் –தீரா அலைச்சல் ;
திங்கட் கிழமையானால் — சுக போசனத்தினொடு
திரு மாதின் அருளும் உண்டாம்; அதாவது சுக போக வாழ்வு; லக்ஷ்மீ கடாக்ஷம் இருக்கும்.
செவ்வாய்க் கிழமையானால்– சுகமது வாராது; சுகபோகம் இல்லை;
புதன் கிழமையானால் — மாசில் பல கலை பயில்வர் மேன்மையாம்; அதாவது நன்றாகக் கல்வி கற்று நிறைய பட்டங்கள் பெறுவார்கள்.
வியாழக் கிழமையானால் – ஆடை நன்மையுடனே வந்திடும்; அதாவது புத்தாடைகள் நிறைய குவியும்.
வெள்ளிக் கிழமையானால் — பெண்கள் எல்லாம் உங்களை வந்து மொய்ப்பார்கள். நாரியருடன் போகம் மிகவும் உண்டு!!!!!!!!!!!!!
சனிக் கிழமையானால்– சுகப்படாது. சுகபோகம் இல்லை.
நான் முன்னர் எழுதியதை நினைவு படுத்துகிறேன்; உலகிலுள்ள பல கோடிப்பேரை இப்படி 7 வகையாகப் பிரித்துப் பலன் சொல்லுதல் சரியாக இராது; அதாவது துல்லியமாக இராது. ஆகையால் யாரவது ஒரு ஆராய்ச்சியாளர், குறைந்தது கிழமைக்கு 1000 பேர் வீதம் தேர்ந்தெடுத்து புள்ளிவிவரம் திரட்டி சரிபார்க்க வேண்டும். அதுவரை இதை நம்பவும் வேண்டாம்; உதாசீனம் செய்யவும் வேண்டாம்.
நான் சில பேர் திட்டுவதை கேட்டு இருக்கிறேன் : பயல் ராகுகாலத்தில் பிறந்திருப்பான் போல என்று.
அப்படிப் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று புள்ளிவிவரம் திரட்டி ஆராயும் வரை அவை எல்லாம் பொருளற்ற வசை மொழிகள் என்றே கருத வேண்டும் .
அட சனியனே — என்று ஒருவரைத் திட்டுகிறோம். அதற்கு சனிக் கிரகமா காரணம்?
Xxxxx

77. பிறந்தநாளுடன் வரும் வாரத்தின் பலன்
சென்ம நட்சத்திரத்து ஆதி வாரம் வரின்
தீரா அலைச்சல் உண்டாம்;
திங்களுக்கு ஆகில் வெகு சுக போசனத்தினொடு
திரு மாதின் அருளும் உண்டாம்,
வன்மை தரும் அங்கார வாரம் வந்தால் சிறிதும்
வாராது சுகமது என்பார்;
மாசில் பல கலை பயில்வர் மேன்மையாம் புந்தி எனும்
வாரத்துடன் கூடினால்;
நன்மை தரு குரு வாரம் அது சேர்ந்து வரில் ஆடை
நன்மையுடனே வந்திடும்;
நாரியருடன் போகம் மிகவும் உண்டு ஒரு வெள்ளி
நல்ல வாரத்தில் வந்தால்;
அல் மருவு பீடை உண்டாம் என்பர் சனியனுக்(கு);
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
TO BE CONTINUED……………………………………
Tags-கிழமைகள், பலன், ஜென்ம நட்சத்திரம், அம்பலவாணர்,
பிறந்த நாள், அறப்பளீசுர சதகம்