
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,677
Date uploaded in London – 17 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
எந்த ராசிக்காரர்களுக்கு எந்த எந்த வர்ணங்கள் பலன் தரும்?
ச.நாகராஜன்
நமது முன்னோர்கள் உலக இயற்கைய அனைத்தையும் மிகத் தீவிரமாக, தெளிவாக ஆராய்ந்தவர்கள்.
மரம், செடி, கொடி, பறவைகள், புழு, பூச்சிகள், வர்ணங்கள், நேரம், காலம், இரவு, பகல், வெளி, விண்வெளியில் உள்ள கிரகங்கள், நக்ஷத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களை அவர்கள் கூர்ந்து கவனித்ததோடு அந்த உலக இயற்கைக்கும் மனிதனுக்குமான சம்பந்தத்தையும் ஆராய்ந்து முடிவுகளை சாஸ்திரங்களாக அமைத்துத் தந்தனர்.
இவற்றில் பல, இன்றைய நவீன அறிவியல் ஆராய்ச்சி ஆராய்ந்து தரும் முடிவுகளோடு ஒத்திருப்பது ஆச்சரியத்திற்குள்ள ஒரு விஷயமாகும்.
ஸ்வாமி விவேகானந்தர் கூறினார்: “நமது ரிஷிகள் காலத்திற்கு முற்பட்டவர்கள். அவர்கள் கூற்றெல்லாம் மெய் என்பதை உலகம் உணர பல காலமாகும்”
இதோ இங்கு ராசிகளுக்கு உகந்த வர்ணங்கள் கீழே தரப்படுகின்றன.
மேஷம் – சிவப்பு, தாமிரம்
ரிஷபம் – நீலம், இளஞ்சிவப்பு, பச்சை, வெள்ளை
மிதுனம் – பச்சை, மஞ்சள், கருஞ்சிவப்பு(Purple), நீலம், இளஞ்சிவப்பு
கடகம் – பச்சை, வெள்ளை,பாலேடு நிறம் (Cream), சிவப்பு, மஞ்சள்
சிம்மம் – ஆரஞ்சு, சிவப்பு, பச்சை
கன்னி – பச்சை, வெள்ளை, மஞ்சள், பச்சைக் கல் நிறம் (Emerald)
துலாம் – நீலம், ஆரஞ்சு, வெள்ளை, சிவப்பு
விருச்சிகம் – மஞ்சள், சிவப்பு, பாலேடு நிறம் (Cream), ஆரஞ்சு’
தனுசு – வயலட், வெள்ளை, பாலேடு நிறம் (Cream),ஆரஞ்சு, இள நீலம்,
பச்சைக் கல் நிறம் (எமரால்ட்)
மகரம் – இண்டிகோ, வெள்ளை, நீலம், கறுப்பு
கும்பம் – இண்டிகோ, மஞ்சள், வெள்ளை, பாலேடு நிறம்
மீனம் – பச்சை, வயலட், சிவப்பு, மஞ்சள், ரோஜா மலர் நிறம், ஆரஞ்சு,
பாலேடு நிறம், வெள்ளை
ராசிகளுக்கு ஆகாத வர்ணங்கள் :
மேஷம் – கறுப்பு
ரிஷபம் – சிவப்பு
மிதுனம் – சிவப்பு, கறுப்பு
கடகம் – நீலம்
சிம்மம் – கறுப்பு
கன்னி – சிவப்பு, நீலம், கறுப்பு
துலா – பச்சை, மஞ்சள்
விருச்சிகம் – நீலம், சுத்த வெள்ளை நிறம், பச்சை
தனுசு – சிவப்பு, முத்து நிறம், கறுப்பு
மகரம் – மஞ்சள், பாலேடு நிறம்
கும்பம் – ஆரஞ்சு, பச்சை, நீலம், சிவப்பு
மீனம் – நீலம்
ஆடைகள், திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள், படுக்கை மற்றும் வீட்டில் உள்ள மரசாமான்கள், ஆகியவை உகந்த வண்ணங்களைக் கொண்டதாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
வாகனத்தின் நிறம் உங்களுக்கு உகந்த நிறமாக இருத்தல் வேண்டும்.
உகந்தது அல்லாத நிறங்களைத் தவிர்த்தல் வேண்டும்.
அனுபவமே சிறந்த ஆசான்.
அனுபவத்தினால் முடிவு காண்பதே நமக்குத் திருப்தி தர வல்ல ஒரே வழி!
ஆகவே இதுவரை நீங்கள் பயன்படுத்தும் வண்ணங்களைப் பாருங்கள்.
அவை உகந்தவை அல்ல என்றால் மாற்றுங்கள், பின்னர் பலன்களைக் குறித்து வைக்க ஆரம்பியுங்கள்.
இது செலவில்லாத வழி; ஏனெனில் நாம் செய்யப்போவது வண்ணங்களின் மாற்றத்தை மட்டுமே!
வாங்கப் போவது உறுதி; அதில் நமது தேர்வு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான கலர்ஃபுல் யோசனை இது, அவ்வளவு தான்!
***
tags- ராசி, வர்ணங்கள்