தொல்காப்பியத்தில் பகவத் கீதை வரிகள்-1 (Post No.11,680)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,680

Date uploaded in London – –  17 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே – 1592

வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே

நிகழ்ச்சி அவர்கட்கு ஆகலான — என்பது

தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் மரபியலில் வரும் சூத்திரம் (சூத்திர எண் 1592)ஆகும் .

இது பகவத் கீதையில் கண்ணனும் மனு ஸ்ம்ருதியில மனுவும் சொன்னதாகும் ; பின்னர் சாணக்கியரும் இதைச் சொல்லுகிறார். வால்மீகியும் , காளிதாசனும், அவ்வையாரும் மன்னர் என்ற பெயரில் இதைச் சொல்லி இருக்கிறார்கள் .

முதலில் தொல்காப்பியர் பற்றி நமக்கு இரண்டே பேர்தான் ‘பெர்சனல்’ விஷயங்களைச்  PERSONAL DETAILS சொல்கிறார்கள். ஒருவர் அவருடைய கிளாஸ்மேட் CLASSMATE ; அதாவது சக மாணவர்; அவர் பெயர் பனம்பாரனார் ; தொல்காப்பியருக்கு ஐந்திரம் தெரியும் என்றும் அவர் நிலம் தரு திரு வில் பாண்டியன்  சபையில் அதங்கோட்டு ஆச்சார்யன் என்னும் நான்கு வேதம் படித்த பிராமணன் சர்ட்டிபிகேட் CERTIFICATE  கொடுத்தவுடன் அதை மன்னர் சபை ஏற்றதாகவும் கூறினார். சுருங்கச் சொன்னால் அய்யர் அக்மார்க் AGMARK SEAL குத்தினார். சபையில் எல்லோரும் கைதட்டி மாலை போட்டார்கள் 

அடுத்தாற்போல் தகவல் தருபவர் உரை மன்னன், உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் ஆவார் . நச்சி. தான் அதிக, சிறந்த உரைகளை எழுதியவர் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. அவர் மதுரை நகர பாரத்வாஜ கோத்ர பிராமணர். அவர் தொல்காப்பியர் என்பவர் பெயர் த்ருண தூமாக்கினி என்றும் அவர் ஜமதக்னி முனிவரின் புதல்வர் என்றும் எழுதியுள்ளார். இது திராவிடங்களுக்குப் பிடிக்காததால் பொய்யுரை என்று ஒதுக்குவர். பழ மையான காப்பியக்குடியில் இவர் பிறந்ததால் தொல் + காப்பிய என்று இவர் அழைக்கப்பட்டதாக இளம்பூரணரும் நச்சி. யும் கூறுவர். அதுவும் திராவிடங்களுக்குப் பிடிக்காததால் இரு உரைகார்களுக்கும் பொய்யர் பட்டம் கட்டி, திராவிடங்கள் ஒதுக்கின. அதுமட்டுமல்லாமல் தொல்காப்பியருக்கு மீசை வைத்து படம் வரைந்து ஊர் ஊராக சிலைகளும் வைத்தன திராவிடங்கள்.

ஆனால் தொல்காப்பியரோ முழுக்க முழுக்க — அதாவது மூன்று அதிகாரங்களிலும் வள்ளுவனைப் போலவே கூசாமல் ஸம்ஸ்க்ருதச் சொற்களை பயன்படுத்தியுள்ளார். இதை எல்லாம் தமிழ்ப் பேரறிஞர் வையாபுரிப் பிள்ளை பட்டியல் போட்டுக்காட்டினார் . இந்தப் பின்னணி தெரிந்தால்தான்  நான் சொல்லும் பகவத் கீதை விஷயம் புரியும்.

வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே

நிகழ்ச்சி அவர்கட்கு ஆகலான — சூத்திரத்துக்கு  உரை பின் வருமாறு ,

“ஆன்றவிந்து அடங்கிய சான்றோர்களின் ஆணையால் உலக நிகழ்ச்சிகள்  நடைபெறுகின்றன. ஆதலால் உலக வழக்கு என்பது சான்றோரது நெறியாகும். இழிசினர் ஒழுக்கம்வழக்கு உலக வழக்கு எனக்கொள்ளப்படாது”.

Xxxx

மஹாபாரத  ஸ்லோகம் இதோ:

ச்ருதிர் விபின்னா  ஸ்ம்ருதி ரேவ பின்னா

நை கோ முனிர் யஸ்ய வசம் பிரமாணம்

தர்மஸ்ய தத்வம் நிஹிதம் குஹாயாம்

மஹா ஜனோ  யேந கத ஹ ஸ மார்க்கஹ

வேதம் பல பிரிவுடையது ; ஸ்ம்ருதியும்/ சட்ட புஸ்தகங்கள்  கூட பல வகையானது.

இதைக் கூறிய முனிவரோ ஒருவரல்ல. பல முனிவர்கள் அறநெறி விதிகளைக் கூறியுள்ளனர்.

யாருடைய சொல் சான்று ? யார் சொன்னதைக் கை விடுவது? அறத்தினுடைய உண்மைப்பொருள் மறைவாக வைக்கப்பட்டுள்ளது  .எனவே பெரியோர்கள், எந்த வழியில் சென்றார்களோ , அதையே நாமும் பின்பற்றி நடப்போமாக.

In the Mahabharata the Yaksha asks Yudhishthira about Dharma, What is the path?

Yudhishthira answered “Arguments and futile revelations conflict. No single Rishi has told the whole truth . The truth of Dharma is mysteriously hidden inside the cave (of the heart). What great men have followed that is the path, Oh, Yaksha of the waters”

– Yaksha Prasna, Vana Parva, Mahabharata

Xxxx

Tolkappian, the Brahmin sporting a moustache

மனு ஸ்ம்ருதியில் மனு சொல்கிறார்

एतद्देशप्रसूतस्य सकाशादग्रजन्मनः ।

स्वं स्वं चरित्रं शिक्षेरन् पृथिव्यां सर्वमानवाः ॥ २.२०॥ 2-20

ஏதத் தேச ப்ரஸுதஸ்ய  சகாஸாத் அக்ரஜன்மநஹ

ஸ்வம் ஸ்வம்  சரித்ரம் சிக்ஷரேன  ப்ருதிவ்யாம் ஸர்வ மானவாஹா

இந்த நாட்டின் முன்னணியில் நிற்போரிடமிருந்து , பூமியில் பிறந்த அனைவரும் நடத்தை விதிகளை அறியட்டும்

— என்று மனு (2-20) கூறுகிறார் ..

அக்ர ஜன்மநஹ என்பது முன்னிலையில் நிற்பவர்கள்; அவர்கள் , அந்தக் காலத்தில் முனிகள், ரிஷிகளாக இருந்தவர்களாவர்.

உலகத்திலுள்ள எல்லோருக்கும் நாமே (இந்துக்களே) குரு என்பதை பாரதியாரும் மூன்று முறை சொல்லி சத்தியம் செய்கிறார் :

எல்லோரும் அமர நிலை எய்தும் நன்முறையை

இந்தியா உலகிற்களிக்கும் – ஆம்

இந்தியா உலகிற்களிக்கும் – ஆம் ஆம்

இந்தியா உலகிற்களிக்கும் – வாழ்க

கவிகளின் வாக்கு பொய்க்கவே பொய்க்காது; நடந்தே  தீரும்

All inhabitants (born) of this earth should learn about living and building character from the ancient sages and seers who took birth in this land…

Following is George Buhler’s translation

Manu 2-20. From a Brahmana, born in that country, let all men on earth learn their several usages.

xxxxxxx

विद्वद्भिः सेवितः सद्भिर्नित्यमद्वेषरागिभिः ।

हृदयेनाभ्यनुज्ञातो यो धर्मस्तं निबोधत ॥ २.१॥ Manu 2-1

வித்வத்பிஹி ஸேவிதஹ ஸத்பிர் நித்யம த்வேஷராகிபிஹி

ஹ்ருதயே நாப்யனுக்ஞாதோ யோ தர்மஸ்தம் நிபோதத 

Manu2.1. Learn that sacred law which is followed by men learned (in the Veda) and assented to in their hearts by the virtuous, who are ever exempt from hatred and inordinate affection.

2-1 வேதத்தை நன்றாக அறிந்த பெரியோர்களிடமிருந்து விதிகளை அறிய வேண்டும் . விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு,குணவான்களாக விளங்குவோரே அத்தகைய பெரியோர்கள் . அவர்கள் அங்கீகரித்தால் போதும்.

Xxxxxx

वेदोऽखिलो धर्ममूलं स्मृतिशीले च तद्विदाम् ।

आचारश्चैव साधूनामात्मनस्तुष्टिरेव च ॥ २.६॥

வேதோகிலோதர்ம மூலம் ஸ்ம்ருதி சீலே ச தத்விதாம்

ஆசாரஸ் ச்சைவ  ஸாதூனாம் ஆத்மனஸ்துஷ்டிரேவ ச- Manu

Manu 2.6. The whole Veda is the (first) source of the sacred law, next the tradition and the virtuous conduct of those who know the (Veda further), also the customs of holy men, and (finally) self-satisfaction.

வேதம்தான் புனித விதிகள் அடங்கிய தர்மத்தின் ஆணிவேர் ; அதற்கு அடுத்தபடியாக காலா காலமாக பின்பற்றப்படும் சம்பிரதாயம் முக்கியம்; அதற்கடுத்தாற் போல அந்த சம்பிரதாய நெறி முறைகளை அறிந்தோர் சொல்லுவதே சட்டம்; இறுதியாக உங்கள் மனச்சாட்சியை நம்புங்கள் . (எது அறம் , எது மறம் என்பது உங்கள் மனச்சாட்சிக்குத் தெரியும்.)- Manu 2-6

மனு எவ்வளவு பெரியவர், எந்த அளவுக்கு மனிதனின் நல்ல குணத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று இதிலிருந்தே விளங்கும். இதே போல உண்மை சொல்லுவது பற்றியும் அவர் பொன்மொழிகளை உதிர்த்து இருக்கிறார். கசப்பான உண்மைகளை சொல்லாதே. இனிமையாக, ஆனால் உண்மை மட்டுமே விளம்பு என்பார் . பெண்களை அழ வைத்தால் அந்தக் குடும்பம் அடியோடு நாசமாகும் என்கிறார்.

ஆக தர்மம் சட்ட விதிகள் எல்லாம் மாறுபடும். நாமும் அம்பேத்கார் சொன்னதை ஏற்காமல் அவ்வப்போது பார்லிமென்டில் விதிகளைத் திருத்தி (Constitutional amendments) வருகிறோம். ஆனால் அரசியல் சாசன அடிப்படை மாறாது. அது போல வேதமும் மாறாது.

இதைத் தொல்காப்பியர் இரண்டே வரிகளில் சொல்லிவிட்டார்

வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே

நிகழ்ச்சி அவர்கட்கு ஆகலான — சூத்திரம் 1592

xxxx

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’

என்று இதனை , சேந்தன் திவாகர நிகண்டும்  – (மக்கட் பெயர்த் தொகுதியின் (17-ஆம்) பாடல்  குறிப்பிடும்

xxxx

பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்லுவதைக் காண்போம் :

यद्यदाचरति श्रेष्ठस्तत्तदेवेतरो जनः।

स यत्प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते॥२१॥ 3-21

யத்³யதா³சரதி ஸ்²ரேஷ்ட²ஸ்தத்ததே³வேதரோ ஜந:|

ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்தத³நுவர்ததே ||3-21||

ஸ்²ரேஷ்ட² யத் யத் ஆசரதி = எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ

இதர ஜந: தத் தத் ஏவ = மற்ற மனிதர் அதை அதையே (பின்பற்றுகிறார்கள்)

ஸ யத் ப்ரமாணம் குருதே = அவன் எதை பிரமாணம் ஆக்குகிறானோ

லோக தத் அநுவர்ததே = உலகத்தார் அதையே தொடருகிறார்கள்

எதையெதை  உயர்ந்தோன் செய்கிறானோ அதையே மற்ற மனிதர்

 பின்பற்றுகிறார்கள். அவன் எதை பிரமாணமாக்குகிறானோஅதையே

 உலகத்தார் பின்பற்றுகிறார்கள்.– 3-21

இதைத்தான் தொல்காப்பியரும் மொழிபெயர்த்து சூத்திரமாகத் தந்துள்ளார்.

இரண்டு மூன்று இடங்களில் திருக்குறள் போலவே தர்ம அர்த்த காம = அறம்பொருள்இன்பம் என்று தொல்காப்பியரும் சொல்லுவதால் அவர் மஹாபாரதத்தைப் பின்பற்றுவதும் தெரிகிறது. மகாபாரதத்தின் ஒரு பகுதிதான் கீதை என்பது அனைவரும் அறிந்ததே.

இனி காளிதாசர், சாணக்கியர், வால்மீகி , அவ்வையார் திருமூலர் , மோசிகீரனார் சொல்லுவதைக் காண்போம்.

To be continued………………………………………………..

tags–  தொல்காப்பியத்தில், பகவத் கீதை, வரிகள்,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: