எந்த  நாளில் மழை  பெய்தால் அதிக விளைச்சல் கிடைக்கும் ? (Post No. 11,682)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,682

Date uploaded in London – –  18 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

அறப்பளீசுர சதகம்  பாடிய அம்பலவாணர் சித்திரை முதல் ஆவணி வரை எந்த மாதத்தில், எந்த நாட்களில், மழை பெய்தால் அதிக விளைச்சல் ஏற்படும் என்ற அபூர்வ தகவலை பாடுகிறார்.

பாடல் 78-ல் யாருக்கு எது இல்லாமற்போகும் என்று ஒரு பட்டியல் தருகிறார். உடனே நமக்கு நினைவுக்கு வருவது பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்னும் பாடலும் கருமமே கண்ணாயினார் என்ற பாடலும்தான் .

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவர் உயர்ச்சி தாளாண்மை – தேனின்

கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்

பசி வந்திடப் பறந்து போம்

மானம், குலம், கல்வி, வலிமை, அறிவு, தானம், தவம், உயர்வு, தாளாண்மை/முயற்சி, காமம்– பறந்து போகும்; இது ஔவையார் பாடிய ‘நல்வழி’ ப்பாடல்.

Starvation destroys these ten: honour, dignity,learning, honesty, knowledge liberality, nobility, penance, application to business, and the love of women, whose tongue utters words as sweet as honey.

NAL VAZI- PART 2 – Tamil and Vedas

XXX

பாடல் 78 பாடலை குமர குருபரர் எழுதிய பாடலுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். நீதி நெறி விளக்கத்தில் 53ஆவது பாடலாக இது மலர்கிறது.

மெய் வருத்தம் பாரார்பசி நோக்கார் கண் துஞ்சார்,
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார்அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்

இதன் பொருள்: ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று முனைப்புடன் இறங்கியவர்கள் தனது உடலில் உண்டாகும் நோவைப் பொருட்படுத்தமாட்டார்; பசியைப் பார்க்க மாட்டார், தூங்க மாட்டார், யார் தீங்கு செய்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார்,காலத்தின் அருமையைப் பற்றியும் கவலைப்படமாட்டார். அடுத்தவர் கூறும் அவமதிப்பான சொற்களைக் கேட்கமாட்டார் தங்கள் காரியத்திலேயே கண்ணாயிருந்து அதில் வெற்றி பெறுவதிலேயே கவனமாக இருப்பார். (QUOTED BY s Nagarajan in this blog)

xxx

மழை பற்றி அம்பல வாணர் சொல்லும் தகவலுக்கு ஆதாரம் எங்கு உள்ளது என்று தெரியவில்லை . சுவாதி நட் சத்திரத்தன்று மழை பெய்தால் முத்துக்கள் அதிகம் கிடைக்கும் என்ற செய்தி தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியங்களில் உள்ளது மழை பற்றிய பழமொழிகள் கூட நமக்குத் தகவல் தருகிறது

1.மழைக்குக் குடையா இடிக்குக் குடையா?

2. மழைக்குக் கூட பள்ளியில் ஒதுங்கியிருக்கமாட்டான்

3.மழைக்குத் தண்ணீர் மொண்டு வார்ப்பவர் யார் ?

4.மழை முகம் காணாத பயிரும் தாய் முகம் காணாத பிள்ளையும்

5.மழையும் பிள்ளைப்பேறும் மகாதேவர்க்கும் தெரியாது

6.மழைவிட்டும் தூவானம் விடவில்லை

7.நினைத்த நேரம் நெடு மழை பெய்யுமா ?

8.கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப் பின்பு கொடையும் இல்லை

9.ஐப்பசி  மாதம் அழுகைத் தூற்றல், கார்த்திகை மாதம் கனத்த மழை

10.ஐப்பசி, கார்த்திகை அடைமழைக் காலம்

11.ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்

12.எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை  பெய்யும்.

Xxx

பாடல் 80-ல் பயனில்லாதவை பற்றிப் பாடுகிறார். உட னே நமக்கு விவேக சிந்தாமணி பாடல் நினைவுக்கு வருகிறது

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை

அரும் பசிக்கு உதவா அன்னம்

தாபத்தைத் தீராத் தண்ணீர்

தரித்திரம் அறியாப் பெண்டிர்

கோபத்தை அடக்கா வேந்தன்

குரு மொழி கொள்ளாச் சீடன்

பாபத்தைத் தீராத் தீர்த்தம்

பயன் இல்லை ஏழும்தானே

XXXXX

சமயத்திற்கு உதவாத எட்டு விஷயங்கள்

தன்னுடன் பிறவாத் தம்பி

தனைப் பெறாத் தாயார், தந்தை

அன்னியர் இடத்துச் செல்வம்

அரும்பொருள், வேசி ஆசை

மன்னிய ஏட்டின் கல்வி

மறுமனையாட்டி வாழ்க்கை

இன்னவால் கருமம் எட்டும்

இடுக்கத்துக்கு உதவா அன்றே!

XXXXXX

பயனற்ற உடல் உறுப்புகள்

திருப்பதி மிதியாப் பாதம்

சிவனடி வணங்காச் சென்னி

இரப்பவர்க்கீயாக் கைகள்

இனிய சொல் கேளாக் காது

புரப்பவர் தங்கள் கண்ணீர்

பொழிதரச் சாகாத் தேகம்

இருப்பினும் பயன் என்? காட்டில்

எரிப்பினும் இல்லை தானே!

Xxx

வேண்டாத எட்டும் ஏழும் (சம்ஸ்க்ருத சுபாஷிதங்கள் )

ருணம் யாஞ்சா ச வ்ருத்தத்வம் சோரம் சோரா தரித்ரதா

ரோகஸ்ச புக்தசேஷஸ் சப்பி அஷ்ட கஷ்டாஹா ப்ரகீர்த்திதாஹா

பொருள்

கடன், பிச்சை எடுத்தல், முதுமை, விபசாரம் , திருட்டுத்தனம் , ஏழ்மை, பிணி, எச்சிலை சாப்பிடும் நிலைமை ஆகிய இவை எட்டும் வரக்கூடாத கஷ்டங்கள் . எனவே இவை ஏற்படாத வகையில் வாழ வேண்டும் .

Xxxx

மக்ஷிகா மாருதோ வேச்யா ஹா யாசகோ மூக்ஷகஸ் ததா

கிராமணீர் கணகஸ் சைவ ஸப் தைதே  பரபாதகாஹா

பொருள்

ஈக்கள்/ கொசுக்கள், காற்று, வேசி, பிச்சைக்காரன், எலி, கிராமாதிகாரி, , கணக்கர் ஆகிய இவர்கள் ஏழு பெரும் எப்போதும் பிறரை பீடிப்பவர்கள், அதாவது தொல்லை தருவார்கள் .

Xxx

இதோ அம்பலவாணர் பாடிய 3 பாடல்கள் ; தமிழ் வர்ச்சுவல் யுனிவர்சிட்டி (TAMIL VU WEBSITE) இணைய தளத்திலிருந்து :-

78. ஏது?

பொன்னாசை உள்ளவர்க் குறவேது? குருவேது?

     பொங்குபசி யுள்ள பேர்க்குப்

  போதவே சுசியேது? ருசியேது? மயல்கொண்டு

     பொதுமாதர் வலைவி ழியிலே

எந்நாளும் அலைபவர்க் கச்சமொடு வெட்கமே

     தென்றென்றும் உறுகல் விமேல்

  இச்சையுள பேர்க்கதிக சுகமேது? துயிலேது?

     வெளிதாய் இருந்து கொண்டே

பன்னாளும் அலைபவர்க் கிகழேது? புகழேது?

     பாரிலொரு வர்க்க திகமே

  பண்ணியிடு மூடருக் கறமேது மறமலால்?

     பகர்நிரயம் ஒன்று ளதுகாண்!

அன்னாண வருகரி உரித்தணியும் மெய்யனே!

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

(இ-ள்.) அல்நாண் வருகரி உரித்து அணியும் மெய்யனே – இருள்

நாணுமாறு (கருநிறத்துடன்) வந்த யானையின் தோலை உரித்து அணியும்

மேனியனே!, அமலனே – குற்றம் அற்றவனே!, அருமை …… தேவனே!,

பொன்ஆசை உள்ளவர்க்கு உறவுஏது குருஏது – பொருளாசை பிடித்தவர்க்குச் சுற்றமும் ஆசிரியரும் இல்லைபொங்குபசி உள்ளபேர்க்குப் போதவே சுசிஏது

ருசிஏது – மிகுதியான பசியுடையோர்க்கு நிறைந்த தூய்மையும்

உணவினிமையும் பார்த்தல் இயலாது. பொதுமாதர் விழிவலையிலே எந்நாளும்

அலைபவர்க்கு அச்சமொடு வெட்கம் ஏது – பொதுப் பெண்களின் கண்வீச்சில் எப்போதும் அகப்பட்டு உழல்பவர்க்கு அச்சமும் நாணமும் இல்லை.

என்றென்றுசுகம்ஏது துயில்ஏது – எப்போதும் சிறந்த கல்வியின் மேல் விருப்பம் உடையோர்க்கு மிக வசதியிலும் தூக்கத்திலும் மனம் நாடாது, எளிதாய் இருந்துகொண்டே பலநாளும் அலைபவர்க்கு இகழ்ஏது புகழ்ஏது – எளிய வாழ்வில் இருந்து பலநாளும் திரிபவர்க்கு இகழ்ச்சியும் புகழ்ச்சியும் இல்லை,

பாரில் ஒருவர்க்கு அதிகமே பண்ணியிடும் மூடருக்கும் மற்ற அலால் அறம்

ஏது – உலகில் ஒருவருக்குத் துன்பத்தையே செய்யும் பேதையருக்குப்

பாவமன்றிப் புண்ணியம் இல்லை, பகர்நிரயம் ஒன்று உளது – கூறப்படும்

நரகம் ஒன்று இருக்கிறது.

XXXX

         79. மழைநாள் குறிப்பு

சித்திரைத் திங்கள் பதின் மூன்றுக்கு மேல்நல்ல

     சீரான பரணி மழையும்,

  தீதில்வை காசியிற் பூரணை கழிந்தபின்

     சேரும்நா லாநா ளினில்

ஒத்துவரு மழையும், அவ் வானியில் தேய்பிறையில்

     ஓங்கும்ஏ காத சியினில்

  ஒளிர்பரிதி வீழ்பொழுதில் மந்தார மும் மழையும்,

     உண்டா யிருந்தாடியில்

பத்திவரு தேதி ஐந்தினில் ஆதி வாரமும்

     பகரும்ஆ வணிமூ லநாள்

  பரிதியும் மறைந்திடக் கனமழை பொழிந்திடப்

     பாரில்வெகு விளைவும் உண்டாம்;

அத்தனே! பைங்குவளை மாலையணி மார்பன் ஆம்

     அண்ணல் எமதருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அத்தனே – தலைவனே!, பைங்குவளை மாலை அணி

மார்பன் ஆம் அண்ணல் எமது அருமை மதவேள் -ம் உறுகல்விமேல் இச்சையுள பேர்க்கு அதிக

பசிய குவளை மலர்மாலை அணிந்த மார்பனாகிய பெருமை மிக்க எம் அரிய

மதவேள், அனுதினமும் ….. தேவனே!, சித்திரை திங்கள் பதின்மூன்றுக்குமேல்

நல்ல சீரான பரணி மழையும் – சித்திரைத் திங்களிற் பதின்மூன்று

நாட்களுக்குமேற் புகழ்பெற்ற பரணிநாளிற் பெய்யும் மழையும், தீது இல்

வைகாசியிற் பூரணை கழிந்தபின் சேரும் நாலாம் நாளினில் ஒத்துவரும்

மழையும் – குற்றம் அற்ற வைகாசித் திங்களில் முழுமதிக்குப் பிறகு வரும் நாலாம் நாளிற் சரியாகி வரும் மழையும், அ ஆனியில் தேய் பிறையில்

ஓங்கும் ஏகாதசினியில் ஒளிர் பரிதி வீழ் பொழுதில் மந்தாரமும் மழையும் –

அந்த ஆனித் திங்களில் தேய்பிறையிலே சிறப்புறும் ஏகாதசியில் ஒளிவிடும் ஞாயிறு மறையும்போது மந்தாரத்துடன் பெய்யும் மழையும், உண்டாயிருந்து –

பெய்திருந்து, ஆடியில் பத்தி வரு தேதி ஐந்தினில் ஆதிவாரமும் – ஆடித்

திங்களில் ஒழுங்காக வரும் ஐந்தாம் நாளில் ஞாயிற்றுக்கிழமையும், பகரும்

ஆவணி மூலநாள் பரிதியும் மறைந்திடக் கனமழை பொழிந்திட – கூறப்படும்

ஆவணித்திங்களில் மூலநாளில் ஞாயிறு மறைந்தபிறகு, பெருமழை பெய்தலும்

நேர்ந்தால், பாரில் வெகு விளைவும் உண்டாம் – உலகில் மிகுந்த விளைவு

உண்டாம்.

     (வி-ரை.) குவளைமலர்மாலை வேளாளருக்குரியது.

XXXXXXX

           80. பயனிலாதவை

சமயத்தில் உதவாத நிதியம்ஏன்? மிக்கதுயர்

     சார்பொழுது இலாத கிளைஏன்?

  சபை முகத்துத வாத கல்விஏன்? எதிரிவரு

     சமரத்திலாத படைஏன்?

விமலனுக் குதவாத பூசைஏன்? நாளும்இருள்

     வேளைக்கிலாத சுடர்ஏன்?

  வெம்பசிக்குதவாத அன்னம் ஏன்? நீடுகுளிர்

     வேளைக் கிலாத கலைஏன்?

தமதுதளர் வேளைக் கிலாதஓர் மனைவிஏன்?

     சரசத் திலாதநகை ஏன்?

  சாம்மரண காலத்தில் உதவாத புதல்வன் ஏன்?

     தரணிமீ தென்பர் கண்டாய்!

அமரர்க்கும் முனிவர்க்கும் ஒருவர்க்கும் எட்டாத

     ஆதியே! அருமைமத வேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அமரர்க்கும் முனிவர்க்கும் ஒருவர்க்கும் எட்டாத ஆதியே –

வானவர்க்கும் முனிவர்க்கும் பிறரெவர்க்கும் நெருங்கற்கியலாத முதல்வனே!,

அருமை ….. தேவனே!, தரணிமீது சமயத்தில் உதவாத நிதியம் ஏன் –

உலகில் வேண்டிய காலத்திற் பயன் படாத செல்வம் எதற்கு?, மிக்க துயர்

சார்பொழுது இலாத கிளை ஏன் – மிகுதியான துன்பம் உண்டானபோது

பயன்படாத உறவு எதற்கு?, சபைமுகத்து உதவாத கல்வி ஏன் –

அவைக்களத்திற் பயன்படாத படிப்பு எதற்கு?, எதிரி வரும் சமரத்து இலாத

படை ஏன் – பகைவன் எதிர்த்த போரிற் பயன்படாத படை எதற்கு?,

விமலனுக்கு உதவாத பூசை ஏன் – தூயவனான இறைவனுக்குப் பயன்படாத வழிபாடு எதற்கு?, நாளும் இருள் வேளைக்கு இலாத சுடர் ஏன் –

எப்போதும் இருட்பொழுதில் ஒளிதராத விளக்கு எதற்கு?, வெம்பசிக்கு

உதவாத அன்னம் ஏன் – கொடிய பசியைத் தணிக்கப் பயன்படாத உணவு

எதற்கு?, நீடு குளிர் வேளைக்கு இலாத கலை ஏன் – நீண்ட குளிர்

காலத்திற்குப் பயன்தராத ஆடை எதற்கு?, தமது தளர் வேளைக்கு இலாத

ஓர் மனைவி ஏன் – தங்களின் சோர்வு காலத்திற்கு உடனிராத ஒரு

மனைவி எதற்கு?, சரசத்து இலாத நகை ஏன் – விளையாட்டின்போது

இல்லாத நகைப்பு எதற்கு?, சாம் மரண காலத்தில் உதவாத புதல்வன் ஏன்- உயிர்விடும் இறுதிப்போதிற் பயனற்ற மகன் எதற்கு?, என்பர் – என்று

(அறிஞர்) கூறுவர். (வி-ரை.) விமலனுக்கு வழிபாடில்லாமற் பிற தெய்வங்களை வணங்குதல் தகாது. கண்டாய் : முன்னிலை அசைச்சொல்..

–subham—

TAGS- பயனில்லாதவை, மழை நாள், அம்பலவாணர், அறப்பளீசுர சதகம் , பாடல் 78,79,80, உதவாத எட்டு, தொல்லை தரும் ஏழு

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: