ஜோதிடம் கற்க விரும்புபவர்களுக்கு  சூர்யநாராயண் ராவ் அறிவுரை!(11,681)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,681

Date uploaded in London –  18 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 ஜோதிடம் கற்க விரும்புபவர்களுக்கு  

புரபஸர் பி. சூர்யநாராயண் ராவ் அறிவுரைகள்! 

ச.நாகராஜன் 

ஜோதிடம் கற்க வேண்டுமென்று விரும்புவோர் ஏராளம், ஏராளம். இவர்களுக்கு என அறிவுரைகளை வழங்குகிறார் புரபஸர் பி. சூர்யநாராயண் ராவ்.

இவரைப் பற்றிய அறிமுகமே தேவை இல்லை. உலகளாவிய அளவில் புகழ் பெற்ற ஜோதிடர் பி.வி.ராமனின் பாட்டனார் தான் இவர்.

Valuable Instructions to the Students of Astrology’  – ‘ஜோதிடம் கற்கும் மாணவர்களுக்கு மதிப்புள்ள அறிவுரைகள்’ என்ற தலைப்பில் ‘The Astrological Primer’ என்ற தனது நூலில் அவர் 24 முக்கியமான விஷயங்களை அறிவுரைகளாகக் கூறுகிறார்.

அவையாவன:

1) ஜோதிடம் கற்க விரும்பும் மாணவர்கள் ராசிகள், கிரகங்கள், நக்ஷத்திரத் தொகுதிகள், நல்ல மற்றும் தீய கிரகங்கள், கிரகங்களின் பார்வைகள், கிரகங்களில் ஒன்றுக்கொன்று உள்ள தொடர்புகள் (நட்பு, பகை ஆகிய விவரங்கள், கிரகங்களில் ஆண், பெண் கிரகங்கள், கிரகங்களின் இயற்கை, கிரகங்களின் வர்ணங்கள், கிரகங்களின் திசைகள், கிரகங்கள் உச்ச, நீச நிலைகள், இடங்கள், கிரகங்களின் சஞ்சாரங்கள், கிரகங்களின் 10 நிலைகள், கிரகங்களின் குணாதிசயங்கள், கிரகங்களின் 27 தொழில்கள், கிரகங்களின் காலம், ராசிகளின் அடையாளக் குறிகளும் அவற்றின் பிரிவுகளும், வர்கங்கள், ஒரு நாளில் 12 ராசிகளின் நேரங்கள், ராசிகளும் கால புருஷனும், ஹோரை, த்ரேக்காணம், நவாம்சம், த்வாதசாம்சம், த்ரிம்சாம்சம், ராசிகளின் குணாதிசயங்கள், ராசிகளை சொந்த உரிமையாகக் கொண்ட கிரகங்கள், 12 வீடுகளின் முக்கியத்துவம் ஆகிய இவற்றை முதலில் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். மனதில் அப்படியே பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இது தான் முதல் படி.

2. கேந்திரங்கள், த்ரிகோணம், பனபரா, கிரக சேர்க்கைகள் ஆகியவை பொதுவாக லக்னத்திலிருந்தே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

3. கிரகங்களில் சொந்த வீடு நிலையான ஒரு விஷயம் தான். அது மாறவே மாறாது.

4. கிரகங்கள் சேர்வது எவ்வளவு சக்தி படைத்ததோ அதே அளவு சக்தி

அவற்றின் பார்வைக்கும் உண்டு.

5.ஒரு ஜாதகத்தில் இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் நீசத்தில் இருந்தால் அந்த ஜாதகருக்கு அநேக துர்பாக்கியங்கள் நேரும்.

6. ‘எல்லா கிரகங்களும்’ – என்று சொல்லப்படும் போதெல்லாம், ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது. ராகு, கேது உள்ளிட்ட நவ கிரகங்கள் என்று சொன்னால் மட்டுமே ஒன்பது கிரகங்களையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

7. நல்ல மற்றும் தீய கிரகங்கள் தங்கள் தசா காலத்திலும் புக்தி காலத்திலும் தங்கள் விளைவுகளைத் தருகின்றன.

8. நன்கு ஆராயாமல் ஒருவரது ஆயுள் காலத்தைச் சொல்லவே கூடாது.

9. சந்திரனிலிருந்து பார்த்து சேர்க்கைகளைப் பார்ப்பதும் சக்தி உள்ளதே. இதை வைத்தும் கணிப்புகளைக் கூறலாம்.

10. தீய கிரகங்கள் சேர்ந்தால் அவை உடல்நலத்தைப் பாதிக்கும், (அவற்றை நல்ல கிரகங்கள் பார்த்தாலொழிய).

11. கிரகங்களின் நிலையான நட்புகள் முதலியவை தற்காலிகமான உறவுகளால் சிறிது மாறும்.

12. ஒரு ராசியை இரண்டாகப் பிரித்தால் வருவது ஹோரா. மூன்று சம பிரிவுகளாகப் பிரித்தால் வருவது த்ரேக்காணம். ஒன்பது பிரிவுகளாக ஆக்கினால் வருவது நவாம்சம்.  அதை 12ஆகப் பிரித்தால் வருவது த்வாதசாம்சம். 30 பிரிவுகளாக ஆக்கினால் வருவது த்ரிம்சாம்சம். அறுபது பிரிவுகள் என்றால் ஷஷ்டியாம்சம்.

13. லக்னத்தை முதலில் சரியாகக் கணிக்க வேண்டும். இது இல்லாமல் ஒரு வித கணிப்பையும் பலனையும் கூற முடியாது. கூறக்கூடாது.

14. ஒரு குழந்தையின் பாலாரிஷ்ட சேர்க்கைகளை முதலில் பார்த்த பின்னரே மற்றவற்றைச் சொல்ல ஆரம்பிக்க வேண்டும்.

15. பெற்றோர்களின் பாவங்கள் குழந்தைகளின் மீது படியும். ஆகவே குழந்தைக்கான ஆயுள் மற்றும் இதர பலன்களைச் சொல்லும் போது இதை மனதில் கொள்ள வேண்டும்.

16. எல்லா ஜோதிட விஷயங்களையும் அத்துபடியாகக் கொள்ளாமல் தன்னை ஒரு பெரிய ஜோதிட மேதையாக நினைத்துக் கொண்டு பலன்களைச் சொல்ல ஆரம்பிக்கக் கூடாது.

17. பார்வைக்குத் தோன்றும் முரண்பாடுகள், மாறுபாடுகள் ஆகியவை எல்லாம் ஒரு ஜாதகத்தை நன்கு ஆராயும் போது மறைந்து விடும்.

18. நல்ல பஞ்சாங்கத்தை வைத்துக் கொண்டு  முதலில் கிரக நிலைகளை உறுதி செய்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் கொடுத்த ஜாதகத்தை வைத்துக் கொண்டு பலன் சொல்லக் கூடாது.

19. ஒரு ஜோதிட சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு அதை நன்கு பயில வேண்டும். அதுவே இதர சித்தாந்தங்களை நன்கு அறிய வழி வகுக்கும். சாயனா மற்றும் நிராயணா பற்றிக் குழப்பம் கொள்ளக் கூடாது.

20. தன்னை ஒரு ஜோதிட மேதை என்று நினைத்துக் கொள்பவன் அதில் முன்னேறவே முடியாது.

21. பாரத தேசத்தில் உதித்த மஹான்களின் பெருமை சொல்லி மாளாது. எல்லாவித சந்தேகங்கள், கஷ்டங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் நன்கு அறிவர்.  அவர்களின் நூல்களைப் படிக்கப் படிக்க அவர்கள் எவ்வளவு பெரியவர்கள், மேதைகள் என்பது புலப்பட ஆரம்பிக்கும்.

22. சில நாட்கள் உழைத்தால் அது மட்டுமே, பெரிய நிலைக்கு கொண்டு வந்து சாதனைகளைப் படைக்க வழி வகுக்காது. தொடர்ந்து கற்றல் வேண்டும்.

23. முதலில் உங்கள் ஜாதகத்தையும் உங்களுக்கு நன்கு தெரிந்த நண்பர்கள் ஆகியோரின் ஜாதகங்களையும் பாருங்கள். நீங்கள் கற்ற ஜோதிடத்தின் படி, உங்களின் கணிப்பின் படி, அந்த ஜோதிட பலன்கள் அவர்களின் குணாதிசயங்களுடன் ஒத்துப் போகிறதா என்று பாருங்கள்.

24. உங்கள் ஜோதிடப் படிப்பில் உண்மை இருக்க வேண்டும், ஆர்வம் இருக்க வேண்டும், கவனக் குவிப்பு இருக்க வேண்டும். இவை எல்லாம் இருந்தால் நீங்கள் ஒரு வெற்றிகரமான ஜோதிட நிபுணர் தான்!

*** 

மேற்கண்ட அறிவுரைகளை அவர் எழுதிய The Astrological Primer என்ற நூலில் அவர் தந்துள்ளார்.. புத்தகம் வெளியிடப்பட்ட ஆண்டு -1905

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: