
Post No. 11,691
Date uploaded in London – – 20 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
தமிழர்களின் தலை சிறந்த நிர்வாகத்தை விளக்கும் இரண்டு சொற்கள் எண்பேராயம், ஐம்பெருகுங் குழு ஆகும் . உலகம் முழுதும் பிரதமர் அல்லது ஜனாதிபதிக்கு அடுத்த நிலையில் வைக்கப்படுபவர் உட்துறை அமைச்சராகும் . பழங்காலத்தில் அவர் பெயர் அமைச்சர் அல்லது தலைமை அமைச்சர்.. அதற்கு அடுத்த நிலையில் உள்ளவர் நிதி மந்திரி. அதற்கடுத்த நிலையில் உள்ளவர் பாதுகாப்பு அமைச்சர். அந்தக் காலத்தில் அவர் பெயர் படைத்தலைவர் அல்லது சேனாதிபதி. இவர்கள் அடங்கிய குழு எண்பேராயம் அல்லது ஐபெருங் குழு ஆகும்.
சிவாஜி அமைச்சரவையிலும் , கிருஷ்ண தேவராயர் அமைச்சரவையிலும் இவ்வாறு எட்டு பேர் கொண்ட அஷ்டப் பிரதான், அஷ்ட திக்கஜங்கள் இருந்தனர் ; அவர்களுக்கு ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே விக்ரமாதித்யன் சபையில் நவரத்னங்கள் ( 9 அறிஞர்கள்) இருந்தனர்.. மஹாபாரத, ராமாயண காலங்களில் அமைச்சர்கள் இருந்ததையும் அவர்கள் அறிவுரை வழங்கியதையும் இதிஹாச புராணங்கள் மூலம் அறிகிறோம்
xxxxxx

ஐம்பெரும் காப்பியங்கள் சொல்லும் எண்பேராயம் , ஐம் பெருங்குழு
தமிழர்களின் ஆலோசனைக் குழு (சிலப்பதிகாரம், மணி மேகலை, சொல்லும் எண்பேராயம்)
சிலப்பதிகாரம் 26-38
மணி மேகலை 1-17
1.கரணத்தியலாவர்- கணக்கர்
2.கருமக்காரர்- செயலர்
3.கனகச் சுற்றம் – கருவூல ஆதிகாரி
4.கடைக் காப்பாளர்- அரண்மனைக் காவலர்
5.நகர மாந்தர் – முதியோர்
6.படைத்தலைவர் – காலாட்படைத் தளபதி
7.யானைவீரர் – யானைப்படையின் தலைவர்
8.இவுளி மறவர் – குதிரைப்படையின் தலைவர்
Xxx
ஐம்பெரும் காப்பியங்கள் சொல்லும் ஐம்பெருங் குழு
சிலப்பதிகாரம்- 3-126
மணி மேகலை—1-17, 2-68, 4-89; 5-5; 27-14, 89; 29-43, 30-190
ஐம்பெருங் குழு
1.மந்திரி/ அமைச்சன்
2.புரோகிதன்
3.தூதன்
4.ஒற்றன்/ சாரணர்
5.சேனாபதி/ படைத் தலைவர்
Xxxxx

இந்தப் பொறுப்பு வகிப்பவர்களின் முக்கியப்பணிகளை அறப்பளீசுர சதகம் பாடிய அம்பல வாணர் சற்று விரிவாகவே பாடுகிறார்
85. தானாபதி, அமைச்சன், படைத்தலைவன் Defence Minister and Home Minister, Commander in Chief
தன்னரசன் வலிமையும், பரராசர் எண்ணமும்,
சாலமேல் வருக ருமமும்
தானறிந் ததிபுத்தி உத்தியுண் டாயினோன்
தானாதி பதியா குவான்;
மன்னவர் மனத்தையும், காலதே சத்தையும்,
வாழ்குடி படைத்தி றமையும்,
மந்திரா லோசனை யும்எல்லாம் அறிந்தவன்
வளமான மதிமந் திரி;
துன்னிய படைக்குணம் கரிபரி பரீட்சையே,
சூழ்பகைவர் புரிசூழ்ச் சியும்,
தோலாத வெற்றியும் திடமான சித்தியுள
சூரனே சேனா திபன்
அன்னையினும் நல்லமலை மங்கைபங் காளனே!
அனகனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அன்னையினும் நல்ல மலைமங்கை பங்காளனே – தாயினும்
நல்லருள் புரியும் மலைமகளை யிடப்பாகத்திற் கொண்டவனே!, அனகனே –
தூயவனே!, தன் அரசன் வலிமையும் பரராசர் எண்ணமும் சால மேல்வரு
கருமமும் தான் அறிந்து – தன் அரசனுடைய ஆற்றலும் மாற்றரசர் நினைவும் நன்றாகப் பின்வரும் அலுவலும் ஆராய்ந்து, அதி புத்தி உத்தி
உண்டாயினோன் தான அதிபதி ஆகுவான் – சிறந்த அறிவும் சூழ்ச்சியும்
பொருந்தியவன் தானைத்தலைவன் எனப்படுவான், மன்னவர் மனத்தையும்,
கால தேசத்தையும், வாழ்குடி படைத் திறமையும், மந்திர ஆலோசனையும்
எல்லாம் – அரசர்களின் கருத்தையும், காலத்தையும், இடத்தையும், வாழ்கின்ற குடிபடைகளின் ஆற்றலையும், ஆராய்ச்சித் திறனையும், அறிந்தவன் வளமான
மதி மந்திரி – தெரிந்தவன் தேர்ச்சிபெற்ற அறிவுடைய அமைச்சனாவான்,
துன்னிய படைக்குணம் – செறிவான படைகளின் இயல்பும், கரி பரி
பரீட்சையே – யானை குதிரைகளின் தேர்ச்சியும், சூழ்பகைவர் புரி சூழ்ச்சியும்
– சூழந்துள்ள மாற்றலர் செய்யும் சூழ்ச்சியும், தோலாத வெற்றியும் –
பின்வாங்காத வெற்றியும், திடமான சித்தி(யும்) உறுதியான சித்தியும்,
உளசூரனே சேனாதிபன் – உடைய வீரனே படைத்தலைவன் ஆவான்.
(வி-ரை.) துன்னுதல் – நெருங்குதல். ஆகவே செறிவாயிற்று. சித்தி
– நினைத்தது முடித்தல். சூர் – அச்சம். சூரன் – அஞ்சத்தக்கவன் (வீரன்).
xxxxxxxxxxxxxxxxxxxxxxx
86. அரசவைக் கணக்கர் Finance Minister
வரும்ஓலை உத்தரத் தெழுதிவரு பொருளினால்
வரவிடுப் போன்ம னதையும்,
மருவிவரு கருமமும் தேசகா லத்தையும்
வருகர தலாம லகமாய்
விரைவாய் அறிந்தரசர் எண்ணில்எண் ணினையள
விடஎழு தவாசிக் கவும்
வெற்றிகொண் டேபெரிய புத்தியுடை யோன்புவி யின்
மேன்மைரா யசகா ரன்ஆம்;
கருவாய் அறிந்து தொகை யீராறு நொடியினிற்
கடிதேற் றிடக்கு றைக்கக்
கடுகையொரு மலையாக மலையையொரு கடுகுமாக்
காட்டுவோன் கருணீ கன்ஆம்;
அருவாகி உருவாகி ஒளியாகி வெளியாகும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அருஆகி உருஆகி ஒளிஆகி வெளிஆகும் அண்ணலே –
அருவமாகவும், உருவமாகவும், ஒளியாகவும், வெளியாகவும் உள்ள
பெரியோனே!, அருமை …. தேவனே!, வரும் ஓலை உத்தரத்து எழுதிவரு
பொருளினால் – வருகின்ற ஓலையின் புறத்திலே எழுதிவிட்ட பொருளைக்
கொண்டு, வரவிடுப்போன் மனதையும் – ஓலையை விட்டவன் உள்ளத்தையும்,
மருவி வரு கருமமும் – அவன் விரும்பிய தொழிலையும், தேச காலத்தையும்
– இடத்தையும் காலத்தையும், வரு கரதல ஆமலகம் ஆய்விரைவாய் அறிந்து
–உள்ளங்கையில் உள்ள நெல்லிக்கனியாக நொடியில் உணர்ந்து, அரசர்
எண்ணில் எண்ணினை அளவு இட எழுத வாசிக்கவும் – அரசருடைய
கருத்தில்உள்ள கருத்தை மதிப்பிடவும் எழுதவும் வாசிக்கவும், வெற்றி கொண்டே
பெரிய புத்தியுடையோன் புவியின் மேன்மை ராயச காரன் ஆம் – தேர்ச்சி
பெற்றுப் பேரறிவு உடையோன் உலகிலே பெருமை பெற்ற அரசாங்க
எழுத்தாளன் ஆவான், தொகை வருவாய் அறிந்து ஈராறு நொடியினில்
கடிது ஏற்றிடக் குறைக்க – ஒரு தொகை மனத்தில் உணர்ந்து பன்னிரு
விநாடியில் விரைவாகக் கூட்டவும் குறைக்கவும், கடுகை ஒரு மலை ஆக
மலையை ஒரு கடுகும் ஆ(க)க் காட்டுவோன் கருணீகன் ஆம் – கடுகை
மலை போலவும் மலையைக் கடுகுபோலவும் ஆக்கிக் காண்பிக்க வல்லவன் அரசாங்கக் கணக்கன் ஆவான்.
(வி-ரை.) உத்தரம் – பின். எனவே ஓலையின் புறம். எழுத்தாளரும்
கணக்குப் பார்ப்போரும் கணக்கர் எனவே வழங்கப்படுகின்றனர். ஆமலகம்
– நெல்லி. கரதலாமலகம் என்பது வெளிப்படை என்பதை விளக்கும் உவமச்
சொல். கையில் வைத்திருக்கும் பொருள் தெரிவதைப் போலத் தெளிவித்தல், என்பதே அதனால் விளக்கப்படும் பொருள்.
SATAKAM VERSES ARE TAKEN FROM TAMIL VIRTUAL UNIVERSITY WEBSITE.
XXXX

MY OLD ARTICLE
தமிழர்களின் எண்பேராயம் (Post No.7046)
https://tamilandvedas.com › தமிழ…
2 Oct 2019 — மார்பு, நெஞ்சு, தலை, நாவின் அடிப்பாகம், ,பல், மூக்கு, உதடு, அண்ணம். இதைக் கூறும் …
—-subham—-
Tags– அஷ்டப் பிரதான், அஷ்டதிக்கஜங்கள்,நவரத்னங்கள், எண்பேராயம், ஐம்பெருகுங் குழு, ஐம்பெருங் குழு ,சிலப்பதிகாரம், கணக்கர், எழுத்தர், அமைச்சர், தானாதிபதி.